Monday, March 15, 2010

ஜிம்மாயணம்-03







இதுவரை.....

மேன்சன்வாசிகளான நான், நண்பர்கள் வைத்தி, சுரேந்திரன் மூவரும் கொத்தவரங்காய் போலிருந்த அவரவர் உடம்புகளை இறுக்கி,பெருக்கி கார்த்தவராயன் போலாக வேண்டும் என்பதை 2010-ம் ஆண்டு பிறந்தவுடன் செயல்படுத்தத் திட்டமிட்டோம். உடலை வலுவாக்கத் தேவையான அலாரம் டைம்பீஸையும், உடற்பயிற்சி செய்ய மிகவும் முக்கியமான உடைகளையும் வாங்கிமுடித்தபோது, ஜனவரி 1 பிறந்து விட்டது. சரி, ஜனவரி 2-ம் தேதி முதல் துவங்கலாம் என்று எண்ணியிருந்தபோது, அதிகாலையில் வெறும்வயிற்றில் சாப்பிட வேண்டிய பாதாம்பிசின் என்ற வஸ்து இல்லாததால், அதை வாங்கியபிறகு 3-ம் தேதி முதல் துவங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மூன்றாம் தேதியாவது தொடங்கினோமா? பார்க்கலாம்!


நல்ல வேளை! பாதாம் பிசின் மண்ணடியிலே பிராட்வே திரையரங்குக்கு அருகேயே கிடைத்தது. எதற்கும் இருக்கட்டுமே என்று நான் அரை கிலோ கொடுங்கள் என்று துவரம் பருப்பு வாங்குகிறவன் போலக் கேட்கவும், கடைக்காரர் என்னை ஒரு டைனோசரஸைப் பார்ப்பது போலப் பார்த்தார். அவர் ஏன் அப்படி என்னைப் பார்த்தார் என்பதன் பொருள் ஜனவரி மூன்றாம் தேதி காலையில் தான் தெரிந்தது.

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் தேவையென்று வைத்தி சொன்னது மறுநாள் முதல் அமலுக்கு வருமென்பதால், அன்று பிஸ்மில்லாவிலிருந்து காரசாரமாக பிரியாணி வரவழைத்துச் சாப்பிட்டேன். (நாளையிலிருந்து நோ காரம்!). அன்று மாலை சானட்டோரியத்தில் இறங்கியதும் மெனக்கெட்டு சாலையைக் கடந்து சென்று பானிப்பூரி,பேல்பூரி,தகிப்பூரி என எல்லாப் பூரிகளையும் ஒரு ப்ளேட் வெட்டினேன்.(நாளையிலிருந்து நோ சாட் அயிட்டம்!). டாக்டர் பட்டம் வாங்கிய நடிகரைப் போல கையில் பாதாம்பிசினுடன் மேன்சனுக்குள் பூரிப்புடன் நுழைந்தேன்.

அன்று இரவு உணவில் அரை டஜன் தோசையும், முக்கால் பக்கெட் சாம்பாரும், ஏறக்குறைய கால் கிலோ சட்டினியும் சாப்பிட்டது போதாதென்று, வெளியே வந்து இரண்டு வாழைப்பழத்தையும் விழுங்கிமுடித்ததும், கால்கள் தாம்பரத்திலும் வயிறு விழுப்புரத்திலும் இருப்பது போல ஒரு உணர்வு. நடக்க சிரமமாக இருந்ததால் ஏறக்குறைய ரோடு ரோலர் போல நகர்ந்து ஒருவழியாக மேன்சனை அடைந்தோம்.

அடுத்து பாதாம்பிசின் குறித்த வைத்தியின் செயல்முறை விளக்கம் இருந்ததால், நானும் சுரேந்திரனும் பயபக்தியுடன் கையதுகொண்டு வாயதுபொத்தி(எங்கள் கையால், எங்கள் வாயை) வைத்தியின் விளக்கத்துக்காகக் காத்திருந்தோம்.

நான் வாங்கி வந்த பாதாம்பிசின் பொட்டலத்தை வைத்தி திறந்ததும் எங்கள் மேன்சனில் பேசின் பிரிட்ஜின் வாசனை அடித்தது. பாதாம்பிசினிலிருந்து வந்த கடுமையான நெடியில், அதுவரை எங்களது இரத்தத்தைக் குடித்துக்கொண்டிருந்த சிலபல கொசுக்கள் கூட்டம் கூட்டமாக விழுந்து செத்துப்போயின. முருகவிலாஸ் ஹோட்டல் முறுகுதோசையை பார்சலாக வாங்கி மூன்று மாதம் கழித்துத் திறந்தால் வருவது போல அப்படியொரு கப்பு குப்பென்றடித்தது.

"என்னடா பொணநாத்தம் நாறுது? இதையெல்லாம் ஆர்னால்ட் சாப்பிட்டிருப்பாங்கிறே?" என்று சந்தேகத்துடன் வைத்தியைக் கேட்டேன்.

"டேய், இதை அப்படியேவா சாப்பிடச் சொன்னேன்? இதை இப்போ தண்ணியிலே ஊற வச்சிட்டு நாளைக்குக் காலையிலே எழுந்து சாப்பிடணும்! அப்பத்தான் உடம்பு கிண்ணுன்னு ஆகும்," என்று விளக்கினான் வைத்தி. ஆனால், பாதாம்பிசினின் நெடியில் அவனது முகமானது கிருஷ்ணவேணி திரையரங்கின் கிழிந்த திரைபோல ஆகியிருந்ததை நாங்கள் கவனிக்கத்தவறவில்லை.

"எனக்குத் தண்ணியே பிடிக்காதுடா! சோடாவிலே மிக்ஸ் பண்ணிச் சாப்பிடட்டுமா?" என்று கேட்ட சுரேந்திரனை வைத்தி கொங்கணவ முனிவரைப் போல முறைத்தான்.

"ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடணும்?" என்று சமாளிக்கிற மாதிரி, அடுத்த அறிவுபூர்வமான கேள்வியைக் கேட்டான் சுரேந்திரன்.

"எவ்வளவு பிடிச்சிருக்கோ அவ்வளவு சாப்பிடு! தப்பில்லை," என்று கூறியபோது வைத்தி வைரஸ் காய்ச்சல் வந்தவன் போல நடுநடுங்கத் தொடங்கியிருந்தான். எவ்வளவு பிடிச்சிருக்கோ அவ்வளவு சாப்பிடறதா? இது என்ன பாதாம் பிசினா? பால்கோவாவா??

"முதல் நாள் அதிகம் சாப்பிட வேண்டாம்! ஆளுக்கு ஒரே ஒரு கரண்டி மட்டும் சாப்பிடலாம்," என்று நான் மிகவும் சமயோசிதமாக யோசனை தெரிவித்தேன். அதன்படி, ஆளுக்கு ஒரு தம்ளர் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி பாதாம்பிசினைப் போட்டு, பிறகு தம்ளர் முழுக்க தண்ணீரால் நிரப்பினோம்.

"அலாரத்தை மறக்காமல் அஞ்சு மணிக்கு வச்சிடணும்!" என்று வைத்தி கண்டிப்பாகக் கூறினான்.

அவனது உத்தரவை சுரேந்திரன் சிரமேற்கொண்டு செய்யவும், அவரவர் படுக்கையில் விழுந்த நாங்கள் மறுநாள் முதல் எங்களது வாழ்க்கையே மாறப்போகிறது என்ற பரபரப்பில் சிறிது நேரம் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தோம். சிக்ஸ்-பேக்கானதும் நேராக ஹரித்வார் போய் ஸ்ரேயாவின் பெற்றோர்களிடம் பெண் கேட்பது மாதிரியும், அவர்கள் சம்மதித்ததும் நானும் ஸ்ரேயாவும் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் டூயட் பாடுவது போலவும் கூட உறங்கியபோது ஒரு கனவு வந்தது. இத்தோடு ஆந்திராவிலிருந்து திம்மன்சேரலா டுமீல் ரெட்டி என்ற தயாரிப்பாளர் என்னை "இப்புடு செப்புடு," என்ற படத்தில் கதாநாயகனாக என்னை புக் செய்ய கரோலாவில் வந்து காத்திருப்பது மாதிரி ஒரு டிரைலர் கனவும் இடைவேளையில் வந்தது.

மறுநாள் எங்கள் எல்லாரது கனவுகளையும் கலைத்தபடி அலாரம், சரியாக அதிகாலை ஐந்து மணிக்கு அடித்துக் கழுத்தறுத்தது. பதறியடித்துக்கொண்டு நாங்கள் எழுந்து கொண்டபோது, ஏற்கனவே விழித்திருந்த வைத்தி எதையோ மிகுந்த யோசனையுடன் உற்று நோக்கிக்கொண்டிருந்தான். தூக்கக்கலக்கத்திலிருந்து விடுபட்டு, நான் எழுந்து கொண்டதும் என்னைத் திரும்ப நோக்கியவன் ஒரு கேள்வியை எழுப்பினான்.

"ஏண்டா, ஒரு தம்ளருக்கு ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் தானேடா போட்டே?"

"ஆமாம்..நீ கூட பார்த்தியேடா! ஏண்டா, என்னாச்சு....?"

"இங்கே வந்து பாரு இந்தக் கொடுமையை....!"

உற்றுப்பார்த்தேன்! மூன்று தம்ளர்களிலுமிருந்த தண்ணீர் முழுவதையும் நன்றாக உறிஞ்சியெடுத்துக்கொண்டு பாதாம்பிசின் உப்பி தம்ளர்களிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.

"ஐயையோ! எப்படிடா இவ்வளவு ஆச்சு?"

சுரேந்திரன் தயங்கித் தயங்கி அவனது தம்ளரை எடுத்து, சற்றே துணிவுடன் அதை மோந்து பார்த்தான்.

"டேய்! புளிச்சுப்போன தோசை மாவு மாதிரி வாசனை வருதுடா! வயித்தைக் குமட்டுதடா! எனக்கு வேண்டாம் போடா! நான் இப்படியே இருந்திட்டுப்போறேன்!"

சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு அவன் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

ஆனால், நானோ வைத்தியின் முன்னர், பலியிடுவதற்குக் குளிப்பாட்ட ஆட்டுக்குட்டியைப் போல வெடவெடவென்று நடுங்கியபடி நின்று கொண்டிருந்தேன்.

38 comments:

  1. அல்டிமேட் சேட்டை! கொஞ்சம் கூட ஏமாத்தலை! சூப்பர்! எஸ்பெஷல்லி, உன் கனவும், அதில் வந்த ட்ரெயிலரும்!

    ReplyDelete
  2. உங்க ஜிம்மாயணம் சூப்பர்ங்க :))!

    //பாதாம் பிசின்//

    என்னங்க இது?

    ReplyDelete
  3. சேட்டைக்காரன் தம்பி,

    பாதாம்பிசின் என்ன விலையானாலும் உடனே 10 டன் வாங்கி லாரியில் இங்கு அனுப்பி வைக்கவும். பூத்தொட்டிகளில் போட்டால் தண்ணீரை ஆவியாகாமல் தடுக்கும். ரொம்ப நல்ல பொருள்.

    இங்கு நல்ல விலைக்குப்போகும். லாபத்தில் ஆளுக்குப்பாதி.

    ReplyDelete
  4. தம்பி,

    பாதாம் பிசினை உலகத்தண்ணீர் தினத்துக்குள் அனுப்பினால் அன்று செம விளம்பரம் செய்து நல்ல காசு பார்த்து விடலாம்.

    ReplyDelete
  5. ஜிம்மாயணம்-03 கலக்கல் . இவளவுதானா இல்லை இன்னும் எதுவும் இருக்கா !

    மீண்டும் வருவான் பனித்துளி !

    ReplyDelete
  6. இன்னும் 6 டேஸ்ல , 7 "பேக்கா" மாறி சட்டையெல்லாம் கிளிசுக்கிட்டு தெரு தெருவா நீ சுத்துற , அப்பா நம்ம அசின்னோட அம்மா அவுகளா வந்து பொண்ணு தருவாக ,
    சேட்ட ரெடி ஸ்டார்ட் மியூசிக்

    ReplyDelete
  7. படிக்க படிக்க சிரிப்பும்,கண்களில் நீரும் தாங்கவில்லை. அலுவலகத்தில் என்னை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நல்ல பதிவு, பாதாம் பிசின் ஒகே, அடுத்து என்ன கொண்டைக்கடலையா?. நாங்களும் இந்த இரண்டையும் சாப்பிட்டு இருக்கேம். ஆனா உடம்புதான் ஏறவில்லை. நான் சொன்னது அப்போ (இப்போ குறைய மாட்டேங்குது). மிக நல்ல பதிவு, மிக்க நன்றி.

    ReplyDelete
  8. யோவ் மங்குனி பட்டாபட்டி கையில பட்டாக்கத்தியோட உன்னைத் தேடிக்கிட்டு இருக்காரு. அவரோட ஆளு அசினை நீ எப்படி இவருக்கு கோத்துடலாம்.
    நம்ம சேட்டைக்கு அசின் எல்லாம் பாதாம் பிசின் மாதிரி டம்ளருல கரைச்சுக் குடிச்சுருவாரு. வேற யாராது லேட்டஸ்டா சொல்லுய்யா...

    ReplyDelete
  9. அன்புள்ள பித்தனின் வாக்கு,
    சேட்டை ஏக பத்தினி விரதன். அவன் ஸ்ரேயாவைத்தவிர யாரையும் மனதளவில் கூட நினைப்பதில்லை!

    ReplyDelete
  10. சென்னை மேன்ஷன்களில் கொசுத் தொல்லைதான் அதிகம் என்று நினைத்தேன்.. உங்க தொல்லை அதுக்கும் மேல இருக்கே.. பாவம்ங்க சென்னை பொண்ணுங்க.. அர்னால்ட் ஆக ஆசைப்பட்டு அவங்களை பயமுறுத்தாதீங்க...

    ReplyDelete
  11. சார், தப்பா நினைக்காதிங்க. இந்த கதைய சமீபத்தில் வேறு எங்கோ படித்த ஞாபகம்.

    ReplyDelete
  12. //அல்டிமேட் சேட்டை! கொஞ்சம் கூட ஏமாத்தலை! சூப்பர்! எஸ்பெஷல்லி, உன் கனவும், அதில் வந்த ட்ரெயிலரும்!//

    நிஜத்துலே கொஞ்சம் மசாலா சேர்க்கிறதுலே நிறைய சவுகரியம் இருக்கு! :-))
    நன்றிங்க!

    ReplyDelete
  13. //ha,ha,ha,......//

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  14. //உங்க ஜிம்மாயணம் சூப்பர்ங்க :))!//

    //பாதாம் பிசின்//

    //என்னங்க இது?//

    எல்லா நாட்டு மருந்துக்கடையிலும் கிடைக்குதுங்க! வாங்கிராதீங்க! நாத்தம் குடலைப் புடுங்குது!

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  15. //பாதாம்பிசின் என்ன விலையானாலும் உடனே 10 டன் வாங்கி லாரியில் இங்கு அனுப்பி வைக்கவும். பூத்தொட்டிகளில் போட்டால் தண்ணீரை ஆவியாகாமல் தடுக்கும். ரொம்ப நல்ல பொருள்.//

    அண்ணே, அது செடியிலே இருக்கிற தண்ணியையும் சேர்த்து உறிஞ்சிடப்போவுது!


    //இங்கு நல்ல விலைக்குப்போகும். லாபத்தில் ஆளுக்குப்பாதி.//

    இந்த அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  16. //பாதாம் பிசினை உலகத்தண்ணீர் தினத்துக்குள் அனுப்பினால் அன்று செம விளம்பரம் செய்து நல்ல காசு பார்த்து விடலாம்.//

    அண்ணாச்சிக்கு பயங்கர பிஸினஸ் மைண்டு! :-)))

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  17. //ஜிம்மாயணம்-03 கலக்கல் . இவளவுதானா இல்லை இன்னும் எதுவும் இருக்கா !//

    இன்னும் ஜிம்முக்குப் போன கதையே ஆரம்பிக்கலியே! :-))


    //மீண்டும் வருவான் பனித்துளி !//

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  18. //இன்னும் 6 டேஸ்ல , 7 "பேக்கா" மாறி சட்டையெல்லாம் கிளிசுக்கிட்டு தெரு தெருவா நீ சுத்துற , அப்பா நம்ம அசின்னோட அம்மா அவுகளா வந்து பொண்ணு தருவாக, சேட்ட ரெடி ஸ்டார்ட் மியூசிக்//

    இந்தக் கூத்துலே இருந்த ஒன்-பேக் உடம்பும் ஹாஃப்-பேக்காயிருச்சுண்ணே!

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  19. //படிக்க படிக்க சிரிப்பும்,கண்களில் நீரும் தாங்கவில்லை. அலுவலகத்தில் என்னை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நல்ல பதிவு, பாதாம் பிசின் ஒகே, அடுத்து என்ன கொண்டைக்கடலையா?. நாங்களும் இந்த இரண்டையும் சாப்பிட்டு இருக்கேம். ஆனா உடம்புதான் ஏறவில்லை. நான் சொன்னது அப்போ (இப்போ குறைய மாட்டேங்குது). மிக நல்ல பதிவு, மிக்க நன்றி.//

    எல்லாருக்கும் வர்ற ஆசை தானுங்களே! அனேகமாக பார்க்க திடகாத்திரமாக இருக்கணுமுன்னு எல்லாரும் முயற்சி பண்ணியிருப்பாங்க! அதுனாலே இந்தப் பதிவு நிறைய பேருக்கு அவங்களோட பழைய நெனப்பைக் கொஞ்சம் கிளறி விடுறது இயல்பு தானே?

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  20. //யோவ் மங்குனி பட்டாபட்டி கையில பட்டாக்கத்தியோட உன்னைத் தேடிக்கிட்டு இருக்காரு. அவரோட ஆளு அசினை நீ எப்படி இவருக்கு கோத்துடலாம்.
    நம்ம சேட்டைக்கு அசின் எல்லாம் பாதாம் பிசின் மாதிரி டம்ளருல கரைச்சுக் குடிச்சுருவாரு. வேற யாராது லேட்டஸ்டா சொல்லுய்யா...//

    எனக்கு அசின் வேண்டாமுங்க! பார்த்தீங்களா, எவ்வளவு பெரிய மனசுன்னு...? :-)) இதுக்காக மங்குனியும் பட்டாபட்டியும் சண்டைபோட விட்டிருவேனா? எனக்கு அசின் வேண்டாம், வேண்டாம், வேண்டவே வேண்டாம்! :-)))))

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  21. //அன்புள்ள பித்தனின் வாக்கு,
    சேட்டை ஏக பத்தினி விரதன். அவன் ஸ்ரேயாவைத்தவிர யாரையும் மனதளவில் கூட நினைப்பதில்லை!//

    அப்படிப் போட்டு உடையுங்க உண்மையை! இப்பவாவது மக்கள் புரிஞ்சுக்கட்டும்!!

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  22. //சென்னை மேன்ஷன்களில் கொசுத் தொல்லைதான் அதிகம் என்று நினைத்தேன்.. உங்க தொல்லை அதுக்கும் மேல இருக்கே.. பாவம்ங்க சென்னை பொண்ணுங்க.. அர்னால்ட் ஆக ஆசைப்பட்டு அவங்களை பயமுறுத்தாதீங்க...//

    உடம்பை ஆர்னால்ட் மாதிரி ஆக்கினா பொண்ணுங்க பயந்திருவாங்களா? இதென்ன புதுப்புரளி...? இவங்க பியூட்டி பார்லருக்கு போயிட்டு வர்றதைப் பார்த்து நாங்கெல்லாம் பயப்படுறோமா என்ன? கொஞ்சம் நியாயமாப் பேசுங்க! தீர்ப்பை மாத்துங்க! :-)))))))

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  23. //சார், தப்பா நினைக்காதிங்க. இந்த கதைய சமீபத்தில் வேறு எங்கோ படித்த ஞாபகம்.//

    எங்கே படிச்சீங்கன்னு ஆதாரத்தோட நிரூபிச்சீங்கன்னா, நான் வலைப்பதிவுலே எழுதறதையே நிறுத்திடறேன்; உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தர்றென். இதை reject பண்ணாமல் அனுமதித்து சவால் விடுகிறேன்.

    காப்பியடிக்கிற அளவுக்கு எனக்கு கற்பனை காலியாகலை சார்!

    நன்றிங்க! :-))

    ReplyDelete
  24. யப்பா சிரிச்சி மாளல... கண்ணுலல்லாம் தண்ணி வருது. சேட்டை... கலக்கல்.

    பிரபாகர்.

    ReplyDelete
  25. கலக்கல் போங்க.

    ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. தொடருங்க.

    ஒல்லியா இருக்கிறது எவ்வளவு அழகு தெரியுமா ( என்னையச் சொன்னேன் )

    ReplyDelete
  26. @சேட்டைக்காரன் said...
    //சார், தப்பா நினைக்காதிங்க. இந்த கதைய சமீபத்தில் வேறு எங்கோ படித்த ஞாபகம்.//

    எங்கே படிச்சீங்கன்னு ஆதாரத்தோட நிரூபிச்சீங்கன்னா, நான் வலைப்பதிவுலே எழுதறதையே நிறுத்திடறேன்; உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தர்றென். இதை reject பண்ணாமல் அனுமதித்து சவால் விடுகிறேன்.

    காப்பியடிக்கிற அளவுக்கு எனக்கு கற்பனை காலியாகலை சார்!

    நன்றிங்க!
    //


    உண்மை.. இதை நானும் படித்தேன்..
    ஆதாரம் இதோ
    .
    .
    .
    http://settaikkaran.blogspot.com/2010/03/03.html
    .
    .
    .
    உடனடியாக எனக்கு 1 லட்சம் அனுப்புகள்..
    ஹி..ஹி..
    ஆனால் தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  27. / அன்புள்ள பித்தனின் வாக்கு,
    சேட்டை ஏக பத்தினி விரதன். அவன் ஸ்ரேயாவைத்தவிர யாரையும் மனதளவில் கூட நினைப்பதில்லை! //
    அட இது எனக்குத் தெரியாமல் போச்சே. நான் கூட புரேபேஸ் பண்ணலாம் என்று இருந்தேன். பரவாயில்லை விட்டுக் கொடுத்தரலாம், நம்ம சேட்டைதானே.

    ReplyDelete
  28. இத்தோடு ஆந்திராவிலிருந்து திம்மன்சேரலா டுமீல் ரெட்டி என்ற தயாரிப்பாளர் என்னை "இப்புடு செப்புடு," என்ற படத்தில் கதாநாயகனாக என்னை புக் செய்ய கரோலாவில் வந்து காத்திருப்பது மாதிரி ஒரு டிரைலர் கனவும் இடைவேளையில் வந்தது.//

    SUpernga..

    ReplyDelete
  29. @அஷீதா,

    அதே அதே.. வயித்த பிடிச்சுண்டு சிரிச்சேன். அல்டிமேட் காமெடி!

    ReplyDelete
  30. அன்புள்ள பித்தனின் வாக்கு,
    நீங்க ப்ரப்போஸ் பண்ணினத்த ஸ்ரேயா அப்போஸ் பண்ணலையா? முடியல!

    ReplyDelete
  31. //யப்பா சிரிச்சி மாளல...கண்ணுலல்லாம் தண்ணி வருது. சேட்டை... கலக்கல்.//

    ஹி..ஹி! திருப்பித் திருப்பி ஒரே விஷயத்தைச் சொல்றேன்- எல்லாம் உங்களைப் போன்றோரின் உற்சாக வார்த்தைகள் தர்ற ஊக்கம் தான்! நன்றிங்க!!!

    ReplyDelete
  32. //கலக்கல் போங்க. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. தொடருங்க.//

    விடுவோமா? தொடருவோமில்லே....? :-)))

    //ஒல்லியா இருக்கிறது எவ்வளவு அழகு தெரியுமா ( என்னையச் சொன்னேன் )//

    ஒத்துக்கிறேங்க! இந்த விஷயத்துலே நானும் உங்க கட்சி தான்! மிக்க நன்றிங்க! :-)))

    ReplyDelete
  33. //உண்மை.. இதை நானும் படித்தேன்..ஆதாரம் இதோ
    http://settaikkaran.blogspot.com/2010/03/03.html//

    அட, என்னாண்ணே! இப்படி ஒருத்தன் என் பெயரிலே கிளம்பியிருக்கானா? :-))))


    //உடனடியாக எனக்கு 1 லட்சம் அனுப்புகள்..ஹி..ஹி..
    ஆனால் தொடர்ந்து எழுதுங்கள்..//

    ஹி..ஹி! உங்க கிட்டேயெல்லாம் சவால் விடுவேனுங்களா? :-)))))

    தொடருமண்ணே, மிக்க நன்றி!!!

    ReplyDelete
  34. //அட இது எனக்குத் தெரியாமல் போச்சே. நான் கூட புரேபேஸ் பண்ணலாம் என்று இருந்தேன். பரவாயில்லை விட்டுக் கொடுத்தரலாம், நம்ம சேட்டைதானே.//

    அப்பாடா, எனக்கு லைன் க்ளியர் ஆயிருச்சு! ரொம்ப நன்றிங்க!!! :-))))

    ReplyDelete
  35. //SUpernga..//

    மிக்க நன்றிங்க அஷிதா!! :-)))

    ReplyDelete
  36. //அதே அதே.. வயித்த பிடிச்சுண்டு சிரிச்சேன். அல்டிமேட் காமெடி!//

    வயித்தப் பிடிச்சுண்டு சிரிச்சீங்க சரி, யாரு வயித்தை...? :-))))))

    ReplyDelete
  37. //அன்புள்ள பித்தனின் வாக்கு,
    நீங்க ப்ரப்போஸ் பண்ணினத்த ஸ்ரேயா அப்போஸ் பண்ணலையா? முடியல!//

    அவர் ப்ரப்போஸ் பண்ணனுமுன்னு நினைச்சாரே தவிர, பண்ணலே! அதுனாலே அப்போஸ் பண்ணற அவசியமேற்படலே! அதுனாலே தான் எனக்கு டிஸ்போஸ் பண்ணிட்டாரு! :-))))))

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!