சிங்கம் III
அபேஸ்புரம்
காவல் நிலைய வாசலில் அந்த போலீஸ் ஜீப் வந்து நின்று சடன் பிரேக் போட்டதும் அதன்
நம்பர் பிளேட், பம்பரோடு கழன்று விழுந்தது. முன்னிருக்கையிலிருந்து இறங்கி, உடுக்கு
மீசையுடன் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி நடந்த பொறைசிங்கம், தடுக்கிவிழப்போக கான்ஸ்டபிள்
மலைவிழுங்கி இடுக்கிப்பிடி போட்டு அவரைத் தாங்கிப் பிடித்தார். சுதாரித்துக் கொண்ட
பொறைசிங்கம் உதாராகக் கேட்டார்.
”த்ரீ நாட் சிக்ஸ்! வாசல்லே
யாருய்யா அந்தக் கெழவி?”
”வீட்டுலே திருடு போயிடுச்சுன்னு
புகார் கொடுக்க வந்திருக்கு சார். டிவிக்காரங்களுக்காகக் காத்திருக்குது. எப்படியும்
திருடுபோனது திரும்பக் கிடைக்காது. நியூஸ்லே மூஞ்சியாவது வரட்டுமேன்னு நின்னுட்டிருக்கு!”
கடுப்புடன்
ஸ்டேஷனுக்குள் நுழைந்த பொறைசிங்கத்தைப் பார்த்து, இன்ஸ்பெக்டர் பிச்சைக்கண்ணு
டென்ஷனுடன் அட்டென்ஷனுக்கு மாறி சல்யூட் அடித்தார்.
”வயர்லெஸ் கொடுங்க..அர்ஜெண்ட்!” என்றார் பொறைசிங்கம்.
”சாரி சார்! வயர்லெஸ்
ரிப்பேராயிடுச்சு!” என்று தொப்பியைச் சொரிந்தார் பிச்சைக்கண்ணு.
”வாட்? எப்படி ரிப்பேராச்சு?”
” நேத்து டிவியிலே
சோப்புப்பவுடர் விளம்பரம் வந்துச்சு சார். அதுலே வாஷிங் மெஷின்லே ஏரியல் போட்டா
துணி நல்லா அழுக்குப்போகும்னு சொல்லியிருக்காங்க. என் பொஞ்சாதி தப்பாப்
புரிஞ்சுக்கிட்டு என் வயர்லெஸ்ஸுலே இருந்த ஏரியலைப் புடுங்கி வாஷிங் மெஷின்லே
போட்டுட்டா. இப்போ வயர்லஸும் போச்சு; வாஷிங் மெஷினும் போச்சு!”
டி.வி.சீரியலில்
வரும் மூன்றாவது கதாநாயகியின் ஆறாவது சித்தப்பாவைப் போலத் தலையிலடித்துக் கொண்ட
பொறைசிங்கம் செல்போனை எடுத்தார். பிச்சைக்கண்ணுவும் மலைவிழுங்கியும் ’நீயா நானா’வில் மைக்குக்காகக்
காத்திருக்கும் பேச்சாளர்கள் போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருக்க,
பொறைசிங்கம் கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டார்.
”கண்ட்ரோல் ரூம்? கொய்யாமண்டி
கோவிந்தசாமி டெலிபோனை ஒட்டுக் கேட்கச் சொன்னேனே? கேட்டீங்களா?”
”யெஸ் சார்!”
”என்ன பேசினாங்க?”
”வெவ்வெவ்வெ!”
”வாட்?” பொறைசிங்கத்தின் மீசை
அறுந்துபோன பல்லியின் வாலைப் போலத் துடித்தது. “ஐயாம் பொறைசிங்கம் ஐ.பி.எஸ். பீ
சீரியஸ்! சரியா பதில் சொல்லுங்க!”
”சாரி சார்! அவங்க
பேசினதைத்தான் சொன்னேன் சார்! ஒருத்தர் போனை எடுத்து ‘வெவ்வெவ்வெ?’ன்னு கேட்டாரு. இன்னொருத்தர்
பதிலுக்கு ‘வெவ்வெவ்வெ’ன்னு சொன்னாரு. உடனே டிஸ்கனெக்ட் பண்ணிட்டாங்க. அவ்ளோதான்
சார்!”
”ஐ ஸீ!” என்று பேச்சை முடித்துக்கொண்ட
பொறைசிங்கம், அரசுப் பேருந்து கண்டக்டரிடம் ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு
ரூபாயை நீட்டுபவரைப் போலத் தலையைச்
சொரிந்தார்.
”சார்?” பிச்சைக்கண்ணு தயக்கமாய்க்
கேட்டார். “என்ன தகவல் கிடைச்சுது சார்?”
”வெவ்வெவ்வெ!” என்றார் பொறைசிங்கம்.
”என்ன சார்? ஒரு சுப்பீரியரா
இருந்துக்கிட்டு என்னைப் பார்த்துப் பழிப்புக் காட்டறீங்களே சார்?”
”இம்சை பண்ணாதீங்கய்யா!” அலுத்துக் கொண்டார்
பொறைசிங்கம். “ரெண்டு பேரும் மொத்தம் பேசினதே இம்புட்டுத்தான்; வெவ்வெவ்வெ.”
”வரவர வில்லனுங்கல்லாம் காமெடி
பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க சார்!” என்றார் மலைவிழுங்கி. “எவனாவது போன்
பண்ணி வெவ்வெவ்வென்னு பழிப்புக் காட்டுவாங்களா?”
”இது ஏதோ மர்மம் இருக்குது,” என்றவாறு பொறைசிங்கம் தொப்பியைக்
கழற்ற அவரது அவரது சொட்டைத்தலை அஞ்சப்பரில் போட்ட ஆஃப் பாயில் போலப் பளபளத்தது. “இந்த
’வெவ்வெவ்வெ’ அந்தக் கிரிமினஸ் போலீஸுக்கு
விட்டிருக்கிற சவால். இந்த மர்மத்தை மூளையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கணும்.”
”அப்போ நாங்க வேணாமா சார்?” அடூர் கோபாலகிருஷ்ணனின்
ஆர்ட் ஃபிலிமிலிருந்து இடைவேளையில் தப்பித்த ரசிகரைப்போல மலைவிழுங்கியின்
முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
”ஸ்டுப்பிட்! நாம மூணுபேரும்
சேர்ந்துதான் இந்த மர்மத்தைத் துப்புத்துலக்கப்போறோம்!” உறுமினார் பொறைசிங்கம்.
“இதுக்கு நான் வச்சிருக்கிற பேரு ஆபரேஷன் பக்கோடா!”
”வேறே பேரு வைக்கலாமே!” பிச்சைக்கண்ணு வழிந்தார்.
“எனக்கு வாய்வுக்கோளாறு.”
”ஏன்யா? நெருப்புன்னா வாய்
வெந்திருமா?”
”நெருப்புலே விழுந்தவன்
நெருப்புன்னு கத்தி யாரும் காப்பாத்தலேன்னா எல்லாமே வெந்திரும் சார்!”
”மலைவிழுங்கி!” பொறைசிங்கம் பொறுமையிழந்த சிங்கமாகிக்
கத்தினார். “நான் சொல்றதை மட்டும் செய்யுங்க. நம்ம ஏரியாவுலே பழைய கஞ்சா வியாபாரி
நடத்துற பள்ளிக்கூடம் இருக்கில்லே? நீங்க உடனே அங்கே போங்க.”
”எதுக்கு ஸார்? அவர்
பள்ளிக்கூடம் ஆரம்பிச்சதுக்கப்புறம் இந்தக் கஞ்சா, கள்ளநோட்டு, கள்ளக்கடத்தல்
மாதிரிச் சில்லறை வியாபாரத்தையெல்லாம் விட்டுட்டாரு சார்!”
”ஸ்டாப் இட் அண்ட் லிஸன் டு
மீ!”
இரைந்தார்
பொறைசிங்கம்.
”யோவ் மலைவிழுங்கி!
சும்மாயிருய்யா!” எல்டாம்ஸ் ரோடு சிக்னலில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தவர் போல இடையில்
புகுந்தார் பிச்சைக்கண்ணு. “அனாவசியமா ஸாரை இங்கிலீஷ் பேச வைக்காதே! அது உனக்கும்
நல்லதில்லை; இங்கிலீஷுக்கும் நல்லதில்லை.”
”கரெக்ட்!” என்றார் பொறைசிங்கம்.
“மலைவிழுங்கி! அந்த ஸ்கூலுக்குப் போயி எல்லாக் குழந்தைகளையும் ஒருவாட்டி பழிப்புக்
காட்டச் சொல்லுங்க. எத்தனை குழந்தைங்க ‘வெவ்வெவ்வெ’ன்னு பழிப்புக் காட்டுதுங்கிற
ரிப்போர்ட் எனக்கு இம்மீடியட்டா வேணும்.”
”எஸ் சார்!” என்று மலைவிழுங்கி மலைப்பாம்புபோல
ஊர்ந்து வெளியேற, பொறைசிங்கம் டி.ஐ.ஜியைத் தொடர்பு கொண்டு கண்ட்ரோல் ரூமிலிருந்து
கிடைத்த தகவலைக் கூறினார். டி.ஐ.ஜிக்கு ஒரே வியப்பு!
”அப்படியா? அவங்க என்னதான்
பேசினாங்க?”
”வெவ்வெவ்வெ!”
”வாட்? எனக்கா வெவ்வெவ்வெ? உங்களை
இம்மீடியட்டா டாஸ்மாக் இல்லாத காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணறேன்.”
”ஐயோ சார்! அதுதான் அவங்க
பேசினது சார்!”
”ஓ!” டி.ஐ.ஜி அவரது தலையைச்
சொறிகிற சத்தம் டிஜிட்டல் சவுண்டில் டோல்பி எஃபெக்டுடன் கேட்டது. “மேட்டர் ரொம்ப
சீரியஸா இருக்கும் போலிருக்குதே?”
”ஆமா. இதைக் கண்டுபிடிக்க நான்
ஆபரேஷன் பக்கோடாவை ஆரம்பிச்சிட்டேன்.”
”வெரிகுட்! இது சம்பந்தமா
உங்களுக்கு பக்கோடாபலமா....ஐ மீன்...பக்கபலமா நம்ம டிபார்ட்மெண்ட் இருக்கும்.
ப்ரொஸீட்!”
பேசிமுடித்த
பொறைசிங்கம் பிச்சைக்கண்ணுவிடம் கூறினார்.
”ஒரு வொயிட் பேப்பர் கொடுங்க!”
”ஐயையோ! ராஜினாமாவா? அவசரப்பட்டு
ஒரு முடிவெடுக்காதீங்க சார்! அதிகமா ஸ்பீடு போற குவாலீஸும் அதிகமா ரோஷப்படுற
போலீஸும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை சார்! ப்ளீஸ் ரிஸைன் பண்ணாதீங்க சார்!”
”யோவ்! ’ரிஸைன்’ பண்ணறதுக்கில்லைய்யா. அந்த
கிரிமினல்களை எப்படிப் புடிக்கிறதுன்னு ’டிஸைன்’ பண்ணப்போறேன். கொடுய்யா
பேப்பரை!”
பிச்சைக்கண்ணுவிடமிருந்து
வாங்கிய பேப்பரில் பொறைசிங்கம் திரும்பத் திரும்ப ‘வெவ்வெவ்வெ’ ‘வெவ்வெவ்வெ’ என்று எழுத ஆரம்பித்தார்.
”சார்! இதுக்கு ஓம் சக்தின்னு
எழுதி மேல்மருவத்தூருக்கு அனுப்புனா பிரசாதத்தையாவது போஸ்ட்டுலே அனுப்புவாங்க.” என்று தயக்கத்துடன் கூறினார்
பிச்சைக்கண்ணு.
”இங்கே பாருங்கய்யா! இந்த
வெவ்வெவ்வேயிலே எம்புட்டு விஷயமிருக்கு பாருங்க! இதைத் திருப்பி எழுதினாலும்
வெவ்வெவ்வெ தான். அது மட்டுமில்லை. இதுலே மொத்தம் அஞ்சு எழுத்து இருக்கு. எனக்குக்
கிடைச்ச தகவல் சரியா இருந்தா, அஞ்செழுத்து இருக்கிற பேருள்ள எதையோ கடத்தப்போறாங்க.”
”சார், உங்க மூளையை
மியூசியத்துலே வைக்கணும் சார்!”
”முதல்லே தேடிக் கண்டுபிடிக்கணும்.”
”என்னது?”
”அதாவது இந்தக் கள்ளக்கடத்தலோட
தொடர்புடையவங்களைத் தேடிக் கண்டுபிடிக்கணும்னு
சொன்னேன்.”
சிறிது
நேரம் கழித்து மலைவிழுங்கி திரும்பினார்.
”சார்! நாம சந்தேகப்பட்டது
சரியாப்போச்சு! குழந்தைங்க வெவ்வெவ்வென்னு தான் பழிப்புக் காட்டறாங்க.” என்று மூச்சிரைக்கச் சொல்லுவதற்குள்
அவரது சட்டை பட்டன்களில் இரண்டு பட்டாசு போல வெடித்துப் பறந்தது.
”ரியலீ? எல்லாக் குழந்தைகளுமா...?”
”அட குழந்தைகளை விடுங்க சார்!
டீச்சருங்க கூட எவ்வளவு அழகா வெவ்வெவ்வென்னு பழிப்புக் காட்டறாங்க தெரியுமா?” இளித்தார் மலைவிழுங்கி.
டூட்டியில்
லூட்டியடித்து விட்டு வந்த மலைவிழுங்கியை பொறைசிங்கம் கண்டிக்க வாயெடுக்கும்
முன்னர், செல்போன் அழுதது.
”கண்ட்ரோல் ரூமா? சொல்லுங்க!” என்று பேசியவாறே, பேப்பரில்
எதையெதையோ கிறுக்கினார் பொறைசிங்கம். பேசி முடித்தவுடன்...
”இந்தவாட்டி என்ன பேசினாங்க
சார்?”
பிச்சைக்கண்ணு
ஆர்வத்துடன் கேட்டார்.
”நவம்பர் 14-ம் தேதி
கல்யாணம்னு பேசியிருக்காரு! ”
”கோவிந்தசாமிக்கு ஏற்கனவே
ரெண்டு கல்யாணம் ஆயிருச்சே? இன்னுமா புத்தி வரலே?”
”அது மட்டுமில்லை; அன்னிக்கு
ஊரே அதிரப்போகுதுன்னு சொல்லியிருக்காரு!” பொறைசிங்கம் சிந்தனையோடு மீசையைத்
தடவினார்.
”நவம்பர் 14-க்கும்
வெவ்வெவ்வெக்கும் என்ன சம்பந்தம்?” மலைவிழுங்கி வாயில் ஆட்காட்டி விரலைவைத்து மோர்சிங்
வாசித்தார்.
”எனக்குத் தெரியும் சார்!” கூவினார் பிச்சைக்கண்ணு.
“நவம்பர் 14 குழந்தைகள் தினம் சார்...குழந்தைங்க...ஸ்கூல்..வெவ்வெவ்வெ.”
”ப்ரில்லியண்ட்!” அலறினார் பொறைசிங்கம். “அப்போ
குழந்தைகள் தினத்தன்னிக்குத்தான் ஊரையே அதிரவைக்கப்போறாரு. அஞ்சு
எழுத்து...வெவ்வெவ்வெ...அது என்னவா இருக்கும்?”
”ஒருவேளை ‘வெ’லே தொடங்குற அஞ்செழுத்து
வார்த்தையா இருக்குமோ?”
”வெடிகுண்டு” என்று கொக்கரித்தார்
பொறைசிங்கம். “நம்ம ஆபரேஷனுக்குப் பக்கோடான்னு பேரு வைச்ச மாதிரி, அவங்க
வெடிகுண்டுக் கடத்தலுக்கு வெவ்வெவ்வென்னு பேரு வச்சிருக்காங்க. பீ அலர்ட்! உடனடியா
கொய்யாமண்டி கோவிந்தசாமியோட போனை வாட்ச் பண்ணனும்.”
மீண்டும்
செல்போன்; மீண்டும் கண்ட்ரோல் ரூம்.
”சார், சரக்கு ஊரு எல்லைக்கு
வந்திருச்சாம் சார்! கோவிந்தசாமி பணத்தோட காத்திருக்காராம்.”
”பிச்சைக்கண்ணு! மலைவிழுங்கி!
கெளம்புங்க!”
ஜீப்
கிளம்பியது! ஆபரேஷன் பக்கோடாவின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை உணர்ந்த
பொறைசிங்கம், துப்பாக்கியில் தோட்டா இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொண்டார்;
அதற்கு முன்னர் துப்பாக்கி இருக்கிறதா
என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. ஐந்து நிமிடங்களில் ஊர் எல்லையை
அடைந்தபோது, லார்ட் மவுண்ட்பேட்டனின் கொள்ளுப்பாட்டன் காலத்து லாரியொன்று
நின்றிருக்க, அதன் டிரைவரோடு கொய்யாமண்டி கோவிந்தசாமி பேசிக்கொண்டிருந்தார்.
”ஹாண்ட்ஸ் அப்!” பேண்ட் கிழிவதுபற்றிக்
கவலைப்படாமல், ஜீப்பிலிருந்து குதித்தார் பொறைசிங்கம். “என் ஏரியாவுலே வெடிகுண்டா
கடத்தறீங்க? தார்ப்பாலினை அவுத்து லாரியிலே என்ன சரக்கு இருக்குன்னு காமியுங்க!”
”வெடிகுண்டா?” கோவிந்தசாமி கதறினார். “இதுலே
வெடிகுண்டு இருக்குன்னு யாரு சார் சொன்னாங்க?”
”வெவ்வெவ்வெ!” கொக்கரித்தார் பொறைசிங்கம்.
“உங்க ரகசியமெல்லாம் தெரிஞ்சு போச்சு. வெவ்வெவ்வெ....அஞ்செழுத்து! அது
வெடிகுண்டுதான்னு கண்டுபிடிச்சிட்டோம்.”
”அது வெடிகுண்டில்லை சார்!” மண்டியிட்டான் லாரி டிரைவர்.
“வெங்காயம்.”
”என்னது? வெங்காயமா?”
”அட! வெங்காயமும்
அஞ்செழுத்துத்தான்!” என்று கிசுகிசுத்தார் பிச்சைக்கண்ணு.
”இந்த பொறைசிங்கத்தை ஏமாத்த
முடியாது! நவம்பர் 14ம் தேதி என்ன நடக்கப்போகுது?”
”என் பொண்ணுக்கு நவம்பர் 14-ம்
தேதி கல்யாணம் சார்!”
”யோவ்!” எரிந்து விழுந்தார்
பொறைசிங்கம். “கல்யாணத்துக்கும் வெங்காயத்துக்கும் என்ன சம்பந்தம்?”
”இருக்கு சார்!” இடைமறித்தார் மலைவிழுங்கி.
“ரெண்டாலேயும் கண்ணுலே தண்ணி தண்ணியா வரும்.”
”ஷட் அப்!” என்று கடிந்துகொண்ட
பொறைசிங்கம், “யோவ் கோவிந்தசாமி! நவம்பர்லே நடக்கப்போற கல்யாணத்துக்கு இப்பவே
எதுக்குய்யா வெங்காயத்தைக் கடத்திட்டு வர்றே?”
”மன்னிச்சுக்குங்க ஐயா!
எல்லாரும் பத்திரிகையோட ஆப்பிள், ஆரஞ்சுப்பழமெல்லாம் கொடுத்து அழைப்பாங்க. இன்னி
தேதிக்கு வெங்காயம் தான் ஸ்டேட்டஸ் சிம்பல். அதான் கொஞ்சம் ஆடம்பரமா
இருக்கட்டுமேன்னு எல்லாருக்கும் வெங்காயத்தோட பத்திரிகை வைக்கலாம்னு பார்த்தேன்
சார்!” கோவிந்தசாமி பலப்பத்தைத்
தொலைத்தப் பள்ளிச்சிறுவன் போல விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தார்.
”அழாதேய்யா! வெங்காயம்
வாங்கறதை ஒழுங்காப் பண்ண வேண்டியதுதானே? என்னமோ ராணுவ ரகசியத்தைக் கடத்தறமாதிரி
எதுக்குய்யா ரகசிய வார்த்தையெல்லாம்?“
“அதையேன் சார் கேக்கறீங்க?
நிச்சயதார்த்தத்துக்கு பெல்லாரியிலேருந்து அஞ்சு மூட்டை வெங்காயம் வரவழைச்சேன்
சார். இன்னிக்கு வெங்காயம் விக்குற விலைதான் தெரியுமே? வர்ற வழியிலே எல்லா
செக்-போஸ்ட்டுலேயும் ஆளுக்கு ரெண்டு கிலோன்னு பிடுங்கிட்டுத்தான் விட்டாங்க!“
கோவிந்தசாமி அழுவதைப் பார்த்து பொறைசிங்கத்தின் இதயம் உருகி அவரது வயிற்றுக்குள்
வடிய ஆரம்பித்தது.
“அழாதீங்க! உங்களாலே எவ்வளவு நேரம்
விரயமாயிடுச்சு? வெங்காய லாரியை வெடிகுண்டு லாரின்னு நினைச்சு சேஸிங்கெல்லாம்
பண்ணினது வேஸ்டாயிடுச்சே! போங்கய்யா!” சலிப்புடன் ஜீப்பில் ஏறினார்
பொறைசிங்கம்.
”எந்த நேரத்துலே ஆபரேஷன்
பக்கோடான்னு பேரு வைச்சீங்களோ, இப்படி நமுத்துப் போயிருச்சே சார்?”
”வண்டியை விடுய்யா! போயி
அந்தக் கெளவி கேஸையாவது கவனிக்கலாம்.”
விரக்தியுடன்
அபேஸ்புரம் காவல் நிலையத்துக்கு அவர்கள் திரும்பியபோது, அந்தக் கிழவி ஓவென்று
அழுது கொண்டிருந்தாள்.
”ஐயையோ! களவாணிப்பயலுவ
எல்லாத்தையும் தூக்கிட்டுப் போயிட்டானே? இந்த அநியாயத்தைக் கேட்க எந்த
டிவிக்காரங்களும் இல்லையா?”
”பெரியாத்தா! எதுக்கு ஒப்பாரி
வைக்கிறே? என்னல்லாம் களவுபோச்சு?”
”ஐயோ...பத்து பவுனு தங்கம்..மூணு
கிலோ வெங்காயம்...எல்லாம் போச்சே....ஐயையோ!”
”வெங்காயமா?” பொறைசிங்கத்துக்குத்
தலைசுற்றியது. “வெ...வெவ்...வெவ்வெ...வெவ்வெவ்வெ....!”
**********
இந்த டிரெயிலரைப் பாருங்கள்!
விரைவில் வெள்ளித்திரையில்......
வயர்லஸும் வாஷிங் மெஷினும் போனது, அஞ்சப்பரில் போட்ட ஆஃப் பாயில், மூளையை மியூசியத்துலே வைக்கணும் - அனைத்தும் ஹா...ஹா... கலக்கல்...!
ReplyDeleteநீண்ட நாட்கள் கழித்து பகிர்வு... தொடர்க... வாழ்த்துக்கள்...
// ”எதுக்கு ஸார்? அவர் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சதுக்கப்புறம் இந்தக் கஞ்சா, கள்ளநோட்டு, கள்ளக்கடத்தல் மாதிரிச் சில்லறை வியாபாரத்தையெல்லாம் விட்டுட்டாரு சார்!”// ஹா ஹா ஹா செம பஞ்ச
ReplyDelete//அதிகமா ஸ்பீடு போற குவாலீஸும் அதிகமா ரோஷப்படுற போலீஸும் // செம செம
//” நேத்து டிவியிலே சோப்புப்பவுடர் விளம்பரம் வந்துச்சு சார். அதுலே வாஷிங் மெஷின்லே ஏரியல் போட்டா துணி நல்லா அழுக்குப்போகும்னு சொல்லியிருக்காங்க. என் பொஞ்சாதி தப்பாப் புரிஞ்சுக்கிட்டு என் வயர்லெஸ்ஸுலே இருந்த ஏரியலைப் புடுங்கி வாஷிங் மெஷின்லே போட்டுட்டா. இப்போ வயர்லஸும் போச்சு; வாஷிங் மெஷினும் போச்சு!”//
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
இது நான் இந்தப்பதிவினில் முதலில் சிரித்த இடம்.
>>>>>
// ”ஆமா. இதைக் கண்டுபிடிக்க நான் ஆபரேஷன் பக்கோடாவை ஆரம்பிச்சிட்டேன்.”
ReplyDelete”வெரிகுட்! இது சம்பந்தமா உங்களுக்கு பக்கோடாபலமா....ஐ மீன்...பக்கபலமா நம்ம டிபார்ட்மெண்ட் இருக்கும். ப்ரொஸீட்!”//
சூப்பர் .... >>>>>
//அதிகமா ஸ்பீடு போற குவாலீஸும் அதிகமா ரோஷப்படுற போலீஸும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை சார்! ப்ளீஸ் ரிஸைன் பண்ணாதீங்க சார்!”//
ReplyDelete;)))))
Rasiththu siriththu, siriththu rasiththen! Thanks
ReplyDelete//”ஐயோ...பத்து பவுனு தங்கம்..மூணு கிலோ வெங்காயம்...எல்லாம் போச்சே....ஐயையோ!”//
ReplyDeleteஅருமையான நகைச்சுவை.
பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
”வாட்? எனக்கா வெவ்வெவ்வெ?
ReplyDeleteசேட்டைக்கார சிங்கத்தின் கடி தொடரட்டும் ...
ReplyDeleteடிரைலரே ஆவலை தூண்டுதே ,
படத்தைக் காண ஆவலோடு இருக்கிறேன் ...வழக்கம்போல் குத்து டான்ஸ் உண்டுதானே ?
ஒவ்வொரு வரிகளும்
ReplyDeleteஇதழோரத்தில் சிறு புன்னகை வரவழைக்கிறது...
வாட் எ சர்ப்ரைஸ்! சேட்டைக்காரர் ரொம்ப நாள் கழிச்சு... அதுவும் வரிக்கு வரி அதிர வெக்கற சிரிப்பு சரவெடியோட... பதிவர் திருவிழாவுக்கு முன்னாலேயே தீபொவளி கொண்டாடின எஃபெக்ட்தான் அண்ணா! சூப்பர்!
ReplyDeleteசூப்பர்... ரொம்ப நாள் கழிச்சி வழக்கம்போல கலக்கிட்டீங்க...
ReplyDeleteசேட்டைக்காரன் எப்படி இருக்கீங்க...உங்கள் கலகல பதிவுக்கு நன்றி..
ReplyDeleteSo, you have come back with a BANG. Credit goes to Shri Balaganesh for making you to write again. Please keep it up without much delay in between.
ReplyDeleteவரிக்கு வரி வெடி..
ReplyDeleteஹா...ஹா..ஹா... பலப்பத்தைத் தொலைத்த பள்ளிச்சிறுவன் போல...ஹா..ஹா..
ReplyDeleteசிரிக்குச் சிரி வரிக்க வச்சுட்டீங்க... ச்சே...வரிக்கு வரி சிரிக்க வச்சுட்டீங்க!
ROFL
ReplyDeleteROFL
ReplyDelete”சார், உங்க மூளையை மியூசியத்துலே வைக்கணும் சார்!”
ReplyDelete”முதல்லே தேடிக் கண்டுபிடிக்கணும்.”
வெங்காய வெடியாய்
இடைவிடாத சிரிப்புமழை..!
Hi Sir,
ReplyDeleteAfter 4 Months, Singham is back with Singham-III.
Nice Comedy Story...
Sathya
டைமிங்கா வந்து வரிக்கு வரி வெங்காய வெடி.. இல்ல.. அணுகுண்டு வெடிச்ச சேட்டைக்கு வாழ்த்துகள் !
ReplyDelete”சார், உங்க மூளையை மியூசியத்துலே வைக்கணும் சார்!”
ReplyDelete”முதல்லே தேடிக் கண்டுபிடிக்கணும்.”
”என்னது?”
”அதாவது இந்தக் கள்ளக்கடத்தலோட தொடர்புடையவங்களைத் தேடிக் கண்டுபிடிக்கணும்னு சொன்னேன்.”
really soooooooperu