Thursday, March 17, 2011

கல்யாணம் (attend) பண்ணிப்பார்!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

69 comments:

  1. ’பந்துக்களுடன் வருக,’ என்று போட்டிருந்தாங்க. என்னதான் கிரிக்கெட் பைத்தியம்னாலும் இப்படியா? சரிதான்!//

    வணக்கம் சகோதரம், இன்று ஒரு சுவாரஸ்யமான மேட்டருடன் ஆரம்பித்துள்ளீர்கள். பந்துகள் என்றால் ‘சொந்த பந்தங்களுடன் வாங்கோ/ வருக என்பதைப் பயபுள்ளை சுருக்கிப் போட்டிருக்காரு.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான காமெடிக்கதை.
    ஒரே சிரிப்பு தான் போங்க. மிகவும் ரசித்த வரிகள்

    //அசப்பில் அஞ்சலி மாதிரி ஒரு பெண் பன்னீர் தெளித்து ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்து நீட்டவும், நான் வழக்கம்போல அசடுவழிந்தபடி, ஒரு கை சந்தனத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, சர்க்கரையை கழுத்தில் பூசிக்கொண்டேன்.//


    //சாக்கி இரண்டு கண்களிலும் மையை அப்பிக்கொண்டு சொடலைமாடசாமி மாதிரி உட்கார்ந்திருந்தான்.//

    // "பெரிய பாளையத்தம்மன்" படத்தில்வந்த ரம்யா கிருஷ்ணன் மாதிரி முகத்தில் சகலவிதமான வண்ணங்களையும் அப்பிக்கொண்டு, கைகளை வேறு இரத்தக்கண்ணீர் ராதா மாதிரி வைத்துக்கொண்டு நெருங்கினாள் பாக்கி.//

    //வெறும் கிரஹணம் இல்லேடா!"

    "பின்னே என்ன மசாலா கிரஹணமா?"

    "அபிஷ்டு! அது பாணிக்கிரஹணம்!//

    சாக்கி பாக்கி பெயர் செலெக்‌ஷனும் வெகு அருமை. நீங்கள் எது எழுதினாலும், மிகவும் சாதாரண நாட்டு நடப்புகளையே, நல்ல நகைச்சுவையாக எழுதி விடுகிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. கல்யாணம் நடந்த இடத்தை அடைந்தபோது, வாசலில் பட்டுப்பாவாடை தாவணியும், தலைநிறைய மல்லிகை, ரோஜா அணிந்தபடி அசப்பில் அஞ்சலி மாதிரி ஒரு பெண் பன்னீர் தெளித்து ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்து நீட்டவும், நான் வழக்கம்போல அசடுவழிந்தபடி, ஒரு கை சந்தனத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, சர்க்கரையை கழுத்தில் பூசிக்கொண்டேன். //

    என்னய்யா இங்கை நடக்குது? அவள் அந்தளவு வடிவோ? அதாங்க அந்த வாசலிலை நின்ற பொண்ணு. அதுக்காக சந்தனத்தை நெத்தியிலை வைக்கிறதுக்குப் பதிலா வாயிலை போட்டு, சர்க்கரையை நெத்தியிலை வைக்கிறது கொஞ்சம் ஓவர்.

    அப்ப ஒரு பாட்டுப் போயிருக்குமே?
    என்ன பாட்டு,
    அவ மனசிலை
    ‘உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்....
    உங்க மனசிலை
    ‘உன்னைப் பார்த்த பின்பு தான் நானாக இல்லையே...
    இல்லா விட்டால்

    நீ பார்த்த பார்வைக்கு பொருளென்ன...

    ஆங்...அம்மாடியோ, சேட்டை நினைவுக்கு வந்திட்டீங்களா? Sorry bro, நான் கதையோடை ஐக்கியமாகிட்டன்.

    ReplyDelete
  4. அலுவலகத்தோழர்கள் யாராவது கண்ணில் அகப்படுகிறார்களா என்று அங்குமிங்கும் பார்த்தபோதுதான் முதல் தொல்லை ஆரம்பித்தது. விசிறிமடிப்புத்துண்டும், நெற்றிநிறைய விபூதியும், ஒருவாய்க்குள் பலவாய்களுக்குள் போயிருக்க வேண்டிய வெற்றிலையும் போட்டுக்கொண்டு ஒருவர் ஓடோடி வந்தார்.//

    ஆளு நல்ல அனுமான் பக்தர் போல இருப்பாரே, உங்களின் நகைச்சுவை வரணனைகளிலும் இலக்கிய நயமும், சிறந்த சொல்லாடல்களும் ததும்புகின்றன. ரசித்தேன்.

    ReplyDelete
  5. ரொம்ப வேடிக்கையாப் பேசறீங்க! ஆனா சாக்கியோட ஃபிரண்டு சேட்டைக்காரன்னு ஒரு லூசு ஒரு பிளாகை வச்சுக்கிட்டு படுமொக்கை ஜோக்கா எழுதி டார்ச்சர் பண்ணுறான்."//

    இந்த வரியை நீக்கச் சொல்லிச் சென்சர் போர்ட்டில் வழக்குத் தொடர உள்ளோம்,காரணம் எங்கள் நகைச்சுவை இளவல் சேட்டையை தாழ்த்தி இவ் இடத்தில் எழுதி விட்டீர்கள். ஹி..ஹி..

    ReplyDelete
  6. "சாரிடா சேட்டை, மதியானத்துலேருந்து எல்லாப் பெருசுங்களுமாச் சேர்ந்து தம்மடிக்க விடாம பக்கத்துலேயே உட்காந்து அழிச்சாட்டியம் பண்ணுறாங்கடா!" என்று அவன் நாத்தழுதழுக்கச் சொன்னபோது, எனது இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. ஐயகோ!//

    அட அட.. என்ன ஒரு பாசப் பிணைப்பு. சென்ரிமென்ற்றை டச் பண்ணிட்டீங்களே, நண்பேண்டா.

    ReplyDelete
  7. கலியாணம் கட்டிப் பார் தான் சொல்வாங்க.. நீங்க கலியாணம் பன்னிப் பார் சொல்றீங்க.. பதிவுல பன்னியைப் பத்தி ஒன்னியும் சொல்லல ... மறந்திட்டீங்களா ???

    ReplyDelete
  8. குற்றாலத்திலிருந்த குரங்குகளுக்கு நிம்மதியளித்துவிட்டு எனது நண்பர்களும் கிளம்பி மண்டபத்துக்கு வந்து சேரவும், மாப்பிள்ளை அழைப்புக்கு சாக்கியை தயார் செய்தோம். மாப்பிள்ளை அழைப்புக்கென்று தைத்திருந்த கோட்டைப் போட்டுக்கொண்டு அவன் நின்றபோது எனக்குச் சிரிப்பாக வந்தது. அசப்பில் கொசுமருந்து அடிக்கிறவனைப் போலிருந்தான்.//

    அப்போ நீங்க புதுசா கண்டு பிடித்த கொசு மருந்து தெளிக்கும் இயந்திரத்தை உங்கள் நண்பரும் இயக்கிறார் என்று சொல்ல வாறீங்கள். சரி சரி புரிஞ்சுது. Keep continue.

    ReplyDelete
  9. நான் ஒவ்வொருமுறை காப்பி குடிக்கும்போதும், சாக்கி என்னை மொக்கைப்பதிவரைப் பின்நவீனத்துவவாதி பார்ப்பதுபோல வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்//

    எங்கிட்டிருந்து இதெல்லாம் வருகுது? என்ன ஒரு அருமையான உவமானம். இதுக்குப் பெயர் தான் இலக்கியச் சுவையுள்ள நகைச்சுவையோ?

    ReplyDelete
  10. நான் ஒவ்வொருமுறை காப்பி குடிக்கும்போதும், சாக்கி என்னை மொக்கைப்பதிவரைப் பின்நவீனத்துவவாதி பார்ப்பதுபோல வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்//

    சேட்டை கழுத்துத் தெரியாதபடி பொண்ணு என்ன அம்புட்டு நகை போட்டிருந்திச்சா? என்ன எல்லாமே பவுணா இல்ல கவறிங்கா? Enjoy.

    ReplyDelete
  11. எங்களின் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும், அதனுடன் சேர்ந்த நிகழ்வுகளையும் வைத்து ஒரு இலக்கிய நகைச்சுவைப் பதிவைப் பகிர்ந்துள்ளீர்கள். இப்பவும் ஓடிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை இருக்கிறீர்களா? கால் உழையும். கொஞ்சம் Rest எடுங்கோ. கல்யாணம் Attend பண்ணிப் பார். நினைத்து நினைத்துச் சிரிக்கத் தூண்டும் ஒரு இலக்கியம் நயம் கொண்ட கலாச்சார நகைச்சுவைப் பதிவு. இன்னும் நிறைய, புதிய விடயங்களை எதிர்பார்க்கிறோம். சேட்டைக்காரனின் ரசிகர்கள் சார்பில் நிரூபன்.

    ReplyDelete
  12. // சாக்கியின் கை எனது பேண்ட் பாக்கெட்டுக்குள் சென்று நைசாக சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன் //

    அது ஏன் ஓய் உம்ம பாக்கெட்டுக்கு வந்துச்சு....

    ReplyDelete
  13. நகைச்சுவையான பதிவு...ரொம்ப நேரம் சிரித்து விட்டேன் .நன்றி.வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. டாப் கிளாஸ் காமெடி கலக்கல்... வரிக்கு வரி அசத்தியிருக்கிறீர்கள். அதிகாலை விழித்து உங்கள் சாக்கி பாக்கியால் தூக்கத்தைப் போக்கி சந்தோசமான ஒரு நாளை நோக்கி இருக்கிறேன். பாக்கியை உங்கள் நோக்கியாவில்...

    பிரபாகர்...

    ReplyDelete
  15. இது கற்பனையா உண்மையா

    ReplyDelete
  16. சாக்கி-பாக்கி கல்யாண வைபவம் பற்றி உங்கள் பகிர்வு நன்றாக இருந்தது. ஆங்காங்கே உங்களின் அக்மார்க் முத்திரை பெற்ற நகைச்சுவையும் சிரிக்க வைத்தது! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. >>பயபுள்ளே வடிகட்டின ரஜினி ரசிகனாயிருந்தும் பெயருக்கு முன்னாடி ’சீரஞ்சீவி’ன்னு போட்டிருந்தாங்க.

    நுணுக்கமான நகைச்சுவை KNOT அண்ணே

    ReplyDelete
  18. >>. "நான் போய் பாக்கியைப் பார்த்திட்டு வர்றேன். நல்ல வேளை, அவ தம்மடிக்க மாட்டா!"

    haa haa ஹா ஹா செம.. ஆனா பெண்ணிய வாதிகள் கும்மிட போறாங்க..

    ReplyDelete
  19. >>>இது வெறும் கிரஹணம் இல்லேடா!"

    "பின்னே என்ன மசாலா கிரஹணமா?"

    haa haa கலக்கல்

    ReplyDelete
  20. எங்க ஊர் (குற்றாலம்) பக்கம் வந்திருக்கீங்க ! இப்ப அருவில தண்ணியே கிடையாதே ! !....சொல்லிட்டு வந்திருக்கலாம்ல... எனி ஹாவ்...நல்ல நகைச்சுவையான பதிவு

    ReplyDelete
  21. //அன்று இரவு விமர்சையாக சாப்பாடு. நீளமான வாழையிலை போட்டு ஏகப்பட்ட அயிட்டங்கள். அவியலை எடுக்க ஆட்டோ பிடித்துத்தான் போகவேண்டும் போலிருந்தது.//

    ஆஹாஹா, இந்த இடம் தான் ஹைலைட்டாகப் படுது எனக்கு. நேற்று நள்ளிரவில் படிக்கும் போதே, இதை பின்னூட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தும், வழுவட்டையாக மறந்திருக்கிறேன். இப்போது மீண்டும் மீண்டும் 3 முறை படித்து, என் மனைவியை டி.வி. யை அணைத்து விட்டு இங்கு வா என்று அதட்டி, உட்கார வைத்து அவளுக்காக ஒரு முறை படித்துக்காட்டி மகிழ்ந்தேன். டி.வி. யை அணைக்க மனதே வராது. நான் என்னவோ அவளையே அணைக்கத்தான் கூப்பிடுகிறேனோ என்ற பயமோ என்ன எழவோ தெரியவில்லை. நகைச்சுவைகளை ரசிக்கவும் ஒரு தனி ஆர்வம் வேண்டும். அது ஒருசிலருக்கு மட்டும் தான் உண்டு. அன்புடன் உங்கள் vgk

    ReplyDelete
  22. //
    Blogger வை.கோபாலகிருஷ்ணன் said...
    ....
    இப்போது மீண்டும் மீண்டும் 3 முறை படித்து, என் மனைவியை டி.வி. யை அணைத்து விட்டு இங்கு வா என்று அதட்டி, உட்கார வைத்து அவளுக்காக ஒரு முறை படித்துக்காட்டி மகிழ்ந்தேன். டி.வி. யை அணைக்க மனதே வராது. நான் என்னவோ அவளையே அணைக்கத்தான் கூப்பிடுகிறேனோ என்ற பயமோ என்ன எழவோ தெரியவில்லை.
    //

    வைகோ சார்... நகைச்சுவை உங்களுக்கும் பிரமாதமாய் வருகிறது. பாராட்டுவதற்கும் ஒரு மனம் வேண்டும். பின்னூட்டத்தில் அசத்துகிறீர்கள்...

    பிரபாகர்...

    ReplyDelete
  23. சேட்டை வழக்கம்போல சுவாரஸ்யமா எழுதிருக்கேயா..., கண்டினியூ...கண்டினியூ....

    ReplyDelete
  24. கலக்கல் காமெடி போங்கோ

    ReplyDelete
  25. //"நான் போய் பாக்கியைப் பார்த்திட்டு வர்றேன். நல்ல வேளை, அவ தம்மடிக்க மாட்டா!"//

    அது சரி சேட்டை. சாக்கியை மாதிரி கட்டிப் புடிப்பாங்களா..? :-)))

    ReplyDelete
  26. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்..

    ReplyDelete
  27. நல்லா ரசிச்சு சிரிக்கவைக்கும் பதிவு..
    பிடித்த வரிகளை சொல்லவேண்டுமென்றால், பின்னூட்டமே பதிவின் நீளத்திற்கு வரும் போலிருக்கின்றது..

    ReplyDelete
  28. ஒவ்வொரு வரியும் கலக்கலான நகைச்சுவை...

    எதார்த்தமாக இருக்கிறது நகைச்சுவை...

    ReplyDelete
  29. /"சீக்கிரம் மாப்பிள்ளையை ரெடி பண்ணி என் கஸ்டடியிலே விட்டிருங்கோ!" என்று புரோகிதர் வந்து சேர்ந்தார்.//

    சூப்பர். சில சமயம் புரோகிதர்கள் லேட்டாக வந்து மண்டபத்தில் பரபரப்பை உண்டாக்குவதும் செம காமடியாக இருக்கும்.

    ReplyDelete
  30. சாக்கியின் கை எனது பேண்ட் பாக்கெட்டுக்குள் சென்று நைசாக சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்//
    hahaa

    ReplyDelete
  31. சாக்கி என்னை மொக்கைப்பதிவரைப் பின்நவீனத்துவவாதி பார்ப்பதுபோல வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்//
    அப்படி போடு அருவாளை

    ReplyDelete
  32. //இனி கல்யாணத்துக்குப் போனால், சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிவிட்டு வருவதோடு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்//

    நமக்கும் இப்படி ஒரு அனுபவம் இறுக்குண்ணா.... இந்த முடிவை நான் எடுத்து 10 வருஷம் ஆச்சு

    ReplyDelete
  33. settay ummoda settay sema settay pongooooooooooooo

    ReplyDelete
  34. ரசிச்சு சிரிக்கவெச்ச இடுகை :-)))

    ReplyDelete
  35. //நிரூபன் said...

    வணக்கம் சகோதரம், இன்று ஒரு சுவாரஸ்யமான மேட்டருடன் ஆரம்பித்துள்ளீர்கள். பந்துகள் என்றால் ‘சொந்த பந்தங்களுடன் வாங்கோ/ வருக என்பதைப் பயபுள்ளை சுருக்கிப் போட்டிருக்காரு.//

    அதே! அதே! எதுவாயிருந்தாலும் வெலாவரியாச் சொல்ல வேண்டாமா பயபுள்ளே? :-)


    //என்னய்யா இங்கை நடக்குது? அவள் அந்தளவு வடிவோ? அதாங்க அந்த வாசலிலை நின்ற பொண்ணு. அதுக்காக சந்தனத்தை நெத்தியிலை வைக்கிறதுக்குப் பதிலா வாயிலை போட்டு, சர்க்கரையை நெத்தியிலை வைக்கிறது கொஞ்சம் ஓவர்.//

    நீங்க பார்த்திருந்தா தாம்பாளத்தையே கூட வாயிலே போட்டிருப்பீங்க சகோதரம்! :-) அவ்வளவு வடிவு! (சும்மா காமெடிக்குச் சொன்னேன்!)

    //அப்ப ஒரு பாட்டுப் போயிருக்குமே?
    என்ன பாட்டு,
    அவ மனசிலை
    ‘உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்....
    உங்க மனசிலை
    ‘உன்னைப் பார்த்த பின்பு தான் நானாக இல்லையே...
    இல்லா விட்டால்

    நீ பார்த்த பார்வைக்கு பொருளென்ன...

    ஆங்...அம்மாடியோ, சேட்டை நினைவுக்கு வந்திட்டீங்களா? Sorry bro, நான் கதையோடை ஐக்கியமாகிட்டன்.//

    இம்புட்டு ஐக்கியமானா அது டேஞ்ஜராச்சே! பொட்டுன்னு எத்தனை பாட்டைப் போட்டுத்தள்ளிட்டீங்க? :-)

    //ஆளு நல்ல அனுமான் பக்தர் போல இருப்பாரே, உங்களின் நகைச்சுவை வரணனைகளிலும் இலக்கிய நயமும், சிறந்த சொல்லாடல்களும் ததும்புகின்றன. ரசித்தேன்.//

    என்னது, இலக்கியநயமா? அப்ப நானும் இலக்கியவாதி ஆயிட்டேனா? சொல்லவேயில்லை...?

    //இந்த வரியை நீக்கச் சொல்லிச் சென்சர் போர்ட்டில் வழக்குத் தொடர உள்ளோம்,காரணம் எங்கள் நகைச்சுவை இளவல் சேட்டையை தாழ்த்தி இவ் இடத்தில் எழுதி விட்டீர்கள். ஹி..ஹி..//

    ஹிஹி! இந்த மாதிரி யாராச்சும் ஒருத்தராவது சேட்டை ஒண்ணும் லூஸு இல்லேன்னு சொல்ல மாட்டாங்களான்னு ஒரு அற்ப ஆசை. அதை தீர்த்திட்டீங்க!


    //அட அட.. என்ன ஒரு பாசப் பிணைப்பு. சென்ரிமென்ற்றை டச் பண்ணிட்டீங்களே, நண்பேண்டா.//

    இல்லியா பின்னே? புண்பட்ட மனசை புகையிட்டு ஆற்றும் நட்பாச்சே? :-)

    வருகைக்கும் சளைக்காமல் அலுக்காமல் எழுதும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே! வாழ்க...!

    ReplyDelete
  36. //வை.கோபாலகிருஷ்ணன் said...

    மிகவும் அருமையான காமெடிக்கதை. ஒரே சிரிப்பு தான் போங்க. மிகவும் ரசித்த வரிகள்//

    வாசித்ததோடு நின்றுவிடாமல், பிடித்த வரிகளை எடுத்துப்போட்டு சுட்டிக்காட்டிப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி!

    //சாக்கி பாக்கி பெயர் செலெக்‌ஷனும் வெகு அருமை. நீங்கள் எது எழுதினாலும், மிகவும் சாதாரண நாட்டு நடப்புகளையே, நல்ல நகைச்சுவையாக எழுதி விடுகிறீர்கள். பாராட்டுக்கள்.//

    மீண்டும் நன்றி! பட்டு-கிட்டு போல, அப்புசாமி-சீதாப்பாட்டி போல ஒரு ஜோடியை உருவாக்கலாமென்று யோசித்ததுண்டு. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் புது யோசனை தோன்றியிருக்கிறது. மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  37. //தமிழ்ப் பையன் said...

    கலியாணம் கட்டிப் பார் தான் சொல்வாங்க.. நீங்க கலியாணம் பன்னிப் பார் சொல்றீங்க.. பதிவுல பன்னியைப் பத்தி ஒன்னியும் சொல்லல ... மறந்திட்டீங்களா ???//

    நண்பரே! இரண்டில் ஏதாவது ஒரு யோசனையைப் பின்பற்றவும். :-))
    ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை அணுகவும் (அல்லது) அகர்வால் கண் மருத்துவமனைக்குப் போய் கண்களைச் சரிபார்க்கவும்.

    நான் பண்ணி என்றுதான் எழுதியிருக்கிறேன். மிக்க நன்றி!

    ReplyDelete
  38. நிரூபன் said...

    //அப்போ நீங்க புதுசா கண்டு பிடித்த கொசு மருந்து தெளிக்கும் இயந்திரத்தை உங்கள் நண்பரும் இயக்கிறார் என்று சொல்ல வாறீங்கள். சரி சரி புரிஞ்சுது. Keep continue.//

    எப்படியெல்லாம் யோசிக்கறீங்க பாஸ்? உடம்பு சிலிர்க்குது எனக்கு. கீப் இட் அப்! :-)

    //எங்கிட்டிருந்து இதெல்லாம் வருகுது? என்ன ஒரு அருமையான உவமானம். இதுக்குப் பெயர் தான் இலக்கியச் சுவையுள்ள நகைச்சுவையோ?//

    அப்படியெல்லாம் இல்லீங்க. இதுக்குப் பேருதான் பின்நவீனத்துவமுன்னு சொல்றாங்க! :-)

    //சேட்டை கழுத்துத் தெரியாதபடி பொண்ணு என்ன அம்புட்டு நகை போட்டிருந்திச்சா? என்ன எல்லாமே பவுணா இல்ல கவறிங்கா? Enjoy.//

    பொண்ணு அம்புட்டு குண்டாயிருந்தாங்கன்னு சொல்ல வந்தேன் சகோதரம்! :-)

    எங்களின் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும், அதனுடன் சேர்ந்த நிகழ்வுகளையும் வைத்து ஒரு இலக்கிய நகைச்சுவைப் பதிவைப் பகிர்ந்துள்ளீர்கள். இப்பவும் ஓடிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை இருக்கிறீர்களா? கால் உழையும். கொஞ்சம் Rest எடுங்கோ. கல்யாணம் Attend பண்ணிப் பார். நினைத்து நினைத்துச் சிரிக்கத் தூண்டும் ஒரு இலக்கியம் நயம் கொண்ட கலாச்சார நகைச்சுவைப் பதிவு. இன்னும் நிறைய, புதிய விடயங்களை எதிர்பார்க்கிறோம். சேட்டைக்காரனின் ரசிகர்கள் சார்பில் நிரூபன்.//

    முதலில், தொடர்ந்து வந்து முழுக்க வாசித்து, ரசித்து, அதிலிருக்கும் வரிகளைத் தனியாய் சிலாகித்து எழுதி தாராளமாகப் பாராட்டுகிற உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். இது போன்ற உற்சாகமான பின்னூட்டங்கள் வரும்போது நிறைய எழுத வேண்டும் என்ற உந்துதல் தானாகவே வருகிறது. மிக்க நன்றி!

    ReplyDelete
  39. //Philosophy Prabhakaran said...

    அது ஏன் ஓய் உம்ம பாக்கெட்டுக்கு வந்துச்சு....//

    ஏன்னா, அது ஒரு மினி பொட்டிக்கடைன்னு சாக்கிக்கு நல்லாவே தெரியும். :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  40. //middleclassmadhavi said...

    Super!! :-))//

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  41. //கோவை நேரம் said...

    நகைச்சுவையான பதிவு...ரொம்ப நேரம் சிரித்து விட்டேன் .நன்றி.வாழ்த்துக்கள் .//

    மிக்க மகிழ்ச்சி நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  42. //பிரபாகர் said...

    டாப் கிளாஸ் காமெடி கலக்கல்... வரிக்கு வரி அசத்தியிருக்கிறீர்கள். அதிகாலை விழித்து உங்கள் சாக்கி பாக்கியால் தூக்கத்தைப் போக்கி சந்தோசமான ஒரு நாளை நோக்கி இருக்கிறேன். பாக்கியை உங்கள் நோக்கியாவில்...//

    ஆஹா, சாக்கியும் பாக்கியுமாகச் சேர்ந்து உங்களையும் என்னை மாதிரியே ஆக்கி விடாமல் இருந்தால் சரி நண்பரே! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  43. //எல் கே said...

    இது கற்பனையா உண்மையா//

    50:50 கார்த்தி! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  44. //வெங்கட் நாகராஜ் said...

    சாக்கி-பாக்கி கல்யாண வைபவம் பற்றி உங்கள் பகிர்வு நன்றாக இருந்தது. ஆங்காங்கே உங்களின் அக்மார்க் முத்திரை பெற்ற நகைச்சுவையும் சிரிக்க வைத்தது! பகிர்வுக்கு நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

    ReplyDelete
  45. //சி.பி.செந்தில்குமார் said...

    நுணுக்கமான நகைச்சுவை KNOT அண்ணே//

    நன்றி தல..!

    //haa haa ஹா ஹா செம.. ஆனா பெண்ணிய வாதிகள் கும்மிட போறாங்க..//

    என்னை யாரு தல கும்மப்போறாங்க, "இவன் இவ்வளவுதான்,’னு எல்லாருக்கும் தெரியுமே? :-))

    //haa haa கலக்கல்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல..!

    ReplyDelete
  46. //வேடந்தாங்கல் - கருன் said...

    Nice post.,//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  47. //Ponchandar said...

    எங்க ஊர் (குற்றாலம்) பக்கம் வந்திருக்கீங்க ! இப்ப அருவில தண்ணியே கிடையாதே ! !....சொல்லிட்டு வந்திருக்கலாம்ல... எனி ஹாவ்...நல்ல நகைச்சுவையான பதிவு//

    இது ரொம்ப பழைய கதை. அப்போ குற்றாலத்துலே நிறைய தண்ணி இருந்திச்சு! :-)

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  48. //வை.கோபாலகிருஷ்ணன் said...

    //ஆஹாஹா, இந்த இடம் தான் ஹைலைட்டாகப் படுது எனக்கு. நேற்று நள்ளிரவில் படிக்கும் போதே, இதை பின்னூட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தும், வழுவட்டையாக மறந்திருக்கிறேன்.//

    ஆஹா! வ.வ.ஸ்ரீயை ஞாபகப்படுத்தியமைக்கும், மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கும் நன்றி!

    //இப்போது மீண்டும் மீண்டும் 3 முறை படித்து, என் மனைவியை டி.வி. யை அணைத்து விட்டு இங்கு வா என்று அதட்டி, உட்கார வைத்து அவளுக்காக ஒரு முறை படித்துக்காட்டி மகிழ்ந்தேன்.//

    அவர்களும் மகிழ்ந்தார்களா? :-))

    //டி.வி. யை அணைக்க மனதே வராது. நான் என்னவோ அவளையே அணைக்கத்தான் கூப்பிடுகிறேனோ என்ற பயமோ என்ன எழவோ தெரியவில்லை. //

    ஆஹா! வ.வ.ஸ்ரீ தொடர் எழுதுகிறவராயிற்றே? நகைச்சுவை உணர்வுக்கு சொல்லவா வேண்டும்?

    //நகைச்சுவைகளை ரசிக்கவும் ஒரு தனி ஆர்வம் வேண்டும். அது ஒருசிலருக்கு மட்டும் தான் உண்டு. அன்புடன் உங்கள் vgk//

    மிக்க சரி, நகைச்சுவையை எழுதுவதை விடவும், அதை ரசிக்க அதிக ரசனை தேவைப்படுகிறது என்று ஒரு பேட்டியில் கிரேஸி மோகன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. மிக்க நன்றி!

    ReplyDelete
  49. //பிரபாகர் said...

    வைகோ சார்... நகைச்சுவை உங்களுக்கும் பிரமாதமாய் வருகிறது. பாராட்டுவதற்கும் ஒரு மனம் வேண்டும். பின்னூட்டத்தில் அசத்துகிறீர்கள்...//

    நண்பரே, வை.கோ அவர்கள் வ.வ.ஸ்ரீ என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். கலக்கல்! :-)

    ReplyDelete
  50. //Jey said...

    சேட்டை வழக்கம்போல சுவாரஸ்யமா எழுதிருக்கேயா..., கண்டினியூ...கண்டினியூ....//

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. //VELU.G said...

    கலக்கல் காமெடி போங்கோ//

    மிக்க நன்றி ! :-))

    ReplyDelete
  52. //நஜீபா said...

    அது சரி சேட்டை. சாக்கியை மாதிரி கட்டிப் புடிப்பாங்களா..? :-)))//

    அடடா, அபசாரம்,..அபசாரம்! :-))

    ReplyDelete
  53. //கே.ஆர்.பி.செந்தில் said...

    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்..//

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  54. //ஸ்வர்ணரேக்கா said...

    நல்லா ரசிச்சு சிரிக்கவைக்கும் பதிவு..பிடித்த வரிகளை சொல்லவேண்டுமென்றால், பின்னூட்டமே பதிவின் நீளத்திற்கு வரும் போலிருக்கின்றது..//

    மிக்க நன்றி! சுருக்கமாக ஆனால் தாராளமாக உற்சாகமூட்டியிருக்கிறீர்கள். :-)

    ReplyDelete
  55. //சங்கவி said...

    ஒவ்வொரு வரியும் கலக்கலான நகைச்சுவை... எதார்த்தமாக இருக்கிறது நகைச்சுவை...//

    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  56. //! சிவகுமார் ! said...

    சூப்பர். சில சமயம் புரோகிதர்கள் லேட்டாக வந்து மண்டபத்தில் பரபரப்பை உண்டாக்குவதும் செம காமடியாக இருக்கும்.//

    ஆமாம் நண்பரே! அதை இன்னும் எழுதியிருக்கலாம் தான். ஆனால், இடுகை நீளம்..? :-))
    மிக்க நன்றி!

    ReplyDelete
  57. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

    hahaa

    அப்படி போடு அருவாளை//

    மிக்க நன்றி நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும்....! :-))

    ReplyDelete
  58. //sudhanandan said...

    நமக்கும் இப்படி ஒரு அனுபவம் இறுக்குண்ணா.... இந்த முடிவை நான் எடுத்து 10 வருஷம் ஆச்சு//

    சர்தான், இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்க நிறைய இருப்பாங்க போலிருக்கே? :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  59. //vinu said...

    settay ummoda settay sema settay pongooooooooooooo//

    மிக்க நன்றிங்க! :-)

    ReplyDelete
  60. //அமைதிச்சாரல் said...

    ரசிச்சு சிரிக்கவெச்ச இடுகை :-)))

    மிக்க நன்றிங்க! :-))

    ReplyDelete
  61. நன்கு ரசித்துப் படித்தேன் சேட்டை...... காமெடி தோரணம்....!

    ReplyDelete
  62. /////மாப்பிள்ளை அழைப்புக்கென்று தைத்திருந்த கோட்டைப் போட்டுக்கொண்டு அவன் நின்றபோது எனக்குச் சிரிப்பாக வந்தது. அசப்பில் கொசுமருந்து அடிக்கிறவனைப் போலிருந்தான்.////////

    பாவம் சேட்டை, கல்யாணத்தன்னிக்காவது விட்டு வைக்கப்படாதா?

    ReplyDelete
  63. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    நன்கு ரசித்துப் படித்தேன் சேட்டை...... காமெடி தோரணம்....!//

    வாங்க பானா ராவன்னா! நகைச்சுவையில் பட்டை கிளப்புகிற நீங்கள் பாராட்டுவது மனதுக்கு நிறைவாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    //பாவம் சேட்டை, கல்யாணத்தன்னிக்காவது விட்டு வைக்கப்படாதா?//

    என்ன பண்ண? துணி நிறைய இருந்தா ரெண்டு கோட்டா தைச்சிருக்க வேண்டியதுதானே? தொளதொளன்னு அவன் நின்னதைப் பார்த்தா...!

    மீண்டும் நன்றிகள் பல! :-)

    ReplyDelete
  64. கலக்கல் காமெடி..!!

    ReplyDelete
  65. குற்றால அருவியாய் பொங்கிய நகைச்சுவைப் ப்கிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்த்க்கள்.

    ReplyDelete
  66. //
    "நான் எப்பவுமே நீதி, நேர்மை, நியாயம் பக்கம்," என்று ரஜினியைப் போல பன்ச் டயலாக்கைச் சொன்னேன்.//

    பாவம்க அவரு... இவ்ளோ தெளிவாவா இருக்குறது ?

    ReplyDelete
  67. ரொம்ப ரொம்ப ரசித்துப்படிச்சேங்க.. இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். நிறைய இடங்கள் இன்னும் மனசுல நிக்குது.

    குறிப்பா மசாலா கிரகணமானு கேட்டது, அப்புறம் சொந்த பந்துக்கள் ( கிரிக்கெட்) இப்படி நிறைய :) கலக்கிருக்கீங்க!!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!