என்னம்மா கண்ணு சௌக்யமா?
ஓரிரு தினங்களுக்கு முன்னர் மத்திய
சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது இன்னும் பெயரிடப்படாத அரசியல்கட்சியின்
பெயருள்ள தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
அந்தப் புயல் இன்னும் ஓயாத நிலையில், இன்று பா.ஜ.க. தலைவர் நித்தின் கட்கரி மீது
பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
இந்த
நிலைமையில், காங்கிரஸின் சல்மான் குர்ஷிதும், பா.ஜ.க-வின் நித்தின் கட்கரியும்
சந்தித்தால் எப்படியிருக்கும்?
’மிஸ்டர் பாரத்’ படத்தில் ரஜினிகாந்த்,
சத்யராஜ் சந்தித்துப் பாடுகிற ‘என்னம்மா கண்ணு சௌக்யமா?’ மெட்டில் ஒரு கற்பனை!
சல்மான்: என்னய்யா
நித்தின் சௌக்யமா?
நித்தின்: ஆமாய்யா
சல்மான் சௌக்யம்தான்!
சல்மான்: என்னய்யா
நித்தின் சௌக்யமா?
நித்தின்: ஆமாய்யா
சல்மான் சௌக்யம்தான்!
சல்மான்: கேஜ்ரிவாலு
செஞ்ச வம்புதான்–இனிமேல்
கேள்விமேல்
கேள்வியாக அம்புதான்
நித்தின்: ஊழலும்
வடியாத குட்டைதான்–நாமும்
ஊறிப்போய்க்
கிடக்கின்ற மட்டைதான்
சல்மான்: என்னய்யா
நித்தின் சௌக்யமா?
நித்தின்: ஆமாய்யா
சல்மான் சௌக்யம்தான்!
சல்மான்: வேலியிலே
போகுறதை வேட்டிக்குள் விட்டு
வேதனைதான் படூறீங்க பேராசைப்பட்டு
நித்தின்: அன்னாவுக்குப்
பின்னால்போயி ஆப்பு வாங்கிட்டோம்
ஆமைமுயல்
கதையைப்போல் கொஞ்சம் தூங்கிட்டோம்
சல்மான்: எங்களைப்போல்
நீங்க.....ஓஹோ..ஹோஹோ..ஹோ
திங்க
முடியாது...ஆஹா..ஹாஹா..ஹா
நித்தின்: சோர்ந்துவிட
மாட்டோம்.... ஓஹோ..ஹோஹோ..ஹோ
சோடைபோக
மாட்டோம்.... ஆஹா..ஹாஹா..ஹா
சல்மான்: சாமர்த்தியம்
போதாதே! ஆகாதே!
நித்தன்: டிரெய்லர்தானே போட்டிருக்கு; பிக்சர் பாருங்க...ஹோய்!
சல்மான்: என்னய்யா
நித்தின் சௌக்யமா?
நித்தின்: ஆமாய்யா
சல்மான் சௌக்யம்தான்!
சல்மான்: கொள்கையெல்லாம்
மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
கொள்ளியிலே
நல்லதில்லை கெட்டதுமில்லை
நித்தின்: சண்டைக்காரர்
போல நாமும் கோஷம் போடலாம்
சைவப்பூனை
போல நாமும் வேஷம் போடலாம்
சல்மான்: மாத்தி மாத்தி
வந்து....ஓஹோ..ஹோஹோ..ஹோ
போட்டுவைப்போம்
பொந்து...ஆஹா..ஹாஹா..ஹா
நித்தின்: ஆசை
நல்லாக் காட்டி...ஓஹோ...ஹோஹோ..ஹோ
ஆளாளுக்கு
லூட்டி...ஆஹா..ஹாஹா..ஹா
சல்மான்: நம்மை விட்டா ஆளேது...கூடாது
நித்தின்: காத்துவீசும்
எப்பவுமே நம்ம பக்கம்தான்...ஹோய்!
சல்மான்: என்னய்யா
நித்தின் சௌக்யமா?
நித்தின்: ஆமாய்யா
சல்மான் சௌக்யம்தான்!
சல்மான்: என்னய்யா
நித்தின் சௌக்யமா?
நித்தின்: ஆமாய்யா
சல்மான் சௌக்யம்தான்!
சல்மான்: கேஜ்ரிவாலு
செஞ்ச வம்புதான்–இனிமேல்
கேள்விமேல்
கேள்வியாக அம்புதான்
நித்தின்: ஊழலும்
வடியாத குட்டைதான்–நாமும்
ஊறிப்போய்க்
கிடக்கின்ற மட்டைதான்
சல்மான்: என்னய்யா
நித்தின் சௌக்யமா?
நித்தின்: ஆமாய்யா
சல்மான் சௌக்யம்தான்!
*****************************************************
செம நக்கல் சேட்டை உங்களுக்கு! :)
ReplyDeleteஅவங்களே நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்க!
செம கலக்கல்...சேட்டை...
ReplyDelete:)))))))))))))
அண்ணா செம சேட்ட....
ReplyDeleteகொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
ReplyDeleteசெம கலக்கல்
கொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
ReplyDeleteகொள்ளியிலே நல்லதில்லை கெட்டதுமில்லை
கலக்குறீங்க சேட்டை ஐயா.
அவர்கள் படும் பாட்டை பாடி விட்டீர்கள்!
ReplyDeleteகேஜ்ரி வால் எனும் " அக்னி குஞ்சு " இந்தியாவை சுற்றி சூழும். விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இதுதான் இங்கு நடக்கும்.
ReplyDeleteஇதுவும் இல்லையேல் சிவில்வார்தான் முடிவாகும்
அன்பின் சேட்டைக் காரன் - வழக்கம் போல தூள் கெளப்பிட்டீங்க - சூப்பர் பாட்டு - நல்வாழ்த்துகள் சேட்டைக்காரன் - நட்புடன் சீனா
ReplyDeleteசெம கலக்கல்...
ReplyDeleteஅருமை சகோ வாங்க பழகலாம்
ReplyDeleteஅசத்திட்டிங்க போங்க.
ReplyDeleteமொத்தப் பாட்டும் அட்றா சக்கை டைப் தான். அதிலயும் இந்த வரிகள்..
ReplyDeleteசண்டைக்காரர் போல நாமும் கோஷம் போடலாம்
சைவப்பூனை போல நாமும் வேஷம் போடலாம்
வாய்விட்டுச் சிரிக்க வெச்சுடுச்சு. அருமைண்ணா...
பாடல் வரியிலேயே அவங்களோட உள் நோக்கத்த புட்டு புட்டு வச்சிடீங்க... கலக்கல் பாட்டு!!!
ReplyDeleteசூப்பர் அப்பு
ReplyDeleteகொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
ReplyDeleteகொள்ளியிலே நல்லதில்லை கெட்டதுமில்லை
கொள்ளியில் நல்ல கொள்ளி எது ???
அருமையான பாட்டு .. பாராட்டுக்கள்..
செம டைமிங் பாஸ்...........
ReplyDeleteFacebook sharing button vaikkavum,
ReplyDeleteSuper super super
தங்கள் நட்பில் இணைந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன் சார்
ReplyDeleteநகைச்சுவை மூலம் விமர்சனம்.அருமை
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்
ReplyDeleteஅருமையான நகைச்சுவை நையாண்டி
ReplyDeleteசூப்பரா வார்த்தைகளைப் போட்டுக் கலக்கிட்டீங்க!
//சல்மான்: வேலியிலே போகுறதை வேட்டிக்குள் விட்டு
வேதனைதான் படூறீங்க பேராசைப்பட்டு//
//சல்மான்: கொள்கையெல்லாம் மேடைக்குத்தான் கொள்ளையில் இல்லை
கொள்ளியிலே நல்லதில்லை கெட்டதுமில்லை//
சூப்பர் சார் ! பாராட்டுக்கள்.
VGK
கலக்கல் கவிதை!எவரிடத்தும் நேர்மை இல்லை!
ReplyDelete