Sunday, September 4, 2011

பேல்பூரி-ஸ்டால்:04-09-11

குருவே சரணம்!

எப்போதோ படித்து அரைகுறையாய் ஞாபகமிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை; கிட்டத்தட்ட இப்படி இருக்கும்...!

படித்துப் படித்துச் சொன்னார்
கணக்கு வாத்தியார்
"பக்கத்திலிருந்து கடன் வாங்கு"
அப்போது புரியவில்லை
இப்போது
வாங்கிக்கொண்டிருக்கிறேன் கடனை!

வாத்தியார்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் எப்பொழுதோ உருப்பட்டிருப்போம்,’ என்று புலம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். ஆகவே, என்னைப் போன்றவர்களும், ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு உருப்பட்டவர்களும் 05-09-2011 அன்று நமது அனைத்து வாத்தியார்களுக்கும் மனதாற ஒரு வார்த்தை ’நன்றி’ யாவது சொல்வோமாக!

ஆசிரியர் தின வாழ்த்துகள்!

தகவல் நேரம்

என்சைக்ளோபீடியா, விக்கிபீடியா என்று பல ’பீடியா’க்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது தெற்கு ஆசிய வழக்குச் சொற்களைச் சேகரிக்கிற ஒரு புதிய முயற்சிக்கு ’சமோசாபீடியா’ என்று பெயர் சூட்டி, இதுவரை 2700 வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

இதோ, சமோசாபீடியாவின் வலைத்தள முகவரி!

இதே போல, தமிழகத்தில் சர்வசாதாரணமாகப் புழங்குகிற வார்த்தைகளை யாராவது ’இட்லிபீடியா’ அல்லது ’பொங்கல்பீடியா’ என்று தொகுத்தால், என் போன்ற வலைப்பதிவர்களுக்கு மொக்கைபோட உதவியாய் இருக்கும்.

நியூஸ் ரீல்!

கணவரை பழிவாங்க அவரது மொபைல்போனில் இருந்து முதல்வருக்கு மிரட்டல் விடுத்த மனைவி சென்னையில் கைது

அம்மா ஆட்சிக்கு வந்ததுலேருந்து அம்மணிங்கல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க! ஆம்புளைங்கல்லாம் கொஞ்சம் உஷாரா இருங்கப்பு!

முதலாவது ஒரு நாள் போட்டி- இந்தியாவின் வெற்றியைத் தடுத்த மழை!

அவங்க ஜெயிச்சிருந்தாத் தானே மழை வந்திருக்கணும்? - என்று அலுத்துக்கொள்கிறார் சகபதிவர் ’கவிச்சோலை’ எல்.கே!

கர்நாடகா பா.ஜ.கவிலிருந்து எம்.எல்.ஏ பதவியிலிருந்து ஸ்ரீராமுலு விலகல்

பா.ஜ.கவுக்கும் "ஸ்ரீராமுக்குமே" தகராறு வந்திருச்சா? பேஷ்!

கர்நூல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 சிசுக்கள் மரணம்-கடவுள் காரணம் என அமைச்சர் பேச்சு!

ஓ அப்படியா? இதுவரை அரசு மருத்துவமனைக்குப் போய் பிழைத்து வருவதற்கு மட்டும்தான் கடவுள் காரணம் என்று அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்

இதை வாசித்து விட்டு ’ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,’ என்றாராம் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்று தமிழக ஆளுனரான ரோசையா!

லோக்சபாவில் குறட்டை விட்டுத் தூங்கிய லாலு பிரசாத்

நிதிஷ்குமார் பாராளுமன்றத்தில் இல்லாதது, லாலுவுக்கு ரொம்பத்தான் குளிர்விட்டுப் போச்சு!

திப்பு சுல்தான் வேடத்தில் கமல் ஹாஸன்!

பொதுவாக, கமலை வைத்துப் படமெடுக்கிற தயாரிப்பாளர்கள் மொட்டையடித்துக் கொள்வார்கள். ஒரு மாறுதலுக்காக, கமல் இந்தப் படத்துக்காக மொட்டையடிக்கலாம்.

இந்திய வீரர்களை கழுதை என்று கூறிய நாசர் உசேனுக்கு கிரிக்கெட் வாரியம் கண்டனம்

கழுதைன்னு சொன்னதுக்கு வெறும் கண்டனம் தானா? "உதைக்க" வேண்டாம்...?

எதுக்கு இதெல்லாம்...?

முதலில் நடிகர் ஓம்பூரி, முன்னாள் தில்லி காவல்துறை ஆணையர் கிரண் பேடி, அடுத்து பிரசாந்த் பூஷண் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் என்று அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தில் பங்கு வகித்த பலருக்கு உரிமை மீறல் பிரச்சினையில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையை பா.ஜ.க.மிகவும் அடக்கி வாசிக்கிறது என்பதிலிருந்து, ராம்லீலா மைதானத்தில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களை உசுப்பேற்றி விட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. வழக்கம்போல இதை ஆதரித்தும், எதிர்த்தும் பத்திரிகைகள் இருகூறாகப் பிரிந்திருக்கின்றன. இது குறித்து இணையத்தில் துழாவியபோது, கிடைத்த ஒரு சுவாரசியமான தகவல்:

அமெரிக்க அரசைப்பற்றி பி.ஜே.ஓ’ரூர்க் என்பவர் "பார்லிமெண்ட் ஆஃப் வோர்ஸ்(Parliament of Whores)" என்ற பெயரில் நையாண்டியாய் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறாராம். (Whores என்பதன் பொருளை கூகிளில் தேடவும்!)

நம்மாளுங்களும் அதைப் பார்த்து, கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்துக்கொண்டு, சில விஷயங்களைக் கண்டும் காணாமலும் இருப்பதே அவர்களுக்கு மரியாதை என்று தோன்றுகிறது.

"நச்" என்று ஒரு வலைப்பதிவு

எனக்கும் கவிதைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதனை நான் எழுதிய கவிதைகளை வாசித்தவர்கள் சூடனை அமுத்தி சத்தியம் செய்வார்கள் என்பது உறுதி. அப்படியிருந்தும், நப்பாசையில் சில பதிவுகளுக்குச் சென்று சந்தடியில்லாமல் கவிதை வாசித்துவிட்டு, கொஞ்சம் கூடுதலாய் தைரியமிருந்தால் பின்னூட்டமும் இடுகிற ரகசியப்பழக்கம் எனக்கு உண்டு.

அவ்வகையில், சமீபத்தில் நான் வாசித்த வலைப்பதிவர்:

தமிழ் வாசல் - இமலாதித்தன் கிறுக்கல்கள்

எனக்’கே’ புரிகிற மாதிரி எழுதுகிறார்! வாழ்த்துகள்!

ரசித்த வீடியோ

நாய்பட்ட பாடு என்பது இதுதான் போலிருக்கு..! :-)

36 comments:

  1. பெருசுங்கன்னு சொல்லிக்கினதால ஒன்னியும் சொல்ல போறதில்ல பா... அக்காங்.. அப்பாலிக்கா தமிழ் வாசல கண்டுக்கினு வரேன்..

    ReplyDelete
  2. இட்லி பீடியாவா அல்லது இட்லி பொடியாவா ன்னு சந்தேகம் வந்துடப் போகுது சாமி..

    ReplyDelete
  3. இனிய இரவு வணக்கங்கள் சகோதரம்,

    ReplyDelete
  4. குருவே சரணம்! //

    எந்தக் குருவுக்கு சரணம் வைக்கிறீங்க?
    அவ்.......

    ReplyDelete
  5. படித்துப் படித்துச் சொன்னார்
    கணக்கு வாத்தியார்
    "பக்கத்திலிருந்து கடன் வாங்கு"
    அப்போது புரியவில்லை
    இப்போது
    வாங்கிக்கொண்டிருக்கிறேன் கடனை! //

    அவ்....வாழ் நாட் பூராவும் கடன் வாங்குவோரை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்களே..

    ReplyDelete
  6. வாத்தியார்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் எப்பொழுதோ உருப்பட்டிருப்போம்,’ என்று புலம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். ஆகவே, என்னைப் போன்றவர்களும், ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு உருப்பட்டவர்களும் 05-09-2011 அன்று நமது அனைத்து வாத்தியார்களுக்கும் மனதாற ஒரு வார்த்தை ’நன்றி’ யாவது சொல்வோமாக! //

    ஹா...ஹா..எனக்கு ஆசிரியர் தினம் எப்போது என்பதே தெரியாமற் போச்சே...

    ReplyDelete
  7. ஆசிரியர் தின வாழ்த்துகள்!

    உங்களோடு இணைந்து நானும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை அனைத்து ஆசியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  8. இதோ, சமோசாபீடியாவின் வலைத்தள முகவரி!

    இதே போல, தமிழகத்தில் சர்வசாதாரணமாகப் புழங்குகிற வார்த்தைகளை யாராவது ’இட்லிபீடியா’ அல்லது ’பொங்கல்பீடியா’ என்று தொகுத்தால், என் போன்ற வலைப்பதிவர்களுக்கு மொக்கைபோட உதவியாய் இருக்கும். //

    ஐடியா நல்லாஹ் தான் இருக்கு..ஆனால் தமிழர்களோட வார்த்தைகளைத் தொகுக்கும் போது.....கொஞ்சம் பயப்பட வேண்டி இருக்குமே...
    கெட்ட வார்த்தைங்க அதிகமா இருக்குமே...

    அவ்...

    ReplyDelete
  9. கணவரை பழிவாங்க அவரது மொபைல்போனில் இருந்து முதல்வருக்கு மிரட்டல் விடுத்த மனைவி சென்னையில் கைது //

    இப்பூடி எல்லாரும் ஒரு நல்ல ஐடியாவைப் பின்பற்றினால் கணவர்கள் தொல்லை ஊரில் இருக்காது போல இருக்கே..

    ReplyDelete
  10. முதலாவது ஒரு நாள் போட்டி- இந்தியாவின் வெற்றியைத் தடுத்த மழை!

    அவங்க ஜெயிச்சிருந்தாத் தானே மழை வந்திருக்கணும்? - என்று அலுத்துக்கொள்கிறார் சகபதிவர் ’கவிச்சோலை’ எல்.கே! //

    டைம்மிங் கடி.........

    ReplyDelete
  11. அமெரிக்க அரசைப்பற்றி பி.ஜே.ஓ’ரூர்க் என்பவர் "பார்லிமெண்ட் ஆஃப் வோர்ஸ்(Parliament of Whores)" என்ற பெயரில் நையாண்டியாய் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறாராம். (Whores என்பதன் பொருளை கூகிளில் தேடவும்!) //

    நம்ம நாட்டு அரசியல்வாதிங்களுக்கு உறைக்கனும் என்று சொல்லியிருக்கிறீங்களே பாஸ்...

    ReplyDelete
  12. எனக்கும் கவிதைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதனை நான் எழுதிய கவிதைகளை வாசித்தவர்கள் சூடனை அமுத்தி சத்தியம் செய்வார்கள் என்பது உறுதி. அப்படியிருந்தும், நப்பாசையில் சில பதிவுகளுக்குச் சென்று சந்தடியில்லாமல் கவிதை வாசித்துவிட்டு, கொஞ்சம் கூடுதலாய் தைரியமிருந்தால் பின்னூட்டமும் இடுகிற ரகசியப்பழக்கம் எனக்கு உண்டு. //

    யோ....சகோதரம்,
    நீங்க லவ் மேரேஜ் கூடவா இல்லே...அப்போ
    கல்லூரியில் படிக்கும் போது கடிதம் கூடவா கொடுக்கலை?

    ReplyDelete
  13. தமிழ் வாசல் - இமலாதித்தன் கிறுக்கல்கள் //

    பெயருக்கேற்றாற் போல...காத்திரமான படைப்புக்களைக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை...

    இப்பவே போய் அவரைப் பார்த்திட்டு வாரேனே

    அறிமுகத்திற்கு நன்றி பாஸ்.

    சகோதரன் இமலாதித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. சில்வர் குண்டாவினுள் நாய் பட்ட பாடினைப் படம் பிடித்துப் போட்டிருக்காங்க..
    பாவம் பாஸ்.. அந்த நாய்.

    ReplyDelete
  15. செய்திகளுக்கான கடிகளும், வீடியோப் பதிவும் சூப்பர் பாஸ்.

    ReplyDelete
  16. வீடியோப் பதிவு சூப்பர் பாஸ்

    ReplyDelete
  17. மீண்டும் வணக்கம் சகோதரம்,
    பதிவர் அறிமுகம் நல்லதோர் முயற்சி சகோ.
    தொடர்ந்தும் உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் மூலம் அதிக பதிவர்கள்- புதிய பதிவர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

    நன்றி சகோ.

    ReplyDelete
  18. தமிழ்வாசல் வலைப்பக்கத்தை பற்றிய குறிப்புகளை தந்து என்னை வாழ்த்திய சேட்டைக்காரன்க்கு நன்றி! :))

    ReplyDelete
  19. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! குட்டிக் குட்டியா நெறைய சொல்லியிருக்கீங்க! எல்லாமே சூப்பர்!

    ReplyDelete
  20. இமலாதித்தன் கிறுக்கல்கள்...அறிமுகத்துக்கு நன்றி சேட்டை...

    பேல்பூரி வயிறு நிறைத்தது...

    ReplyDelete
  21. கழுதை கமெண்ட் "டைமிங்"...

    ReplyDelete
  22. கடிகள், வீடியோ, கவிதை என்று கலக்கல்..
    ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. haa haa ஹா ஹா கலக்கல் கமெண்ட்ஸ்

    ReplyDelete
  24. //
    "பக்கத்திலிருந்து கடன் வாங்கு"
    அப்போது புரியவில்லை
    இப்போது
    வாங்கிக்கொண்டிருக்கிறேன் கடனை!

    //

    ஒரு 1000 ரூபாய் குடுங்க

    ReplyDelete
  25. ஆசிரியர் தின வாழ்த்துகள்
    என்று என் வலையில்

    இவளுகளை என்ன செய்யலாம் சார்..?

    ReplyDelete
  26. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்....

    நாய் பட்ட பாடு..:(((( பாவம் அந்த நாய்...

    ReplyDelete
  27. உண்மையான பேல்பூரி, காரம் இன்னைக்கு கம்மின்னாலும் நல்ல ருசி..

    ReplyDelete
  28. சுவாரசியமான தொகுப்பு..!!

    ReplyDelete
  29. அம்மா ஆட்சிக்கு வந்ததுலேருந்து அம்மணிங்கல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க! // அப்பிடியா.. தைரியம் வந்துருச்சு போல..:))

    அது என்ன எங்க கவிதைகள் எல்லாம் படிக்க மாட்டீங்களா சேட்டைக்காரன்.. சரி பொழைச்சு போங்க.:)

    ReplyDelete
  30. கமெண்ட் ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு உங்க ஸ்டைலில் :-)

    அந்த கழுதை ...ஹா..ஹா.. செம ஜோக் :-)

    ReplyDelete
  31. //suryajeeva said...

    பெருசுங்கன்னு சொல்லிக்கினதால ஒன்னியும் சொல்ல போறதில்ல பா..அக்காங்..//

    இந்த அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு! :-)

    //அப்பாலிக்கா தமிழ் வாசல கண்டுக்கினு வரேன்..//

    வாங்க அண்ணாத்த..!

    //இட்லி பீடியாவா அல்லது இட்லி பொடியாவா ன்னு சந்தேகம் வந்துடப் போகுது சாமி..//

    அப்போ இட்லிப்பொடி-ன்னு ஆராச்சும் ஆரம்பிச்சிட்டாங்களா? :-)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    //நிரூபன் said...

    இனிய இரவு வணக்கங்கள் சகோதரம்,//

    வணக்கம் சகோ!

    ..எந்தக் குருவுக்கு சரணம் வைக்கிறீங்க? அவ்.......

    அவ்....வாழ் நாட் பூராவும் கடன் வாங்குவோரை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்களே..//

    ஐயோ, அது நான் எழுதலே சகோ! கவிப்பேரரசு வைரமுத்து எழுதினது. :-)

    //ஹா...ஹா..எனக்கு ஆசிரியர் தினம் எப்போது என்பதே தெரியாமற் போச்சே...//

    ஒவ்வொரு நாட்டுலேயும் ஒவ்வொரு நாள் கொண்டாடுறாங்க. இந்தியாவிலே இன்னிக்கு...! :-)

    //உங்களோடு இணைந்து நானும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை அனைத்து ஆசியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

    நன்றி சகோ!

    //ஐடியா நல்லாஹ் தான் இருக்கு..ஆனால் தமிழர்களோட வார்த்தைகளைத் தொகுக்கும் போது.....கொஞ்சம் பயப்பட வேண்டி இருக்குமே... கெட்ட வார்த்தைங்க அதிகமா இருக்குமே...அவ்...//

    இனிய உளவாக இன்னாத கூறல்-னு திருக்குறள் இருக்குதே! அதை மேலே பளிச்சுன்னு போட்டாப் போச்சு! :-)

    //இப்பூடி எல்லாரும் ஒரு நல்ல ஐடியாவைப் பின்பற்றினால் கணவர்கள் தொல்லை ஊரில் இருக்காது போல இருக்கே..//

    ஏன் இந்தக் கொலைவெறி சகோ? ஆம்புளைங்க மேலே எதுக்கு இம்புட்டுக் கடுப்பு உங்களுக்கு..? :-)

    //டைம்மிங் கடி.........//

    நல்ல வேளை, இன்னும் கார்த்தி பார்க்கலே போலிருக்குது. :-)

    //நம்ம நாட்டு அரசியல்வாதிங்களுக்கு உறைக்கனும் என்று சொல்லியிருக்கிறீங்களே பாஸ்...//

    ரொம்பவும் sensitive-வா இருக்கணுமான்னு கேட்கத் தோணுதே? :-)

    //யோ....சகோதரம், நீங்க லவ் மேரேஜ் கூடவா இல்லே...அப்போ
    கல்லூரியில் படிக்கும் போது கடிதம் கூடவா கொடுக்கலை?//

    காதலிச்சிருந்தா கவிதை எழுதியிருக்க மாட்டேனா? நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்? :-)

    //பெயருக்கேற்றாற் போல...காத்திரமான படைப்புக்களைக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை...இப்பவே போய் அவரைப் பார்த்திட்டு வாரேனே அறிமுகத்திற்கு நன்றி பாஸ். சகோதரன் இமலாதித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

    உங்க ஊருக்கு ரொம்பப் பக்கத்துலே இந்தியாவில் இருப்பவர் (நாகப்பட்டினம்). நல்ல கவிதைகளை எழுதும் இளைஞர். எல்லாருமாக உற்சாகப்படுத்துவோம்.

    //சில்வர் குண்டாவினுள் நாய் பட்ட பாடினைப் படம் பிடித்துப் போட்டிருக்காங்க..பாவம் பாஸ்.. அந்த நாய்.//

    அதான் தலைப்பையே அப்படிக்கா போட்டேன். :-))

    //செய்திகளுக்கான கடிகளும், வீடியோப் பதிவும் சூப்பர் பாஸ்.//

    ஹிஹிஹி! அதுக்குத் தான் ரொம்ப நேரம் செலவு செய்தேன் சகோ!

    //பதிவர் அறிமுகம் நல்லதோர் முயற்சி சகோ. தொடர்ந்தும் உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் மூலம் அதிக பதிவர்கள்- புதிய பதிவர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நன்றி சகோ.//

    அவசியம் செய்வேன் சகோ! நான் எழுத வந்த புதிதில் என்னையும் பலர் அறிமுகம் செய்வித்துத்தான் இன்று ஓரளவு பலருக்குத் தெரிந்தவனாக இருக்கிறேன். அவர்களின் பெருந்தன்மையிலிருந்து ஒரு சிறுதுளியையாவது நானும் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

    மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  32. //NAAI-NAKKS said...

    வீடியோப் பதிவு சூப்பர் பாஸ்//

    மிக்க நன்றி நண்பரே! :-)

    //இரா.ச.இமலாதித்தன் said...

    தமிழ்வாசல் வலைப்பக்கத்தை பற்றிய குறிப்புகளை தந்து என்னை வாழ்த்திய சேட்டைக்காரன்க்கு நன்றி! :))//

    உங்களுக்கு எப்போதும் எனது நல்வாழ்த்துகள் உண்டு இமலாதித்தன். வருகைக்கு மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  33. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

    வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! குட்டிக் குட்டியா நெறைய சொல்லியிருக்கீங்க! எல்லாமே சூப்பர்!//

    என்னது கும்புடுறீங்களா? உங்களோட குவாலிபிகேஷனைப் பார்த்தா உங்க காலிலே விழணுமுன்னு தோணுது எனக்கு. அப்பாடியோ, எம்புட்டு எழுத்து பெயருக்குப் பின்னாலே...?

    வருகைக்கு மிக்க நன்றி! :-)

    //ரெவெரி said...

    இமலாதித்தன் கிறுக்கல்கள்...அறிமுகத்துக்கு நன்றி சேட்டை...பேல்பூரி வயிறு நிறைத்தது...//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! ஸ்டால் களை கட்டிருச்சு! :-))

    ReplyDelete
  34. //ஷீ-நிசி said...

    கழுதை கமெண்ட் "டைமிங்"...//

    ஹாஹா! மிக்க நன்றி நண்பரே! :-)

    //ரிஷபன் said...

    கடிகள், வீடியோ, கவிதை என்று கலக்கல்..ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.//

    உங்களது ஆசிரியர் தின இடுகையும் மிக அபாரமாய் இருந்தது. மிக்க நன்றி! :-)

    //சி.பி.செந்தில்குமார் said...

    haa haa ஹா ஹா கலக்கல் கமெண்ட்ஸ்//

    வாங்க தல..! மிக்க நன்றி! :-))

    ReplyDelete
  35. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

    ஒரு 1000 ரூபாய் குடுங்க//

    நல்ல ஆளைப் பார்த்தீங்க சாமி! :-))))))

    //ஆசிரியர் தின வாழ்த்துகள்//

    உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்! மிக்க நன்றி நண்பரே! :-)

    //வெங்கட் நாகராஜ் said...

    அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்....//

    வாருங்கள் வெங்கட்ஜீ! ஆசிரியர் தின வாழ்த்துகள்!

    //நாய் பட்ட பாடு..:(((( பாவம் அந்த நாய்...//

    நல்ல வேளை, ஒருவழியாய் அந்தப் பாத்திரத்தை எடுத்தார்களே!

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  36. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...

    உண்மையான பேல்பூரி, காரம் இன்னைக்கு கம்மின்னாலும் நல்ல ருசி..//

    ஓவர் காரம் சாப்பிட்டா அல்சர் வரும்னுதான் கொஞ்சம் மட்டாப் போட்டேன். மிக்க நன்றி நண்பரே! :-)

    //சேலம் தேவா said...

    சுவாரசியமான தொகுப்பு..!!//

    மிக்க நன்றி நண்பரே! :-)

    //தேனம்மை லெக்ஷ்மணன் said...

    அப்பிடியா.. தைரியம் வந்துருச்சு போல..:))//

    இல்லியா பின்னே? அம்மான்னா சும்மாவா? :-)

    //அது என்ன எங்க கவிதைகள் எல்லாம் படிக்க மாட்டீங்களா சேட்டைக்காரன்.. சரி பொழைச்சு போங்க.:)//

    ஆஹா, உங்க கவிதையையெல்லாம் வாசிக்காதவங்க வலையுலகில் எத்தனை பேர் இருப்பாங்க? நோ சான்ஸ்!

    வருகைக்கு மிக்க நன்றி! :-)

    //ஜெய்லானி said...

    கமெண்ட் ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு உங்க ஸ்டைலில் :-)//

    அதை நம்பித்தான் இந்த இடுகையே போட்டேன் நண்பரே! :-))

    //அந்த கழுதை ...ஹா..ஹா.. செம ஜோக் :-)//

    மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!