Tuesday, October 30, 2012

பாரப்பா பழநியப்பா





பாரப்பா பழநியப்பா
     பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா மிதக்குதப்பா
     உள்ளேநீர் நுழையுதப்பா


பாரப்பா பழநியப்பா
     பட்டணமாம் பட்டணமாம்


மழைபொழிஞ்சா ஏரியைப்போல்
     மளமளன்னு வெள்ளமப்பா
மாயாபஜார் மாளிகைபோல்
     மறைஞ்சிருக்கும் பள்ளமப்பா
ஆமையைப்போல் வாகனங்கள்
     அங்கலாய்ச்சு ஊருதப்பா
அவங்கவங்க வீட்டுக்குள்ளே
     அழுக்குத்தண்ணி சேருதப்பா

பாரப்பா பழநியப்பா
     பட்டணமாம் பட்டணமாம்

தண்ணிபோட்டு ஓட்டுவது
     தப்புன்னுதான் சொல்லுதப்பா
தண்ணிமேலெ ஓட்டுறது
     தலையெழுத்தா சொல்லுங்கப்பா
ஆளுக்காளு குழிதோண்டி
     அகழியாச்சு சாலையப்பா
ஆளிருந்தும் அம்பிருந்தும்
     செய்வதில்லை வேலையப்பா

பாரப்பா பழநியப்பா
     பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா மிதக்குதப்பா
     உள்ளேநீர் நுழையுதப்பா

18 comments:

  1. அண்ணே சேட்டை அருமை, சந்தத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது.

    ReplyDelete
  2. சரியான நேரத்தில், சரியான பாடலின் தேர்வு:-)))))))))))))

    தண்ணிபோட்டு ஓட்டுவது
    தப்புன்னுதான் சொல்லுதப்பா
    தண்ணிமேலெ ஓட்டுறது
    தலையெழுத்தா சொல்லுங்கப்பா

    ஹா ஹா ஹா ஹா !!!! செம சிரிப்பு .

    ReplyDelete
  3. சிறப்பான பாடல்....

    பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சூப்பரப்போய்...!

    ReplyDelete


  5. மழைபொழிஞ்சா ஏரியைப்போல்
    மளமளன்னு வெள்ளமப்பா
    மாயாபஜார் மாளிகைபோல்
    மறைஞ்சிருக்கும் பள்ளமப்பா

    உண்மை!உண்மை!உண்மை!

    சொல்வதெல்லாம் உண்மை!

    ReplyDelete
  6. சரியான நேரத்தில் மிக சரியான பதிவு......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. பாவம் சென்னை........நாமும் தானே இருக்கோம். கொஞ்சம் பரிதாபம் காட்டுங்க தலீவா.
    ரொம்பத்தான் வாரி புட்டீங்க.

    ReplyDelete
  8. என்னப்பா செய்வது எல்லாம் நாம தேர்ந்ததெடுத்த ஆட்சியப்பா

    ReplyDelete
  9. சூழலுக்கேற்ற சூப்பரான பாடல்
    அருமையாக வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஆளிருந்தும் அம்பிருந்தும்
    செய்வதில்லை வேலையப்பா

    அதான்பா நம்ம ஊரு..

    ReplyDelete
  11. சரியான பாட்டு...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...
    tm11

    ReplyDelete
  12. அப்பா...அப்பா...:)) மாயாபஜார் ஜாலம் :))

    இங்கும் மழை பொழியுதப்பா.

    ReplyDelete
  13. சூப்பரான பாட்டு. காலத்திற்கு தகுந்த கோலத்துடன் கூடிய வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. பாடித்தான் படித்தேன் . வலிகளைக் கூட வாழ்க்கையாக பழகிக்கொண்டுள்ளோம்.

    ReplyDelete
  15. அருமையாக உள்ளது சேட்டை ஐயா.

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!