Tuesday, November 27, 2012

ராஜா என்பார் மந்திரி என்பார்




நண்பர் கும்மாச்சியின் சச்சினின் சோககீதம்இடுகையை வாசித்ததும், சில வருடங்கள் முன்பு கூகிள் குழுமங்களில் நான் எழுதிய ஒரு பாடலையே கொஞ்சம் மாற்றி அளித்திருக்கிறேன். சச்சின் பக்தர்கள் மன்னிப்பார்களாக! (காட்டமாக ஒரு இடுகை எழுதலாம் என்று ஆசைதான்; இப்போது இயலாது என்பதால் இந்தப் பாடல்!)


மெட்டு- ராஜா என்பார் மந்திரி என்பார்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்
ஒரு செஞ்சுரியில்லை; ஒரு ஃபிஃப்டியுமில்லை
பல்புமேலே பல்பாய் வாங்குகிறேன் நானும்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

பந்தினைத் தீண்டவில்லை பவுண்டரி தாண்டவில்லை
சொந்தவூர் திரும்பிவந்தும் சொதப்புவது மாறவில்லை
அன்றோ நான்தான் ஆட்டத்தில் மாஸ்டர்
இன்றோ எனக்கு போட்டார் பிளாஸ்டர்

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

வார்னேயை உதைத்ததெல்லாம் பழங்கதையாச்சுதடா
பானேஸர் பந்தைக்கண்டா பயம்பெருகிப்போச்சுதடா
அடிக்கடி நானும் ஆகுறேன் பௌல்டு
அடடா நானும் ஆயிட்டேன் ஓல்டு

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்!

நாற்பது நெருங்கிருச்சு ஆட்டமும் சுருங்கிருச்சு
நாளொரு மேனியுமாய் விளம்பரமும் குறைஞ்சிருச்சு
கைத்தடி ஊன்றி பல்செட்டும் மாட்டி
களத்தில் இருப்பேன் தொடர்ந்திடும் லூட்டி!

சச்சின் என்பார் டெண்டுல்கர் என்பார்
சப்புனு போச்சு ஆட்டம்-ரொம்பச்
சாடுது பாரு கூட்டம்
ஒரு செஞ்சுரியில்லை; ஒரு ஃபிஃப்டியுமில்லை
பல்புமேலே பல்பாய் வாங்குகிறேன் நானும்
 

17 comments:

  1. யாருங்க அது தலைவனை கிண்டல் பண்ணி பாட்டு புனஞ்சு பாடுறது.. அடுத்த டெஸ்டுல ரெண்டு இன்னிங்க்ஸ்லேயும் செஞ்சுரி அடுச்சு உங்க முகத்துல கரியப் பூசப்போறான் என் தலைவன்..

    ReplyDelete
  2. சேட்டை என்னுடைய இடுகையை வாசித்ததற்கு நன்றி.

    டெண்டுல்கர் என்பார் சச்சின் என்பார், தலைவர் பாட்டு மெட்டில் வரிகள் சூப்பர்

    ReplyDelete


  3. கிரிகெட் பற்றி எதும் தெரியாது! பாட்டும் மெட்டும் இணைந்துவருது!

    ReplyDelete
  4. பாட்டு செம!

    சேட்டை அண்ணாச்சி “எனக்கு தமிழ் தெரியாது”ன்னு சச்சின் நேசல் வாய்ஸ்-ல சொல்லப்போறார்...

    ReplyDelete
  5. இந்த பதிவை முன்னவே படித்து ரசித்திருந்தாலும், இப்போதுள்ள சூழ்நிலையில் படிக்க மேலும் மேலும் ரசிக்கவைக்கிறது. இதுதான் சேட்டை ஐயா! எழுத்துக்கள் அனைவரையும் ஈர்க்கும். என்று சொல்வது.

    ReplyDelete
  6. பாட்டு அருமை இன்னம் அவரைப்ப்ற்றி புகழுரைகள் வருவதற்கு முன்னர் அவராகவே விலகிவிட்டால் அவருக்கு மிகுந்த மரியாதை

    ReplyDelete
  7. பாடல் படித்துப் பார்த்தேன்... (சிரிக்காமல் இருக்க முயன்று தோற்று...)

    சொற்களை அருமையாக பயன்படுத்தி உள்ளீர்கள்... நிஜ பாட்டு மறந்து போய்விடும் போல... ஹா... ஹா... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  8. பாட்டு சூப்பரா இருந்தது....

    ReplyDelete
  9. வாவ் சூப்பர் சாங்... நாம என்னதான் சொன்னாலும் அவர் ரொம்ப ஸ்ட்ராங் சார்...
    நீங்க சொன்ன மாதிரி கைதடி ஊனும் கிழவன் ஆனாலும் சரிதான்!!!

    ReplyDelete
  10. பாடலை நல்லாவே அமைச்சிருக்கீங்க.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. பாட்டு நல்லாயிருக்கு சேட்டை. விளையாட்டில் என்றும் ஒருபோல இருப்பதில்லைஎன்று உங்களுக்குத் தெரியாதா. உங்கள் பாட்டைக் கேட்டாரோ என்னவோ ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சிந்திக்கத் துவங்குகிறாராம்/

    ReplyDelete
  12. சேட்டை ஐயா... பாடல் அருமையாக உள்ளது.
    ஆனால்.. அவர்களின்
    களத்தில் காலம் முடிந்தால் பின்
    கற்றுக்கொடுப்பதில் புகழடையலாம்... விளையாட்டு வீரர்களுக்குத் தோல்வியே இல்லை இல்லைங்களா...?

    ReplyDelete
  13. பிரமாதம் அசத்திட்டீங்க போங்க சூப்பர் பாஸ்

    ReplyDelete
  14. சினிமால பாட்டு எழுதலாம் சேட்டை

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!