Sunday, October 20, 2013

மதுரைக்கு வந்த சோதனை!



இதனால் சகலருக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்,

      வருகிற 22-10-2013 முதல் அடியேன் சில பல நாட்கள், ஏன், ஒரு சில மாதங்கள் கூட கூடல்நகரில் வசிக்க வேண்டியிருப்பதால், மதுரைவாசிகள் அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

      மதுரை மாநகரில் இருந்தவாறு இடுகைகளை எழுதுகிற வசதியோ வாய்ப்போ கிடைக்குமா கிடைக்காதா என்று தற்போது தெரியாததால் (அட, இதுக்கெல்லாமா கை தட்டுவாங்க?), அவ்வப்போது சென்னைக்கு வரும்போதெல்லாம் கிடைக்கிற நேரத்தில் எதையேனும் எழுதி, எனது புஜபலபராக்கிரமத்தை நிலைநாட்டுவேன் என்று எனது ஆரவல்லியின் மீது (எனது புராதன கணினி!) ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்.

நன்றி!

அட, அதுக்குள்ளே சென்னைவாசிகள் பட்டாசு வாங்கக் கிளம்பிட்டாங்களா?

15 comments:

  1. வாருங்கள் ஐயா... மதுரை அன்புடன் வரவேற்கிறது... இனி மதுரையும் கலகலக்கும்...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் ..... எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் ..... எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete


  4. தடை படாமல் மதுரை பயணம் நடை பெற வாழ்துகிறேன்! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  5. மதுரையை மீட்க வரப்போகும் நகைச்சுவைத்தென்றல் சுந்தர பாண்டியன் வாழ்க ! வாழ்கவே!!

    ReplyDelete
  6. வாருங்கள் ... வாருங்கள் ...

    ReplyDelete
  7. வாருங்கள் ... வாருங்கள் ... ஆரவல்லியோடு வாருங்கள் ...

    ReplyDelete
  8. வெற்றிகரமாக திரும்ப வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அப்போ மதுரையில தீபாவளி கொண்டாடப் போறீங்க. மதுரையே சும்மா அதிரப் போகுது.

    ReplyDelete
  11. மதுரை வரை வாரீக ! ! அப்படியே குற்றாலமும் வந்துட்டு போங்க ! ! பதிவுகளுக்கு நிறைய மேட்டர் கிடைக்கும்....

    ReplyDelete
  12. மதுரையில் சிறப்புடன் வாழ வாழ்த்த வாயதில்லை வணங்குகிறேன்.

    ReplyDelete
  13. ஒரு பயண விஷயத்தைக்கூட இவ்வளவு திறம்பட நகைச்சுவையுடன் எழுதுவதில் சேட்டைக்கு நிகர் சேட்டை தான்.

    ReplyDelete
  14. மதுரை தங்களை இனிதே வரவேற்கிறது...

    கூடல்நகர்ல எந்த இடம்? அது நம்ம ஏரியா ஆச்சே

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!