Wednesday, September 5, 2012

அவர் அப்படியொன்றும் அசடில்லை




டாக்டர்.மன்மோகன் சிங்குக்குப் போதாத காலம் இது! கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ‘டைம்பத்திரிகை அவரை ‘செயல்படாத பிரதமர்என்று வருணித்திருந்தது. இதனால் ஆத்திரமடைந்த நம்மூரு காங்கிரஸ் அதிபுத்திசாலிகள் சென்னைப்பதிப்பு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவை எரித்து, அமெரிக்காவின் ‘டைம்ஸ்பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்தார்கள். 


      (இம்முறை சத்தியமூர்த்தி பவன் தொண்டர்படை என்ன செய்யுமோ? வாஷிங்டன் போஸ்டை-க் கண்டித்து வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபீஸ்முன் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நடத்தலாம்.)

      என்னுடைய மவுனம் பல ஆயிரம் பதில்களைவிடச் சிறந்தது,என்று பிரதமர் கூறியிருந்ததை ‘வாஷிங்டன் போஸ்ட்ஏன் கிண்டல் செய்திருக்கிறது என்பது புரியவில்லை. ஓபாமாவைப் போல உளறுவாயராக இருப்பதைக் காட்டிலும், சும்மாயிருப்பதே சுகம் என்று நம்ம பிரதமர் சொல்லியிருக்கலாம் அல்லவா? இதையெல்லாமா கிண்டல் பண்ணுவது? வர வர இந்த அமெரிக்கர்கள் பண்ணுற அலப்பறை தாங்கலை சாமீ! (சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை இந்தியா அனுமதித்துத் தொலைத்திருந்தால், ‘டைம்ஸ்’ ‘வாஷிங்டன் போஸ்ட்போன்ற பத்திரிகைகள் இப்படிக் கரித்துக் கொட்டியிருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.)

      அட, என்ன சேட்டை, திடீர்னு பிரதமருக்கு வக்காலத்து வாங்குறா மாதிரியிருக்கே?ன்னு யோசிக்கிறதுக்குள்ளே...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நாமளாவது காங்கிரஸுக்கு வக்காலத்து வாங்குறதாவது..! இதோ, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நான் குழுமங்களில் எழுதிய இன்னொரு பாடல்....!



(அங்காடித்தெருபடத்தில் வரும் ‘அவள் அப்படியொன்றும் அழகில்லைமெட்டில் எழுதப்பட்ட பாட்டு.) 

அவர் அப்படியொன்றும் அசடில்லை

அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை

அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை

அவர் தேர்தல் எதிலும் ஜெயித்ததில்லை
தெரிந்தும் தவறைத் தடுத்ததில்லை
அவர் பேரைக் கேட்டால் அதிர்வதில்லை
பெரிதாய் ஓட்டும் குதிர்வதில்லை

(அவர் அப்படியொன்றும் அசடில்லை)

அவர் மேதாவி என்பார் மறுக்கவில்லை
மேல் நாட்டுப்படிப்பும் உதவவில்லை
அவர் பாராளுமன்றத்தில் உறங்கவில்லை
இன்னும் பாழும் விலைகள் இறங்கவில்லை

அவர் அன்னை சொல்லைத் தட்டவில்லை
அவர் அமைச்சர் தலையில் குட்டவில்லை
அவர் வாயில்வருவதைத் திட்டவில்லை
அவர் வார்த்தைகள் எதையும் கொட்டவில்லை
அவர் வேலை என்ன புரியவில்லை
நமக்குப் புரியவில்லை

(அவர் அப்படியொன்றும் அசடில்லை)

அவர் திட்டம்போட்டு எதுவும் நடப்பதில்லை
அவர் திமிராய்ப்பேசுவோரை அடக்கவில்லை
அவர் கட்சிக்குள் கூட நண்பரில்லை
அவர் காசிக்குப் போகவும் நேரமில்லை

அவர் அரசியல்பேச்சில் இரைச்சலில்லை
அவர் அறிக்கைவிடுவதில் குறைச்சலில்லை
அவர் தடுத்தால் கேட்கிற ஆளுமில்லை
புதுத்தலைவலி இல்லா நாளுமில்லை
அவர் சிங்கென்றாலும் சிங்கமில்லை
அவர் சிங்கமில்லை

அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை

28 comments:

  1. கவிதையைப் படித்தேன்! வழக்கம்போல சிரித்தேன்!நையாண்டி நன்கு வரிகளில் விளையாடுகிறது

    ReplyDelete
  2. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையே பரவால்ல...நீங்க அத விட பாட்டெல்லாம் எழுதி கேவலப்படுத்தறீங்க... :)

    ReplyDelete
  3. //(இம்முறை சத்தியமூர்த்தி பவன் தொண்டர்படை என்ன செய்யுமோ? வாஷிங்டன் போஸ்டை-க் கண்டித்து வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபீஸ்முன் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நடத்தலாம்.)//

    ;))))))

    பாடல் நல்ல நையாண்டியுடன் உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. பேசாம, சுரேகா, மதுமதி அண்ணாக்கு போட்டியா நீங்க பாட்டெழுத போய்டலாம் போலிருக்கே.

    ReplyDelete
  5. சிபிஐ /அமலாக்கப் பிரிவு/ வருமானவரித் துறை எல்லாம் உங்களை தேடுகிறதாம். விரைவில் சேட்டை கைதுன்னு வரபோகுது ..

    ReplyDelete
  6. பாடல் கலாட்டா அருமை. சந்தம் சேர்ந்து அழகாக இருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முன்னாடியாவது ஜூனியர் போஸ்ட் என்றொரு பத்திரிக்கை இங்கு இருந்தது. அதையும் நிறுத்தித் தொலைத்து விட்டார்கள். பாவம் தொண்டர்கள் என்ன செய்யப் போகிறார்களோ!

    ReplyDelete
  7. சேட்டை இசைக்குழுவின் கச்சேரி ஆரம்பம். நீங்க கலக்குங்ணா.

    ReplyDelete
  8. அமர்க்களம். அசத்துங்கள்.

    ReplyDelete
  9. கவிதை சூப்பர்...நக்கலில் உண்மையும் ஒளிஞ்சிருக்கு....
    சென்னை பதிவர் சந்திப்பில் உங்களை பார்த்தேன். இப்போதான் முதல் முறையாக உங்க பதிவுக்கு வருகிறேன்...நல்லா இருக்கு உங்க சேட்டை....

    ReplyDelete
  10. அடக்கொடுமையே..
    உங்க பாட்டுக்கு, அந்த ‘வாஷிங்டன் போஸ்ட்’ எவ்ளவோ பரவாயில்ல.
    அவ்வ்வ்..

    ReplyDelete
  11. //(இம்முறை சத்தியமூர்த்தி பவன் தொண்டர்படை என்ன செய்யுமோ? வாஷிங்டன் போஸ்டை-க் கண்டித்து வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபீஸ்முன் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நடத்தலாம்.)//

    இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. சேட்டையே அவதுறு வழக்குக்கு தயாராகுங்கள்.

    ஏனென்றால் ’தொண்டர் படை’ என்ற ஒன்றே எங்கள் காங்கிரஸிடம் கிடையாது. ஒன்லி ‘தலைவர் படை’ (என்னது தலைவருக்கு படையா?னு யாருயா கேக்கரது) தான்.

    ReplyDelete
  12. என்ன ஒரு flow! வீட்ல சுத்தி போட சொல்லுங்க. simply great.

    ReplyDelete
  13. நல்லாதானே எழுதி இருக்காரு...எதுக்கு சுத்தி போடச்சொல்றீங்க..?! (அரதப்பழசான ஜோக்குதான்..ஹிஹி)

    ReplyDelete
  14. ஹா.. ஹா.. கலக்குறீங்க சார்...

    ReplyDelete

  15. அவர் சிங்கென்றாலும் சிங்கமில்லை-அவர் அசிங்கமுமில்லை என்று எண்ணுகிறேன். ஊருக்கிளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டி.

    ReplyDelete
  16. அசத்துறிங்க .....எனக்கு டியூசன் எடுங்க இந்த ராஜி அக்காவ எப்படி சமாளிக்கனும்னு தெரியாம தவிக்கிறேன் இனி நீங்க தான் எனக்கு டீச்சர்.

    ReplyDelete
  17. ஆஹா சேட்டை அசத்தல். நல்ல ஃபார்மில் இருக்கிறீங்க போல. வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. பாட்டைப் பதிவு பண்ணி அனுப்பிடலாம்

    ReplyDelete

  19. அட..எப்படி இத்தனை நாள் விட்டேன் இதை?

    ReplyDelete
  20. கலாட்டா பாடல்...

    செம அருமை....

    ReplyDelete
  21. உங்களால மட்டும் தான் சார் முடியும் இப்படிலா சிந்திக்க.... என்ன!! ஒரு கலக்கல் பாட்டு..
    இத மன்மோகன் சிங் கேட்கணும் - கண்டிப்பா அவருக்கே சிரிப்பு வரும்.. நாம பத்தி பாட்டு எழுத கூட ஒரு ஆள் இருக்காங்களேன்னு ரொம்ப சந்தோஷபடுவர்... எல்லாரும் அவரை பற்றி வசை பாடினால் அதை அப்படியே நீங்க கவி பாடிடீங்க சார்... வாழிய உங்கள் கவி சேவை... இன்னும் பல சுவாரஸ்யமான கவி பாடல்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்....நன்றி சார்!

    ReplyDelete
  22. //@புலவர் சா இராமாநுசம் said...

    கவிதையைப் படித்தேன்! வழக்கம்போல சிரித்தேன்! நையாண்டி நன்கு வரிகளில் விளையாடுகிறது!//

    மிக்க நன்றி ஐயா! உங்கள் பாராட்டுக்கள் அளிக்கும் உற்சாகமே தனிதான்!

    //@சேலம் தேவா said...

    வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையே பரவால்ல...நீங்க அத விட பாட்டெல்லாம் எழுதி கேவலப்படுத்தறீங்க... :)//

    முடிஞ்சவரைக்கும் வலிக்காம அடிக்கத்தானே ட்ரை பண்ணினேன்? :-))))
    மிக்க நன்றி! :-)

    //@வை.கோபாலகிருஷ்ணன் said...

    பாடல் நல்ல நையாண்டியுடன் உள்ளது. பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி ஐயா! தொடரும் உங்கள் ஆதரவு மகிழ்ச்சியூட்டுகிறது.

    //@ராஜி said...

    பேசாம, சுரேகா, மதுமதி அண்ணாக்கு போட்டியா நீங்க பாட்டெழுத போய்டலாம் போலிருக்கே.//

    தமிழ் சினிமாவுக்கு அப்படியொரு கஷ்டகாலம் வரணும்னு இருந்தா, அதைத் தடுக்க முடியுமா சகோதரி? :-)

    வருகைக்கு மிக்க நன்றி!

    //@எல் கே said...

    சிபிஐ /அமலாக்கப் பிரிவு/ வருமானவரித் துறை எல்லாம் உங்களை தேடுகிறதாம். விரைவில் சேட்டை கைதுன்னு வரபோகுது ..//

    ஹை... நான் நெஞ்சுவலின்னு அப்போலோவிலே போய் படுத்துக்குவேனே! :-)
    வருகைக்கு மிக்க நன்றி!

    //@ஸ்ரீராம். said...

    பாடல் கலாட்டா அருமை. சந்தம் சேர்ந்து அழகாக இருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முன்னாடியாவது ஜூனியர் போஸ்ட் என்றொரு பத்திரிக்கை இங்கு இருந்தது. அதையும் நிறுத்தித் தொலைத்து விட்டார்கள். பாவம் தொண்டர்கள் என்ன செய்யப் போகிறார்களோ!//

    உண்மைதான்! அனேகமாக என்னையே வலைவீசித் தேடினாலும் தேடுவாங்க! காங்கிரஸ் வலைன்னா கண்டிப்பா ஓட்டையிருக்கும். நான் தப்பிச்சிருவேன்! :-)

    வருகைக்கு மிக்க நன்றி!

    //@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    ரசித்தேன்.//

    மிக்க நன்றி!

    //@சத்ரியன் said...

    சேட்டை இசைக்குழுவின் கச்சேரி ஆரம்பம். நீங்க கலக்குங்ணா.//

    ஆஹா, எம்புட்டு நாளாச்சு உங்களை இங்கே பார்த்து..? வருகைக்கு மிக்க நன்றி! :-)

    //@பால கணேஷ் said...

    அமர்க்களம். அசத்துங்கள்.//

    வருகைக்கு மிக்க நன்றி! உங்களை சுலபமா விடுறாப்லே இல்லை கணேஷ்ஜீ! :-)

    ReplyDelete
  23. //@அகிலா said...

    கவிதை சூப்பர்...நக்கலில் உண்மையும் ஒளிஞ்சிருக்கு....//

    மிக்க மகிழ்ச்சி!

    //சென்னை பதிவர் சந்திப்பில் உங்களை பார்த்தேன். இப்போதான் முதல் முறையாக உங்க பதிவுக்கு வருகிறேன்...நல்லா இருக்கு உங்க சேட்டை....//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரி!

    //இந்திரா said...

    அடக்கொடுமையே..உங்க பாட்டுக்கு, அந்த ‘வாஷிங்டன் போஸ்ட்’ எவ்ளவோ பரவாயில்ல. அவ்வ்வ்..//

    என்னாங்க, நான் தமிழிலே அழகா சந்தமெல்லாம் பார்த்து எழுதியிருக்கேன். அவங்க இங்கிலீஷ்லே கலாய்ச்சிருந்தாங்க. :-))))

    வருகைக்கு மிக்க நன்றி!

    //@வெங்கட ஸ்ரீநிவாசன் said...

    இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. சேட்டையே அவதுறு வழக்குக்கு தயாராகுங்கள். ஏனென்றால் ’தொண்டர் படை’ என்ற ஒன்றே எங்கள் காங்கிரஸிடம் கிடையாது. ஒன்லி ‘தலைவர் படை’ (என்னது தலைவருக்கு படையா?னு யாருயா கேக்கரது) தான்.//

    ஆஹா! இந்த சிம்பிள் மேட்டர்லே கோட்டை விட்டுட்டேனே???
    தகவலுக்கு நன்றி நண்பரே! வருகைக்கு மிக்க நன்றி!

    //@esskae59 said...

    என்ன ஒரு flow! வீட்ல சுத்தி போட சொல்லுங்க. simply great.//

    மிக்க நன்றி கண்ணன்! இதுக்கெல்லாம் பின்புலத்துலே ஒரு வகையிலே நீங்களும் இருக்கீங்க...ஐ மீன் தோஸ் குட் ஒல்ட் விசிறி டேஸ்! :-)))

    //@சேலம் தேவா said...

    நல்லாதானே எழுதி இருக்காரு...எதுக்கு சுத்தி போடச்சொல்றீங்க..?! (அரதப்பழசான ஜோக்குதான்..ஹிஹி)//

    அரதப்பழசான ஜோக்கு சொல்றதுதான் இப்போ லேட்டஸ்ட் ஃபாஷனாம். ( நான் சந்தானத்தைச் சொல்லலை!)

    //@திண்டுக்கல் தனபாலன் said...

    ஹா.. ஹா.. கலக்குறீங்க சார்...//

    மிக்க நன்றி! :-))))

    //@G.M Balasubramaniam said...

    //அவர் அசிங்கமுமில்லை என்று எண்ணுகிறேன். ஊருக்கிளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டி.//

    ஊருக்கில்லை; உலகத்துக்கே...! மிக்க நன்றி ஐயா! :-))))

    //@Sasi Kala said...

    அசத்துறிங்க .....எனக்கு டியூசன் எடுங்க இந்த ராஜி அக்காவ எப்படி சமாளிக்கனும்னு தெரியாம தவிக்கிறேன் இனி நீங்க தான் எனக்கு டீச்சர்.//

    என்னாது? நானு டீச்சரா? கவிதை இப்புடிப் பொளந்து கட்டுறீங்க!
    வருகைக்கு மிக்க நன்றி சகோதரி! :-)

    //@கும்மாச்சி said...

    ஆஹா சேட்டை அசத்தல். நல்ல ஃபார்மில் இருக்கிறீங்க போல. வாழ்த்துகள்.//

    ஆமாம்! நியூசீலாந்து மாதிரி ஒரு டீமை ஜெயிச்சா மாதிரி, எனக்கும் ஒரு மேட்டர் கிடைச்சுது! மிக்க நன்றி! 

    //@பெசொவி said...

    Classic!//

    மிக்க நன்றி! :-)

    //ரிஷபன் said...

    பாட்டைப் பதிவு பண்ணி அனுப்பிடலாம்//

    ஐடியா நல்லாயிருக்கு! அடியா திரும்பி வந்துரக்கூடாதே! :-))))

    மிக்க நன்றி!

    //@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


    அட..எப்படி இத்தனை நாள் விட்டேன் இதை?//

    எதை சார்? எதுவா இருந்தாலும் வந்து, விட்டதைப் பிடிச்சதுக்கு மிக்க நன்றி! :-))

    //@வெங்கட் நாகராஜ் said...

    கலாட்டா பாடல்...செம அருமை....//

    தன்யவாத் வெங்கட்ஜீ! அகர் ஆப் சாஹேன் தோ, இஸ் கானே கோ வஹான் பஹூன்சாயா ஜாசக்தா ஹை! :-)))

    //@சமீரா said...

    உங்களால மட்டும் தான் சார் முடியும் இப்படிலா சிந்திக்க.... என்ன!! ஒரு கலக்கல் பாட்டு..//

    என்னமாப் புகழறீங்க சகோதரி! மிக்க மகிழ்ச்சி! :-)

    //இத மன்மோகன் சிங் கேட்கணும் - கண்டிப்பா அவருக்கே சிரிப்பு வரும்.. நாம பத்தி பாட்டு எழுத கூட ஒரு ஆள் இருக்காங்களேன்னு ரொம்ப சந்தோஷபடுவர்... எல்லாரும் அவரை பற்றி வசை பாடினால் அதை அப்படியே நீங்க கவி பாடிடீங்க சார்... வாழிய உங்கள் கவி சேவை... இன்னும் பல சுவாரஸ்யமான கவி பாடல்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்....நன்றி சார்!//

    கவலையே படாதீங்க! நான் சும்மாயிருந்தாலும் என்னைச் சும்மா இருக்க விடாம யாராவது மாத்தி மாத்தி என்கிட்டே வசமா மாட்டிக்கிட்டே தான் இருப்பாங்க! நீங்களும் வந்து வாசிச்சிட்டே இருங்க! மிக்க நன்றி! :- )))))

    ReplyDelete
  24. தனுஷ் மாதிரி சினிமால உங்களுக்கு நல்ல சான்ஸ் இருக்கு.. :)

    ReplyDelete
  25. //@மாதேவி said...

    :))))))))

    நன்றி!

    //@அபி said...

    தனுஷ் மாதிரி சினிமால உங்களுக்கு நல்ல சான்ஸ் இருக்கு.. :)//

    ஆஹா! தங்கள் சித்தம் என் பாக்கியம்! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  26. அவர் அப்படியொன்றும் அசடில்லை......கலைகள் பதிவு....


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!