அடுத்து நாம் காணவிருக்கும் கன்னிராசிக்காரர்கள் புத்திசாதுர்யத்தால் பதிவே எழுதாமல், பிற பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதியே பிரபலமாகிவிடும் வல்லமை படைத்தவர்களாவர். இவர்கள் பார்க்க வசீகரமாக இருப்பார்கள் என்பதால் துணிந்து புகைப்படத்தை அவரவர் வலைப்பதிவில் போடலாம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்பதால் இவர்களைச் சுற்றிலும் மொக்கையாளர்களின் கூட்டத்துக்குப் பஞ்சமேயிருக்காது. அளவோடு பதிவுபோட்டு வளமோடு வாழ வேண்டும் என்ற கொள்கையுள்ளவர்கள் என்பதால் மாதம் ஒன்றுக்கு ஒரு பதிவு அல்லது அரைப்பதிவே எழுதுவார்கள். மிகவும் தன்னடக்கம் உள்ளவர்கள் என்பதால் எந்தப் பதிவை எழுதினாலும், "நன்றி" என்று அதை சுட்ட இடத்தின் சுட்டியையும் மறக்காமல் குறிப்பிட்டிருப்பார்கள்.
கன்னிராசிக்காரர்கள் பெரும்பாலும் மிகுந்த பயந்த சுபாவமுள்ளவர்கள். "இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது எனது கருத்தல்ல; இந்த வலைப்பதிவே கூட நான் இன்னொருவரிடமிருந்து இரவல் வாங்கியது,"என்று "டிஸ்கி" எழுதினாலும் வியப்பில்லை. பின்னூட்டத்துக்காக நண்பர்களுக்கு மின்னஞ்சலோ, எஸ்.எம்.எஸ்ஸோ அனுப்பாமல் கிடைக்கிற ஓட்டு கிடைக்கட்டும் என்று பொறுமையாகக் காத்திருப்பார்கள். சகபதிவர்களின் சர்ச்சைக்குரிய பதிவுகளில் கருத்துத் தெரிவிக்காமல் ஒரு நகைப்பானை மட்டும் போட்டுவிட்டு நழுவி விடுவார்கள்.
புதிது புதிதாக பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவார்கள் என்பதால் பழைய பதிவுகள் பலவற்றைப் படிக்கிற வழக்கத்தை வைத்திருப்பார்கள். அடிக்கடி சுயபரிசோதனை சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுதி வாசகர்களைத் தலைசொரிய வைப்பார்கள். பொது அறிவில் மிகுந்த நாட்டமுள்ள இவர்கள் புத்தகங்கள் குறித்து நிறைய பதிவு எழுதுவார்கள். இவர்களது சிறப்பு இவர்கள் படித்த புத்தகத்தைப் பற்றி மாத்திரம் இல்லாமல், மற்றவர்கள் படித்த புத்தகத்தைப் பற்றியும் எழுதுவார்கள். எந்தப் புத்தகமும் இல்லாவிட்டாலும் வங்கி பாஸ்புக் அல்லது இரயில்வே கால அட்டவணை குறித்தாவது எழுதிவிடுவார்கள்.
இவர்கள் இயல்பாகவே புகழ்ச்சிக்கு மயங்கிவிடுவார்கள் என்பதால், இரண்டு வரிக்கு மேல் எவரேனும் கலாய்த்து பின்னூட்டம் எழுதினாலும் கூட உச்சி குளிர்ந்து விடுவார்கள். அதிகமாகப் புகழ்ந்தால் தனிமடலில் நன்றி தெரிவித்து விடுவார்கள் என்பதால், வாசகர்கள் பின்னூட்டம் எழுதும்போது சிக்கனத்தைக் கடைபிடித்தல் நலம்.
இதுவரைக்கும் பதிவுகளை உடனடியாக எழுத முடியாமலும், எழுதினாலும் சரியான பின்னூட்டமில்லாமலும் இருந்த கன்னிராசிக்காரர்களுக்கு இனிவரும் நாட்களில் அபாரமாக பின்னூட்டங்கள் வர வாய்ப்பிருக்கின்றது. இருந்தாலும் 18 வயதுக்கு மேலும் 19 வயதுக்குக் கீழும் உள்ள வாசகர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். காதல் கவிதைகளைப் பதிவேற்றும்போது மறக்காமல் அதை நிஜமாகவே எழுதியது யார் என்று குறிப்பிடவும். கூடுமானவரை வீட்டிலிருந்து கொண்டு பதிவுகளை ஏற்றுதல் நலம் பயக்கும். சகபதிவர்களைப் பார்த்து இலக்கியம் சம்பந்தப்பட்ட பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிற ஆபத்தான அறிகுறிகளும் உள்ளன.
இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தொடர்பதிவு போன்ற முயற்சிகளில் இறங்க வேண்டாம். கணினியில் சிற்சில கோளாறுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் பழைய சோகப்பாடல்களின் மீது ஈடுபாடு ஏற்படலாம். சில பதிவுகளை உங்களது நண்பர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் பின்னூட்டத்துக்கு நன்றி எழுதுகிற வேலையும், அடுத்த பதிவு எழுதுகிற நேரமும் மிச்சமாகும்.
மொத்தத்தில் கன்னிராசி வலைப்பதிவர்களுக்கு இப்போது நேரம் சரியில்லையென்பதால் வாசகர்கள் கவனமாயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!
நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!
நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!
நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!
நீங்கள் சிம்ம ராசிக்காரரா? இங்கே செல்லவும்!
மற்ற ராசிக்கார்களுக்கு இதயம் "திக் திக்" என்று அடித்துக்கொண்டிருக்கட்டும்.
பி.கு: இந்தப் பதிவுக்கும் அண்மையில் எனக்கும் ஒரு கன்னிராசிக்கார வலைப்பதிவருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமைக்கும் யாதொரு தொடர்புமில்லை..ஹி..ஹி!!
எப்படா என் ராசி வரும்னு நினைச்சேன்...
ReplyDeleteஇதுக்கு வராமலேயே இருந்திருக்கலாம்...
டேமேஜ் கொஞ்சம் சாஸ்திதான்....
பரவாயில்லை...
:-)
எங்கே இருக்கு உங்க ஜோசிய கடை....??
ReplyDeleteஎந்த ராசிக்காரங்களுக்கு தான் நேரம் நல்லா இருக்கு? இதெல்லாம் ரெம்ம்ம்ப ஓவரு.. பாத்துக்க.. ஆக்கான். :))
ReplyDeleteவேண்டும் வேண்டும் சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வேண்டும்!!!
ReplyDeleteவேண்டும் வேண்டும் சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வேண்டும்!!!வேண்டும் வேண்டும் சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வேண்டும்!!!வேண்டும் வேண்டும் சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வேண்டும்!!!
மக்களே, என்னோடு குரல் கொடுங்கள். ப்ளீஸ்!!!!இந்த ராசிபலன்ல இருந்து தப்பிக்க வேறு வழியில்லை!
சேட்டை இப்படியெல்லாம் நடக்குமா?...
ReplyDeleteரைட்டு ஜோசியரே :))
ReplyDeleteவெயிட்டிங்!!!!
ReplyDeleteஆகா இவன் சாதாரண ஆள் இல்லடா, ரொம்ப புத்திசாலியா இருக்கான்டா , இவன கடத்திட்டு போய் மாயாஜால் வாசல்ல ஜோசியம் சொல்லா வச்சா செம கலக்சன் ஆகும் போல இருக்கே !!!!!
ReplyDelete(உண்மைய சொல்லு யுவாங்க்சுவாங்.blogspot.com , இந்த சைனீஸ் ப்ளாக்-அ பாத்துதானே நீ காப்பி அடிக்கிறே ?)
//எப்படா என் ராசி வரும்னு நினைச்சேன்...இதுக்கு வராமலேயே இருந்திருக்கலாம்...டேமேஜ் கொஞ்சம் சாஸ்திதான்....பரவாயில்லை...
ReplyDelete:-)//
அடடா! கன்னிராசியா நீங்க! மெய்யாலுமே இப்போ அந்த ராசிக்கு நேரம் சரியில்லேன்னு தான் ஜோசியர் சொல்லுறாங்க! சரியாயிடுங்க! என்னோட பதிவைப் படிச்சா தோஷம் நிவர்த்தியாயிடும்! :-))
//எங்கே இருக்கு உங்க ஜோசிய கடை....??//
ReplyDeleteஜெட்லீ அண்ணே! கடை இல்லே, ஏழெட்டு மாடியிருக்கிறா மாதிரி ஒரு பில்டிங் தேடிட்டிருக்கேனுங்க! :-))
//எந்த ராசிக்காரங்களுக்கு தான் நேரம் நல்லா இருக்கு? இதெல்லாம் ரெம்ம்ம்ப ஓவரு.. பாத்துக்க.. ஆக்கான். :))//
ReplyDeleteதசாபுத்தி, கிரகங்களோட இப்போதைய நிலை இதையெல்லாம் கணக்குலே கூட்டிக் கழிச்சுத் தான் எழுதியிருக்கோம். தெரியுமில்லா...?
//வேண்டும் வேண்டும் சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வேண்டும்!!!
ReplyDeleteமக்களே, என்னோடு குரல் கொடுங்கள். ப்ளீஸ்!!!!இந்த ராசிபலன்ல இருந்து தப்பிக்க வேறு வழியில்லை!//
என்னோட ராசிபலன் சீக்கிரம் முடிஞ்சுடும்! ஆனா, உங்களோட பாலக்காட்டு பதிவு முடியுமோ? :-)))
//சேட்டை இப்படியெல்லாம் நடக்குமா?...//
ReplyDeleteநடந்தாலும் நடக்குமண்ணே! எதுக்கும் அடிக்கடி என் பதிவைப் படிச்சு தோஷம் ஜாஸ்தியாகாமப் பார்த்துக்கோங்க! ;-))
//ரைட்டு ஜோசியரே :))//
ReplyDeleteஅப்பாடா! நீங்களாவது ஒப்புக்கிட்டீங்களே! :-)))))))))
//வெயிட்டிங்!!!!//
ReplyDeleteஓஹோ! இன்னும் உங்க ராசி வரலியா? வரும்...ஆனா...வராதுன்னு சொல்ல மாட்டேன். வந்தே தீரும்! ;-))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
//ஆகா இவன் சாதாரண ஆள் இல்லடா, ரொம்ப புத்திசாலியா இருக்கான்டா , இவன கடத்திட்டு போய் மாயாஜால் வாசல்ல ஜோசியம் சொல்லா வச்சா செம கலக்சன் ஆகும் போல இருக்கே !!!!!//
ReplyDeleteஎதுக்குண்ணே அம்புட்டுத் தூரம்? மண்ணடியிலே சின்னதா ஒரு கடை போட்டு உட்கார்ந்தா போதும்! செமத்தியா பிசினஸ் வரும்!
//(உண்மைய சொல்லு யுவாங்க்சுவாங்.blogspot.com , இந்த சைனீஸ் ப்ளாக்-அ பாத்துதானே நீ காப்பி அடிக்கிறே ?)//
அவங்களே செங்கிஸ்கான்.blogspot.com பார்த்துத் தான் காப்பியடிச்சாங்கன்னு ஊருக்குள்ளே பேசிக்கிறாங்கண்ணே! :-))))) நன்றி!!
உங்க செட்டிக்கு அளவே இல்லாம போய்க்கிட்டு இருக்கு
ReplyDeleteகன்னி ராசிக்கு இத்தனை வேட்டா? நடத்துங்க .......!!!
ReplyDeleteஆமாம், நீங்க எந்த ராசி?
//உங்க செட்டிக்கு அளவே இல்லாம போய்க்கிட்டு இருக்கு//
ReplyDeleteஇல்லையே நண்பரே! ஒவ்வொரு ராசியாக இரண்டு நாள் இடைவெளி விட்டுத் தானே போடுகிறேன். :-))
//கன்னி ராசிக்கு இத்தனை வேட்டா? நடத்துங்க .......!!! ஆமாம், நீங்க எந்த ராசி?//
ReplyDeleteகடைசி ராசி! அவ்வ்வ்வ்வ்வ்!!!
:-((((
//அகல்விளக்கு said...
ReplyDeleteஎப்படா என் ராசி வரும்னு நினைச்சேன்...
இதுக்கு வராமலேயே இருந்திருக்கலாம்...
டேமேஜ் கொஞ்சம் சாஸ்திதான்....
பரவாயில்லை...//
ரிபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
//ரிபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்//
ReplyDeleteநான் என்னாங்க பண்ணுறது? தசாபலன் அப்படித்தான் இருக்குது! :-))
மிக்க நன்றிங்க!!
அப்பிடியே என்னைப் பத்தி சொல்லிருக்கிறீங்க... ஆனா ணா மேஷ ராசியாச்சே??????
ReplyDelete////////அது மட்டுமல்ல! ரிஷபம், கடகம், கன்னி, மீன ராசி பதிவர்களுடன் சேர்ந்து ’கயிதே,கஸ்மாலம்,பொறம்போக்கு,பேமானி,சோமாறி,’ போன்ற அருந்தமிழ்ச்சொற்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இதுவே உகந்த தருணம். இது போன்ற பதிவுகளுக்கு தலா நூறு பின்னூட்டங்களாவது கிடைக்கும் என்று உங்களது தசாபலன்கள் உறுதிபடுத்துகின்றன. இந்த காலகட்டத்தில் ’சாக்கடையில் கல்லெறிவது எப்படி?’, ’மல்லாந்து படுத்து எச்சில் துப்புவது எப்படி?’ போன்ற அறிவுபூர்வமான தொடர் இடுகைகளை எழுதி தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டாற்றுகிற அருமையான வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்!
ReplyDelete/////////
நான் எண்ணியது இங்கு வார்த்தைகளாக காட்சி அளிப்பதாய் உணர்கிறேன் . நன்றி நண்பரே
ok let see what happen. thanks for sharing .
ReplyDelete