வக்கீல் 'விவாகரத்து’ வெங்கடசாமியின் அலுவலகத்தில் 'நவரசநாயகி’ போண்டாஸ்ரீயும் அவரின் கணவர் பேயாண்டியும் உட்கார்ந்திருந்தனர்.
"நான் இவ கூட வாழ்ந்திருவேன்! ஆனா, இவ வளர்க்குற ஒன்பது நாயோட என்னாலே குப்பை கொட்டவே முடியாது வக்கீல் சார்!" என்று பேயாண்டி உறுதியாகக் கூறினார்.
"இவரு போனாப் போறாரு! முதல்லே டைவோர்ஸுக்கு ஏற்பாடு பண்ணுங்க சார்!" என்று அலட்சியமாகக் கூறினார் நவரசநாயகி.
"என்னம்மா இது? ஒன்பது நாய்க்குத் தீனி போட்டு வளக்குறீங்க? பத்தாவதா உங்க புருஷனுக்கும் கொஞ்சம் போட்டா அவரு பாட்டுக்கு வாலைக்குழைச்சிட்டு இருப்பாரில்லே?" என்று பஞ்சாயத்து பண்ண முயன்றார் வெங்கடசாமி.
"என்ன பேச்சுப் பேசறீங்க வக்கீல் சார்? இவரை நம்பி ஒரு அவுட்-டோர் ஷூட்டிங் கூட் போக முடியலீங்க! உங்களுக்குத் தெரியுமா? மொத்தம் பத்து நாய் இருந்திச்சு எங்க வீட்டுலே, அதிலே ஒரு நாய் எப்படி செத்துப்போச்சுத் தெரியுமா?" என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்டாள்.
"எப்படிங்க?" என்று கரிசனத்தோடு கேட்டார் விவாகரத்து வெங்கடசாமி.
"நாயை இவரு துணிக்குப் போடுற சோப்புப்பவுடரைப் போட்டுக் குளிப்பாட்டியிருக்காருங்க! கடைக்காரர் வாங்கும்போதே இவர்கிட்டே சொல்லியிருக்காரு, அந்த சோப்புப்பவுடரப் போட்டுக் குளிப்பாட்டினா நாய் செத்துப்போயிருமுன்னு...! இவர் கேட்காமப் பண்ணி ஒரு நாய் செத்தெ போச்சு!" என்று மூக்கைச் சிந்தினாள் போண்டாஸ்ரீ.
"ஏன் சார், மேடம் சொல்றது உண்மையா?" என்று கேட்டார் வெங்கடசாமி.
"அப்பட்டமான பொய் வக்கீல் சார்! அந்த நாய் சோப்புப்பவுடராலே சாகலே! அதை வாஷிங் மெஷின்லே போட்டதுலே தான் செத்துப்போச்சு!" என்று ரோஷமாகக் கூறினார்.
"ஆ! இது வேறயா...?" என்று வாய்ப்பிளந்தாள் போண்டாஸ்ரீ.
"என்ன சார் இது? யாராவது வாஷிங் மெஷினிலே நாயைப் போடுவாங்களா?" என்று அதிர்ச்சியோடு கேட்டார் வெங்கடசாமி.
"என்ன பண்ணுறது சார்? எங்க வீட்டு மெஷினிலே நாயைத் தான் போட முடியும்," என்று பெருமூச்சு விட்டார் பேயாண்டி.
"கேட்டீங்களா வக்கீல் சார்? அந்த நாய் எவ்வளவு புத்திசாலி நாய் தெரியுமா? தினமும் வாசலிலேருந்து பால்பாக்கெட், நியூஸ் பேப்பரெல்லாம் எடுத்திட்டு வந்து கொடுக்கும்," என்று கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள் போண்டாஸ்ரீ!
"அது எல்லா நாய்ங்களும் செய்யுறது தானே?" என்று கேட்டார் வெங்கடசாமி.
"சார், மத்த நாயெல்லாம் அந்தந்த வீட்டுக்கு வர்ற பேப்பரையும் பால்பாக்கெட்டையும் தானே எடுத்திட்டு வரும்? என்னோட நாய் அடுத்த வீடு, எதிர்த்த வீட்டுக்கு வர்ற பால்பாக்கெட், பேப்பரையுமே தூக்கிட்டு வந்திரும் சார்! ரொம்பப் பொறுப்பான நாய்!" என்று விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள் போண்டாஸ்ரீ.
வக்கீலின் அனுதாபத்தை போண்டாஸ்ரீ பெற்றுவிடப் போகிறாளே என்ற் ஆத்திரத்தில், பேயாண்டி பேசினார்.
"வக்கீல் சார்! அதுலே ஒரு நாய்க்கு வேறே இவ பேசறதுக்குக் கூட டிரைனிங் கொடுத்திட்டா சார்! ஒரு வாட்டி அதை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போறபோது, எதுத்தாப்புலே வந்த ஒருத்தர் 'என்ன, கழுதையைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் போறீங்களா?’ன்னு கேட்டாரு! நான் கோபமா, 'யோவ், இது கழுதையில்லை, நாய்!’னு சொன்னேன். உடனே இந்த நாயி,’எசமான், அவரு என் கிட்டேத் தானே கேட்டாரு, நீ ஏன் பதில் சொல்றே?’ன்னு கேட்குது சார்! எவ்வளவு அவமானமாயிருச்சு தெரியுமா?" என்று வினவிய போது அவரது தொண்டையைத் துக்கம் அடைத்தது.
"எதுக்கும்மா நாய்க்கெல்லாம் பேசறதுக்கு டிரைனிங் கொடுக்கறீங்க?" என்று வியப்போடு கேட்டார் விவாகரத்து வெங்கடசாமி.
"என்ன சார் பண்ணுறது, வீட்டுலே புத்திசாலித்தனமாப் பேச ஒரு நாயாவது வேண்டாமா?" என்று அழுகைக்கு நடுவே வினவினாள் போண்டாஸ்ரீ.
"வக்கீல் சார், நாய்க்கு பிஸ்கெட் போடுவாங்க, கறிபோடுவாங்கன்னு கேள்விப்பட்டிருப்பீங்க! இவ வளர்க்கிற நாய்க்கு சனிக்கிழமையான பிஸ்ஸா வேணுமாம்! அசந்தா அதுவே போன் பண்ணி வரவழைச்சிடுதுங்க!" என்று ஆதங்கப்பட்டார் பேயாண்டி.
"வாயில்லா ஜீவன் கிட்டே கொஞ்சம் அன்பு காட்டுறது தப்பா சார்?" என்று கேட்டார் போண்டாஸ்ரீ.
"அதுக்குன்னு இவ்வளவு அன்பா? இந்த உலகத்துலேயே ஃபேர் அண்ட் லவ்லி போட்டுக்கிறது எங்க வீட்டு நாயிங்க மட்டும் தான் சார்," என்று தேம்பத்தொடங்கினார் பேயாண்டி. "இதுலே கொடுமை என்ன தெரியுமா? 'நான் நாயிங்களோட வெளியே போறேன்; நீங்க வீட்டுக்குக் காவலா இருங்க,’ன்னு எங்கிட்டேயே சொல்லிட்டுப் போறா சார்!" என்று பொருமினார்.
"ஏம்மா பாவம் புருஷனைத் தனியா விட்டுட்டுப் போறீங்க?" என்று விசனத்தோடு விசாரித்தார் வெங்கடசாமி.
"ஏன், தனியா இருக்க பயமா? மத்த நேரங்களிலே எப்படியோ, இவரு வீட்டுலே தனியா இருந்தார்னா, வாசல்லே 'நாய் ஜாக்கிரதை,’ போர்டு மாட்டிட்டுத் தான் போவேன் தெரியுமா?" என்று பதிலடி கொடுத்தாள் போண்டாஸ்ரீ.
"வக்கீல் சார்! இந்த நாய்ங்களாலே என்னாலே வெளியே தலையைக் காட்ட முடியலே சார்! தனியாப் போகும்போது தெருநாய்ங்களெல்லாம் ’இவன்தாண்டா அந்த ஒன்பது நாய் வளர்க்குறவனு,’ன்னு என்னை ரவுண்டு கட்டித் துரத்துது சார்!" என்று வாய்விட்டு அழுதே விட்டார்.
"பொய் சொல்லுறாரு சார்! எங்க தெருவிலே இப்போ ஒரு நாய் கூட கிடையாது தெரியுமா?" என்று மேஜையைக் குத்திச் சொன்னார் போண்டாஸ்ரீ.
"எப்படியிருக்கும்? இந்த ஒன்பது நாய்க்கும் கிடைக்கிற ராஜமரியாதையைப் பார்த்து வாழ்க்கை வெறுத்துப்போயி, மொத்தத் தெருநாயும் அதுங்களே கார்ப்பரேஷன் ஆபீசுக்கு அட்ரஸ் கண்டுபிடிச்சுப் போய்ச் சேர்ந்திருச்சு சார்!" என்று விளக்கினார் பேயாண்டி.
"பேயாண்டின்னு பேரை வச்சுக்கிட்டு நாயைக் கண்டு பயப்படுறாரு பாருங்க!" என்று நக்கலடித்தார் போண்டாஸ்ரீ.
"இந்த நாய்ங்களாலே எனக்கு மட்டுமில்லீங்க, அக்கம்பக்கத்திலிருக்கிறவங்க எல்லாருக்கும் தொல்லைங்க! ஒரு நாள் அசந்து தூங்கிட்டிருக்கும்போது, அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு பக்கத்து வீட்டுக்காரர் போன் பண்ணி ’உங்க நாயுங்க ரொம்ப குரைக்குது; தூங்க முடியலே’ன்னு கம்ப்ளெயிண்ட் பண்ணினாருங்க!எவ்வளவு டென்சன் பாருங்க இதுங்களாலே?" என்று தானும் டென்சன் ஆனார் பேயாண்டி.
"க்கும், இவரு மட்டும் என்னவாம்?" என்று இடைமறித்தாள் நவரசநாயகி. "யாரோ ஒருத்தர் போன் பண்ணிக்கேட்டுட்டாருங்கிறதுக்காக, இவரும் தினமும் அர்த்தராத்திரிக்கு அலாரமெல்லாம் வச்சு, எழுந்திரிச்சு, எல்லாருக்கும் போன் பண்ணி, ’இன்னிக்கு எங்க நாய் குரைச்சுதா, எல்லாரும் நல்லாத் தூங்கிட்டுத்தானே இருக்கீங்க,’ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாரு! இவரோட தொல்லைக்கு நாயே மேலுன்னு எல்லாரும் செல்போனை சாந்தோம் பீச்சிலே போய் போட்டுட்டு வந்திட்டாங்க!" என்று பதிலடி கொடுத்தார் போண்டாஸ்ரீ.
"இவங்க சொல்றதுலேயும் ஒரு நாயம், அதாவது நியாயம் இருக்கே மிஸ்டர் பேயாண்டி?" என்று கேட்டார் வெங்கடசாமி.
"சார், என் அவஸ்தை உங்களுக்குத் தெரியாது! தினமும் காலையிலே எழுந்து ஒன்பது நாய்களையும் ’வாக்கிங்’ கூட்டிக்கிட்டுப் போகணுங்க! அதுவும், தனித்தனியா கூட்டிக்கிட்டுப் போகணும். காலையிலே ஆறு மணிக்கு ஆரம்பிச்சேன்னா சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் ’மார்னிங் வாக்கிங்’ போற ஒரே ஆளு நான் தானுங்க!" என்று குரல் தழுதழுக்கக் கூறினார் பேயாண்டி.
"எதுக்குத் தனித்தனியா கூட்டிக்கிட்டுப்போகணும்? எல்லா நாயையும் ஒரே சமயத்துலே கூட்டிக்கிட்டுப் போகலாமே?" வெங்கடசாமி விடுவதாக இல்லை!
"நீங்க வேறே! ஒரு நாய் இழுக்கிற இழுப்புக்கு என்னாலே ஓட முடியலே! ஒன்பது நாயும் இழுத்திட்டு ஓடுனா என்னாவுறது? அப்படியும் ஒருவாட்டி முயற்சி பண்ணினேனுங்க! மந்தவெளியிலேருந்து மாமண்டூர் வரைக்கும் இழுத்துட்டுப் போயிருச்சுங்க! அங்கேருந்து லாரி புடிச்சு மெட்ராஸ் வர்றதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆயிருச்சு! அதுக்கப்புறம் தான் இது சரிப்படாதுன்னு காருலே வாக்கிங் போக ஆரம்பிச்சேன்!" என்று பரிதாபமாகக் கூறினார் பேயாண்டி.
"மிஸ்டர் பேயாண்டி! குரைக்கிற நாய் கடிக்காதுன்னு எங்க ஊருலே பெரியவங்க சொல்லுவாங்க!" என்று சமாதானப்படுத்த முயன்றார் வெங்கடசாமி.
"அது உங்க ஊருப் பெரியவங்களுக்குத் தெரிஞ்சாப் போதுமா? எங்க வீட்டு நாய்ங்களுக்குத் தெரிய வேண்டாமா? என் உடம்பைப் பாருங்க சார்! எந்தெந்த நாய் என்னென்னிக்கு எங்கெங்கே கடிச்சிருக்குன்னு கஜினி சூர்யா மாதிரி உடம்பு முழுக்க அங்கங்கே பச்சை குத்தி வச்சிருக்கேன்! ஒன்பது நாய் ஷிஃப்டு போட்டு ஒரு மனிசனை மாத்தி மாத்திக் கடிச்சா என்னாகுறது?" என்று வெம்பினார் பேயாண்டி.
"அடடா! ஊசி போட்டீங்களா இல்லியா?" கொஞ்சம் அக்கறையும் நிறைய அச்சமுமாய் வெங்கடசாமி கேட்டார்.
"எத்தனை ஊசி போடுறது சார்? அடுத்த தெருவிலே இருக்கிற ஆஸ்பத்திரியிலே ஆயுள்சந்தா கட்டி வாரத்துக்கு நாலு நாள் போய் ஊசி போட்டிட்டிருக்கேன். ஒரு வாட்டி ஒன்பது நாயும் சேர்ந்தே கடிச்சிருச்சுங்க! ஒரு நாய்க்கு பதினாலு வீதம் ஒன்பது நாய்க்கு நூத்தி இருபத்தாறு ஊசி போட்டு, என் வயிறு ஜாங்கிரி மாதிரி ஆயிருச்சுங்க! இப்பெல்லாம் வாய்வழியா சாப்பிடவே வேண்டாம். ஸ்பூனாலே டைரக்டா வயித்துக்குள்ளேயே போட்டுக்கிறேன் தெரியுமா?"
"ஏன் மேடம்? இவ்வளவு வருஷமா நாய் வளர்க்கறீங்க? உங்களை எப்பவாவது நாய் கடிச்சிருக்கா?" என்று ஆர்வத்தால் கேட்டார் வெங்கடசாமி.
"ஐயோ, என்னோட நாய்ங்க ரொம்ப நல்லதுங்க! மனுசங்களைக் கடிக்கவே கடிக்காதுங்க சார்," என்று போண்டாஸ்ரீ சொல்லவும் பேயாண்டியின் முகம் பேயறைந்தது போலானது.
"வக்கீல் சார்! இவளைப் பத்தி சரியாப் புரிஞ்சிக்கணுமுன்னா, ஒரு வாட்டி இவ வளர்க்குற ஒன்பது நாயோட பெயரையும் சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்!" என்றார் பேயாண்டி.
"இவ்வளவு தானா? வரிசையா சொல்றேன் கேளுங்க, பெப்பர், டொமாட்டோ,பல்சர்,பைனா,கார்லீ,ஜிஞ்சி,மைசீ,நீமா,ஜீரா! கரெக்டா சொல்லிட்டேனா?" என்று ஒரே மூச்சில் ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறளையும் சொன்ன பெருமையோடு கேட்டார் போண்டாஸ்ரீ.
"இப்போ, எங்க அப்பா அம்மா பேரைச் சொல்லச் சொல்லுங்க!" என்றார் பேயாண்டி.
"அது...வந்து...அதாவது..இவங்க அம்மா பேரு வந்து..." என்று தடுமாறினார் போண்டாஸ்ரீ.
"பார்த்தீங்களா சார்? நாய்ங்களோட பேரு ஞாபகத்துலே இருக்கு! மனுசங்க பேரு மறந்து போச்சு!" என்றார் பேயாண்டி, வெற்றிப் பெருமிதத்துடன்.
"இது ஒரு பிரச்சினையா?" என்று கேட்டார் வெங்கடசாமி. "மேடம், நீங்க பெரிய நடிகை! உலகமே உங்களை நவரசநாயகின்னு சொல்லுது! பேசாம உங்க நாய்க்கு இவங்க சொந்தக்காரங்களோட பெயரை வச்சிட வேண்டியது தானே? பெயரையும் மறக்க மாட்டீங்க! அவருக்கும் சந்தோஷமாயிருக்குமே!" என்று ஆலோசனை தெரிவித்தார் வெங்கடசாமி.
"யோவ் வெங்கடசாமி!" பேயாண்டி இறைந்தார். "இவளா நவரசநாயகி? சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி ஓட்டல்லே வேலை பண்ணிட்டிருந்தாய்யா! இவ நாய்க்குப் பேரு வச்சிருக்காளே, அதோட அர்த்தம் என்னான்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க! மிளகு, தக்காளி,பருப்பு, பைனாப்பிள், பூண்டு,மைசூர், வேப்பம்பூ, ஜீரகம்! ஏதாவது புரியுதா? மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், பூண்டு ரசம், மைசூர் ரசம், வேப்பம்பூ ரசம், ஜீரக ரசம்! இப்படி ஒன்பது நாய்க்கும் ஒன்பது ரசத்தோட பேரை வச்சிருக்கிறதுனாலே தான் இவளை எல்லாரும் ’நவ-ரச-நாய்-கி,’ன்னு கூப்பிடுறாங்க தெரியுமா?" என்று குட்டை உடைத்தார்.

"முதல்லே ரெண்டு பேரும் எழுந்திரிச்சு வெளியே போங்க!" என்று இரைந்தார் விவாகரத்து வெங்கடசாமி. "இல்லாட்டி கார்ப்பரேஷனுக்கு போன் போட்டு உங்களைக் கூட்டிக்கிட்டுப் போக நாய்வண்டியை வரவழைச்சிருவேன்!"
பி.கு: இதற்கும் "கணவரை விவாகரத்துக்கு துரத்திய ஆஸ்கர் நடிகையின் நாய் காதல்!" என்ற செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹிஹி!

வயிறு குலுங்க சிரிக்க வைத்த பதிவு. இதை ஆங்கிலத்தில் அந்த Sandra Bullock-க்கு அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
'நான் நாயிங்களோட வெளியே போறேன்; நீங்க வீட்டுக்குக் காவலா இருங்க,’ன்னு எங்கிட்டேயே சொல்லிட்டுப் போறா சார்!" என்று பொருமினார்.
ReplyDeleteஹ ஹ ஹ சரவெடி சேட்டை :))))))))
ப்படி ஒன்பது நாய்க்கும் ஒன்பது ரசத்தோட பேரை வச்சிருக்கிறதுனாலே தான் இவளை எல்லாரும் ’நவ-ரச-நாய்-கி,’ன்னு கூப்பிடுறாங்க தெரியுமா?" என்று குட்டை உடைத்தார்.
ReplyDelete//
இது சூப்பர்..இப்படியும் அர்த்தம் இருக்கா சேட்டை..?
நவ ரசம் சூப்பர்:))
ReplyDeleteநகைச்சுவைன்னா நகைச்சுவை. இது அபாரமா இருக்கு.
ReplyDeleteரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
சேட்டை!
ReplyDeleteஒரு சின்ன வேண்டுகோள். ஆபிஸ் சமயத்துல இடுகை போட வேண்டாம்! எல்லாரும் என்ன ஒரு மாதிரியா பாக்குறாங்க! சும்மா கிண்டலுக்கு!
சிரிச்சி மாளல! ரொம்ப ரொம்ப சூப்பர்!
கலக்கிட்டீங்க சேட்டை!
பிரபாகர்...
நவ - ரச - நாய் - கி....
ReplyDeleteஹாஹாஹாஹாஹஹா...
இன்னும் நிப்பாட்ட முடியல...
செம காமெடி...நல்லா சிரிச்சேன்
ReplyDeleteஇவ நாய்க்குப் பேரு வச்சிருக்காளே, அதோட அர்த்தம் என்னான்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க! மிளகு, தக்காளி,பருப்பு, பைனாப்பிள், பூண்டு,மைசூர், வேப்பம்பூ, ஜீரகம்! ஏதாவது புரியுதா? மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம், பூண்டு ரசம், மைசூர் ரசம், வேப்பம்பூ ரசம், ஜீரக ரசம்! இப்படி ஒன்பது நாய்க்கும் ஒன்பது ரசத்தோட பேரை வச்சிருக்கிறதுனாலே தான் இவளை எல்லாரும் ’நவ-ரச-நாய்-கி,’ன்னு கூப்பிடுறாங்க தெரியுமா?" என்று குட்டை உடைத்தார்.
ReplyDelete.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....... சிரிப்பு ரசம் கொட்டியது.
ayoo mudiyala mudiyala nalla sirithen....
ReplyDeleteசூப்பர் :-))).
ReplyDeleteநவரசங்களுக்கான அர்த்தம் பிரமாதம்.
ReplyDeleteஒரு இடத்தில் போண்டாஸ்ரீங்கறதுக்கு பதிலா நஞ்சுண்டேச்வரி போட்டிருக்கீங்க பாருங்க. ஸ்லிப் ஆயிடுச்சா?
நவரசத்துல நகை - ரசம் உங்களுக்கு அநாயாசமா வருது சேட்டை... வலைச்சரத்தையும் கவனிச்சிக்கிட்டு இங்கயும் கலக்கறீங்க...
ReplyDeleteசிரிச்சி மாளலை.. :)))
ReplyDeleteசேட்டை....
ReplyDeleteசிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது...... சூப்பர்......
சேட்டை.. முடியலீங்க.. கலக்கிப்புட்டீங்க :)
ReplyDelete//நவ - ரச - நாய் - கி....//
ReplyDeleteஹி..ஹி.. தெரியாம போச்சே..
:) முடியல... :)
ReplyDeleteஎப்பிடித்தான் இவ்ளொ நகைச்சுவை உணர்வோட எழுதமுடியுதோ !பதிவை வேற நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கேன்.
ReplyDeleteகனஜோரா இருக்குங்க சேட்டை. தொடருங்க உங்க சேட்டையை.
ReplyDeleteநான் நினைச்சத எல்லோரும் சொல்லீட்டாங்க!!
ReplyDeleteகலக்கல் சேட்டை.
ஹைய்யோ:-)))))))))))
ReplyDeleteநல்லாத்தான் 'உக்காந்து' யோசிச்சு இருக்கீங்க:-))))
இப்பத்தான் இடுகையின் சுட்டியை கோபாலுக்கு அனுப்புனேன். அவரும் மனம்விட்டுச் சிரிக்கட்டும்( காலையில் திட்டி அனுப்புனதை நினைச்சாப் பாவமா இருக்கு)
தல உங்கலுக்கு கல்யானம் ஆயிடுச்சா
ReplyDeleteகுச்சிமி பாடியால வந்த வயித்து வலியே இன்னம் தீரல,
ReplyDeleteஇதுவேறையா சேட்ட?
போட்டோ ஷாப் வேற தெரிஞ்சி வெச்சிக்கிட்டு இந்த போடு போட்டா
தாங்க முடியல சாமி. கொஞ்சமானும் கேப் வேணாமா?
சிரிச்சி தீரலை. நவ-ரச-நாய்கிக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா :-)))))
ReplyDeleteஅண்ணாச்சி Sandra bullock பத்தி நான் வேற என்னவோ இல்ல கேள்வி பட்டேன்.
ReplyDeleteஅவங்க வீட்டுகாரர் வேற யாரோடவோ இல்ல தொடர்பு வச்சிருக்கார், அதனால தான் divorce அப்படின்னு , எது பொய் எது உண்மைன்னு தெரியலைங்கோ.
ஒரே நேரத்துல ரெண்டு இன்னிங்க்ஸ். கலக்குறீங்க சேட்டை.
ReplyDeleteநகைச்சுவை அருமை.
ஹா ஹா ஹா.. ரொம்ப சூப்பர்... நவரச நாயகி... பேர் ஏன் வந்ததுன்னு கடைசியில சொன்னிங்களே... அது தான் டாப்பு.. :D :D
ReplyDeleteசேட்டையின் நகைச்சுவையில் வயிறு வலிக்குது.
ReplyDeleteஎன்னா சேடடை பண்ணுறாங்கப்பா..
//அதுக்குன்னு இவ்வளவு அன்பா? இந்த உலகத்துலேயே ஃபேர் அண்ட் லவ்லி போட்டுக்கிறது எங்க வீட்டு நாயிங்க மட்டும் தான் சார்," ////
ReplyDeleteஏன் பியுட்டி பார்லர் போறதில்லையா ????
யப்பா சிப்பு இன்னும் நிக்கல
ரூம் போட்டு யோசிப்பீங்களோ..
ReplyDeleteயப்பா முடியலடா சாமி..
///////"அதுக்குன்னு இவ்வளவு அன்பா? இந்த உலகத்துலேயே ஃபேர் அண்ட் லவ்லி போட்டுக்கிறது எங்க வீட்டு நாயிங்க மட்டும் தான் சார்," என்று தேம்பத்தொடங்கினார் பேயாண்டி. "இதுலே கொடுமை என்ன தெரியுமா? 'நான் நாயிங்களோட வெளியே போறேன்; நீங்க வீட்டுக்குக் காவலா இருங்க,’ன்னு எங்கிட்டேயே சொல்லிட்டுப் போறா சார்!" என்று பொருமினார்.//////////
ReplyDeleteஅய்யா காவக்காரரே என்ன வீட்டில் யாரும் இல்லையா ? அத ஏன் கேக்குறீங்க !
எல்லா நான்கு கால் நாய்களையும் கூட்டிக்கொண்டு ரெண்டு கால் நாயும் வெளியில போயிருக்கு .
அட... செம கலாய்ப்புதான் போங்க.... யப்பா முடியலைங்க....
ReplyDeleteமுடியல சார் முடியல... சிரிச்சு சிரிச்சு முடியல..அதுலயும் அந்த pizza & Fair and lovely ... ஹா ஹா ஹா... எப்படிங்க இப்படி எல்லாம்... கடைசீல ரசம் மேட்டர் சூப்பர் பஞ்ச்.... நாய் கட்டி யோசிபீங்களோ
ReplyDeleteஅற்புதம்.....வேறென்ன சொல்ல?
ReplyDeleteசூப்பர் வேட்டை.
வெங்கட் நாகராஜ் said....
ReplyDelete//வயிறு குலுங்க சிரிக்க வைத்த பதிவு. இதை ஆங்கிலத்தில் அந்த Sandra Bullock-க்கு அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும்.//
அனுப்பலாம் தான்! ஆனால், ரசத்துக்கு ஆங்கிலத்தில் என்ன? அவர் புரிந்து கொள்வாரா? :-))
மிக்க நன்றி!!
பட்டாபட்டி said....
//இது சூப்பர்..இப்படியும் அர்த்தம் இருக்கா சேட்டை..?//
எல்லாம் நாமா உட்கார்ந்து யோசிச்சுக் கண்டுபிடிக்கிறது தான்! மிக்க நன்றி! :-)
அஷீதா said....
//ஹ ஹ ஹ சரவெடி சேட்டை :))))))))//
மிக்க நன்றி! :-)
வானம்பாடிகள் said....
//நவ ரசம் சூப்பர்:))//
மிக்க நன்றி ஐயா! :-)
KALYANARAMAN RAGHAVAN said....
//நகைச்சுவைன்னா நகைச்சுவை. இது அபாரமா இருக்கு.//
மிக்க நன்றி! :-)
பிரபாகர் said....
ReplyDelete//ஒரு சின்ன வேண்டுகோள். ஆபிஸ் சமயத்துல இடுகை போட வேண்டாம்! எல்லாரும் என்ன ஒரு மாதிரியா பாக்குறாங்க! சும்மா கிண்டலுக்கு!//
ஆஹா! அவ்வளவு டேஞ்சராவா எழுதியிருக்கேன்? ஹிஹி!
//சிரிச்சி மாளல! ரொம்ப ரொம்ப சூப்பர்!கலக்கிட்டீங்க சேட்டை!//
மிக்க நன்றி!
அகல்விளக்கு said....
//ஹாஹாஹாஹாஹஹா-இன்னும் நிப்பாட்ட முடியல...//
மிக்க நன்றி! :-))
பருப்பு The Great said....
//செம காமெடி...நல்லா சிரிச்சேன்//
மெய்யாலுமா? :-)) மிக்க நன்றி!!
Chitra said....
//.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....... சிரிப்பு ரசம் கொட்டியது.//
கொட்டிருச்சா? சூடா இருந்திருந்து காலில் பட்டிருந்தா ஆபத்தாச்சே? :-)
மிக்க நன்றி!
Mrs.Menagasathia said....
//ayoo mudiyala mudiyala nalla sirithen....//
மிக்க நன்றி! :-))
இராமசாமி கண்ணன் said....
//சூப்பர் :-))).//
மிக்க நன்றி! :-))
மஞ்சூர் ராசா said....
//நவரசங்களுக்கான அர்த்தம் பிரமாதம்.//
ஹிஹி! மிக்க நன்றி அண்ணே!
//ஒரு இடத்தில் போண்டாஸ்ரீங்கறதுக்கு பதிலா நஞ்சுண்டேச்வரி போட்டிருக்கீங்க பாருங்க. ஸ்லிப் ஆயிடுச்சா?//
ஆஹா, கவனிக்காம விட்டுட்டேனே? சரி பண்ணிடறேன். மீண்டும் ஒரு நன்றி! :-)
ஸ்ரீராம் said....
//நவரசத்துல நகை - ரசம் உங்களுக்கு அநாயாசமா வருது சேட்டை... வலைச்சரத்தையும் கவனிச்சிக்கிட்டு இங்கயும் கலக்கறீங்க...//
மிக்க நன்றி ஸ்ரீராம்! இரண்டு இடுகையாவது இங்கே போடணுமுன்னு நினைச்சேன்! பரவாயில்லை! :-))
முகிலன் said....
//சிரிச்சி மாளலை.. :)))//
மிக்க நன்றி! :-))
Sangkavi said....
//சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது...... சூப்பர்......//
மிக்க நன்றி!
ச.செந்தில்வேலன் said....
//சேட்டை.. முடியலீங்க.. கலக்கிப்புட்டீங்க :)//
மிக்க நன்றி! :-))
ஜெய்லானி said....
//ஹி..ஹி.. தெரியாம போச்சே..//
தெரிஞ்சுக்கிட்டீங்கல்லே இப்போ? மிக்க நன்றி! :-))
ராதை said....
//:) முடியல... :)//
மிக்க நன்றி! :-))
ஹேமா said....
ReplyDelete//எப்பிடித்தான் இவ்ளொ நகைச்சுவை உணர்வோட எழுதமுடியுதோ!//
எல்லாம் ஒரு ஃபுளோவிலே வர்றது தானுங்க!
//பதிவை வேற நண்பர்களுக்கும் அனுப்பியிருக்கேன்.//
டபுள் நன்றிங்க! :-))
மசக்கவுண்டன் said....
//கனஜோரா இருக்குங்க சேட்டை. தொடருங்க உங்க சேட்டையை.//
ஆஹா! ரொம்ப ரொம்ப நன்றி கவுண்டரே! :-)
சைவகொத்துப்பரோட்டா said....
//நான் நினைச்சத எல்லோரும் சொல்லீட்டாங்க!!
கலக்கல் சேட்டை.//
Great People Think Alike-னு ஒரு பழமொழி சொல்வாங்களே!
மிக்க நன்றி! :-)
துளசி கோபால் said....
//ஹைய்யோ:-)))))))))))
நல்லாத்தான் 'உக்காந்து' யோசிச்சு இருக்கீங்க:-))))
இப்பத்தான் இடுகையின் சுட்டியை கோபாலுக்கு அனுப்புனேன். அவரும் மனம்விட்டுச் சிரிக்கட்டும்//
ஆஹா! இது வேறயா? :-)) நடக்கட்டும் நடக்கட்டும்!!
( காலையில் திட்டி அனுப்புனதை நினைச்சாப் பாவமா இருக்கு)
இதைப்படிக்கப் போறாரேன்னு பாவமா இல்லியா? :-))))
மிக்க நன்றி!
jaisankar jaganathan said....
//தல உங்கலுக்கு கல்யானம் ஆயிடுச்சா//
ஏன் சாமீ, அதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கோ? :-(((
கக்கு - மாணிக்கம் said....
//குச்சிமி பாடியால வந்த வயித்து வலியே இன்னம் தீரல,இதுவேறையா சேட்ட?//
அடடா, இப்போ எப்படியிருக்கு வயித்துவலி? :-))
//போட்டோ ஷாப் வேற தெரிஞ்சி வெச்சிக்கிட்டு இந்த போடு போட்டா தாங்க முடியல சாமி. கொஞ்சமானும் கேப் வேணாமா?//
இது போட்டோ ஷாப் இல்லே! cartoonist-னு ஒரு freeware. !நெட்டுலேருந்து இலவசமா download பண்ணி நீங்களும் புகுந்து விளையாடுங்க! மிக்க நன்றி!
அமைதிச்சாரல் said....
//சிரிச்சி தீரலை. நவ-ரச-நாய்கிக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா :-)))))//
முகுந்த் அம்மா said....
//அண்ணாச்சி Sandra bullock பத்தி நான் வேற என்னவோ இல்ல கேள்வி பட்டேன்.அவங்க வீட்டுகாரர் வேற யாரோடவோ இல்ல தொடர்பு வச்சிருக்கார், அதனால தான் divorce அப்படின்னு , எது பொய் எது உண்மைன்னு தெரியலைங்கோ.//
அப்படீங்களா? முன்னாடியே தெரிஞ்சிருந்தா அதையும் இழுத்து கூட ரெண்டு மொக்கை போட்டிருப்பேனே! வடைபோச்சே! :-(
மிக்க நன்றி! :-)))
அக்பர் said....
//ஒரே நேரத்துல ரெண்டு இன்னிங்க்ஸ். கலக்குறீங்க சேட்டை.நகைச்சுவை அருமை.//
இது நம்ம ஏரியாவாச்சே! சும்மா விட்டிர முடியுமா? :-))
மிக்க நன்றி! :-))
Ananthi said....
//ஹா ஹா ஹா.. ரொம்ப சூப்பர்... நவரச நாயகி... பேர் ஏன் வந்ததுன்னு கடைசியில சொன்னிங்களே... அது தான் டாப்பு.. :D :D//
அந்த முடிச்சை முதலிலேயே முடிவு பண்ணிட்டு அப்புறம் தான் மத்ததையெல்லாம் தாளிச்சேன். :-))
மிக்க நன்றி!
அன்புடன் மலிக்கா said....
ReplyDelete//சேட்டையின் நகைச்சுவையில் வயிறு வலிக்குது.//
அடடா, எல்லாரும் இதே புகார் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களே! :-))
//என்னா சேடடை பண்ணுறாங்கப்பா..//
ஹிஹி! மிக்க நன்றி! :-)
மங்குனி அமைச்சர் said....
//ஏன் பியுட்டி பார்லர் போறதில்லையா ????//
இப்போ வந்து கேட்கறீங்களா? சரிதான்! :-)))
//யப்பா சிப்பு இன்னும் நிக்கல//
மிக்க நன்றி அண்ணே! :-)
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said....
//அய்யா காவக்காரரே என்ன வீட்டில் யாரும் இல்லையா ? அத ஏன் கேக்குறீங்க !எல்லா நான்கு கால் நாய்களையும் கூட்டிக்கொண்டு ரெண்டு கால் நாயும் வெளியில போயிருக்கு .//
ஐயையோ, இது வில்லங்கமான ஜோக்காட்டுல்லா இருக்கு? :-))))
மிக்க நன்றி! :-)
க.பாலாசி said....
//அட... செம கலாய்ப்புதான் போங்க.... யப்பா முடியலைங்க....//
ஹிஹி! மிக்க நன்றி! :-))
அப்பாவி தங்கமணி said....
//முடியல சார் முடியல... சிரிச்சு சிரிச்சு முடியல..அதுலயும் அந்த pizza & Fair and lovely ... ஹா ஹா ஹா... எப்படிங்க இப்படி எல்லாம்... கடைசீல ரசம் மேட்டர் சூப்பர் பஞ்ச்.... நாய் கட்டி யோசிபீங்களோ//
எல்லாம் அப்படியே ஒரு ஃபுளோவிலே வர்றது தான். இதையே இன்னும் எத்தனை நாள் சொல்லப்போறேனோ? :-(
மிக்க நன்றிங்க! :-)))))
பெயர் சொல்ல விருப்பமில்லை said....
//அற்புதம்.....வேறென்ன சொல்ல?//
மிக்க நன்றி!!!
அன்பின் சேட்டை
ReplyDeleteகலக்கல் - எப்படிப்பா எழுதுறே இவ்வளவு - கொடுத்த வச்சவன்யா நீ - திறமை உழைப்பு - நகைச்சுவை நாயகன் - வாழ்க வளமுடன்
’எசமான், அவரு என் கிட்டேத் தானே கேட்டாரு, நீ ஏன் பதில் சொல்றே
ReplyDeleteஎசமான்னு கூப்பிடும் அளவு மரியாதை வச்சிருக்கே அதுக்கே பாராட்டணும்
சிரிச்சி மாளல! ரொம்ப ரொம்ப சூப்பர்!கலக்கிட்டீங்க சேட்டை
ReplyDeleteking in சேட்டை....... superb
//அவரது தொண்டையைத் துக்கம் அடைத்தது//
is this any kind of tamil grammer.