Tuesday, February 2, 2010

"செல்"யாணம்.02

அதெப்படி செல்போனையும் மனைவியையும் நீங்க ஒப்பிடலாமுன்னு ஒட்டப்பிடாரத்திலேருந்து ஒருத்தர் கட்டுக்கடங்காத ஆத்திரத்தோட எனக்குத் தனிமடல் போட்டிருக்காரு! செல்போன் வேறே, மனைவி வேறேங்குறதை புரிய வைக்குறதுக்காக அவர் சொல்லியிருக்கிற காரணங்களைப் படிச்சா ரொம்பவே பிரமிப்பா இருக்குங்க! அனுபவஸ்தருங்க சொல்லுறதை எப்படி உதாசீனப்படுத்துறது சொல்லுங்க? எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?

செல்போனுக்கும் மனைவிக்கும் இருக்கிற வித்தியாசங்களைச் சொல்லுறாரு பாருங்களேன்:-

1. மனைவியை கல்யாணம் ஆன புதுசிலே மட்டும் தான் எங்கே போனாலும் கூட்டிக்கிட்டுப்போவோம். ஆனால், செல்போனுக்கும் நமக்கும் இருக்கிற பந்தம் அதை விடப் புனிதமானது. ஒரு தடவை செல்போன் உபயோகிக்க ஆரம்பிச்சிட்டா அப்புறம் ஈருடல் ஓருயிராகி, எங்கே போனாலும் செல்போனைத் தூக்கிக்கிட்டுத்தான் போவோம். (ஒட்டப்பிடாரத்துக்காரர் பாத்-ரூமுக்குக் கூட கொண்டு போவாராம்)

2. வசதி அதிகரிக்க அதிகரிக்க செல்போன் மாடலை மாத்திக்கிட்டே இருக்கலாம். மனைவி விஷயத்துலே அது முடியுமா?

3. எத்தனை மாடல் மாத்துனாலும் சரி, செல்போனை நாம எப்பவுமே செல்லுன்னு ஒரே பெயராலே தான் அழைப்போம். ஆனா, மனைவி அப்படியில்லை. உலகத்திலே யாராவது செல்போனை வாங்கின புதுசிலே "செல்லக்குட்டி,வெல்லக்கட்டி,"ன்னு அழைச்சிட்டு, ரெண்டு மூணு வருஷம் கழிச்சு "ராட்சசி, பூதகி,"ன்னெல்லாம் அழைச்சதா ஆதாரமுண்டா?

4. செல்போன் வாங்கும்போதே லொட்டு லொசுக்குன்னு எல்லாத்தையும் வாங்கிட்டோமுன்னா, அப்புறம் ரீ-சார்ஜ் பண்ணுற செலவோட சரி! மனைவி அப்படியா?

5. செல்போனாலே இருக்கிற ஒரு முக்கியமான சவுகரியம், மனைவி விஷயத்திலே கிடையாது. அது என்னான்னா, செல்போனை எப்போ வேண்ணாலும் சுவிட்ச் ஆஃப் பண்ணலாம்.

இருங்க, அவசரப்படாதீங்க! செல்போனுக்கும் மனைவிக்கும் இருக்கிற ஒற்றுமைகளைப் பற்றி இன்னொருத்தர் ரொம்ப டீட்டெயிலா மடல் போடுறதாச் சொல்லியிருக்காங்க! வந்ததும் சொல்லுறேன். ஆத்திரத்திலே பட்டம் கட்டிராதீங்க!

இன்னும் வரும்....

4 comments:

  1. ஓட்ட பிடாரத்துகாரர் உங்களைவிட
    சேட்டை காரராக இருப்பார் போல .

    ReplyDelete
  2. //ஓட்ட பிடாரத்துகாரர் உங்களைவிட
    சேட்டை காரராக இருப்பார் போல .//

    நன்றி

    ஆமாண்ணே! எங்க ஊர்க்காரவுக இருக்காகளே.! :-)))

    ReplyDelete
  3. இன்னொரு முக்கியமான விஷயம் மறந்துட்டீங்களே..!
    நாம வீட்டுக்கு லேட்டா வந்தா.,
    செல்போன் நம்ம கூட சண்டை போடாது..!

    ReplyDelete
  4. //இன்னொரு முக்கியமான விஷயம் மறந்துட்டீங்களே..!
    நாம வீட்டுக்கு லேட்டா வந்தா.,
    செல்போன் நம்ம கூட சண்டை போடாது..!//

    வெங்கட் அண்ணா...வாங்க வாங்க...வந்ததும் சூபரா ஒரு பாயின்ட் கொடுத்திட்டீங்க...ரொம்ப நன்றி...

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!