முன்கதைச்சுருக்கம்:
"அடைந்தால் அமெரிக்கா; இல்லையேல் ஆந்தைக்குளம்," என்று சூளுரைத்த ஐயாக்கண்ணு, ஊருக்குத் திரும்பி தனக்குச் சொந்தமான செங்கல்சூளை மற்றும் ஓட்டுத்தொழிற்சாலை இரண்டையும் கவனித்துக்கொண்டாலே போதுமென்ற முடிவுக்கு வருகிறார். இதைத் தற்செயலாகக் காதுகொடுத்துக் கேட்ட (இன்னும் பெயரிடப்படாத) அரசியல் கட்சியின் செயலாளர் கொக்கிரகுளம் கோவிந்தன், கூரைக்குப் போடுகிற ஓட்டை தேர்தலில் போடுகிற ஓட்டு என்று தவறாகப் புரிந்து கொள்கிறான். உடனே, தன் தலைவரிடம் ஐயாக்கண்ணு குறித்துச் சொல்கிறான்.அதன் விளைவாக, ஐயாக்கண்ணுவுக்கு ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட தலைவர் கடியப்பட்டணம் கந்தப்பன், முன்பணமாக ஒரு பெட்டியையும் கொடுத்து விடுகிறார். இனி...!
ஓசியில் கிடைப்பதை விடுவானேன் என்று ஐயாக்கண்ணு ஏகத்துக்கும் குடித்துத் தொலைத்துவிடவும், போதை மிகவும் அதிகமாகி, தனது இயல்புக்கு மாறாக மிகவும் தெளிவுடன் பேச ஆரம்பித்துவிட்டார். நல்ல வேளை, கடியப்பட்டணம் கந்தப்பனும், கொக்கிரகுளம் கோவிந்தனும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உருண்ட வைக்கோல் டெம்போக்களைப் போல கவிழ்ந்து கிடந்தனர்.
"அண்ணாச்சி, வாங்க கெளம்புவோம்," என்று களக்காடு கருமுத்து ஐயாக்கண்ணுவை தரதரவென்று இழுத்துச் சென்று, ஒரு ஆட்டோவில் உட்காரவைத்து, எழும்பூர் கென்னத் சந்திலிருந்த ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றான். ஆனால், அவர்களது ஆட்டோவை ஒர் மர்ம உருவம் பின்தொடர்வதை இருவரும் கவனிக்கவில்லை. கடியப்பட்டணம் கந்தப்பனும், ஐயாக்கண்ணுவும் அந்த பாருக்குள் நுழைந்ததுமுதலாகவே, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அந்த உருவம் கண்காணித்துக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தது. அது யார்?
குஸ்கா தத்! இந்தியத் தொலைக்காட்சியில் ’கோலங்கள்’ அபிக்குப் பிறகு மிகவும் பிரபலமான் பெண்மணி! புது தில்லியிலிருந்து வரும் "கண்டி-டிவி"யின் நிரூபர். இந்தியில் கண்டி என்றால் மணி. காசை வாங்கிக்கொண்டு பத்திரிகை தர்மத்துக்கு ’சாவுமணி’யடிக்கிற கடமையைச் செவ்வனே செய்ததால் இப்படியொரு பெயர். மேலும் ஏறக்குறைய ஐம்பது வயதாகிவிட்டாலும், தனது குட்டையான கூந்தலில் தினமும் கருப்புச்சாயம் பூசுகிற வழக்கமுள்ளவர் என்பதால் ’தலைமை நிரூபர்" என்றும் அழைக்கப்படுகிறார். தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அவரை கொஞ்சநாள் சென்னையிலேயே இருந்து வசூலைக் கவனித்துக் கொள்ளுமாறு மேலிடம் உத்தரவு போட்டிருந்தது.
"சரியான ஸ்கூப்!" குஸ்கா தத் மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டார். "இதை வைச்சு ஒரு அமவுண்ட் வாங்கி, நாம தனியா சேனல் ஆரம்பிச்சிர வேண்டியதுதான்!"
ஐயாக்கண்ணுவும், கருமுத்துவும் லாட்ஜுக்குள் நுழையவும், குஸ்கா தத் தனது அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்தார்.
"ஜீ! மே குஸ்கா போல்ரஹீ ஹூம்! தமிழ்நாட்டு அரசியலிலே ஒரு புது திருப்பம்-னு உடனே Flash போடுங்க! சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி ஏரியாக்களிலே ஆளுங்கட்சிக்கு ஐயாக்கண்ணுன்னு ஒருத்தர் மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தப்போறாரு! ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய்னு பேரம் பேசிட்டாங்க!" என்று தகவல் அளித்துவிட்டு, லாட்ஜ் வாசலிலேயே காத்திருந்தபோதுதான் அது நடந்தது.
நடிப்பால் பிரபலம் ஆக முடியாவிட்டாலும், அவ்வப்போது ஏதேனும் பிராப்ளத்தில் மாட்டிப் பிரபலமான நடிகை பிஷ்கு, அந்த லாட்ஜிலிருந்த ஹோட்டலில், அளவுச்சாப்பாட்டை அளவுதெரியாமல் சாப்பிட்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார். குஸ்காவுக்கு உடனே பொறிதட்டியது.
"ஹலோ! அடுத்த Flash News போடுங்க! ஐயாக்கண்ணு கட்சியில் இணைந்தார் பிரபல நடிகை பிஷ்கு!"
அடுத்த சில நிமிடங்களில் தமிழக அரசியல் அல்லோலக்கல்லோலப்படத்தொடங்கியது.
யார் இந்த ஐயாக்கண்ணு? - என்று டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. "ஐயாக்கண்ணுவுக்கு சொந்தமான கறவைமாடுகள் மற்றும் காளைமாடுகளைப் பாருங்கள்! இதில் ஒன்றாவது அவரைப்போல சட்டை போட்டிருக்கிறதா? வேட்டி கட்டியிருக்கிறதா? இவரா தமிழகத்தின் தலைவிதியை மாற்றப்போகிறார்?" என்று அருணாப் கோஸ்வாமி எட்டுக்கட்டையில் முழங்கிக்கொண்டிருந்தார்.
சி.என்.என்.ஐபி.என்னில் சுஹாசினி ஹைதர்,"இவரது பண்ணையில் மொத்தம் இரண்டே இரண்டு காளைகள் தானிருக்கின்றன. மற்றவையெல்லாம் பசுமாடுகள். இப்படியொரு ஆணாதிக்கவாதியையா தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்?" என்று கேள்வியெழுப்பியதோடு, ’தி சந்து’ ராமையும் பேட்டிகண்டனர்.
"This is an ample example of the systemic deterioration of the polity in a state that has been traditionally supporting untainted regionalistic and chauvnistic approach in total contravention to the federal ideologies of a country that has been at best known and hailed by the international community as the champion of democray and which is facing a crisis that is peculiar and impending to threaten the multi-linguistic fibre of the society that has its roots in our longstanding values epitomized by our ancestors who have advocated clean adherence to the ethical values preached by our forefathers and backfathers for several centuries..." என்று ஒரு கவுளி கும்பகோணம் வெற்றிலையை மெல்பவர்போல வாயை அஷ்டகோணலாக அசைத்தவாறே ஆங்கிலத்தில் பொளந்து கட்டத்தொடங்க, அவரது பதில் முடிவதற்குள் டூட்டி முடிந்ததால், சுஹாசினி ஹைதர் ஸ்டூடியோவை விட்டே கிளம்பிவிட்டார்.
ஹெட்லைன்ஸ் டுடே-க்குப் பேட்டியளித்த டக்ளஸ் ஆசிரியர் ஜோ "எல்லா மாடுகளுக்கும் நான்கு கால்கள் இருக்கின்றன; எல்லா மாடுகளுக்கும் தலா ஒவ்வொரு வால் இருக்கிறது. எல்லா மாடுகளும் சாணிபோடும். ஆனால், இந்த மாடுகள் எங்கே சாணிபோடும் என்பதை யாராவது கண்காணிக்க வேண்டும்." என்று நகைச்சுவையோடு பேசி அவரே சிரித்துக்கொண்டார்.
ஆனால், லாட்ஜுக்குள்ளே குப்பென்று மப்பேறியதால் குப்புறக்கவிழ்ந்திருந்த ஐயாக்கண்ணுவுக்கு, ஒரு ஜீப்பில் ஏறியதால் தான் எவ்வளவு பிரபலமாகிவிட்டோம் என்ற உணர்வே இல்லாமல் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். தற்செயலாக தொலைக்காட்சியை முடுக்கிய களக்காடு கருமுத்து அசந்தே போய்விட்டான். ஐயாக்கண்ணுவை எழுப்ப மிகவும் முயன்றவன் இறுதியில் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தான். ஐயாக்கண்ணு அரைத்தூக்கத்தில் அலறினார்.
"லேய் கருமுத்து, இந்த எளவெடுத்த மாட்டைப் புடிச்சுக் கட்டு மக்கா. வயலிருக்கு வரப்பிருக்கு, எங்கண வந்து என்ன செய்யுது...?"
"அண்ணாச்சியோ, மாடில்லே அண்ணாச்சி, நான்தேன் தண்ணிதெளிச்சேன். எளுந்திரிச்சுப் பாருங்க. எல்லா டிவியிலேயும் உங்க பேருதான்....!"
"என்னலே சொல்லுதே?" ஐயாக்கண்ணு அதிர்ந்துபோய் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்தார்."லேய் என்ன மக்கா இங்கிலீஷுலே விடாம ஏசுதாக? என்னலே நடக்கு?"
"அண்ணாச்சி! இன்னும் கொஞ்ச நேரத்துலே இந்த ரூமுக்கு யாரெல்லாம் வரப்போறாகன்னு பாருங்க! சீக்கிரமா குளிச்சிட்டு வாங்கண்ணாச்சி! மப்போட இருந்தா தப்பாயிருமில்லா?"
"போயி நல்லெண்ணை வாங்கிட்டு வா மக்கா," என்று ஐயாக்கண்ணு குளிக்கத்தயாராகவும், கருமுத்து மின்னல் வேகத்தில் போய் நல்லெண்ணை வாங்கி வந்து கொடுத்தான்.
"லேய் கருமுத்து! எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு ஏச்சுப்புடலாமுன்னு பார்க்கியா? இதுலே என்னலே போட்டிருக்கு, கூடவே ஒரு இலவசப்பரிசுன்னு போட்டிருக்கில்லே..அது எங்கேலே?"
"ஐயோ அண்ணாச்சி, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே அண்ணாச்சி! ஒரு இலவசமும் இல்லே அண்ணாச்சி வேண்ணா கடைக்காரன்கிட்டே கேளுங்க!"
"யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"
கருமுத்து ஏறக்குறைய மூர்ச்சையடைகிற நிலைக்குவந்தபோது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

Me the first....
ReplyDeleteஅருமை.. மேலும் படிக்க ஆவலாய் உள்ளேன்.
ReplyDelete//யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"//
ReplyDeleteயாரைலேய் ஏமாத்த பாக்க எடுலேய் அந்த அருவாளை.....
//யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"//
ReplyDeleteயாரைலேய் ஏமாத்த பாக்க எடுலேய் அந்த அருவாளை.....
///சி.என்.என்.ஐபி.என்னில் சுஹாசினி ஹைதர்,"இவரது பண்ணையில் மொத்தம் இரண்டே இரண்டு காளைகள் தானிருக்கின்றன. மற்றவையெல்லாம் பசுமாடுகள். இப்படியொரு ஆணாதிக்கவாதியையா தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்?" என்று கேள்வியெழுப்பியதோடு, ’தி சந்து’ ராமையும் பேட்டிகண்டனர்.//
ReplyDeleteதாங்கலடா சாமீ ...................
பேசாம உம்மா தலை மட்டும் இன்சூர் பண்ணிடும் ஒய்......
கலக்கல் சடையர்.
>>என்று நகைச்சுவையோடு பேசி அவரே சிரித்துக்கொண்டார்.
ReplyDeletehaa haa ஹா ஹா
>>"யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"
ReplyDeletesema செம அண்னே
கதையை சூப்பராக தொடர்ந்ததற்கு என் நன்றிகள்.
ReplyDeleteவழுவட்டையாக இருந்த என்னை மிகவும் எழுச்சியாக்கிய வரிகள்:
// 1)போதை மிகவும் அதிகமாகி, தனது இயல்புக்கு மாறாக மிகவும் தெளிவுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.
2) தனது குட்டையான கூந்தலில் தினமும் கருப்புச்சாயம் பூசுகிற வழக்கமுள்ளவர் என்பதால் ’தலைமை நிரூபர்" என்றும் அழைக்கப்படுகிறார்
3) பிரபலமான நடிகை பிஷ்கு, அந்த லாட்ஜிலிருந்த ஹோட்டலில், அளவுச்சாப்பாட்டை அளவுதெரியாமல் சாப்பிட்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்.
4) ’தி சந்து’ ராமையும் பேட்டிகண்டனர்.
5) டக்ளஸ் ஆசிரியர் ஜோ .... என்று நகைச்சுவையோடு பேசி அவரே சிரித்துக்கொண்டார்.
6) "யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"//
இன்று அதிகாலை 5 வது பகுதியில் வந்துள்ள வ.வ.ஸ்ரீ. யைப் பார்க்க வரவில்லையா? உடனே எழுச்சியுடன் உறப்பட்டு வாங்க, சார்.
சூப்பரப்பு சூப்பர்.....
ReplyDelete//ஆங்கிலத்தில் பொளந்து கட்டத்தொடங்க, அவரது பதில் முடிவதற்குள் டூட்டி முடிந்ததால், சுஹாசினி ஹைதர் ஸ்டூடியோவை விட்டே கிளம்பிவிட்டார்.//
ReplyDeletesettai rocks!!!!!!!!!
ஓசியில் கிடைப்பதை விடுவானேன் என்று ஐயாக்கண்ணு ஏகத்துக்கும் குடித்துத் தொலைத்துவிடவும், போதை மிகவும் அதிகமாகி, தனது இயல்புக்கு மாறாக மிகவும் தெளிவுடன் பேச ஆரம்பித்துவிட்டார். நல்ல வேளை, கடியப்பட்டணம் கந்தப்பனும், கொக்கிரகுளம் கோவிந்தனும் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உருண்ட வைக்கோல் டெம்போக்களைப் போல கவிழ்ந்து கிடந்தனர்.//
ReplyDeleteவணக்கம் நலமா சகோதரம்? லோக்கல் டாஸ்மாக்கை அதுவும் ஓசியிலை குடிச்சதுக்கே இந்த நிலமை என்றால் Foreign சரக்கை அடிச்சால் எப்பிடியிருக்கும் இவங்க நிலமை?
"அண்ணாச்சி, வாங்க கெளம்புவோம்," என்று களக்காடு கருமுத்து ஐயாக்கண்ணுவை தரதரவென்று இழுத்துச் சென்று, ஒரு ஆட்டோவில் உட்காரவைத்து, எழும்பூர் கென்னத் சந்திலிருந்த ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றான். ஆனால், அவர்களது ஆட்டோவை ஒர் மர்ம உருவம் பின்தொடர்வதை இருவரும் கவனிக்கவில்லை. கடியப்பட்டணம் கந்தப்பனும், ஐயாக்கண்ணுவும் அந்த பாருக்குள் நுழைந்ததுமுதலாகவே, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அந்த உருவம் கண்காணித்துக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தது. அது யார்?//
ReplyDeleteஉடம்பெல்லாம் பயத்திலை நடுங்குது பாஸ்.
சும்மா சொன்னேன். என்ன காமெடிக் கதை திடு திப்பென்று மர்மக் கதையாக திரில் நாவல் போல மாறுது. ம்..நடக்கட்டும் நடக்க்கட்டும்.
நடிப்பால் பிரபலம் ஆக முடியாவிட்டாலும், அவ்வப்போது ஏதேனும் பிராப்ளத்தில் மாட்டிப் பிரபலமான நடிகை பிஷ்கு, அந்த லாட்ஜிலிருந்த ஹோட்டலில், அளவுச்சாப்பாட்டை அளவுதெரியாமல் சாப்பிட்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார். குஸ்காவுக்கு உடனே பொறிதட்டியது.
ReplyDelete"ஹலோ! அடுத்த Flash News போடுங்க! ஐயாக்கண்ணு கட்சியில் இணைந்தார் பிரபல நடிகை பிஷ்கு!"
அடுத்த சில நிமிடங்களில் தமிழக அரசியல் அல்லோலக்கல்லோலப்படத்தொடங்கியது.//
பிஷ்கு எத்தனை கட்சியிலை தான் இருப்பா. போன தேர்தலிலை அம்மா வீட்டை, இப்ப ஐயா வீட்டையா? இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை சேட்டை.......
யார் இந்த ஐயாக்கண்ணு? - என்று டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. "ஐயாக்கண்ணுவுக்கு சொந்தமான கறவைமாடுகள் மற்றும் காளைமாடுகளைப் பாருங்கள்! இதில் ஒன்றாவது அவரைப்போல சட்டை போட்டிருக்கிறதா? வேட்டி கட்டியிருக்கிறதா? இவரா தமிழகத்தின் தலைவிதியை மாற்றப்போகிறார்?" என்று அருணாப் கோஸ்வாமி எட்டுக்கட்டையில் முழங்கிக்கொண்டிருந்தார்.//
ReplyDeleteஇன்னொரு முக்கியமான விசயத்தை அவர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். ஐயாக்கண்ணுவைப் போல மாடுகளுக்கும் வயசாசி இருக்கா இதையும் கவனிச்சிருக்கலாம் எல்லோ.
சூப்பர் பதிவு, சேட்டை !
ReplyDeleteதனது குட்டையான கூந்தலில் தினமும் கருப்புச்சாயம் பூசுகிற வழக்கமுள்ளவர் என்பதால் ’தலைமை நிரூபர்" என்றும் அழைக்கப்படுகிறார்..
ReplyDeleteஎன்று ஒரு வரி சிலாகிக்க நினைத்தால் வரிசையாய் சிக்சர்கள்..
சிரிப்பு பெளலிங்கில் க்ளீன் போல்ட்
"This is an ample example of the systemic deterioration of the polity in a state that has been traditionally supporting untainted regionalistic and chauvnistic approach in total contravention to the federal ideologies of a country that has been at best known and hailed by the international community as the champion of democray and which is facing a crisis that is peculiar and impending to threaten the multi-linguistic fibre of the society that has its roots in our longstanding values epitomized by our ancestors who have advocated clean adherence to the ethical values preached by our forefathers and backfathers for several centuries..." //
ReplyDeleteHi settai,
Could please explain to me in my mother tongue? It's very hard to understand, Because I don't know much about the Democracy? Democracy is a valuable things? can we get it from our local shop?
Is there any place available to get to know about democracy in our countries?( India, and Srilanka)
I'm having difficulty understanding the concept of Democracy?
I agree with the method you mention, how ever I can't agree about MR ஆந்தைக் கண்ணு have democracy.
யோ நான் சுத்தி வளைச்சு என்ன சொல்ல வாறன் என்றால், ஆந்தைக் கண்ணுவிடம் ஜனநாயகமே இல்லை. அவருடைய ஆட்சியில் ‘மக்களாட்சி மட்டுமே’ நிலைத்துள்ளது. இது சரி தானே?
ஹெட்லைன்ஸ் டுடே-க்குப் பேட்டியளித்த டக்ளஸ் ஆசிரியர் ஜோ "எல்லா மாடுகளுக்கும் நான்கு கால்கள் இருக்கின்றன; எல்லா மாடுகளுக்கும் தலா ஒவ்வொரு வால் இருக்கிறது. எல்லா மாடுகளும் சாணிபோடும். ஆனால், இந்த மாடுகள் எங்கே சாணிபோடும் என்பதை யாராவது கண்காணிக்க வேண்டும்." என்று நகைச்சுவையோடு பேசி அவரே சிரித்துக்கொண்டார்.//
ReplyDeleteஇந்தக் கதையிலை வாற மாடுகள் உள்ளூரிலை சாப்பிட்டு, வெளியூரிலை மட்டும் தான் சாணி போடும் என்று நினைகிறேன்.
"யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"
ReplyDeleteகருமுத்து ஏறக்குறைய மூர்ச்சையடைகிற நிலைக்குவந்தபோது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டது//
ஊரிலை இலவசமாக எல்லாவற்றையும் குடுப்பதால் வந்த வினையினை நன்றாக, நக்கலாக சொல்லியிருக்கிறீர்கள்.
கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் நடைமுறை நிகழ்வுகளோடு ஒத்துப் போகும் வண்ணம் அழகாக, ஆழ்ந்து கவனமெடுத்து கலக்கலாக எழுதியுள்ளீர்கள். இடைக்கிடையில் நகைச்சுவைகளைக் கொஞ்சம் அதிகரிக்கலாம்.
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
//சும்மா பேசலாம் said...
ReplyDeleteஅருமை.. மேலும் படிக்க ஆவலாய் உள்ளேன்.//
மேலும் வரும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"//
யாரைலேய் ஏமாத்த பாக்க எடுலேய் அந்த அருவாளை.....//
ஐயா சாமீ, வன்முறையெல்லாம் வேண்டாம் நாஞ்சில் அண்ணாச்சி! :-)
மிக்க நன்றி!
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteதாங்கலடா சாமீ ...................பேசாம உம்மா தலை மட்டும் இன்சூர் பண்ணிடும் ஒய்......//
ஒரு கம்பனியும் ரெடியில்லையே? :-))
//கலக்கல் சடையர்.//
வருகைக்கும் யோசனைக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeletehaa haa ஹா ஹா
sema செம அண்னே//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகதையை சூப்பராக தொடர்ந்ததற்கு என் நன்றிகள். வழுவட்டையாக இருந்த என்னை மிகவும் எழுச்சியாக்கிய வரிகள்:
வழக்கம்போல பிடித்த வரிகளை மிகவும் மெனக்கெட்டு சுட்டிக்காட்டி பாராட்டியிருக்கிறீர்கள். தொடரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! :-)
//இன்று அதிகாலை 5 வது பகுதியில் வந்துள்ள வ.வ.ஸ்ரீ. யைப் பார்க்க வரவில்லையா? உடனே எழுச்சியுடன் உறப்பட்டு வாங்க, சார்.//
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கமெண்ட் போட்டுட்டேனே...? மிக்க நன்றி! :-)
//sudhanandan said...
ReplyDeleteசூப்பரப்பு சூப்பர்.....//
நன்றியப்பு நன்றி! :-)
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeletesettai rocks!!!!!!!!!//
மிக்க நன்றி நண்பரே! :-)
//டக்கால்டி said...
ReplyDeleteஅன்பு நண்பர்களே...எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
அடடா, உங்க சொத்திலேயும் கைவைச்சிட்டாய்ங்களா? கவலை வேண்டாம். எப்போதும்போல எனது ஆதரவு தொடரும். வருகைக்கு மிக்க நன்றி!
//நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் நலமா சகோதரம்? லோக்கல் டாஸ்மாக்கை அதுவும் ஓசியிலை குடிச்சதுக்கே இந்த நிலமை என்றால் Foreign சரக்கை அடிச்சால் எப்பிடியிருக்கும் இவங்க நிலமை?//
வணக்கம் சகோதரம், கதையை சரியாக வாசிக்கலியோ? அவங்க போனது பாருக்கு! ஆர்டர் பண்ணினது ஜானிவாக்கர், நெப்போலியன். ஃபாரின் சரக்குதான்.
//உடம்பெல்லாம் பயத்திலை நடுங்குது பாஸ். சும்மா சொன்னேன். என்ன காமெடிக் கதை திடு திப்பென்று மர்மக் கதையாக திரில் நாவல் போல மாறுது. ம்..நடக்கட்டும் நடக்க்கட்டும்.//
அரசியலில் கூட பல மர்மங்கள் இருக்குதே! அது மாதிரி இதுலேயும் ஒரு பிட்டு சேர்த்திருக்கிறேன்! :-)
//பிஷ்கு எத்தனை கட்சியிலை தான் இருப்பா. போன தேர்தலிலை அம்மா வீட்டை, இப்ப ஐயா வீட்டையா? இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை சேட்டை.......//
இப்போ இவங்களைப் புரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போறோம்? கதை புரியுதில்லே? அது போதும் சகோதரம்! :-))
//இன்னொரு முக்கியமான விசயத்தை அவர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். ஐயாக்கண்ணுவைப் போல மாடுகளுக்கும் வயசாசி இருக்கா இதையும் கவனிச்சிருக்கலாம் எல்லோ.//
அது அடுத்த ரிப்போர்ட்டுலே வரும் பார்த்திட்டேயிருங்க! :-)
//Hi settai, Could please explain to me in my mother tongue? It's very hard to understand, Because I don't know much about the Democracy? Democracy is a valuable things? can we get it from our local shop? Is there any place available to get to know about democracy in our countries?( India, and Srilanka) I'm having difficulty understanding the concept of Democracy? I agree with the method you mention, how ever I can't agree about MR ஆந்தைக் கண்ணு have democracy.//
மதர் டங் என்னா? கிராண்ட் மதர் டங்குலேயே சொல்லுறன். அதாவது யாராவது கேள்விகேட்டா, கேட்குறவங்களுக்கு புரியாத மாதிரி பதில் சொல்லுறவன் தான் உண்மையான புத்திஜீவி! :-)
//யோ நான் சுத்தி வளைச்சு என்ன சொல்ல வாறன் என்றால், ஆந்தைக் கண்ணுவிடம் ஜனநாயகமே இல்லை. அவருடைய ஆட்சியில் ‘மக்களாட்சி மட்டுமே’ நிலைத்துள்ளது. இது சரி தானே?//
இன்னும் அவரு மக்களை அரசியலுக்குக் கொண்டுவரலே. இன்னும் சில வருசங்கள் புடிக்கும்.
//இந்தக் கதையிலை வாற மாடுகள் உள்ளூரிலை சாப்பிட்டு, வெளியூரிலை மட்டும் தான் சாணி போடும் என்று நினைகிறேன்.//
இல்லை. வெளியூரு மாடு சாப்பிடுறதுக்கும் சேர்த்து இதுங்க சாணி போடும்! :-)
//ஊரிலை இலவசமாக எல்லாவற்றையும் குடுப்பதால் வந்த வினையினை நன்றாக, நக்கலாக சொல்லியிருக்கிறீர்கள்.//
ஹிஹி, இதுக்கு இப்படியொரு உள்குத்து கூட இருக்கா? எழுதும்போது சத்தியமா இந்தக் கோணத்துலே யோசிக்கவே இல்லே சகோதரம்! கெளப்புறீங்களே...?
//கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் நடைமுறை நிகழ்வுகளோடு ஒத்துப் போகும் வண்ணம் அழகாக, ஆழ்ந்து கவனமெடுத்து கலக்கலாக எழுதியுள்ளீர்கள். இடைக்கிடையில் நகைச்சுவைகளைக் கொஞ்சம் அதிகரிக்கலாம்.//
உண்மைதான். அரசியலே நகைச்சுவையாகிட்டதாலே கொஞ்சம் குறைச்சிக்கிட்டேன். அடுத்தவாட்டி கொஞ்சம் டோஸைக் கூட்டியிரலாம்.
//அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.//
வருகைக்கும், தாராளமான, ஏராளமான பின்னூட்டங்களுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி சகோதரம்! :-))
//DrPKandaswamyPhD said...
ReplyDeleteசூப்பர் பதிவு, சேட்டை !//
வாங்க ஐயா, நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!
//ரிஷபன் said...
ReplyDeleteதனது குட்டையான கூந்தலில் தினமும் கருப்புச்சாயம் பூசுகிற வழக்கமுள்ளவர் என்பதால் ’தலைமை நிரூபர்" என்றும் அழைக்கப்படுகிறார்..என்று ஒரு வரி சிலாகிக்க நினைத்தால் வரிசையாய் சிக்சர்கள்..சிரிப்பு பெளலிங்கில் க்ளீன் போல்ட்//
ஆஹா, கிரிக்கெட் மொழியிலேயே பின்னூட்டத்தில் அசத்தியிருக்கிறீர்களே. அடுத்த இடுகையைத் தவறாம படியுங்க! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
பட்டைய கெளப்பி இருக்கீங்க சேட்டை.... பிஷ்குவா பிஷ்கு.....? நடக்கட்டும் நடக்கட்டும்.....!
ReplyDelete////யாரை ஏய்க்கப்பாக்கே?" ஐயாக்கண்ணு சீறினார். "இந்த பாட்டில்லே என்ன போட்டிருக்கு? Cholesterol Free-போட்டிருக்கா இல்லியா? என்னலே பண்ணுனே அந்த கொலெஸ்ட்ராலை...? யாரை ஏமாத்தலாமுண்ணு நினைக்கே...?"////
ReplyDeleteசேட்டையின் சேட்டை கலக்கல்... எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கறீங்களோ...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteபட்டைய கெளப்பி இருக்கீங்க சேட்டை.... பிஷ்குவா பிஷ்கு.....? நடக்கட்டும் நடக்கட்டும்.....!//
வாங்க பானா ராவன்னா! :-))
என்ன பண்ணுறது, ஆட்டோ வரும்னு பின்னூட்டத்துலேயே சொல்றாய்ங்களே...? :-)
மிக்க நன்றி !
//சங்கவி said...
ReplyDeleteசேட்டையின் சேட்டை கலக்கல்... எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கறீங்களோ...//
வாங்க நண்பரே! நமக்குத் தொழில் நையாண்டி-ன்னு ஆயிருச்சு! யோசிச்சுத்தானே தீரணும்? :-)
மிக்க நன்றி!