என்ன பாடு படுத்திவிட்டதய்யா இந்த நிலநடுக்கம்?
ஏப்ரல் 11 அன்று அலுவலகம் போகவில்லை என்றாலும், வழக்கத்தை மாற்ற முடியாமல் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தேன். நண்பகல் 12 முதல் 2 மணிவரைக்கும் மின்வெட்டு என்பதால், அந்த இரண்டு மணி நேரமும் பொதுவாக யாரும் கனவில் வருவதில்லை. அப்படியொரு முறை மின்வெட்டில் கனவு வந்ததும் திடுக்கிட்டு விழித்துவிட்டேன். பின்னே? ஓரிரு நாட்கள் கழித்து கே-டிவியைப் பார்த்தபோதுதான், கனவில் வந்தவர் பெயர் கே.என்.கோமளம் என்ற பழைய காலத்து நடிகை என்று அறிந்து கொண்டேன். (என் அட்ரஸ் அவருக்கு எப்படிக் கிடைத்தது என்றுதான் புரியவில்லை.)
ஆனால், ஏப்ரல் 11 அன்று நடந்ததே வேறு! ’ரெடி’ படத்தில் பஸ்ஸின் மீது ஆடுவது (?) போல என் கட்டிலின் மீது ‘தின் கா சிக்கா.. தின் கா சிக்கா.. தின் கா சிக்கா.. தின் கா சிக்கா..ஹே..ஹேஹே..ஹே! ஹே..ஹேஹே..ஹே!’ என்று அசின், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், கரீனா கபூர் என்று ஒரு பெரிய பட்டாளமே ஆடுவதுபோல ஒரு உணர்வு.
’ஆடுறதுதான் ஆடறீங்க, கட்டிலை விட்டுக் கீழே இறங்கி அலேக்ரா மாதிரி ஒரு பாட்டுக்கு ஆடலாமில்லே?’ என்று தூக்கத்திலும் எனது ஸ்ரேயாசையை, அதாவது பேராசையை விடாமல் நான் முணுமுணுத்தேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில் எனது கட்டிலும் ஆட ஆரம்பித்ததும்தான், நான் சட்டென்று கண்விழித்தேன். துவைத்து ஹாங்கரில் காயப்போட்டிருந்த எனது பேண்ட் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. மேஜையில் வைத்திருந்த ஏர்டெல் தொலைபேசியின் கேபிள்கள் ’தின் கா சிக்கா தின் கா சிக்கா’ என்ற பாட்டுக்கு ஏற்றமாதிரி ஆடியது. அதே சமயம், வெளியே யாரோ திபுதிபுவென்று ஓடுவது போல சத்தம் கேட்டது. என்ன ஆச்சு?
’தூக்கம் போச்சே’ என்று முணுமுணுத்தவாறே சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்கியதும், வாசலருகே கீழ்வீட்டு ராமாமிர்தம் வழக்கத்தைவிட அதிகமாகவே திருட்டுமுழி முழித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன்...
”என்ன சார்? ஆட்டம் எப்படி இருந்திச்சு?” என்று அவர் கேட்டதும் நான் அதிர்ந்து விட்டேன். இவருக்கு எப்படி நான் ‘தின் கா சிக்கா...தின் கா சிக்கா’ ஆட்டம் பார்த்தது தெரியும்?
”சார், உங்க வீட்டு மாமி சொன்னதை வைச்சு உங்களையும் என்னை மாதிரியே ஒரு வடிகட்டின இடியட்னு நினைச்சிட்டிருந்தேன். எப்படி சார் கண்டுபிடிச்சீங்க? உங்களுக்கு இந்த மாதிரி எத்தனை சித்தி தெரியும் சார்?”
”ஒரே ஒரு சித்தி, அம்பத்தூரிலே இருந்தா, அவளும் போயிட்டா! நான் ஆட்டம்னு கேட்டது....”
அவர் முடிப்பதற்குள், செல்போன் மணியடித்தது. வைத்தி!
”டேய் சேட்டை, மத்தியானம் இரண்டு மணிக்கு எங்கடா இருந்தே?”
”ஏண்டா, ரெண்டு மணிக்கு யாராவது சுரேந்திரனை மர்டர் பண்ணிட்டாங்களா?”
”டேய், டோண்ட் ஜோக்! நாங்கல்லாம் தெருவிலே நிக்கிறோண்டா! தெரியுமா?”
”அப்படியா? ஒரு நா இல்லாட்ட ஒரு நா நீ தெருவுலே நிப்பேன்னு எனக்கு எப்பவோ தெரியுண்டா!”
”மகாபாவி, சென்னையிலே நிலநடுக்கம் வந்திருக்கு!”
”என்னது நிலநடுக்கமா? யூ மீன் எர்த் க்வேக்?”
”எதுக்குடா மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழிலயும் இங்கிலீஷ்லயும் கேட்டுக் கழுத்தறுக்கிறே? வீட்டுலே இருக்கியே, விசாரிக்கலாமுன்னு கூப்பிட்டா, வழக்கம்போல இப்பவும் ஜிங்குஜிக்கா ஜிங்குஜிக்கான்னு துள்ளறியே!”
”அது ஜிங்குஜிக்கா இல்லேடா! தின் கா சிக்கா!”
”ரொம்ப முக்கியம்! சுரேந்திரன் போனை எடுக்க மாட்டேங்குறான்! அவனுக்குப் போன் பண்ணி பத்திரமா இருக்கானான்னு கேளு!”
”உசிரோட இருந்தாக் கேட்டுத் தகவல் சொல்றேன்.”
”டேய்ய்ய்ய்ய்ய்!” வைத்தி பேச்சைத் துண்டித்தான். என்ன செய்வது, சுரேந்திரனின் நம்பரைப் போட்டுப் பேசினேன்.
”ஹலோ, பறையூ!” என்று சுரேந்திரன் குரல் கேட்டது.
”இப்ப எங்கடா இருக்கே?”
”வடபழனி ஹண்டரட் ஃபீட் ரோடு? எந்து பற்றி?”
”வடபழனியா? அங்கே நல்ல நாள்லே நடந்துபோனாலே நிலநடுக்கம் மாதிரித்தான் இருக்கும். அவ்வளவு பள்ளம். டேய், கொஞ்ச நேரம் முன்னாடி நிலநடுக்கம் வந்துச்சாம். தெரியுமா?”
”ஆணோ? எனிக்கு அப்போழே சம்ஸயம் உண்டாயிருன்னு! எந்தா, வண்டி ஓட்டிட்டிருக்கும்போதே திடீர்னு ரொம்ப ஆடுதேன்னு...”
”டேய், உன் வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்தினாலும் அது ஆடிக்கிட்டுத்தான் இருக்கும்! நீ பத்திரமா இருக்கேல்ல, அது போதும்! சென்னை முழுக்க நிலநடுக்கம்னு எல்லாரும் பயந்து நடுங்கிட்டிருக்காங்க! நீ வேறே உன் வண்டியை ஓட்டிக்கிட்டுப் போயி கலவரத்தைப் பெரிசாக்கிடாதே!”
பேசிமுடித்துவிட்டுப் பார்த்தபோது, ராமாமிர்தம் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்.
”பூஜா! உங்க வீட்டுலே ஆட்டம் வந்ததா?”
”ஹேமா! உங்க வீட்டுலே ஆட்டம் வந்ததா?”
”சரண்யா, உங்க வீட்டுலே ஆட்டம் வந்ததா?”
பல்லைக் கடித்துக்கொண்டேன். நிலநடுக்கத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு ஃபிகர் வீட்டுக்கதவையும் தட்டி, இவர் பண்ணுகிற அலப்பறையை எப்படியாவது நிறுத்தணுமே? என்ன செய்யலாம்?
தூரத்தில் பாகீரதி ஆண்ட்டி ஆட்டோவிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.
”ஆண்ட்டி, உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே!” பதட்டமாய் விசாரித்தேன். “ஊரெல்லாம் நிலநடுக்கம்னு ஒரே கலவரமா இருக்கு.”
”எனக்கு ஒண்ணுமே தெரியலையே!”
’எப்படித் தெரியும், நிறைய பேரு பூகம்பம் வந்ததுக்கே உங்க மேலேதான் சந்தேகப்பட்டுக்கிட்டிருப்பாங்க’ என்று மனதுக்குள் எண்ணினாலும்...
”நல்லதுதான்! ஆனாலும் ஆண்ட்டி, ராமாமிர்தம் அங்கிள் மாதிரி ஒருத்தரைப் பார்க்கிறது அபூர்வம். ஒவ்வொரு வீடாப் போயி, அதுவும் வயசுப்பொண்ணுங்க இருக்கிற வீடாப் போயி எவ்வளவு அக்கறையோட விசாரிக்கிறாரு பாருங்க!”
பாகீரதி ஆண்ட்டி ராமாமிர்தத்தை முறைத்துப் பார்த்தாள்.
”ஓஹோ! என்னை மாம்பலத்துக்கு அனுப்பிட்டு, இந்த மனுசன் இந்த வேலை பண்ணிண்டிருக்காரா? கவனிச்சுக்கிறேன்!”
மாமி படியேறுவதைப் பார்த்த ராமாமிர்தத்தின் முகம், ‘3’ படத்தை முதல்காட்சி பார்த்ததுபோல வெளிறிப்போனது. ‘ராமாமிர்தம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பஞ்சாமிர்தம் ஆகப்போகிறார்! உண்மையான நிலநடுக்கம் இனிமேல் தான் அவருக்கு!
சாயங்காலம் பார்த்தால் அவரிடம் கண்டிப்பாய் விசாரிக்க வேண்டும்.
”என்ன சார்? ஆட்டம் எப்படி இருந்திச்சு?”
wow :-) welcome!
ReplyDeleteவா தலைவா... எப்படி இருக்குற...?
ReplyDeleteBack to form...Great as usual :-)
ReplyDeleteஏமாண்டி ரிங்கு ரிங்க லேதா
ReplyDeleteஆடிய ஆட்டத்தை எங்ககிட்ட பகிர்ந்துகிடணும்னு ஓடோடி வந்திருக்கும் சேட்டைத் தம்பிக்கு அன்பான வரவேற்பு.
ReplyDeleteரொம்ப மிஸ் செஞ்சிட்டோம். இனி நகைச்சுவை கொப்பளிக்கும் பதிவுகள் தொடரட்டும்.
நீண்ட நாளைக்குப் பின்னர் தங்கள் வருகை
ReplyDeleteஎங்களை மகிழ்வுப் படுத்துகிறது...
வாருங்கள் வாருங்கள் நல்வரவு..
சேட்டையை மீண்டும் எழுத வைத்த அந்த நில நடுக்கத்துக்கு நன்றி.
ReplyDeleteகாணாமல் போன சேட்டை மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.
வணக்கம் சேட்டை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இடுகை! Welcome Back! தொடர்ந்து எழுதுங்கள். நிலநடுக்கம் உங்களை மீண்டும் வலையுலகிற்கு வரவைத்ததில் மகிழ்ச்சி!
ReplyDeleteவெல்கம்பேக் பாஸ்..!!
ReplyDeletewelcome back :)
ReplyDeleteவருக! வருக! உங்களை வரவைத்த தின் கா சிக்கா. பூகம்பமே நீ வாழ்க....
ReplyDeleteஉங்கள் வரவழைக்க உலகம் அடிய திருவிளையாடல்களுள் ஒன்று இந்த பூகம்பம்
ReplyDeleteஇவ்வளவு நாள் பதிவுலகத்துக்கு வராமல் இருந்தால் கே.என்.கோமளம் தான் கனவில் வருவாங்க.
ReplyDeleteமீண்டும் உங்க சேட்டை ஆரம்பமா?
வாருமைய்யா...!!!!
ReplyDeleteகாணாமல் போன சேட்டை மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeletehapada... U R back.. Thanks to God.. we missed u !
Ummmaa ! I am so happy.. Settai..
ராமாமிர்தம் பஞ்சாமிர்தம் ஆகப் போகிறார்... ‘தின் கா சிக்கா...தின் கா சிக்கா’ என்று ஒரிஜினல் சேட்டை வரிகளை வெகுநாளைக்குப் பின் கண்டதில் மகிழ்ச்சி. இப்பவாவது (என் வேண்டுகோளை ஏற்று) எழுத உங்களுக்கு மனசு வந்ததே... ரெட் கார்பெட் வெல்கம் அண்ட் தாங்ஸ்ண்ணா...
ReplyDeleteஉங்களைக் காணாமல் எவ்வளவோ நாட்கள் நான் வருந்தி அழுதுள்ளேன்.
ReplyDeleteமீண்டும் மீண்டு வந்ததில் என் மனது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.
மிக்க நனி, நண்பரே!
happy to see you back...
ReplyDeleteமிக்க நன்றி... நண்பரே! என்று நான் டைப் செய்யும் போது, அவசரத்த்தில் சந்தோஷத்தில் நன்றி என்பது நனி என சுருங்கி விழுந்து விட்டது.
ReplyDeleteஎழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.
அடடே!
ReplyDeleteவாங்க நலமா?
ஆட்டம் பலமா தான் இருந்துச்சி, போங்க.
நிலநடுக்கம் உங்களை மீண்டும் பதிவுலகத்துக்கு கொண்டு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து நகைச்சுவைகளை தந்து அசத்துங்கள்.
ReplyDeletewelcome....back.....
ReplyDeleteவாங்க.. வந்து நல்லா ஆடுங்க..
ReplyDeleteSema settaikkara attam!
ReplyDeleteWelcome back.
ReplyDelete//’எப்படித் தெரியும், நிறைய பேரு பூகம்பம் வந்ததுக்கே உங்க மேலேதான் சந்தேகப்பட்டுக்கிட்டிருப்பாங்க’ என்று மனதுக்குள் எண்ணினாலும்..//
ReplyDelete// மாமி படியேறுவதைப் பார்த்த ராமாமிர்தத்தின் முகம், ‘3’ படத்தை முதல்காட்சி பார்த்ததுபோல வெளிறிப்போனது.//
// ‘ராமாமிர்தம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பஞ்சாமிர்தம் ஆகப்போகிறார்!//
//சாயங்காலம் பார்த்தால் ”என்ன சார்? ஆட்டம் எப்படி இருந்திச்சு?”//
மிக மிக ரசித்த வரிகள்...மீண்டும் வருக சேட்டை...இனி காணாமல் போனால் சுனாமிதான்!
வாங்க,வாங்க,நிஜமா சொல்றேங்க இன்னும் இந்த போஸ்ட் படிக்கலா,இனிமேதான்.,நீங்க திரும்ப வந்தது அவ்ளோ சந்தோசம்.நீங்க எழுதாம விட்டாத தவிர,நீங்க எழுதாதப்போ உங்க பிளாக் பக்கம் வரவே முடியல.,அது இன்னும் வருத்தமா போச்சு.அப்போப்போ எழுதுங்க .,
ReplyDeleteவந்தாச்சு வந்தாச்சு எங்க அண்ணன் சேட்டை வந்தாச்சு.. இனி களை கட்டுட் எங்கண்ணின் சேட்டை....
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புறம் வந்ததினால இப்படி ரொம்பவே சிரிக்க வைக்கணுமா?
ReplyDeleteநான் உங்கள் புது வாசகி.. நிலநடுக்கம் வந்த போது நான் அங்கே இல்லை ஆனால் நீங்கள் பகிர்ந்து கொண்ட முறை நகைச்சுவையாக வேடிக்கையாக இருந்தது..
ReplyDeleteஅன்பரே நலமா! வந்ததும் முதல் பதிவே சேட்டைதான்! வருக வருக! தருக தருக! சா இராமாநுசம்
ReplyDeleteதிரும்ப வந்ததில் மகிழ்ச்சி தலைவரே.......... வந்ததுமே அமர்க்களமான பதிவு..............!
ReplyDeletewelcome back sir, awesome writing up
ReplyDeletevery talented satirical writing. சும்மா வூடு கட்டி விளயாடு நைனா! நிறுத்த மட்டும் செய்யாதே!
ReplyDeleteஇந்த நான்கு மாதங்களில் எத்தனை தனிமடல்கள், எத்தனை தொலைபேசி அழைப்புகள், நேரில் சந்தித்தபோது எத்தனை செல்லமான கண்டனங்கள், ஆறுதல்கள்…! உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி சொல்ல எனக்குத் தெரிந்த ஒரே வழியாக, இனி முடிந்தவரைக்கும், முன்போல முடியாமல் போனாலும், அவ்வப்போது எதையாவது எழுதுவதே சரி என்று கருதி வந்திருக்கிறேன். உங்கள் அத்தனை பேருக்கும், குறிப்பாக விக்கியுலகம் வெங்கட்குமார், மின்னல்வரிகள் கணேஷ் ஆகியோரது இடைவிடாத தூண்டுதல்களும், உற்சாகமூட்டும் வார்த்தைகளும்தான் மீண்டும் இங்கு நான் வரக்காரணமாய் இருந்தவை.
ReplyDeleteஅனைவருக்கும் எனது நெகிழ்ச்சியான நன்றிகள்! இந்த இடுகையை வாசித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும்....
@சுபத்ரா
@Philosophy Prabhakaran
@Speed Master
@புதுகைத் தென்றல்
@மகேந்திரன்
@கக்கு - மாணிக்கம்
@வெங்கட் நாகராஜ்
@சேலம் தேவா
@Elango
@வீடு சுரேஸ்குமார்
@நீச்சல்காரன்
@வேங்கட ஸ்ரீனிவாசன்
@பட்டாபட்டி....
@ரிஷபன்
@ கணேஷ்
@வை.கோபாலகிருஷ்ணன்
@Thuvarakan
@சத்ரியன்
@கோவை2தில்லி
@NAAI-NAKKS
@த. ஜார்ஜ்
@middleclassmadhavi
@முகுந்த் அம்மா
@ஸ்ரீராம்.
@கோகுல்
@சங்கவி
@கே. பி. ஜனா...
@ savitha
@புலவர் சா இராமாநுசம்
@பன்னிக்குட்டி ராம்சாமி
@இரவு வானம்
@esskae59
அனைவருக்கும் இருகரம் கூப்பி எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊருக்கும் உலகத்துக்கும் மிகவும் தேவையான கருத்துக்களை இனி எதிர்பார்க்கலாம்....!!!! வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteபூமி ஆடினாத்தான் சேட்டையும் வருவார்:)))))) மகிழ்ச்சி.
ReplyDelete"ராமாமிர்தம் பஞ்சாமிர்தம் ஆகப் போகிறார்".....:))
மீண்டும் வருக!சேட்டைகளை தருக!
ReplyDeleteசெம!
ReplyDelete