Friday, February 25, 2011

மனைகள் விற்பனைக்கு!

ஃபார்ச்சூன் செவன் ரியாலிட்டி பிரைவேட்(டு) லிமிடெட் அலுவலகத்தில், பஸ் டே அன்றைக்கு பச்சையப்பா காலேஜ் சிக்னலில் மாட்டிய பயணியைப் போல கையைப்பிசைந்து கொண்டிருந்தார் குப்பண்ணா.

"சார், காலை எட்டு மணிக்கு பிளாட்டு பார்க்கக் கூட்டிட்டுப்போறதா சொன்னீங்க, இப்போ மணி பத்தாகப்போவுது," என்று குப்பண்ணா.

"வண்டி டிராபிக் ஜாம்லே மாட்டிக்கிச்சு போலிருக்கு சார், இதோ வந்திடும்," என்று கடையைத் திறந்தது முதல் காரணமேயில்லாமல் கடவாய்ப்பல் தெரியச் சிரித்துக்கொண்டிருந்த அந்த மேனேஜர் சொன்னார். ஞாயிற்றுக்கிழமையில் அதுவும் தண்டையார்பேட்டையில் ஜாமாவது, கெட்ச்-அப்பாவது என்று குப்பண்ணா யோசித்துக்கொண்டிருந்தபோதே, அசப்பில் ரோடு இன்ஜினைப் போலிருந்த ஒரு புராதனமான வேன் வந்து நின்றது.

"வந்திருச்சு சார், ஏறுங்க ஏறுங்க," என்று அந்த மேனேஜர் கூறவும், குப்பண்ணாவும் இன்னும் சிலரும் அந்த வண்டிக்குள் ஏறிக்கொண்டனர். ஒருவழியாக அந்த வண்டி கிளம்பியதும் ரேஷன் கடையில் சர்க்கரை வாங்கியதுபோல குப்பண்ணா நிம்மதிப்பெருமூச்சு விட்டார். ஆனால், பாதிவழியிலேயே இரண்டு நாட்களாக இரவுபெய்த மழையில் நனைந்திருந்ததுபோல, அந்த வண்டி ’ஹாச்சு..ஹாச்சு,’ என்று பலமாகத் தும்மியபடி நின்றே போனது. அப்புறம் என்ன?

"சார், ஒரு கை கொடுங்க சார்!"

"ஹலோ குட்மார்னிங்! எப்படி இருக்கீங்க?"

"என்ன சார்? கீழே இறங்கித்தள்ள ஒரு கை கொடுங்கன்னு சொன்னா, கைகுலுக்கி குட்மார்னிங் சொல்றீங்களே? வந்து தள்ளுங்க சார்!"

குப்பண்ணாவும் மற்றவர்களும் எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் அந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு போனார்கள் என்று அவர்களுக்கே புரியவில்லை. ஆனால் மேனேஜர் மட்டும் "இன்னும் கொஞ்சதூரம் தான் சார், தள்ளுங்க, தள்ளுங்க..," என்று மாநாட்டுக்கு வந்த கட்சித்தொண்டனைப் போல, துண்டை காற்றில் சுழற்றியபடியே பின்னால் வந்து கொண்டிருந்தான்.

"யோவ், இன்னும் எவ்வளவு தூரம்யா தள்ளுறது? தேனாம்பேட்டையிலே தள்ள ஆரம்பிச்சது, இதோ குரோம்பேட்டையே வந்திரும்போலிருக்கு. இதுக்கு நாங்களே பஸ்சைப் பிடிச்சு வந்திருப்போமில்லையா?" என்று எரிந்து விழுந்தார் குப்பண்ணா. "என்னய்யா வண்டி வச்சிருக்கீங்க, நம்ம நாட்டு பொருளாதாரம் மாதிரி கண்டிசன் படுமோசமாயிருக்கே!"

"வண்டியோட கண்டிசன் நல்லாயிருக்கு; எங்க கம்பனி கண்டிசன் தான் சரியில்லை," என்று அசடுவழிந்தார் மேனேஜர். "அதோ பெட்ரோல் பங்க் வந்திருச்சு! ஆளுக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்தீங்கன்னா, கொஞ்சம் டீசலைக் கண்ணுலே காமிச்சி வண்டியை நைஸ் பண்ணிக்கொண்டு போயிரலாம் சார்."

"நைஸ் பண்ணுறதா? என்னய்யா ஃபிகரைக் கரெக்ட் பண்ணுறா மாதிரி சொல்றியே, தலையெழுத்து," என்று குப்பண்ணா ஒரு நூறு ரூபாயை அழுது தொலைக்க, மற்றவர்களும் ஐம்பது, இருபத்தி ஐந்து என்று கொடுத்து டீசல் போடவும் வண்டி கொஞ்சம் உற்சாகமாக ஓடத்தொடங்கியது.

"மேனேஜர் சார், உங்க கம்பனி விளம்பரத்துலே சிவப்பா, ஒல்லியா, சிரிச்ச முகமா ஒரு பொண்ணு வருமே? அவங்க ஞாயிற்றுக்கிழமை டூட்டிக்கு வரமாட்டாங்களா?" குப்பண்ணா கிசுகிசுப்பாய்க் கேட்டார்.

"சார், அவங்க டிவி சீரியல் நடிகை சார்! நாளைக்கு ஆபீசுக்கு வந்தீங்கன்னா, மலர்க்கொடின்னு ஒரு ரிசப்ஷனிஸ்ட் இருப்பாங்க! அசப்புலே ஜெகன்மோகினி படத்துலே வர்ற...."

"நமீதா மாதிரி இருப்பாங்களா?"

"இல்லை, அதுலே வர்ற பிசாசு மாதிரி இருப்பாங்க!"

அப்போது வாயை மூடிய குப்பண்ணா, தாம்பரம் தாண்டும்வரை வாயே திறக்கவில்லை.

"சார், சென்னையருகிலே வீடுன்னு போட்டிருந்தீங்க! வண்டி பாட்டுக்குப் போயிட்டே இருக்கே, வண்டலூரே வந்திரும்போலிருக்கு...?"

"வண்டலூருலேயே எங்க புராஜக்ட் வரதா இருந்திச்சு. ஆனா, ஜூ இருக்கிறதுனாலே டிஸ்டர்பன்ஸா இருக்குமேன்னு பண்ணாம விட்டுட்டோம்." என்றார் மேனேஜர்.

"என்ன அப்படிச் சொல்றீங்க? இப்பவே எவ்வளவு வீடு வந்தாச்சு அங்கே? மிருங்களாலே யாருக்கு என்ன டிஸ்டர்பன்ஸ் இருக்க முடியும்?" என்று கேட்டார் குப்பண்ணா.

"நான் சொன்னது மனுசங்களாலே மிருகங்களுக்கு ஏற்படுற டிஸ்டர்பன்ஸ் சார்," என்று மேனேஜர் சொன்னதும் மீண்டும் வாயடைத்தார் குப்பண்ணா.

"அது சரி, வண்டியிலே என்னமோ எலிசெத்த நாத்தமடிக்குதே?"

"வேறொண்ணுமில்லே சார், உங்களுக்கு லஞ்ச் கொண்டுவந்திருக்கோமில்லே? புளிசோறும் அவியலும்!"

’இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் இனி புளிசோறே சாப்பிடுவதில்லை,’ என்று குப்பண்ணா சாணக்ய சபதம் மேற்கொண்டபடியே, அசதி தாங்காமல் உறங்கியே போனார். கண்விழித்தபோது வண்டி ஒரு செம்மண் பாதையில் சென்று கொண்டிருந்தது.

"சைட்டு வந்திருச்சு; எல்லாரும் முழிச்சுக்கோங்க!"

எல்லாரும் கண்விழித்தார்கள். வண்டி நின்றதும் எல்லாரும் கீழே இறங்கினார்கள்.

"இது தான் சார் பிளாட்டு! எவ்வளவு அமைதியா இருக்கு பார்த்தீங்களா?" மேனேஜர் சிலாகித்துப் பேசத் தொடங்கினார்.

"பொட்டல்காடாயிருக்கே? அது போகட்டும், இது அப்ரூவ் ஆயிருச்சா?"

"அந்தக் கவலையே வேண்டாம் சார்!" மேனேஜர் சிரித்தார். "இது கார்ப்பரேஷன் லிமிட்டுலே வருதா, முனிசிபாலிட்டி லிமிட்டுலே வருதா, பஞ்சாயத்து லிமிட்டுலே வருதான்னு கண்டுபிடிக்கவே இன்னும் பத்து வருசமாகும் சார். முப்பாத்தம்மன் கோவிலிலே சீட்டுக்குலுக்கிப்போட்டுப் பார்த்து குத்துமதிப்பா இது பஞ்சாயத்து நிலமாத்தானிருக்குமுன்னு அப்ளிகேஷன் போட்டிருக்கோம். எல்லாம் சரியாயிடும்."

"தண்ணி வருமா?"

"ஓ! மழை பெஞ்சா வீட்டுக்குள்ளேயே தண்ணி கொட்டுறா மாதிரிதான் நாங்க கட்டுவோம்."

"மெட்ராஸ் இங்கேயிருந்து எவ்வளவு தூரம்!"

"ஜஸ்ட் அரைமணி நேரத்துலே வந்திடலாம். எங்க முதலாளி தினமும் வர்றாரே!"

"எதுலே வர்றாரு?"

"அவரு ஒரு ஹெலிகாப்டர் வச்சிருக்கிறாரு!"

"ஓ.கே! பள்ளிக்கூடம்?"

"அதுவும் அரை மணி நேரம்தான்!" என்ற மேனேஜர், "ஹெலிகாப்டரிலே இல்லை. பஸ்சிலே தான்," என்று விளக்கிக்கூறினார்.

"கடைகண்ணி, சந்தை...?"

"அரை மணிநேரம் தான்!"

"ஓ! அப்படியா? சரி, காலேஜ், தியேட்டரு, கல்யாண மண்டபம் எல்லாம் இருக்கா?"

"அரை மணி நேரம் பஸ்சிலே போனா எல்லாமே இருக்கு சார்!"

"ஆச்சரியமா இருக்கே? சென்னையிலே கூட இவ்வளவு சௌகரியம் கிடையாதே? அது போகட்டும், அரை மணி நேரம் பஸ்சிலே போனா என்ன ஊரு வரும்?"

"திருச்சிராப்பள்ளி!"

குப்பண்ணாவுக்கு நெஞ்சு வலிப்பது போலிருந்தது.

(அம்புட்டுத்தேன்!)

இது ஒரு வருடத்துக்கு முன்னர் நான் எழுதிய கானா. இலவச இணைப்பு மாதிரி மீள்பதிவாக இங்கே....


திடீர்நகர்

திருவள்ளூரு தாண்டினாக்காக் காடுதான்-அங்கே
திடீர்நகரில் கட்டலாமே வீடுதான்
சதுரஅடி தலா ரூபா பத்துதான்-நல்ல
சமயமிது வாங்கிப்போட்டா சொத்துதான்

தாசில்தாரு தந்துட்டாரு பட்டாதான்-மக்கள்
தலையில்கட்டு குவிஞ்சிடுமே துட்டாத்தான்
தமிழ்நடிகை மூஞ்சி காட்டி விளம்பரம்-பண்ணா
தலைதெறிக்க ஓட்டமாக சனம்வரும்

வெளநெலத்திலே மண்ணப்போட்டு ரொப்பலாம்-லஞ்சம்
வேணும்வரைக்கும் கொடுத்துப்புட்டாத் தப்பலாம்
கண்ணைக்கவரும் கலர்நோட்டீசு அடிக்கலாம்-மக்கள்
காசுலேதான் விஸ்கி,ரம்மைக்குடிக்கலாம்

அகப்பட்டதை ஆனவரை சுருட்டலாம்-யாரும்
அதுக்குமேலே கேள்விகேட்டா மிரட்டலாம்
மக்களெல்லாம் மலிவைத்தேடி அலம்புறார்-பின்னாலே
மாரடிச்சு நடுத்தெருவில் புலம்புறார்

58 comments:

  1. ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

    போட்டு தள்ளிட்டீங்க பாஸ்

    ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல சிரிக்க முடிஞ்சுது

    ReplyDelete
  2. டி.வி. களில் இந்த ரியல் எஸ்டேட் டுபாக்கூர் கூட்டங்கள் செய்யும் விளம்பர டகால்டி வேலைகளை பாத்துட்டு நம்ம ஜனங்க அங்கெ போயி அடைக்கலமாகி விடறது தொடர்கதைதான்.
    சிட்டு பண்டு மோகம் போனதும் இப்போ தனி வீடு கட்டும் ஆசையில் இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் நம் ஜனங்கள்.நல்ல பதிவு.

    ReplyDelete
  3. விழுந்து விழுந்து சிரிச்சு வயித்தையெல்லாம் வலிக்குது.

    மிகவும் ரஸித்த வரிகள்:

    1) "ஜஸ்ட் அரைமணி நேரத்துலே வந்திடலாம். எங்க முதலாளி தினமும் வர்றாரே!"

    "எதுலே வர்றாரு?"

    "அவரு ஒரு ஹெலிகாப்டர் வச்சிருக்கிறாரு!"

    2)
    அது போகட்டும், அரை மணி நேரம் பஸ்சிலே போனா என்ன ஊரு வரும்?"

    "திருச்சிராப்பள்ளி!"

    ReplyDelete
  4. சேட்டை இந்த மாதிரி நெறைய விளம்பரம் வருது. சென்னையில் இருந்து மிக அருகில்னு போட்டு அவங்க போற்றுக இடம் மதுராந்தகம் அருகே

    ReplyDelete
  5. மனைகள் விற்பனைக்கு!//

    நான் மனைவிகள்ன்னு படிச்சு தொலைஞ்சிட்டேன். ஏதாச்சும் பரிகாரம் உண்டா?

    ReplyDelete
  6. சரி அந்த சீரியல் நடிகைய குப்பண்ணா பார்த்தாரா இல்லியா?

    ReplyDelete
  7. சேட்டை! தேவா கையில எப்படி சிக்காம போச்சி கானா:))செம.

    ReplyDelete
  8. "அது சரி, வண்டியிலே என்னமோ எலிசெத்த நாத்தமடிக்குதே?"

    "வேறொண்ணுமில்லே சார், உங்களுக்கு லஞ்ச் கொண்டுவந்திருக்கோமில்லே? புளிசோறும் அவியலும்!"


    ....எலிபொறியில மாட்டிக்க போறதுக்கு symbolic shot! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  9. மக்களெல்லாம் மலிவைத்தேடி அலம்புறார்-பின்னாலே
    மாரடிச்சு நடுத்தெருவில் புலம்புறார்

    ..rightly said!

    ReplyDelete
  10. அண்ணே! ரொம்ப சேட்டை தானே உங்களுக்கு.

    இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

    ReplyDelete
  11. சூப்பர் சேட்டை... அந்த பஸ் டே மேட்டரை ஒரே வரியில முடிச்சிட்டீங்களே...

    ReplyDelete
  12. அது என்ன தலைவா 'ரியல்' எஸ்டேட் அப்டின்னு பேரு வச்சிருக்காங்க??

    ReplyDelete
  13. யோவ் தலைப்ப படிச்சிட்டு, கிரெடிட் கார்ட் எடுத்துட்டு நேரா வந்தேன்! மேட்டர் வேற மாதிரி போகுது?

    ReplyDelete
  14. என்னோட ஏரியாவுக்கு கொஞ்சம் வர்றது!!

    ReplyDelete
  15. ஹா..ஹா..
    ஆனா கடைசியா பாருங்க..

    ரு 100-க்கு, மெட்ராஸ் இருந்து திருச்சி வரைக்கும் கொண்டுபோய் விட்டிருக்காருன்ணா ( அதுவும் சாப்பாடு போட்டு) ,அந்த முதலாளி, எம்புட்டு நல்லவரா இருக்கனும்?..

    அவரை எலெக்‌ஷன்ல நிற்கவையுங்க.. முதல்வர் ஆக்குவது நம் கடமை...


    ஹி..ஹி

    ReplyDelete
  16. ரொம்ப நகைச்சுவையுடன்...இந்த கால ஏமாற்று நிகழ்வுகளை சூசகமா சொல்லி இருக்கீங்க இந்த இடுகையில்...பதிவு பூராவும் சிரிப்பு தான்...welcome back :))))

    ReplyDelete
  17. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
    நம்ம பக்கம் தொடர்ந்து வருவதில்லை ஏன் நண்பா?

    ReplyDelete
  18. சூப்பருங்கோ...

    ReplyDelete
  19. //அரை மணி நேரம் பஸ்சிலே போனா என்ன ஊரு வரும்?//
    -- மெட்ராஸ் ன்னு கேட்காம திருச்சிராப்பள்ளின்னு கேட்கறாரு பாருங்க... அங்க நிக்கறாரு குப்பண்ணா...

    அருமையான இடுகைங்க...

    ReplyDelete
  20. டிபிக்கல் சேட்டை பதிவு :)

    ReplyDelete
  21. //அசப்பில் ரோடு இன்ஜினைப் போலிருந்த ஒரு புராதனமான வேன் வந்து நின்றது//

    ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பரு...

    ReplyDelete
  22. //"நமீதா மாதிரி இருப்பாங்களா?"

    "இல்லை, அதுலே வர்ற பிசாசு மாதிரி இருப்பாங்க!"//

    கிச்சு கிச்சு கிச்சு கிச்சு ஹா ஹா ஹா...

    ReplyDelete
  23. //என்று மாநாட்டுக்கு வந்த கட்சித்தொண்டனைப் போல, துண்டை காற்றில் சுழற்றியபடியே பின்னால் வந்து கொண்டிருந்தான்.//

    ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு....

    ReplyDelete
  24. அந்த குப்பண்ணா வேற யாருமில்லை.
    நீரேதான் ஒய்....

    ReplyDelete
  25. சொந்த எக்ஸ்பீரியண்ஸா

    ReplyDelete
  26. அருமையான நகைச்சுவை பதிவு.

    ReplyDelete
  27. >>>"ஜஸ்ட் அரைமணி நேரத்துலே வந்திடலாம். எங்க முதலாளி தினமும் வர்றாரே!"

    "எதுலே வர்றாரு?"

    "அவரு ஒரு ஹெலிகாப்டர் வச்சிருக்கிறாரு!"

    haa haa ஹா ஹா செம கலக்கல் அண்ணே..

    ReplyDelete
  28. //VELU.G said...

    ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா போட்டு தள்ளிட்டீங்க பாஸ்//

    ஐயையோ, யாரைப் போட்டுத் தள்ளுனேன்?

    //ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல சிரிக்க முடிஞ்சுது//

    ஹிஹி! அதைச் சொன்னீங்களா? மிக்க நன்றிங்க! :-))))

    ReplyDelete
  29. //கக்கு - மாணிக்கம் said...

    டி.வி. களில் இந்த ரியல் எஸ்டேட் டுபாக்கூர் கூட்டங்கள் செய்யும் விளம்பர டகால்டி வேலைகளை பாத்துட்டு நம்ம ஜனங்க அங்கெ போயி அடைக்கலமாகி விடறது தொடர்கதைதான்.//

    ஆமாம் நண்பரே! ஒரு டிவி விடாம எல்லாத்துலேயும் சகட்டுமேனிக்கு ரீல் ரீலா விடுறாய்ங்க!

    //சிட்டு பண்டு மோகம் போனதும் இப்போ தனி வீடு கட்டும் ஆசையில் இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் நம் ஜனங்கள்.நல்ல பதிவு.//

    சிட்டு பண்டில் எத்தனைவாட்டி கையைச் சுட்டுக்கிட்டாலும், திரும்பத் திரும்பப் போயி விழுறா மாதிரி, இந்த வலையிலேயும் போய் விழத்தானே செய்றாங்க? :-(

    மிக்க நன்றி!

    ReplyDelete
  30. //வை.கோபாலகிருஷ்ணன் said...

    விழுந்து விழுந்து சிரிச்சு வயித்தையெல்லாம் வலிக்குது.//

    அடடா, இதை நான் எதிர்பார்க்கலியே ஐயா! :-))

    //மிகவும் ரஸித்த வரிகள்:

    1) "ஜஸ்ட் அரைமணி நேரத்துலே வந்திடலாம். எங்க முதலாளி தினமும் வர்றாரே!"

    "எதுலே வர்றாரு?"

    "அவரு ஒரு ஹெலிகாப்டர் வச்சிருக்கிறாரு!"

    2)
    அது போகட்டும், அரை மணி நேரம் பஸ்சிலே போனா என்ன ஊரு வரும்?"

    "திருச்சிராப்பள்ளி!"//

    வருகைக்கும் மனம்நிறைந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வருகை தாருங்கள்! :-)

    ReplyDelete
  31. //எல் கே said...

    சேட்டை இந்த மாதிரி நெறைய விளம்பரம் வருது. சென்னையில் இருந்து மிக அருகில்னு போட்டு அவங்க போற்றுக இடம் மதுராந்தகம் அருகே//

    கார்த்தி, மதுராந்தகமா? இப்போ செங்கல்பட்டு வரைக்கும் போயாச்சுன்னில்லே பேசிக்கிறாய்ங்க? :-))

    மிக்க நன்றி!

    ReplyDelete
  32. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    நான் மனைவிகள்ன்னு படிச்சு தொலைஞ்சிட்டேன். ஏதாச்சும் பரிகாரம் உண்டா?//

    கல்யாணம் ஆனவர்னா பரிகாரத்தை உங்க வூட்டுக்காரம்மா சொல்லணும். ஆகலேன்னா, கல்யாணம் தான் பரிகாரமாம்! :-)

    //சரி அந்த சீரியல் நடிகைய குப்பண்ணா பார்த்தாரா இல்லியா?//

    அவருக்கு அதுக்கு முன்னாடியே நெஞ்சுவலி வந்திருச்சே நண்பா? :-))
    மிக்க நன்றி!

    ReplyDelete
  33. //வானம்பாடிகள் said...

    சேட்டை! தேவா கையில எப்படி சிக்காம போச்சி கானா:))செம.//

    அதுனாலே தான் மீள்பதிவாப் போட்டிருக்கிறேன் ஐயா. இப்பவாச்சும் கவனிச்சா சரி. இல்லாட்டா திரையுலகம் ஒரு நல்ல கவிஞரை இழந்திடும், அம்புட்டுத்தேன்! :-)
    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  34. //Chitra said...

    "வேறொண்ணுமில்லே சார், உங்களுக்கு லஞ்ச் கொண்டுவந்திருக்கோமில்லே? புளிசோறும் அவியலும்!"


    ....எலிபொறியில மாட்டிக்க போறதுக்கு symbolic shot! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//

    ஆஹா, சத்தியமா இதை மனசுலே வைச்சு எழுதலே; புதுசா ஒரு பரிமாணத்தைச் சொல்லிட்டீங்களே! :-)

    ..rightly said!//

    மிக்க நன்றி சகோதரி! :-)

    ReplyDelete
  35. //மக்களெல்லாம் மலிவைத்தேடி அலம்புறார்-பின்னாலே
    மாரடிச்சு நடுத்தெருவில் புலம்புறார்//

    உண்மை நீங்கள் சொல்வது.

    தொலைகாட்சியில் தினம் அந்த நகர் இந்த நகர் என்று நாளும் மனைகள் விறபனைக்கு விளம்பரம் பார்க்கும் போது மக்கள இந்த வார்த்தை ஜாலங்களில் மயங்காமல் இருப்பார்களா?

    ReplyDelete
  36. //தமிழ்வாசி - Prakash said...

    அண்ணே! ரொம்ப சேட்டை தானே உங்களுக்கு.//

    ஹிஹி, பெரிய சேட்டைக்காரங்களைப் பத்தி சின்ன சேட்டைக்காரன் எழுதுனதாச்சே...? :-)

    //இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு//

    அவசியம் வந்து படிக்கிறேன் நண்பரே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  37. //Philosophy Prabhakaran said...

    சூப்பர் சேட்டை... அந்த பஸ் டே மேட்டரை ஒரே வரியில முடிச்சிட்டீங்களே...//

    அதைத்தான் நீங்க போட்டு அக்குவேறே ஆணிவேறயா கிழிச்சிட்டீங்களே நண்பா? :-)
    சாது மிரண்டால் காடு கொள்ளாது-ன்னு நிரூபிச்ச இடுகையாச்சே அது?

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  38. //! சிவகுமார் ! said...

    அது என்ன தலைவா 'ரியல்' எஸ்டேட் அப்டின்னு பேரு வச்சிருக்காங்க??//

    இப்போ மைசூர் போண்டா-ன்னு பேரு வச்சா, அதுக்குள்ளே மைசூரா இருக்கும்? அது மாதிரித்தான்! :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  39. //ஓட்ட வட நாராயணன் said...

    யோவ் தலைப்ப படிச்சிட்டு, கிரெடிட் கார்ட் எடுத்துட்டு நேரா வந்தேன்! மேட்டர் வேற மாதிரி போகுது?//

    நம்ம கார்த்தி(எல்.கே) கொஞ்ச நாள் முன்னாடி "சேட்டை, இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது?"ன்னு கேட்டிருந்தாரு! சரியாத்தான் சொல்லியிருக்காரு போலிருக்கு! :-))

    //என்னோட ஏரியாவுக்கு கொஞ்சம் வர்றது!!//

    அவசியம் வர்றேன் நண்பரே! கொஞ்சம் ஆணி அதிகமாயிட்டதாலே நேரப்பற்றாக்குறை. தொடர்ந்து நீங்க வரணும். மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  40. //பட்டாபட்டி.... said...

    ஹா..ஹா..ஆனா கடைசியா பாருங்க..ரு 100-க்கு, மெட்ராஸ் இருந்து திருச்சி வரைக்கும் கொண்டுபோய் விட்டிருக்காருன்ணா ( அதுவும் சாப்பாடு போட்டு) ,அந்த முதலாளி, எம்புட்டு நல்லவரா இருக்கனும்?..//

    அண்ணே, இதுக்குத்தாண்ணே பட்டாபட்டியை நாங்கல்லாம் கொண்டாடுறோம். பாயிண்ட்டை கரெக்டா புடிச்சிட்டீங்க பார்த்தீங்களா...? :-))

    //அவரை எலெக்‌ஷன்ல நிற்கவையுங்க.. முதல்வர் ஆக்குவது நம் கடமை...ஹி..ஹி//

    முதல்லே கூட்டணியெல்லாம் தெளிவாகட்டுண்ணே! யார் யாரைத் தேர்தலில் நிறுத்தப்போறோமுன்னு பார்த்திட்டேயிருங்க! வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே! :-)

    ReplyDelete
  41. //ஆனந்தி.. said...

    ரொம்ப நகைச்சுவையுடன்...இந்த கால ஏமாற்று நிகழ்வுகளை சூசகமா சொல்லி இருக்கீங்க இந்த இடுகையில்...பதிவு பூராவும் சிரிப்பு தான்...welcome back :))))//

    இது மாதிரி ஆசாமிங்களைப் பார்த்தா கோபமா வருது. ஆனா, கோபமா எழுதி வாசிக்கிறவங்களையும் டென்ஷனாக்குறதை விட, நையாண்டி பெட்டர்-னு தோணிச்சு! :-)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  42. //வேடந்தாங்கல் - கருன் said...

    நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....நம்ம பக்கம் தொடர்ந்து வருவதில்லை ஏன் நண்பா?//

    நான் என்பக்கமே தொடர்ந்து வரமுடியாமப் போயிட்டிருக்கு நண்பா. பாருங்களேன், எப்போ போட்ட பின்னூட்டத்துக்கு எப்போ பதில் எழுதிட்டிருக்கேன்னு...! அவசியம் வருவேன் நண்பா. உங்களது தொடரும் ஆதரவுக்கு எனது நன்றிகள்! :-)

    ReplyDelete
  43. //கே.ஆர்.பி.செந்தில் said...

    சூப்பருங்கோ...//

    நன்றிங்கண்ணா....! :-))

    ReplyDelete
  44. //ஸ்வர்ணரேக்கா said...

    -- மெட்ராஸ் ன்னு கேட்காம திருச்சிராப்பள்ளின்னு கேட்கறாரு பாருங்க... அங்க நிக்கறாரு குப்பண்ணா...//

    ஹாஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    //அருமையான இடுகைங்க...//

    அடிக்கடி வாங்க! நன்றி! :-)

    ReplyDelete
  45. //சிநேகிதன் அக்பர் said...

    டிபிக்கல் சேட்டை பதிவு :)//

    மிக்க நன்றி அண்ணே! :-)

    ReplyDelete
  46. //MANO நாஞ்சில் மனோ said...

    //அசப்பில் ரோடு இன்ஜினைப் போலிருந்த ஒரு புராதனமான வேன் வந்து நின்றது//

    ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பரு...

    நன்றி! :-)

    //"நமீதா மாதிரி இருப்பாங்களா?"

    "இல்லை, அதுலே வர்ற பிசாசு மாதிரி இருப்பாங்க!"//

    கிச்சு கிச்சு கிச்சு கிச்சு ஹா ஹா ஹா...

    ரொம்ப நன்றி! :-))

    //என்று மாநாட்டுக்கு வந்த கட்சித்தொண்டனைப் போல, துண்டை காற்றில் சுழற்றியபடியே பின்னால் வந்து கொண்டிருந்தான்.//

    ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு....

    என்னைத் தள்ளாதவன்னு நினைச்சிட்டீங்களா? :-)))

    //அந்த குப்பண்ணா வேற யாருமில்லை. நீரேதான் ஒய்....//

    இதென்ன புதுப்புரளியா இருக்கு? நான் அவன் இல்லை! :-))

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. //Speed Master said...

    சொந்த எக்ஸ்பீரியண்ஸா//

    ஊஹும்! நம்ம நெலமைக்கு அந்தக் கனவெல்லாம்...ஊஹும்! :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  48. //ஆயிஷா said...

    அருமையான நகைச்சுவை பதிவு.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  49. //சி.பி.செந்தில்குமார் said...

    haa haa ஹா ஹா செம கலக்கல் அண்ணே..//

    வாங்க, மிக்க நன்றி தல...! :-))

    ReplyDelete
  50. //கோமதி அரசு said...

    உண்மை நீங்கள் சொல்வது.

    தொலைகாட்சியில் தினம் அந்த நகர் இந்த நகர் என்று நாளும் மனைகள் விறபனைக்கு விளம்பரம் பார்க்கும் போது மக்கள இந்த வார்த்தை ஜாலங்களில் மயங்காமல் இருப்பார்களா? //

    அதே! தொலைக்காட்சியிலும் செய்தித்தாள் விளம்பரங்களிலும் புளுகை அவிழ்த்து விடுகிறவர்களை நம்பி இன்னும் பலர் தொடர்ந்து ஏமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்காக அனுதாபப்படுவதா, அவர்கள் மீது எரிச்சலடைவதா புரியவில்லை!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! :-)

    ReplyDelete
  51. அரை மணி நேரம் பஸ்சிலே போனா என்ன ஊரு வரும்?"

    "திருச்சிராப்பள்ளி!"

    அட எங்க ஊரு.. பிளாட்ட வங்கச் சொல்லுங்க..

    ReplyDelete
  52. அட அரை மணியில் திருச்சி வந்திருமா? அங்கயும்தான் நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டற “ரியல்” எஸ்டேட்ஸ் இருக்குங்க சேட்டை ஐயா!

    ReplyDelete
  53. கிளாசிக் சேட்டை.......... அதிலும் க்ளைமாக்ஸ் சான்சே இல்ல....... !

    ReplyDelete
  54. நகைச்சுவையாச் சொல்லியிருந்தாலும் நடக்கிற நிஜத்தைத்தான் சொல்லியிருக்கீங்க.

    சிரிச்சு முடியலை :)

    ReplyDelete
  55. //ரிஷபன் said...

    "திருச்சிராப்பள்ளி!"

    அட எங்க ஊரு.. பிளாட்ட வங்கச் சொல்லுங்க..//

    ஹிஹி! அனேகமா வாங்கினாலும் வாங்கியிருப்பாரு குப்பண்ணா! :-)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  56. //வெங்கட் நாகராஜ் said...

    அட அரை மணியில் திருச்சி வந்திருமா? அங்கயும்தான் நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டற “ரியல்” எஸ்டேட்ஸ் இருக்குங்க சேட்டை ஐயா!//

    இருக்கட்டுமே!!!!

    அவங்க கும்பகோணம் பக்கம் போயிட்டதாகக் கேள்வி ஐயா! :-))

    மிக்க நன்றி!

    ReplyDelete
  57. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    கிளாசிக் சேட்டை.......... அதிலும் க்ளைமாக்ஸ் சான்சே இல்ல....... !//

    வாங்க பானா ராவன்னா! ரசனையோட எழுதறது மட்டுமில்லே; ரசிக்கிறதுலேயும் நீங்க க்ரேட் தான்! மிக்க நன்றி :-)

    ReplyDelete
  58. //சுந்தரா said...

    நகைச்சுவையாச் சொல்லியிருந்தாலும் நடக்கிற நிஜத்தைத்தான் சொல்லியிருக்கீங்க.//

    உண்மைதாங்க! தினமும் பத்து நோட்டீசாவது பார்க்குறேன்.

    //சிரிச்சு முடியலை :)//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!