இடம்: கோடம்பாக்கம் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் வீடு
(வாசலில் தமன்னா ரசிகர்கள்)
(வாசலில் தமன்னா ரசிகர்கள்)
சாஸ்திரிகள்: வாங்கோ! வாங்கோ! யாரு நீங்கெல்லாம்?
த.ரசிகர்: நாங்கெல்லாம் தூத்துக்குடி தங்கத்தாரகை தமன்னா ரசிகர் மன்றத்துலேருந்து வந்திருக்கோம் சாமி!
சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! உட்காருங்கோ! காப்பி சாப்பிடறேளா? என்னது? பஸ் ஸ்டாண்டுலேயே டாஸ்மாக்குலே சிரமப்பரிகாரம் பண்ணிண்டு வந்திருக்கேள் போலிருக்கே?
த.ரசிகர்: ஹி..ஹி! ஆமாம் சாமி! அதாவது எங்க தலைவிக்கு ஒரு கோவில் கட்டப்போறோம். தமன்னாலயம்னு பேரு! அதுக்கு நீங்க தான் கும்பாபிஷேகம் பண்ணி வைக்கணும் சாமி!
சாஸ்திரிகள்: அதுக்கென்ன, திவ்யமா, ஆனந்தமா, அமர்க்களமா, அமோகமாப் பண்ணிட்டாப் போச்சு!
த.ரசிகர்: அதுலே பாருங்க சாமி! மதுரையிலே குஷ்புவுக்குக் கோவில் கட்டினாங்க! அதுக்கப்புறம் குஷ்புவுக்கு மார்க்கெட் போயிருச்சு. தேவையில்லாம இந்தியாவுலே டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட் தவிர இருக்கிற எல்லா கோர்ட்டும் ஏறி இறங்கினாங்க!
சாஸ்திரிகள்: ஆமாமாம்!
த.ரசிகர்: அப்புறம் திருநெல்வேலியிலே நமீதாவுக்குக் கோவில் கட்டினாங்க! அவங்க மார்க்கெட்டும் அவுட்டாயிருச்சு! கோவில் திருப்பணியும் பாதியிலேயே நின்னுருச்சு! ரெண்டு வருஷமாகப்போகுது, இன்னும் கும்பாபிசேகம் கூட ஆகலை! இருந்த ஒரு உண்டியலையும் யாரோ திருடிட்டாங்களாம்.
சாஸ்திரிகள்: அவா ப்ராப்தம் அவ்வளவு தான்!
த.ரசிகர்: எங்க தமன்னாலயம் அப்படி ஆயிடக்கூடாது சாமீ! அதுனாலே எல்லாத்தையும் முறைப்படி செய்யணும். அதுனாலே தான் உங்க கிட்டே வந்திருக்கோம். தட்சணை எவ்வளவு வேண்ணாலும் தர்றோம் சாமி!
சாஸ்திரிகள்: அதுக்கென்ன? எல்லாத்தையும் சாஸ்திரோக்தமாப் பண்ணிட்டாப் போச்சு! எதுக்கும் தமன்னாவோட ஜாதகம் இருந்தாக் கொடுங்கோ! இல்லேன்னா அவாளோட பொறந்தநாளாவது சொல்லுங்கோ!
த.ரசிகர்: 21 டிசம்பர் 1989
சாஸ்திரிகள்: அப்படீன்னா, தனுர் ராசி! இந்த வருஷம் சக்கைப்போடு போடுவாளே!
த.ரசிகர்: ஆமாம் சாமி! ரிலீஸ் ஆன எல்லா படமும் சூப்பர் ஹிட்!
சாஸ்திரிகள்: இருக்காதா பின்னே? எங்காத்துக்காரிக்கும் தனுர் ராசிதான்! பின்னு பின்னுன்னு பின்னறாளோன்னோ?
த.ரசிகர்: வரும்போதே கேட்டோம்! ’ஐயோ அம்மா’ன்னு கூவிக்கிட்டிருந்தீங்க! சரி சாமி! முதல்லே திருப்பணியை எப்படி ஆரம்பிக்கலாமுன்னு சொல்லுங்கோ!
சாஸ்திரிகள்: நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதேள்! என்னதான் கும்பாபிஷேகம் நான் பண்ணினாலும், கொஞ்சம் நம்ம தமிழ்ப்பண்பாடு கலந்து பண்ணுங்கோ! இல்லேன்னா, சுயமரியாதை பேசறவா கோவிலுக்கு வரமாட்டா!
த.ரசிகர்: அதுவும் சரிதான்! எங்க தமன்னாலயத்துலே எந்த ஏற்றத்தாழ்வும் இருக்கக்கூடாது சாமீ! அப்படியிருந்தா தலைவியோட அருள் கிடைக்காது.
சாஸ்திரிகள்: உங்க தமன்னா எங்கே பொறந்தாங்க?
த.ரசிகர்: ஆஸ்பத்திரியிலே....!
சாஸ்திரிகள்: அதைக்கேட்கலேங்காணும்! எந்த ஊருலே பொறந்தான்னு கேட்கறேன்!
த.ரசிகர்: ஓ! அதுவா! மும்பையிலே பொறந்தாங்கோ!
சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! அதான் மகாலட்சுமி கடாட்சம் பரிபூரணமா இருக்கு! நீங்க என்ன பண்ணறேள், தமன்னாவோட சிலைக்கு தேவையான கல்லை பம்பாயிலேருந்து எடுத்துண்டு வாங்கோ!
த.ரசிகர்: பம்பாயிலே மலையிருக்கா சாமீ?
சாஸ்திரிகள்: என்ன அப்படிக் கேட்டுட்டேள்? மலபார் ஹில், அன்டாப் ஹில்னு ஏகப்பட்ட ஹில் இருக்கு பம்பாயிலே! அங்கேருந்து கல்லைப் பேத்து எடுத்துண்டு வந்து அந்தக் கல்லிலே தமன்னாவுக்கு சிலை பண்ணுங்கோ!
த.ரசிகர்: இதை மாதிரி யாரோ ஒரு தமிழ் மன்னர் பரங்கிமலையிலேருந்து கல்லெடுத்துட்டு வந்து மணிமேகலைக்குக் கோவில் கட்டினதா பூகோளத்துலே படிச்சிருக்கேனே?
சாஸ்திரிகள்: பகவானே! கஷ்டம்! கஷ்டம்!! அது பரங்கிமலை இல்லை, இமயமலை! மணிமேகலைக்கு இல்லை, கண்ணகிக்கு! நீர் படிச்சது பூகோளம் இல்லேங்காணும், சரித்திரம்!
த.ரசிகர்: ஏதோ ஒண்ணு! இப்போ அதுவா முக்கியம்? சரி சாமி! நீங்க சொல்லுறா மாதிரியே பம்பாயிலேருந்து கல்லைப் பேத்து எடுத்து, எங்க தலை மேலேயே வச்சிக்கிட்டு அங்கிருந்து தூத்துக்குடி வரைக்கும் பொடிநடையா வந்து சேர்ந்திடறோம்.
சாஸ்திரிகள்: அதெல்லாம் எதுக்கு? ரயில்லே வர வேண்டியது தானே?
த.ரசிகர்: சம்மர் சீஸன் சாமி! டிக்கெட் கிடைக்காது! அப்புறம் எங்க தலைவி சிலைக்கு பெரிசா கல் தேவைப்படாது. தலையிலே வச்சிட்டு வர்றது ஒண்ணும் பெரிய கஷ்டமில்லே!
சாஸ்திரிகள்: சும்மாச்சொல்லப்படாது! உங்க பக்திக்கு முன்னாலே ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஒண்ணுமேயில்லை போங்கோ!
த.ரசிகர்: இன்னும் முழுசா நான் சொல்லவே இல்லை சாமி! எங்க தமன்னா கோவிலிலே விபூதி,குங்குமம் கொடுக்க மாட்டோம். எங்க தங்கத்தாரகை படத்தைப் பார்த்தவங்க மீதியிருக்கிற பாதி டிக்கெட்டை ஒரு தனி உண்டியலிலே போடுவாங்க! நாங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிசா யாகம் பண்ணி, அதுலே அந்த டிக்கெட்டையெல்லாம் போட்டு பொசுக்கி, அந்த சாம்பலைத் தான் திருநீறாக் கொடுக்கப்போறோம்!
சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்!!
த.ரசிகர்: அது மட்டுமா? விசேஷ பூஜையெல்லாம் கூட முடிவு பண்ணிட்டோம். கேடிபூஜை, அயன்பூஜை,காதல்பூஜை,பையா பூஜைன்னு ஒவ்வொரு நாளும் தலைவிக்கு விதவிதமா அலங்காரம் பண்ணுவோம்.
சாஸ்திரிகள்: பிரமாதம்! உற்சவம் உண்டா?
த.ரசிகர்: அது இல்லாமலா? தலைவி பொறந்த நாளை ஒவ்வொரு டிசம்பர் 21-ம் தேதியும் தமன்னோற்சவமுன்னு கொண்டாடுவோம். எல்லாருக்கும் சமோசாவும், முள்ளங்கிப் பரோட்டாவும் பிரசாதமாக் கொடுப்போம்.
சாஸ்திரிகள்: என்னது? சமோசாவா?
த.ரசிகர்: ஆமாம் சாமீ! எங்க தலைவி பஞ்சாபியில்லையா? அதான் பிரசாதமா சமோசாவும் முள்ளங்கிப் பரோட்டாவும்....!
சாஸ்திரிகள்: விசேஷம் தான் போங்கோ! சரி, பஞ்சாங்கத்தைப் பார்த்துட்டு கும்பாபிஷேகத்துக்கு ஒரு நல்ல நாள் முடிவு பண்ணி தகவல் அனுப்பறேன். உங்க அட்ரஸ், செல்போன் நம்பரெல்லாம் கொடுத்திட்டுப்போங்கோ!
த.ரசிகர்: சரி சாமீ! இந்தாங்க எங்களோட தட்சணை!
சாஸ்திரிகள்: என்னது, பெரிய மூட்டையான்னா இருக்கு?
த.ரசிகர்: அதொண்ணுமில்லே சாமி! எங்க கிட்டே காசு இல்லை! அதுனாலே எல்லாரும் அவனவன் போட்டிருக்கிற வாட்சு எல்லாத்தையும் கழட்டி மூட்டையாக் கட்டிக் கொண்டு வந்திருக்கோம். இதையெல்லாம் வித்தா நல்ல தொகை தேறும்!
சாஸ்திரிகள்: அட கஷ்டமே!
த.ரசிகர்: நீங்க ஃபீல் பண்ணாதீங்க சாமி! பட்டினி கிடந்து செத்தாலும் சரி, தலைவிக்கு கோவில் கட்டியே தீருவோம்.
சாஸ்திரிகள்: பண்ணுங்கோ பண்ணுங்கோ! இந்தச் சாக்குலே நானும் திருச்செந்தூர் முருகனையும் தரிசனம் பண்ணலாம். எட்டயாபுரம் போயி பாரதி வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும்.
த.ரசிகர்: சாமீ! பாரதி பெங்களூருலே செட்டில் ஆயிட்டாங்க!
சாஸ்திரிகள்: என்னது?
த.ரசிகர்: 'அம்முவாகிய நான்' படத்துலே நடிச்ச பாரதி தானே? அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூரிலே செட்டில் ஆயிட்டாங்க! ஒரே படத்தோட நிறுத்திட்டாங்க, இல்லாட்டி அவங்களுக்குத் தான் முதல்லே கோவில் கட்டுறதா இருந்தோம்.
சாஸ்திரிகள்: கிரஹசாரம்! நான் சொன்னது மகாகவி சுப்ரமணிய பாரதி! அவர் தூத்துக்குடி பக்கத்துலே எட்டயாபுரத்துலே தானே பொறந்தார்?
த.ரசிகர்: ஓ! அவரா? சாரி சாமி! நான் பூகோளத்துலே ரொம்ப வீக்!
சாஸ்திரிகள்: அது பூகோளம் இல்லை! சரித்திரம்!!
த.ரசிகர்: ஏதோ ஒண்ணு, அதுவா முக்கியம்? சரி சாமீ! கிளம்பறேன்! தலைக்கு மேலே வேலையிருக்கு! தலைவிக்குக் கோவில் மட்டும் கட்டி முடிச்சா தூத்துக்குடியிலேருந்து திருச்செந்தூருக்கு தலைகீழா நடந்து வர்றதா வேண்டிக்கிட்டிருக்கேன். வரட்டுமா?
சாஸ்திரிகள்: ஓ! பேஷா போயிட்டு வாங்கோ!
(தமன்னா ரசிகர்கள் கலைகிறார்கள். சாஸ்திரியின் மனைவி மாமி வருகிறார்)
மாமி: ஏன்னா, அவாதான் அச்சுப்பிச்சுன்னு ஏதோ உளர்றான்னா, நீங்களும் நாள் குறிச்சுக் கொடுக்கறேன்னு சொல்றேளே?
சாஸ்திரிகள்: நீ சித்த சும்மாயிரு! நான் கும்பாபிஷேகம் பண்ண மாட்டேன்னு சொன்னா அவா யாராவது அரசியல் தலைவரை வச்சுண்டு சுயமரியாதை குடமுழுக்குன்னு பண்ணுவா! நம்மளைத் திட்டுவா! அதுக்கு நாமளே பண்ணிடலாமோன்னோ? உள்ளே போயி பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வா!
(மாமி உள்ளே போகிறாள். மீண்டும் வாசலில் யாரோ....!)
குரல்: சாமீ!
சாஸ்திரிகள்: யாரு? உள்ளே வாங்கோ!
வந்தவர்: வணக்கம் சாமீ! என் பேர் சேட்டைக்காரன்! அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்திலேருந்து வர்றேன்.

சேட்டை
ReplyDeleteஅடி பின்றீங்க
ஸ்ரேயாவெல்லாம் டூப்பு
ReplyDeleteஇப்ப
தமன்னாதான் டாப்பு....
(அகில உலக "நிகழ்கால (அப்பப்ப வரும்) நடிகைகளின் ரசிகர் மன்றம்)
கலக்கிட்டிங்கோன ,பேஸ் பேஸ் ,தமிழன் மேல்
ReplyDeleteபிடித்த சனி இதோடு விலகிடும்
அப்படிப்போடு அருவாள..........
ReplyDelete:-)
அருமை நண்பா!
ReplyDeleteசில உண்மைகளைத்தூவி கலாய்ச்சிருக்கீங்க... சேட்டையிம் முழு நீள நகைச்சுவை அருமை...கீப் இட் அப்!
பிரபாகர்...
கோயில் கட்டினதும் சொல்லிங்க..
ReplyDeleteதமன்னா அம்மினிய கூட்டிகிட்டு, கண்டிப்பா வாரேன்..
.. பார்த்துங்க..
அடுத்த சுனாமி வந்திரப்போகுது..ஹா..ஹா
ரொம்ப நன்னாயிருக்குடா
ReplyDeleteஸ்ரேயாக்கு கோயில் கட்டப் போறீரா?
ReplyDeleteகலக்கும்வோய்!
சேட்ட உனக்கு அறிவு இருக்காயா , தமான பதிவு போட்டு ஒரே ஒரு படம் தான் போட்ருக்க , மரியாதையா ரீஎடிட் பன்னி ஒரு 10 போடவாவது போடு (உன்து இல்ல , தமான போடோ ). இல்ல என்னைய பத்தி தெரியும்ல அப்புறம் என்னா நடக்கும்ன்னு தெரியாது , உசுர காபதிக்க பாரு
ReplyDelete//தூத்துக்குடி ‘மக்காக்கள்’ //
ReplyDeleteமாக்கள் போட்ட பதிவு
ஆஹா ! பாவம் சின்ன பொண்ணு . சேட்டை அந்த பொண்னுகிட்டயும் உங்க சேட்டயக்காட்டீட்டிங்கலே கலக்கல் !
ReplyDelete//வணக்கம் சாமீ! என் பேர் சேட்டைக்காரன்! அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்திலேருந்து வர்றேன்.//
ReplyDeleteஅப்போ சீக்கிரம் ஸ்ரேயா கோயில் சேட்டை அண்ணாச்சி கிட்ட இருந்து எதிர் பார்க்கலாம். ஆனா அவங்க மார்கெட் தான் அப்போவே அம்பேல் ஆகிடுச்சே ?
படிக்கப் படிக்க பத்திக்கிட்டு வந்தது.
ReplyDeleteஸ்ரேயா மார்க்கெட் அவுட்டாயிடுச்சி. எங்க தங்கத் தலைவி தமன்னாதான் இப்ப ஹிட்டு. அவங்களை எப்பிடியாவது ஃபீல்டு அவுட் செய்யணுங்கிற ஒரே முடிவோட அவங்களுக்கு கோவில் கட்டுறதாப் பதிவு எழுதிறீங்கன்னு..
நல்ல வேளையா ஸ்ரேயாவுக்கும் அடுத்ததா கோவில் கட்டப் போறதால மன்னிச்சு உடுறேன்.
ரைட்.....நடத்து
ReplyDeleteசுவாரஷ்யமான பதிவு . வாழ்த்துக்கள்
ReplyDeletePresent sir! கோவில் கட்ட donation வாங்கிய கணக்கு வழக்கு பார்க்க ஆள் வேண்டும் என்றால், நான் வேலைக்கு apply பண்றேன்.
ReplyDeleteகலக்கரீங்க மிஸ்டர் சேட்டை.
ReplyDeleteசேட்டை நான் அய்யரைப் பார்க்கப் போன போது உன்னைக் கூட கூட்டிக்கிட்டுப் போனது தப்பாப் போச்சு. விஷயம் வெளியில தெரிஞ்சு போச்சுன்னு தமன்ஸ் எங்கிட்ட கோச்சுக்குது. ஏன்யா யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணினாயே மறந்துட்டு பதிவு போட்டுவிட்டாய்.
ReplyDeleteஅப்புறம் ஒன்னு எங்க தமன்ஸ் பஞ்சாபி பொண்னு இல்லை சிந்திக்காரி. சரி கோவில் வேலை எல்லாம் பாக்கி இருக்கு வரட்டா?
// அதுலே பாருங்க சாமி! மதுரையிலே குஷ்புவுக்குக் கோவில் கட்டினாங்க! அதுக்கப்புறம் குஷ்புவுக்கு மார்க்கெட் போயிருச்சு//.
ReplyDeleteதிருச்சி என்பது சரியானது!!!! ஆகவே தங்களின் தகவல் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்?
(ரொம்ப நாட்டுகு ”முக்கிய”மான தகவல் பாருங்க தப்பா சொன்னா தமன்னா சாமி தண்டிக்கும்... அப்புறமா கண்ண குத்தும்… கல்க்கத்தா காளி போல ”நெஞ்சுல” மிதிக்கும்… ஹி ஹி)
ஹேய்.. சேட்டை.. என்ன தமன்னாவை இந்த வாரு வாரியிருக்கீங்க.. சரி.. அவங்க போன் நெம்ப வேணும்ன்னா என்கிட்ட சொல்லுங்க.. தர்றேன்.. சாமி சத்தியமா அது அவங்களோட பர்சனல் நெம்பர்... ஒரு இண்டர்வியூவில் வாங்கினேன்.. புள்ளை நல்லாவே பேசும்..
ReplyDeleteயொவ் சேட்டை எங்க என் பின்னூட்டம். \நான் இத ஒரு பதிவா போட்டு உன்னை.......
ReplyDelete//எங்க தலைவி சிலைக்கு பெரிசா கல் தேவைப்படாது. தலையிலே வச்சிட்டு வர்றது ஒண்ணும் பெரிய கஷ்டமில்லே!//
ReplyDeleteசேட்டையண்ணே....!
என்னா துல்லியமா கணிச்சி வெச்சிருக்கீங்கண்ணே....! உங்க தெறமைய பாத்து என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.!
யோவ்... ப்ரதர்,
ReplyDeleteகோயில நீ எங்க வேணா கட்டிக்கோ.
ஆனா தெய்வம் பொறந்த ஊர தப்பா சொன்னே... நீ வெளங்கவே மாட்டே.
(அந்த புள்ள கோவா-வுல பொறந்ததுன்னு கேள்வி பட்டேன்)
தமன்னா சீசனா.
ReplyDeleteநடக்கட்டும்.
அவங்ககிட்ட வேணாம் சேட்டை.
//சேட்டை அடி பின்றீங்க//
ReplyDeleteமிக்க நன்றி!! :-)))
//ஸ்ரேயாவெல்லாம் டூப்பு இப்ப
ReplyDeleteதமன்னாதான் டாப்பு.... (அகில உலக "நிகழ்கால (அப்பப்ப வரும்) நடிகைகளின் ரசிகர் மன்றம்)//
ஆஹா! நாங்களும் சிம்ரன் ரசிகர் மன்றத்துலேருந்து ராஜினாமா பண்ணி வந்தவங்க தான்! :-))
மிக்க நன்றிங்க!!
//கலக்கிட்டிங்கோன ,பேஸ் பேஸ் ,தமிழன் மேல் பிடித்த சனி இதோடு விலகிடும்//
ReplyDeleteஅப்படியா நினைக்கறீங்க? நீங்க சொன்னா சரிதான்! :-))
மிக்க நன்றிங்க!
//அப்படிப்போடு அருவாள..........
ReplyDelete:-)//
மிக்க நன்றிங்க! :-)))
//அருமை நண்பா! சில உண்மைகளைத்தூவி கலாய்ச்சிருக்கீங்க.. சேட்டையிம் முழு நீள நகைச்சுவை அருமை...கீப் இட் அப்!//
ReplyDeleteஆமாம், சில நடைமுறைக் கசப்புகளையும் நகைச்சுவையாகச் சொல்ல முயன்றேன். மிக்க நன்றி! :-)))
//கோயில் கட்டினதும் சொல்லிங்க..
ReplyDeleteதமன்னா அம்மினிய கூட்டிகிட்டு, கண்டிப்பா வாரேன்..//
வாங்க, வாங்க! தம்பதிகளை பூரணகும்பத்தோட வரவேற்கிறேன். :-))
//.. பார்த்துங்க..அடுத்த சுனாமி வந்திரப்போகுது..ஹா..ஹா//
இதென்ன புதுப்புரளி? :-)))
மிக்க நன்றிண்ணே!!!
//ரொம்ப நன்னாயிருக்குடா//
ReplyDeleteபெரியவா அனுக்ரஹம் தான்! :-)))
//ஸ்ரேயாக்கு கோயில் கட்டப் போறீரா?
ReplyDeleteகலக்கும்வோய்!//
இனிமேல் தான் நன்கொடை வசூல் ஆரம்பிக்கணும். உங்க கிட்டேயிருந்தே ஆரம்பிக்கலாமா? :-))
மிக்க நன்றி!!
//சேட்ட உனக்கு அறிவு இருக்காயா , தமான பதிவு போட்டு ஒரே ஒரு படம் தான் போட்ருக்க , மரியாதையா ரீஎடிட் பன்னி ஒரு 10 போடவாவது போடு (உன்து இல்ல , தமான போடோ ). இல்ல என்னைய பத்தி தெரியும்ல அப்புறம் என்னா நடக்கும்ன்னு தெரியாது , உசுர காபதிக்க பாரு//
ReplyDeleteமன்னிச்சிடுங்க அண்ணே! கோவிக்காதீக! தமன்னாவைப் பத்தி இன்னும் நிறைய எழுதுவோமில்லா? பத்து என்ன, நூறு படம் போட்டிரலாம். கொஞ்சம் லூசா வுடுங்கண்ணே! :-))))
மிக்க நன்றிண்ணே!
//மாக்கள் போட்ட பதிவு//
ReplyDeleteஹாஹா! இருக்கட்டும்! :-))))))))))
//ஆஹா ! பாவம் சின்ன பொண்ணு . சேட்டை அந்த பொண்னுகிட்டயும் உங்க சேட்டயக்காட்டீட்டிங்கலே கலக்கல் !//
ReplyDeleteஇதென்ன அநியாயம்? யாரோ கோவில் கட்டுறாங்கன்னு கேள்விப்பட்டு அதை எழுதினது ஒரு குத்தமா? என்ன சங்கரண்ணே இது? :-)))))
மிக்க நன்றிங்க!!
//அப்போ சீக்கிரம் ஸ்ரேயா கோயில் சேட்டை அண்ணாச்சி கிட்ட இருந்து எதிர்பார்க்கலாம்.//
ReplyDeleteநீங்க மஞ்சள்நகரத்துக்காரங்க மங்களகரமா ஒரு ஐடியா கொடுத்திருக்கீங்க! செஞ்சிர வேண்டியது தான்! :-)))
//ஆனா அவங்க மார்கெட் தான் அப்போவே அம்பேல் ஆகிடுச்சே ?//
நான் தான் புதுப்படம் ஒண்ணும் ஒத்துக்க வேண்டாமுன்னு சொல்லியிருக்கேன். ஹி..ஹி!!!
மிக்க நன்றிங்க!
//படிக்கப் படிக்க பத்திக்கிட்டு வந்தது.//
ReplyDeleteஅடடா! :-(((
//ஸ்ரேயா மார்க்கெட் அவுட்டாயிடுச்சி. எங்க தங்கத் தலைவி தமன்னாதான் இப்ப ஹிட்டு. அவங்களை எப்பிடியாவது ஃபீல்டு அவுட் செய்யணுங்கிற ஒரே முடிவோட அவங்களுக்கு கோவில் கட்டுறதாப் பதிவு எழுதிறீங்கன்னு..//
ஐயோ, இப்படியெல்லாம் அபாண்டமாப் பழிபோடாதீங்க! என்னமோ குஷ்புவுக்கும் நமீதாவுக்கும் நான் சொல்லித்தான் கோவில் கட்டுனா மாதிரி சொல்லறீங்களே! :-)))))
//நல்ல வேளையா ஸ்ரேயாவுக்கும் அடுத்ததா கோவில் கட்டப் போறதால மன்னிச்சு உடுறேன்.//
கும்பாபிஷேகத்துக்கு மறக்காம வந்திடுங்க, காணிக்கையோட! :-)))
மிக்க நன்றிங்க
//ரைட்.....நடத்து//
ReplyDeleteமிக்க நன்றிங்க! :-))
//சுவாரஷ்யமான பதிவு . வாழ்த்துக்கள்//
ReplyDeleteமிக்க நன்றிங்க!!! :-)))
தமன்னா சக்தி மசாலா விளம்பரத்துக்கு வந்த காலத்தில் இருந்தே நான் ரசிகன். எனவே, எனக்கு தகுந்த பதவி அளித்து கவுரவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...
ReplyDeleteஎன்னது நன்கொடையா... பக்கத்துல இருக்கவன் உயரையே கொடுப்பேன்யா நான்...
//Present sir! கோவில் கட்ட donation வாங்கிய கணக்கு வழக்கு பார்க்க ஆள் வேண்டும் என்றால், நான் வேலைக்கு apply பண்றேன்.//
ReplyDeleteகணக்குப் பார்க்கவா? முதல்லே உங்க கணக்குலே எவ்வளவு டாலர் காணிக்கையாத் தரப்போறீங்க சொல்லுங்க! :-))
ஆனாலும், திருப்பணியில் ஈடுபட எவ்வளவு ஆர்வம்.....!!
மிக்க நன்றி!!!
//கலக்கரீங்க மிஸ்டர் சேட்டை.//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே! அடிக்கடி வாங்க! :-)))
//சேட்டை நான் அய்யரைப் பார்க்கப் போன போது உன்னைக் கூட கூட்டிக்கிட்டுப் போனது தப்பாப் போச்சு. விஷயம் வெளியில தெரிஞ்சு போச்சுன்னு தமன்ஸ் எங்கிட்ட கோச்சுக்குது. ஏன்யா யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணினாயே மறந்துட்டு பதிவு போட்டுவிட்டாய்.//
ReplyDeleteஹிஹி! கோவிக்காதீங்க! எங்கே நீங்க முந்திக்குவீங்களோன்னு ஒரு பயத்துலே முந்திரிக்கொட்டை மாதிரி(மாதிரியென்ன, அதே தான்) நானே அவசரத்துலே போட்டுட்டேன். :-))))) தமன்னாவை நான் அப்புறமா சமாதானப்படுத்துறேன், சரியா...?
//அப்புறம் ஒன்னு எங்க தமன்ஸ் பஞ்சாபி பொண்னு இல்லை சிந்திக்காரி.//
மன்னிக்கணும் ஐயா! நான் பூகோளத்துலே கொஞ்சம் வீக்! :-)
//சரி கோவில் வேலை எல்லாம் பாக்கி இருக்கு வரட்டா?//
அபிஷேகமெல்லாம் உண்டா? எனக்கொரு டிக்கெட் அனுப்புங்களேன்!
மிக்க நன்றிங்க!! :-))))
//திருச்சி என்பது சரியானது!!!! ஆகவே தங்களின் தகவல் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்?//
ReplyDeleteஅப்படியா? எப்போ மாத்துனாங்க? சொல்லவேயில்லே...???
//(ரொம்ப நாட்டுகு ”முக்கிய”மான தகவல் பாருங்க தப்பா சொன்னா தமன்னா சாமி தண்டிக்கும்... அப்புறமா கண்ண குத்தும்… கல்க்கத்தா காளி போல ”நெஞ்சுல” மிதிக்கும்… ஹி ஹி)//
ஐயோ, இதுக்கெல்லாம் ஏதாவது பலகாரம், அதாவது பரிகாரம் இருக்குங்களா? தயவு செய்து சொல்லுங்களேன்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! :-))))))))))
//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி//
ReplyDeleteபெற்றுக்கொண்டேன். உங்களைப் போன்றோரின் ஊக்கமும் ஆதரவும் எனக்கு வைட்டமின் மாதிரி! மனமார்ந்த நன்றி!! :-)
//:)//
ReplyDeleteநன்றி சென்ஷி!! :-)))
//ஹேய்.. சேட்டை.. என்ன தமன்னாவை இந்த வாரு வாரியிருக்கீங்க..//
ReplyDeleteஏனுங்கோ! கோவில் கட்டப்போறது அவங்க ரசிகருங்க, பழி என் மேலேயா? இது நல்லால்லே....!
//சரி.. அவங்க போன் நெம்ப வேணும்ன்னா என்கிட்ட சொல்லுங்க.. தர்றேன்.. சாமி சத்தியமா அது அவங்களோட பர்சனல் நெம்பர்...//
நான் வாங்குறேனோ இல்லையோ, இதைப் படிச்சிட்டு "எனக்கு கொடுங்க,’ன்னு நிறைய பேரு உங்க உசிரை வாங்காம இருந்தா சரிதானுங்கோ! :-))))
//ஒரு இண்டர்வியூவில் வாங்கினேன்.. புள்ளை நல்லாவே பேசும்..//
ஓஹோ! நீங்க தான் தமன்ஸுக்கு இன்டர்வ்யூ பண்ணினீங்களா? அப்படியே என்னையும் இன்டர்வ்யூ பண்ணி ஹீரோவாக்கிடுங்களேன். :-)))
அப்புறம், ஸ்ரேயா நம்பர் இருந்தா கொடுங்களேன்! :-)))
மிக்க நன்றிங்கோ!!!!
//யொவ் சேட்டை எங்க என் பின்னூட்டம். \நான் இத ஒரு பதிவா போட்டு உன்னை.........//
ReplyDelete:-)))))))))))))
//என்னா துல்லியமா கணிச்சி வெச்சிருக்கீங்கண்ணே....! உங்க தெறமைய பாத்து என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.!//
ReplyDeleteஹிஹி! வாங்க வாங்க! உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்! நீங்க வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க! மிக்க நன்றிங்க!!
//கோயில நீ எங்க வேணா கட்டிக்கோ.
ReplyDeleteஆனா தெய்வம் பொறந்த ஊர தப்பா சொன்னே... நீ வெளங்கவே மாட்டே.//
அடடா! தமன்னா ஜாதகத்தையே திருத்தி எழுதணும் போலிருக்கே! சரி, எழுதிடறேன். :-)))
//(அந்த புள்ள கோவா-வுல பொறந்ததுன்னு கேள்வி பட்டேன்)//
ஐயையோ, அப்போ அது இந்தியாவுலே பொறக்கலியா? அவ்வ்வ்வ்வ்வ்!
மிக்க நன்றிங்க!!! :-)))))))
//தமன்னா சீசனா.
ReplyDeleteநடக்கட்டும்.//
ஆமாங்க, பாருங்க இதுவும் மாம்பழ சீசன், பலாப்பழ சீசன் மாதிரி ஆயிருச்சு! :-))))
//அவங்ககிட்ட வேணாம் சேட்டை.//
ஐயையோ, மாட்டேன் மாட்டேன்.
(அது போகட்டும், ஏன் இப்படி பயப்படறீங்க? :-))))))) )
மிக்க நன்றிங்க!!!!!!!
நன்றிங்க
ReplyDeleteநல்ல சிரிச்சேன்
சாப்பிடும் போது படித்ததால் கொஞ்சம் கஸ்டம்
//நன்றிங்க நல்ல சிரிச்சேன்
ReplyDeleteசாப்பிடும் போது படித்ததால் கொஞ்சம் கஸ்டம்//
வாங்க பிரியமுடன் பிரபு!
சாப்பிடும்போது படிச்சா கஷ்டமா? ஏனுங்க, ஜீரணிக்கக் கஷ்டமாயிருக்குதா? :-)))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!
என்ன கொடுமை இது சேட்டைக்காரா...
ReplyDeleteதமன்னாவுக்கு இந்த கோயில் மேட்டர் தெரியுமா.....!
ReplyDeleteஉங்க பதிவ நான் வன்மையா காட்டுத்தனமா கண்டிக்கிறேன்...சாமி தமன்னா வ கிண்டல் பண்ண இந்த சேட்டைக்கு இந்த வருஷம் incrementa cut பண்ணி விட்டுடு ...
ReplyDelete///தமன்னாவோட சிலைக்கு தேவையான கல்லை பம்பாயிலேருந்து எடுத்துண்டு வாங்கோ!///
கல்லு என்னையா கல்லு..பம்பாயே தூக்கிட்டு வருவோம்...
தென்னாடுடைய தமன்னா போற்றி!!! என்னாட்டவர்க்கும் அழகியே போற்றி! போற்றி!
இப்படிக்கு,
பருப்பு
கத்தார் கிளைத் தலைவர், அகில உலக தமன்னா பக்தர்கள் குழு