Sunday, April 11, 2010

தப்பித்தான் தமிழன்!

"அடேய் சுரேந்திரா! வைத்தி!! விஷயம் தெரியுமா?"

கையில் செய்தித்தாளுடன் அறைக்குள் உற்சாகமிகுதியில் கூவியபடி நுழைந்தேன்.

"என்னடா ஆச்சு? ஸ்ரேயா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா?" வைத்தி நமுட்டுச்சிரிப்போடு கூறினான்.

"நமக்கு நல்ல காலம் பொறந்திருச்சிடா!" என்று உற்சாகமாகக் கூவினேன்.

"அப்படீன்னா, வேறே யாரையோ கல்யாணம் பண்ணிக்கப்போறாளா?" என்று நக்கலாகக் கேட்டான் சுரேந்திரன்.

"டேய் சுரேன்! என்னைக் கடுப்பேத்தினே, அடுத்த குருவாயூர் எக்ஸ்பிரஸிலே உன்னை ஏத்தி கொல்லத்துக்கே அனுப்பிடுவேன். தெரியுமா? எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்."

"அப்படியென்னடா தலைபோற விஷயம்?" என்று ஆர்வத்தோடு கேட்டான் சுரேந்திரன்.

"தலைபோற விஷயமில்லேடா! தலை தப்பிக்கிற விஷயம்!" என்றேன் நான்.

"புரியும்படியா பேசேண்டா! சே, இவனை விண்ணைத்தாண்டி வருவாயாவுக்குக் கூட்டிக்கிட்டு போனது பெரிய தப்பாப் போயிருச்சே!" என்று சலித்துக்கொண்டான் வைத்தி.

"அதுக்கு முன்னாலே நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க! நீங்க யாரு?"

வைத்தியும் சுரேனும் ஒருவரையொருவர் ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு, என்னை ஏற இறங்கப் பார்த்தனர்.

"டேய்! ஸ்மெல் கூட வரலியே? என்ன சாப்பிட்டே? ஜின்னா?" சுரேன் துணிவை வரவழைத்தபடி கேட்டான்.

"கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு! நீங்க யாரு? சரி, புரியும்படியாவே கேட்கிறேன். நான் தமிழன். நீங்க யாரு?" என்று அடுத்த கொக்கியைப் போட்டேன்.

"நான் இந்தியன்," என்றான் வைத்தி.

உடனே நான் என் கையிலிருந்த செய்தித்தாளைப் பிரித்துப்படித்தேன். பிறகு வைத்தியைப் பார்த்து சிரித்தேன்.

"அப்படீன்னா உன் தலையிலே 34,231 ரூபாய்!" என்றேன். "சுரேன், நீ சொல்லுடா. நீ யாரு?"

"நான் மலையாளி!" என்றான் சுரேன்.

"இரு, பார்த்திட்டு சொல்றேன்," என்று மீண்டும் செய்தித்தாளைப் பார்த்தேன். "ஐயோ சுரேன்! உன் தலையிலே 23,991 ரூபாய்!"

"என்னடா பேத்தறே? ஒண்ணுமே புரியலியே!" என்று பொறுமையிழந்தான் வைத்தி.

"சொல்றேன் கேளு! இன்னிக்கு நம்ம நிதியமைச்சர் அன்பழகன் சட்டசபையிலே ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறாரு. அதன் படி ஒவ்வொரு இந்தியனோட தலையிலேயும் 34,231 ரூபாய் கடனிருக்கு! ஒவ்வொரு கேரளாவாசியோட தலையிலேயும் 23,991 ரூபாய் கடனிருக்கு! அதாவது வைத்தியோட கடன் 34,231 ரூபாய்! சுரேனோட கடன் 23,991 ரூபாய்!"

"சரி, அதுலே உனக்கு ஏன் இவ்வளவு சந்தோஷம்?" என்று குழம்பினான் சுரேந்திரன்.

"இந்தியாவிலேயே தமிழன் ஒருத்தனுக்குத் தான் கடன் குறைச்சல்! ஒவ்வொரு தமிழன் தலையிலேயும் தலா 14,353 ரூபாய் கடன் தானிருக்கு! புரிஞ்சுதா, என்னை விட உங்க ரெண்டு பேருக்கும் தான் கடன் அதிகம்?"

"டேய் என்னையும் தமிழனா சேர்த்துக்கோடா!" என்று தாவாங்கட்டையைப் பிடித்துக் கெஞ்சாதகுறையாகக் கேட்டான் சுரேன். "என் வண்டி தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன். நான் சென்னைவாசிகளை விடவும் நல்லா தமிழ் பேசுவேன்; படிப்பேன். கொஞ்சம் எழுதவும் செய்வேன். உங்க கூட சேர்ந்து சேர்ந்து தமிழ் சினிமா தாண்டா பார்க்கிறேன். பாவி, "பழசிராஜாவு"க்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு "கந்தசாமி"க்குக் கூட்டிக்கிட்டுப் போனியே? இந்த நிமிஷம் வரைக்கும் ஏதாவது சொல்லியிருப்பேனா? நான் உங்களுக்காகக் குழல்புட்டு சாப்பிடறதையே நிறுத்திட்டேன் தெரியுமா? டேய் டேய் ப்ளீஸ்! என்னையும் தமிழனிலே சேர்த்துக்கோடா," என்று தெருவில் கிரிக்கெட் ஆடுகிற பொடுசுகளிடம் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளக் கெஞ்சுகிற பெரிசு போல கெஞ்சினான் சுரேன்.

"ஓ.கே! ஓ.கே!" என்று பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்ட நான் வைத்தியைப் பார்த்து,"என்னடா, இப்பவும் நீ இந்தியன் தானா? அல்லது தமிழன் மட்டுமா?" என்று கேட்டேன்.

"ஹி..ஹி! நான் சும்மா லுல்லுலாயிக்காக இந்தியன்னு சொன்னேண்டா! நான் மறத்தமிழன்னு உனக்கே தெரியாதா? எத்தனை படத்தை முதல்நாள், முதல் ஷோ பார்க்கப்போயி சட்டை கிழிஞ்சு வந்திருக்கேன்? ரூமுலே இருந்தா ஒரு சீரியல் விடாமப் பார்க்கிறேன். ஈ.வி.சரோஜாவிலேருந்து இலியானா வரைக்கும் இருக்கிற எல்லா நடிகைகள் பத்தின கிசுகிசுவும் எனக்கு அத்துப்படி! எந்த நடிகை யாரை எந்த வருஷம் கல்யாணம் பண்ணினாங்க, எப்போ டைவோர்ஸ் பண்ணினாங்க, இப்போ யாரு யாரை லவ் பண்ணிட்டிருக்காங்கன்னு மொத்த விபரத்தையும் மனப்பாடமா வச்சிருக்கேன். எல்லாப் பாராட்டு விழாவையும் டிவியிலே பார்க்கிறேன். இதுக்கு மேலே நான் தமிழன்னு நிரூபிக்கணுமா என்ன?" என்று ஆதாரபூர்வமாக தான் தமிழன் என்பதற்கான அத்தாட்சிகளை அடுக்கிக்கொண்டே போனான் வைத்தி.

"குட்! இப்போ நாம மூணு பேருமே தமிழனுங்க! நம்ம மூணு பேருக்கும் தலா 14,353 ரூபாய் கடனிருக்கு! சரியா?"

"என்ன பண்ணலாம்கிறே? தமிழன் படத்துலே விஜய் பண்ணுறா மாதிரி நம்ம பங்கை அரசாங்கத்துக்கு அனுப்பிடலாம்கிறியா?" என்று மீண்டும் சிரித்தான் வைத்தி.

"டேய், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே.....," என்று திருக்குறள் சொல்லத்தொடங்கியவன் மறந்து போய் பாதியிலேயே நிறுத்த, "நிற்க அதற்குத் தக," என்று முடித்தான் சுரேன்.

"டேய், என்னதான் தமிழன்னாலும் டி.வி.க்காரங்க மாதிரி தமிழைக் கொலைபண்ணக்கூடாது. விஷயத்தைச் சொல்லு!" என்று சீரியசானான் வைத்தி.

"சொல்றேன் கேளு!" என்ற நான் என் கையிலிருந்த ஒரு கவரை வைத்தியிடம் நீட்டினேன். "இந்தா வைத்தி! ஒரு நண்பன் என்ற முறையிலே உன் கடனைத் தீர்க்க வேண்டியது என்னோட கடமை! வச்சுக்கோ!"

"என்னடா கூத்து இது?" என்று திருதிருவென்று விழித்தான் வைத்தி.

"இதுலே 14,353 ரூபாய்க்கு செக் இருக்கு! இதை வச்சு உன்னோட கடனை அடைச்சுக்கோ!" என்றேன் நான்.

"எப்படி? யாருக்குக் கொடுக்கணும்?" என்று கேட்டான் வைத்தி.

"இதோ சுரேன்! அவனுக்குக் கொடுத்திரு! உன் கடனும் முடிஞ்சது; அவனும் அவன் கடனை அடைச்சுக்குவான்!" என்றேன் நான்.

வைத்தியிடமிருந்து கவரை வாங்கிய சுரேன், முட்டைக்கோசை முழுசாக விழுங்கியவனைப் போல மலங்க மலங்க விழித்தான்.

"இதை நான் யாரு கிட்டேடா கொடுக்கணும்?" என்று பரிதாபமாகக் கேட்டான்.

"என் கிட்டே கொடுத்திடு!" என்று சிரித்தேன் நான். "அவ்வளவு தான்! நம்ம மூணு பேரும் இனிமேல் கடனாளி இல்லை! தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை செஞ்சாச்சு!"

"ஒரு நிமிஷம்! நான் வண்டி வாங்குறதுக்காக லோன் வாங்கியிருந்தேனே, அதை இனிமே கட்ட வேண்டாமா?" என்று கேட்டான் சுரேந்திரன்.

"எவ்வளவு லோன் இன்னும் பாக்கியிருக்கு?"

"இன்னும் இருபதாயிரம் பாக்கியிருக்கு!"

"எந்த பாங்குலே வாங்குனே?"

"இந்தியன் பாங்குலே!"

"அப்படீன்னா நாளைக்கே பாங்குக்குப் போயி பாங்க் மேனேஜர் கிட்டேயிருந்து மீதி பதினாலாயிரம் சொச்சம் ரூபாயை வசூல் பண்ணிட்டு வந்திடு!" என்றேன் நான்.

"என்னது? ஏன்?? ஒண்ணும் புரியலியே!" சுரேந்திரன் குழம்பினான்.

"அடேய்! அது இந்தியன் பேங்க்! அதுனாலே அவங்க இந்தியாவுக்குப் பட்டிருக்கிற கடன் 34,231 ரூபாய்! நீ கட்ட வேண்டியது இருபதாயிரம் லோன்! மீதி பதினாலாயிரம் ரூபாயை உனக்கு அவங்கத் திருப்பித் தரணுமா வேண்டாமா?"

"அட ஆமாண்டா!"

எங்கள் மூவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. இன்றோடு கடனாளியென்ற பழியிலிருந்து தப்பித்ததோடு நாளைக்கு பதினாலாயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சி வேறு!

நீங்களும் நிதியமைச்சர் அன்பழகனின் விபரமான அறிக்கையை இங்கே
போய்ப் படித்து நிம்மதியடைவதோடு, அவரவர் கடன்களை அடைக்கிற வழியைப் பாருங்கள்.

பி.கு: என்ன சேட்டை? எதுக்கு இப்படியொரு பதிவுன்னு கேட்குறவங்களுக்கு.....! அந்த அறிக்கையை வச்சுக்கிட்டு நமக்கு சல்லிக்காசுக்குப் புரயோஜனமில்லை. அட் லீஸ்ட், ஒரு பதிவுக்காகவாவது பயன்படட்டுமே? சரிதானே???

43 comments:

  1. ungalukku purinjatha. avar enna solrarnu sathiyama puriyala . atheppadi oovvoru statekum kadan marum

    ReplyDelete
  2. உண்மையில் இந்த அந்த அறிக்கையில் கிடைத்த லாபம் நண்பா!

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!...

    பிரபாகர்...

    ReplyDelete
  3. :) அந்த கவரை ஒரு ரவுண்டு எங்க ஊருக்கும் அனுப்புங்க. எங்க எல்லார் கடனையும் அடைச்சுட்டு திருப்பி கொடுத்திடுறோம்

    ReplyDelete
  4. அய்ய சாமி இங்க சென்னையில அடிக்கிற வெயிலு கொடுமதான் !!

    ReplyDelete
  5. இதோ நானும் கிளம்பிட்டேன் பேங்குக்கு
    என் பங்கை வசூல் பண்ண :))

    ReplyDelete
  6. //என்ன சேட்டை? எதுக்கு இப்படியொரு பதிவுன்னு கேட்குறவங்களுக்கு.....! அந்த அறிக்கையை வச்சுக்கிட்டு நமக்கு சல்லிக்காசுக்குப் புரயோஜனமில்லை. அட் லீஸ்ட், ஒரு பதிவுக்காகவாவது பயன்படட்டுமே? சரிதானே???//

    சேட்டை ஜாஸ்தி :)

    அப்படியே அந்த கவரை இங்கு அனுப்பிவைங்க எங்க கடனையும் தீர்த்துக்கிறோம்.

    ReplyDelete
  7. இப்போதைக்கு "அறிக்கை" என்றாலே ஏமாற்றுவேலைதான்..

    ReplyDelete
  8. கஷ்டம் தீர வழி இதுதானா..

    ReplyDelete
  9. ஐயா, நாதான் யாருகிட்டயும் கடன் வாங்கலயே. பின்ன எவன் என் பேர சொல்லி கடன் வாங்கியது. கூட்ல பஞ்சாயத்த!! எடுல அறிவாள !!

    ReplyDelete
  10. சேட்டை இந்த அறிக்கைய யாரும் படிச்சிறுக்க மாட்டாங்க....

    அறிக்கை அறிக்கையாவே இருக்கட்டும்....

    ReplyDelete
  11. ////என்ன சேட்டை? எதுக்கு இப்படியொரு பதிவுன்னு கேட்குறவங்களுக்கு.....! அந்த அறிக்கையை வச்சுக்கிட்டு நமக்கு சல்லிக்காசுக்குப் புரயோஜனமில்லை. அட் லீஸ்ட், ஒரு பதிவுக்காகவாவது பயன்படட்டுமே? சரிதானே???//
    //

    என்ன அப்படி சொல்லிபுட்ட,சேட்டை, இந்த அறிக்கையால, ஒரு பதிவு, இப்போதைக்கு பத்து பின்னூட்டம் சேர்ந்திடுச்சே! எப்புடீ?

    ReplyDelete
  12. ///////எங்கள் மூவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. இன்றோடு கடனாளியென்ற பழியிலிருந்து தப்பித்ததோடு நாளைக்கு பதினாலாயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சி வேறு!
    வழியைப் பாருங்கள்.////////



    அண்ணே அண்ணே என்னையும் சேர்த்துக்கங்க !

    கலக்கல் பதிவு .

    பகிர்வுக்கு நன்றி !

    தொடருங்கள் . மீண்டும் வருவேன்

    ReplyDelete
  13. ///////எங்கள் மூவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. இன்றோடு கடனாளியென்ற பழியிலிருந்து தப்பித்ததோடு நாளைக்கு பதினாலாயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சி வேறு!
    வழியைப் பாருங்கள்.////////


    அண்ணே அண்ணே என்னையும் சேர்த்துக்கங்க !
    கலக்கல் பதிவு .
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  14. எங்கப்பன் பட்ட கடனையே இன்னும் அடச்சு முடியலெ. அதுக்குள்ள இது வேறயா?

    ReplyDelete
  15. நான் தமிழன் ஆனா அமெரிக்காவுல இருக்கேன். அப்பிடின்னா என் தலைல எவ்வளவு கடன்னு கொஞ்சம் நிதியமைச்சரைக் கேட்டுச் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  16. இங்கே இருந்து, சேட்டைக்காரன் என்ற தமிழனுக்கு, இந்த பதிவை வாசித்து விட்டு கமென்ட் செய்ய நான் கடன் பட்டு இருக்கிறேன். ஸ்ஸ்ஸ்...... அப்பா.....!!!

    ReplyDelete
  17. தோ வண்டி வந்துட்டே இருக்கு - உங்க கிட்ட இருந்து கடனை வாங்க! எஸ்கேப் ஆயிடுங்க ஆமாம்!

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  18. http://pudugaithendral.blogspot.com/2010/04/blog-post_12.html

    விருது கொடுத்திருக்கிறேன். வந்து பாருங்க

    ReplyDelete
  19. //ungalukku purinjatha. avar enna solrarnu sathiyama puriyala . atheppadi oovvoru statekum kadan marum//

    எனக்குப் புரிஞ்சுதுன்னா நினைக்கறீங்க? புரியாமத்தான் இதை வச்சு ஒரு மொக்கை போட்டேனுங்க! :-)))

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  20. //உண்மையில் இந்த அந்த அறிக்கையில் கிடைத்த லாபம் நண்பா!//

    நடுவிலே ஒரு வார்த்தை மிஸ் ஆயிட்டாலும், புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா சொன்னது நீங்களாச்சே! :-))

    //எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!...//

    தொடரும்...தொடரும்....!

    மிக்க நன்றிங்க!!

    ReplyDelete
  21. //அய்ய சாமி இங்க சென்னையில அடிக்கிற வெயிலு கொடுமதான் !!//

    ஹிஹி! இருந்திட்டுப்போகட்டுங்க! மிக்க நன்றி!!

    ReplyDelete
  22. //:) அந்த கவரை ஒரு ரவுண்டு எங்க ஊருக்கும் அனுப்புங்க. எங்க எல்லார் கடனையும் அடைச்சுட்டு திருப்பி கொடுத்திடுறோம்//

    அனுப்பிட்டேனுங்க! எல்லார் கடனையும் அடைச்சிட்டு திருப்பி அனுப்பியிருங்க!! மிக்க நன்றிங்க!!

    ReplyDelete
  23. //இதோ நானும் கிளம்பிட்டேன் பேங்குக்கு என் பங்கை வசூல் பண்ண :))//

    கிளம்புங்க கிளம்புங்க! ஒரு பைசாவைக் கூட விட்டுவைக்கக்கூடாது!

    ReplyDelete
  24. //இப்போதைக்கு "அறிக்கை" என்றாலே ஏமாற்றுவேலைதான்..//

    ஹாஹா! ஒரே வார்த்தையிலே பதிவோட கருவையே சொல்லிட்டீங்க! நன்றிங்க!!

    ReplyDelete
  25. //சேட்டை ஜாஸ்தி :)

    அப்படியே அந்த கவரை இங்கு அனுப்பிவைங்க எங்க கடனையும் தீர்த்துக்கிறோம்.//

    ஏற்கனவே ஒருத்தருக்கு அனுப்பியிருக்கேன். அது திரும்பி வந்ததும் அனுப்பி வைக்கிறேன். மிக்க நன்றி!!!

    ReplyDelete
  26. //கஷ்டம் தீர வழி இதுதானா..//

    அனேகமா இதுவாத் தானிருக்கணும் போலிருக்கு! :-)))

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  27. //ஐயா, நாதான் யாருகிட்டயும் கடன் வாங்கலயே. பின்ன எவன் என் பேர சொல்லி கடன் வாங்கியது. கூட்ல பஞ்சாயத்த!! எடுல அறிவாள !!//

    ஐயா சாமி, வேண்டாம்! நாட்டாமை தீர்ப்பை மாத்து....! :-))

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  28. //சேட்டை இந்த அறிக்கைய யாரும் படிச்சிறுக்க மாட்டாங்க....

    அறிக்கை அறிக்கையாவே இருக்கட்டும்...//


    படிச்சிருந்தா மட்டும் என்ன ஆகியிருக்கப்போகுதண்ணே? :-)))

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  29. //என்ன அப்படி சொல்லிபுட்ட,சேட்டை, இந்த அறிக்கையால, ஒரு பதிவு, இப்போதைக்கு பத்து பின்னூட்டம் சேர்ந்திடுச்சே! எப்புடீ?//

    ஹாஹா! யாருக்குப் புரயோசனமிருக்கோ இல்லையோ, எனக்கு நிறைய பின்னூட்டம் வந்தாச்சு! :-))))))

    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  30. //என்ன அப்படி சொல்லிபுட்ட,சேட்டை, இந்த அறிக்கையால, ஒரு பதிவு, இப்போதைக்கு பத்து பின்னூட்டம் சேர்ந்திடுச்சே! எப்புடீ?//

    ஹாஹா! யாருக்குப் புரயோசனமிருக்கோ இல்லையோ, எனக்கு நிறைய பின்னூட்டம் வந்தாச்சு! :-))))))

    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  31. //அண்ணே அண்ணே என்னையும் சேர்த்துக்கங்க ! கலக்கல் பதிவு. பகிர்வுக்கு நன்றி !தொடருங்கள் . மீண்டும் வருவேன்//

    வாங்க வாங்க! தொடர்ந்து உற்சாகப்படுத்திட்டேயிருங்க!! மிக்க நன்றி!!

    ReplyDelete
  32. //எங்கப்பன் பட்ட கடனையே இன்னும் அடச்சு முடியலெ. அதுக்குள்ள இது வேறயா?//

    கடனையெல்லாம் சுளுவா அடைக்கத்தானே இந்தப்பதிவே! மிக்க நன்றி!!!

    ReplyDelete
  33. //enna kodumai sir idhu! :))//

    மிக்க நன்றிங்க! :-))

    ReplyDelete
  34. //நான் தமிழன் ஆனா அமெரிக்காவுல இருக்கேன். அப்பிடின்னா என் தலைல எவ்வளவு கடன்னு கொஞ்சம் நிதியமைச்சரைக் கேட்டுச் சொல்லுங்களேன்?//

    ஒபாமா கிட்டே கேட்டுக்கிட்டுச் சொல்லுறாராம். :-))

    மிக்க நன்றிங்க!!

    ReplyDelete
  35. //இங்கே இருந்து, சேட்டைக்காரன் என்ற தமிழனுக்கு, இந்த பதிவை வாசித்து விட்டு கமென்ட் செய்ய நான் கடன் பட்டு இருக்கிறேன். ஸ்ஸ்ஸ்...... அப்பா.....!!!//

    யெப்பாடியோ, கடல்கடந்து போனாலும் தமிழர் பண்பாட்டை மறக்காம, அப்படியே பேசறீங்க! மிக்க நன்றிங்க!! :-))))

    ReplyDelete
  36. //தோ வண்டி வந்துட்டே இருக்கு - உங்க கிட்ட இருந்து கடனை வாங்க! எஸ்கேப் ஆயிடுங்க ஆமாம்!//

    ஹாஹா! இதுக்குத்தானே நான் தலைமறைவாயிருக்கேன் ஐயா! :-)))

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  37. //விருது கொடுத்திருக்கிறேன். வந்து பாருங்க//

    இதற்கு பதில் எழுதறதுக்கு முன்னாடியே உங்க வலைப்பதிவுக்கு வந்து நன்றி தெரிவித்துவிட்டேன். உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி!! :-))

    ReplyDelete
  38. அடங்கொய்யாலே....... இது என்னாடா புதுக் கணக்கு????????

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!