Saturday, March 30, 2013

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்



சமர்ப்பணம்:

ஜனவரி, பிப்ருவரி, மார்ச் என்று கணக்குப் பார்க்கிறவர்கள் போலன்றி, ஜனவரி, பிப்ருவரி, மார்ச்சுவரி என்று செத்துச் சுண்ணாம்பாகும் அக்கவுண்டண்டுகளுக்கு......!



மெட்டு: கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்





கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்- தினம்

கண்பிதுங்கி எண்ட்ரிகளைப் போட வேண்டும்

வரவின்றிச் செலவெழுதி வாழ வேண்டும்-பலர்

வாய்நோக ஏசுவதைக் கேட்க வேண்டும்

                                                                                              

(கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்)


எத்தனை வவுச்சரடா! ஏராளம் டார்ச்சரடா!

இத்தனை வேலைசெய்தும் இவன்மீதே பாய்ச்சலடா!-ஒரு

பற்றின்றி வாழ்பவர்க்கு வைத்தபெயர் சித்தரடா

பற்றுடன் வரவுவைக்கும் கணக்கர்கள்தான் பித்தரடா



(கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்)


தணிக்கை நரகமடா! தலையின்மேல் கரகமடா!

ஆடிட்டர் என்ற பேரில் பீடித்திடும் கிரகமடா!

புழுவாய்ப் பிறந்திடினும் குற்றமே இல்லையடா

பூமியிலே கணக்கனென்றால் சாகும்வரை தொல்லையடா!



கடவுள் கணக்கனாகப் பிறக்க வேண்டும்- தினம்

கண்பிதுங்கி எண்ட்ரிகளைப் போட வேண்டும்

வரவின்றிச் செலவெழுதி வாழ வேண்டும்-பலர்

வாய்நோக ஏசுவதைக் கேட்க வேண்டும்


பின்குறிப்பு: 

கேலிச்சித்திரத்தில் உள்ள எனது உருவம் நேரில் பார்ப்பதை விடவும் அழகாக இருந்தால், அதற்கு கம்பனி பொறுப்பேற்காது!

20 comments:

  1. ஹா...ஹா... பாடிப் பார்த்தேன்... செம... (படமும்...)

    ReplyDelete
  2. வழக்கம் போல மெட்டுக்குள் கச்சிதமாய் உட்கார்ந்த வரிகளுடன் ஒரு சேட்டைப் பாடல்! அருமைண்ணா! அதுசரி... கேலிச் சித்திரத்துலயாவது குண்டான உடம்போட உங்களை வரைஞ்சுக்கக் கூடாதா? அதுலயும் ஊசி உடம்புதான் வரையணுமா?

    ReplyDelete
  3. சேட்டை வழக்கம்போல் வார்த்தைகள் மெட்டிற்கு ஏற்ப சரியாக வந்திருக்கிறது, வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இன்று நான் அலுவலகத்துக்கு காலை 8 மணிக்குச் சென்றுவிட்டு இரவு 8 மணிக்குத்தான் திரும்பினேன். நானும் ஒரு கணக்கன் என்ற முறையில் பாடலை ரசித்தேன்....

    ReplyDelete
  5. பற்றின்றி வாழ்பவர்க்கு வைத்த பெயர் சித்தரடா
    பற்றுடன் வரவு வைக்கும் கணக்கர்கள் தான் பித்தரடா#அருமையான வரிகள் சந்தம் பிசகாமல் அமைத்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  6. அனுபவப்பாடல் வரிகள் அருமை ..!

    ReplyDelete
  7. :))) பாடல் அருமை.

    ReplyDelete
  8. Nice Song :-)

    Jus got introduced to your blog sometime back and read nearly all of yur posts. Very interesting and funny.

    ReplyDelete
  9. செமயா இருக்கு பாட்டா வாய்விட்டு பாடிபாத்தேன் அயேயோ எங்கம்மா உத்துா பாத்துகேட்டு முறைக்கிறாங்க

    ReplyDelete
  10. இயர் எண்டிங் ரொம்ப கடுப்புல இருக்கீங்களா சார்??? இந்த கணக்கர்களுக்கு கணக்கை கொடுத்து செட்டில் செய்ய நாங்க படும் கஷ்டம் ஏராளம் சார்...அதையும் கொஞ்சமா தாராள மனசோடு பதிவு போடுங்க சார்....

    ReplyDelete

  11. அடக் கடவுளே!
    கடைசீல, நீங்களும் அக்கவுண்டண்ட் தானா?

    ReplyDelete
  12. Introduced your blog in valaicharam. Take a look when u have a minute. Here is the link... http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_18.html

    ReplyDelete
  13. கலக்கல் பதிவு

    ReplyDelete
  14. ஒரு அக்கவுண்டண் படும் கஷ்டத்தை இதை விட விரிவாக வேறு யாராலும் சொல்ல முடியாது ஒப்பாரி படலை போல அலுது புலம்பும் வவரிகளில் வடியும் சந்தமும் ,லயமும் ,துக்கத்தை மீறி ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. கணினி அனுபவம் தொடர்பதிவுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.

    உங்கள் சுவையான அனுபவத்தை படிக்க ஆவலாக இருக்கின்றோம்.

    முடிந்தபோது தாருங்கள் மகிழ்ச்சியடைவோம்.

    வேலைஅதிகம்என குறிப்பிட்டிருந்தீர்கள்.சிரமத்துக்கு மன்னிக்கவும்.
    நன்றி.
    http://ramyeam.blogspot.com/2013/07

    ReplyDelete
  16. தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!