Thursday, August 18, 2011

பல்பு வாங்கலியோ பல்பு


ஆக, தேசமெங்கணும் மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாது, செவ்வியருமையும் பாராது, அவமதிப்பும் கொளாது அண்ணாவின் ஆணையை ஏற்று உண்ணாவிரதங்களிலும் ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு "ஊழலை ஒழிக்காமல் ஓய மாட்டோம்," என்று சூளுரைத்த கொள்கைச் சிங்கங்களுக்கு, பலவிதமான பல்புகளைப் பரிசாக அளிக்கவிருக்கிறதாம் அண்ணாவின் பஜனைகோஷ்டி!

சந்தேகமாயிருப்பின், இன்று மாலை மட்டும் வந்த செய்திகளை சாம்பிள்களாக வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பல்பு.நம்பர்.1: ஜன்லோக்பால் மசோதாவில் நீதித்துறையைக் கொண்டுவருவது குறித்து அண்ணாவின் பஜனைகோஷ்டி வற்புறுத்தாது.

தற்போதைய பாராளுமன்றத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் Judicial Accountability Bill போதுமானதாக இருக்கும்பட்சத்தில், ஜன்லோக்பாலில் நீதித்துறையைக் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம் என்று அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அட, இதைத்தானே மத்திய அரசு நான்கு மாதங்களாக மாங்கு மாங்கென்று சொல்லிக்கொண்டிருந்தது?

நீதிபதிகள் வெங்கடசலையா, ஜே.எஸ்.வர்மா முதற்கொண்டு பல சட்டவல்லுனர்கள் ஜன்லோக்பாலில் நீதித்துறையைக் கொண்டு வரக்கூடாது என்று எப்போதோ சொன்னார்களே?

'அப்போதெல்லாம் கேட்காமல் அடம்பிடித்த அண்ணாவின் குழுவின் இந்த அந்தர் பல்டிக்குக் காரணம் என்ன?’ என்று கேட்கிறீர்களா?

அப்படிக் கேட்பவர்கள் எல்லாரும் காங்கிரஸின் கைக்கூலிகள்! தேசத்திலிருந்து ஊழலை விரட்டக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறவர்கள். நாங்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டுகிற பணத்தைக் கொண்டுபோய் லஞ்சம் என்ற பெயரில் கொடுத்தாலும் கொடுப்போமே தவிர, அண்ணா ஹஜாரேயின் ஜன்லோக்பாலை நிறைவேற்ற விட மாட்டோம் என்று அழும்பு பண்ணுகிற பிடிவாதக்காரர்கள் - என்று நான் சொல்லவில்லை; அண்ணாவின் பஜனை கோஷ்டி சொல்வார்கள் ஜாக்கிரதை!

பல்பு.நம்பர்.2. சரி, நீதித்துறையை விலக்கினால் விலக்கி விட்டுப்போகிறார்கள். ’என்ன ஆனாலும் சரி, லோக்பால் மசோதாவில் பிரதம மந்திரியை உட்படுத்தியே ஆக வேண்டும்,’ என்று அண்ணா ஹஜாரே முழங்கி வந்திருக்கிறார் அல்லவா? அப்படி, லோக்பாலில் பிரதமரைக் கொண்டுவந்தாலும் போதுமே என்று அண்ணாவின் சீடர்கள் பெருமூச்சு விடுகிறீர்களா?

ஐயோ பாவம்! ’நான் நினைத்தால் அண்ணா ஹஜாரேயிடம் பேசி பிரதமரை லோக்பாலுக்குள் கொண்டுவராமல் இருக்க முடியும்," என்று கர்நாடகாவின் முன்னாள் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியிருக்கிறார்.

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, ஜன் லோக்பால் மசோதா வரைவுக்கு வடிவம் கொடுத்ததில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதை அனைவரும் அறிவார்களே? :-)


என்னது இது? பிரதமரும் வர மாட்டார்; நீதித்துறையும் வராது என்றால் இந்த ஜன் லோக்பாலுக்கும் அரசின் லோக்பாலுக்கும் என்ன வித்தியாசம்? அப்புறம் எதற்கு இந்த உண்ணாவிரத நாடகம்? என்று கேட்கிறீர்களா?

இதோ........

பல்பு.நம்பர்.3: அண்ணா ஹஜாரே ’சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லை; காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்," என்று கிரண் பேடி அறிவிப்பு

திஹார் சிறையில் இருந்து கொண்டு எல்லா நிபந்தனைகளையும் தளர்த்தினால் தான் வெளியே வருவேன் என்று கொள்கைப்பிடிப்போடு இருந்த ஊழலை ஒழிக்க வாராது வந்த மாமணியாம் நமது அண்ணா ஹஜாரே, முன்று நாட்களா முடியாது, ஒரு வாரமா, ஒப்புக்கொள்ள மாட்டேன், பதினைந்து நாட்களா, பக்கத்திலேயே வராதே என்றெல்லாம் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் என்பதற்கு ஒப்புக்கொண்டார்.

பிறகு, மருத்துவப்பரிசோதனை முடிந்தபிறகு, சாவகாசமாக பதினைந்து நாட்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை; காலவரையற்ற உண்ணாவிரதம். இடையில் அண்ணாவின் உடல்நிலையைப் பொறுத்து, அவரை மருத்துவமனைக்கு (உண்ணாவிரத்தை நிறுத்தி) எடுத்துச் செல்லவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று அதே கிரண் பேடி சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் இது அண்ணா ஹஜாரே பில்ட்-அப் பண்ணியது போல "சாகும்வரை உண்ணாவிரதம் இல்லை," என்பது உறுதியாகி விட்டதா என்று கேட்டால், அதுவும் இல்லை. ஒரு வேளை அண்ணா ஹஜாரே இன்று ஒப்புக்கொண்டதுபோல, பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால், அவரது வயது காரணமாக, அவரது உடல்நிலை சீர்குலைய வாய்ப்பிருக்கிறது என்பதனை அனைவரும் அறிவோம். பதினைந்தே நாட்களில் இப்படியென்றால், காலவரையற்ற உண்ணாவிரதம் என்றால் அவரது உடல்நிலை தாக்குப்பிடிக்குமா? என்று கேட்கிறீர்களா?

"அண்ணாவின் உடல்நிலை சீராக இருக்கும்வரைக்கும் உண்ணாவிரதம் தொடரும். அவரது உடல்நிலை சீர்குலைய அனுமதிக்க முடியாது," என்று கிரண் பேடி கூறியிருக்கிறார். அதாவது, சாகும்வரை உண்ணாவிரதம் என்று சொன்னதெல்லாம் சும்மா லுல்லுலாயிக்கு, அவரால் முடியாமல் போனால் உடனே மருத்துவ உதவியளிப்போம் என்பது தான் இதன் பொருள்.

அடடா, என்னாச்சு நமது கொள்கை வீரர்களுக்கு? நாடே பொங்கிப் பூரித்துக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தை நழுவ விட்டு விட்டார்களே? இப்படி எல்லாவற்றிற்கும் சமரசம் செய்து கொள்ளவா கடைகடையாய் ஏறி, மூவர்ணக்கொடி, காந்தி தொப்பி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி(மெழுகுவர்த்தி கொளுத்தத்தான்!) வாங்கி, "பாரத் மாதா கீ ஜே! வந்து ஏமாத்தறோம் அதாவது வந்தே மாதரம்" என்றெல்லாம் கோஷம் போட்டோம் என்று தலைதலையாய் அடித்துக் கொள்கிறீர்களா? கவலைப்படாதீங்க!

அர்விந்த கேஜ்ரிவால் சொல்லிட்டாரு: "அண்ணாவுக்கு உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனீங்க, அப்பாலே நடக்குறதே வேறே!"

/The RTI activist and team Hazare member, Arvind Kejriwal, also said if Anna Hazare is forcibly taken away from the Ramlila Maidan on the grounds of ill health then the social activist would even stop drinking water.//

அதாவது, கிரண் பேடி என்ன சொல்றாங்கன்னா, அண்ணாவின் உடல்நிலை மோசமானால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம் என்று! அர்விந்த் கேஜ்ரிவால் என்ன சொல்றாருன்னா, அண்ணாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், மற்ற செயல்வீரர்கள் தண்ணீர் குடிப்பதை நிறுத்துவார்கள் என்று!

அவுங்களுக்குள்ளேயே அடிச்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க டோய்!

எப்படி, நல்லாயிருக்கா காமெடி? :-))

இன்னும் தொடர்ந்து இந்த மாதிரி காமெடி நிறையா நடக்கும். பார்த்துக்கினே இருங்க!

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், பொதுமக்களே, நீங்கள் தேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையாய்க் கருதி, கூட்டம்போட்டு, கொடிபிடித்து, பல்பு மீது பல்பு வாங்குமாறு, அதாவது வெற்றி மீது வெற்றி காணுமாறு அண்ணாவின் பஜனை கோஷ்டி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Flash News ( SETTAI SPECIAL)

பல்பு.நம்பர்: 4

"அண்ணா ஹஜாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஒருபோதும் சொன்னதில்லை" என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். :-))

On Anna’s indefinite strike Kejriwal said “Anna uses the word indefinite fast because it is more spiritual”. He added that Anna never used the word fast-unto-death.

பல்பு. நம்பர்.5: அண்ணாவின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சாகும்வரை உண்ணாவிரதம் என்று ஊடகங்கள் செய்தி பரப்பி விட்டன அர்விந்த் கேஜ்ரிவால்!

http://expressbuzz.com/nation/%E2%80%98fast-may-go-beyond-the-period%E2%80%99/305720.html

"He blamed the media for using the word fast unto death."

ஊடகங்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.


இந்த பல்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :-))

27 comments:

  1. சேட்டை, எப்படி இப்படி யோசிக்கிறீங்க?
    இவ்விஷயத்தில் நீங்கள் சற்று குதர்க்கமாக யோசிப்பது போல தோன்றுகிறது.
    உங்கள் ஊகங்கள் உண்மையாகும் பட்சத்தில், "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்" என்று மக்களிடம் ஒரு வெறுப்புணர்ச்சி மேலோங்கும்.

    ReplyDelete
  2. நல்லா பிலிமு காட்டரானுன்கப்பா. இத்தினி நாலு இவனுங்கலேல்லாம் எங்கே இருந்தானுன்களோ தெரியல்லை.
    சேட்டை நல்ல பதிவு உமது டச்சுடன்.

    ReplyDelete
  3. //டக்கால்டி said...

    சேட்டை, எப்படி இப்படி யோசிக்கிறீங்க?//

    என்னை எங்கே யோசிக்க விடுறாங்க நண்பரே? அத்தனையும் செய்திகள்! சுட்டி கொடுத்திருக்கிறேனே பார்க்கவில்லையா?

    //இவ்விஷயத்தில் நீங்கள் சற்று குதர்க்கமாக யோசிப்பது போல தோன்றுகிறது.//

    மன்னிக்கவும். பிரதமரும், நீதித்துறையும் ஜன்லோக்பால் சட்டத்தில் வர வேண்டும் என்பதற்காகத்தானே இத்தனை போராட்டமும்? இன்று அதெல்லாம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று அவர்களே சொல்வது நம்பிய தொண்டர்களை முட்டாள்களாகக் கருதுவதுபோல உங்களுக்குத் தெரியவில்லையா? அதை விட எனது குதர்க்கமா உங்களது கண்களுக்குப் படுகிறது..?

    //உங்கள் ஊகங்கள் உண்மையாகும் பட்சத்தில், "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்" என்று மக்களிடம் ஒரு வெறுப்புணர்ச்சி மேலோங்கும்.//

    ஆதாரபூர்வமாக, அவர்கள் தங்களது சாயத்தைத் தாங்களே வெளுத்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுவது நம் கடமை. இல்லாவிட்டால், தொடர்ந்து நம்பி மக்கள் ஏமாந்து கொண்டிருப்பார்கள். அது பரவாயில்லையா?

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. //கும்மாச்சி said...

    நல்லா பிலிமு காட்டரானுன்கப்பா. இத்தினி நாலு இவனுங்கலேல்லாம் எங்கே இருந்தானுன்களோ தெரியல்லை.//

    நான்தான் ஆரம்பத்திலிருந்தே இவர்கள் சொதப்பல் கேஸ்கள் என்று எழுதி வருகிறேனே? :-) இவர்களது போராட்டம் இப்படித்தான் முடியும் என்பதால்தான் இதை திரும்பத் திரும்ப "கேலிக்கூத்து," என்று சொல்லி வந்தேன்.

    இதில் ஏமாந்தவர்கள் யார் என்றால், நம்பி இன்னும் களத்தில் இருப்பவர்கள் தான்.

    //சேட்டை நல்ல பதிவு உமது டச்சுடன்//

    இன்று பலர் என்னைத் திட்டலாம். ஆனால், பின்னொரு நாளில் சேட்டை சொன்னது சரியாகிவிட்டது என்று யோசிப்பார்கள். அது போதும் எனக்கு.

    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  5. இன்று பலர் என்னைத் திட்டலாம். ஆனால், பின்னொரு நாளில் சேட்டை சொன்னது சரியாகிவிட்டது என்று யோசிப்பார்கள். அது போதும் எனக்கு.//

    Even i thought the same.. :-)

    ReplyDelete
  6. லோக்பால் நிறைவேற்றப்படுவதால் ஊழல் கொஞ்சம் கூட கட்டுப்படுத்தப்படாதா சேட்டை?

    ReplyDelete
  7. முதலில் அவர் மேல் மதிப்பு இருந்தது. ஆனால் எபோல்லுது முன்னுக்குப் பின் முரணாக பேச ஆரம்பித்தாரோ அப்பொழுதே மதிப்பு போய் விட்டது...

    சும்மாவே ஆடுவ, உனக்கு இப்ப சலங்கையும் கட்டிவிட்டுட்டாங்க. நடத்து நீ

    ReplyDelete
  8. //! சிவகுமார் ! said...

    லோக்பால் நிறைவேற்றப்படுவதால் ஊழல் கொஞ்சம் கூட கட்டுப்படுத்தப்படாதா சேட்டை?//

    நிச்சயமாகக் கட்டுப்படுத்தப்படும்! ஆனால் முற்றிலும் ஒழிக்க சட்டத்தால் மட்டும் முடியாது.

    ReplyDelete
  9. //எல் கே said...

    முதலில் அவர் மேல் மதிப்பு இருந்தது. ஆனால் எபோல்லுது முன்னுக்குப் பின் முரணாக பேச ஆரம்பித்தாரோ அப்பொழுதே மதிப்பு போய் விட்டது...//

    சேம் பிளட்!

    //சும்மாவே ஆடுவ, உனக்கு இப்ப சலங்கையும் கட்டிவிட்டுட்டாங்க. நடத்து நீ//

    கார்த்தி, எந்தத் தனிமனிதரைப் பற்றியும் ஆறு இடுகைகள் நான் எழுதியதில்லை. ஊழலை ஒழிக்கிறேன் பார் என்று மோடிமஸ்தான் வித்தை காட்டும் அண்ணாவின் பேச்சை நம்பி (இன்னும்) போராடிக்கொண்டிருப்பவர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

    ReplyDelete
  10. அவர் சாகும் வரை இருந்தா நல்லதுன்னு அரசியல்வாதிகள் நினைப்பார்கள்

    ReplyDelete
  11. போராட்டத்திற்கான காரணம் தான் முக்கியம் ,,போராடும் நபர் அல்ல ...

    ReplyDelete
  12. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

    அவர் சாகும் வரை இருந்தா நல்லதுன்னு அரசியல்வாதிகள் நினைப்பார்கள்//

    ராஜா, அண்ணா ஹஜாரேவின் போராட்டத்துக்கு முதலில் விதிக்கப்பட்ட 22 நிபந்தனைகளில் ஒன்று என்ன தெரியுமா? நாள் ஒன்றுக்கு மூன்று முறை அவரை ஒரு மருத்துவர் பரிசோதிக்க வேண்டும் என்பதுதான். அவரை சாகவிட்டால், இந்திய அரசுக்கும் காங்கிரசுக்கும் உலகளவில் மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படும்.

    //போராட்டத்திற்கான காரணம் தான் முக்கியம் ,,போராடும் நபர் அல்ல ...//

    சரி, போராட்டத்திற்கான காரணம் என்ன மிச்சமிருக்கிறது என்று இப்போதாவது யாராவது சொல்லுங்களேன். ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

    :-)))))))

    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரா,
    அண்மைக் காலமாக என் இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வலைப் பக்கம் வர முடியலை.
    தற்போது மீண்டும் வந்திட்டேன்,
    எப்படி இருக்கிறீங்க சகோ?

    ReplyDelete
  14. ஆக, தேசமெங்கணும் மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாது, செவ்வியருமையும் பாராது, அவமதிப்பும் கொளாது அண்ணாவின் ஆணையை ஏற்று உண்ணாவிரதங்களிலும் ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு "ஊழலை ஒழிக்காமல் ஓய மாட்டோம்," என்று சூளுரைத்த கொள்கைச் சிங்கங்களுக்கு, பலவிதமான பல்புகளைப் பரிசாக அளிக்கவிருக்கிறதாம் அண்ணாவின் பஜனைகோஷ்டி! //

    ஆரம்பமே...அதிரடியா இருக்கு,

    ReplyDelete
  15. அண்ணா ஹாசரேயை வைத்து அரசியல்வாதிங்கள் காமெடி பண்ணுறாங்க போல இருக்கே.

    ReplyDelete
  16. >>எப்படி, நல்லாயிருக்கா காமெடி? :-))

    enna என்ன கேள்வி? செம கலக்கல் தான்

    ReplyDelete
  17. எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க... சான்சே இல்ல....

    சேட்டை சேட்டைதான்....

    ReplyDelete
  18. எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க...

    கலக்கல்... எங்களால் இப்படி யோசிக்க சான்சே இல்ல....

    சேட்டை களை கட்டுது.....

    ReplyDelete
  19. //பல்பு வாங்கலியோ பல்பு//

    பல்பு நெறைய வச்சிருக்கிறார் போல. வேணுங்கறவங்க வங்கிகங்க

    ReplyDelete
  20. நிரூபன் said...

    //வணக்கம் சகோதரா, அண்மைக் காலமாக என் இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வலைப் பக்கம் வர முடியலை. தற்போது மீண்டும் வந்திட்டேன்,//

    நான் கூட என்னாயிற்று என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதுதானா விஷயம்? வாங்க வாங்க சகோ! :-)

    //எப்படி இருக்கிறீங்க சகோ?//

    அண்ணா ஹஜாரே புண்ணியத்துலே நாளொரு நக்கலும் பொழுதொரு இடுகையுமா சூப்பராயிருக்கேன்! :-)

    //ஆரம்பமே...அதிரடியா இருக்கு,//

    ஆமா, ஆனா இது அண்ணாவோட போராட்டத்தைப் போல அசடுவழியாது; போகப்போக இன்னும் ஜாலியா இருக்கும் பாருங்க!

    //அண்ணா ஹாசரேயை வைத்து அரசியல்வாதிங்கள் காமெடி பண்ணுறாங்க போல இருக்கே.//

    அதைவிடவும், அண்ணா ஹஜாரே மக்களை வைச்சுப் பண்ணிட்டிருக்கிற காமெடியிருக்கே! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! முடியலே!

    மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  21. //சி.பி.செந்தில்குமார் said...

    என்ன கேள்வி? செம கலக்கல் தான்//

    வாங்க தல! மிக்க நன்றி! :-)

    //சங்கவி said...

    எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறீங்க... சான்சே இல்ல....//

    என்னை விடவும் மக்களை எப்படி முட்டாளாக்கலாமுன்னு ஒரு குரூப்பு தில்லியிலே உட்கார்ந்து யோசிக்கிறாங்களே நண்பரே? எனக்கு இப்படியொரு போட்டியா? :-))))))

    //கலக்கல்... எங்களால் இப்படி யோசிக்க சான்சே இல்ல.... சேட்டை சேட்டைதான்....//

    அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! கோபத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டு நக்கல் பண்ணிட்டிருக்கேன். அம்புட்டுத்தேன்.

    மிக்க நன்றி நண்பரே!


    //தமிழா தமிழா said...

    பல்பு நெறைய வச்சிருக்கிறார் போல. வேணுங்கறவங்க வங்கிகங்க//

    ஆமாங்க, கூடிய சீக்கிரம் அண்ணா பிராண்டு பல்பு மார்க்கெட்டுக்கு வந்து பிலிப்ஸ், ஆஷ்ரம் பல்பு எல்லாம் காணாமப்போயிடும் பாருங்க! :-)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  22. நல்ல பதிவு சேட்டை

    இல்லாத ஊருக்கு போகாத வழி சொல்றாரு அன்னா

    சரியா சொன்னீங்க...

    ReplyDelete
  23. ரெண்டு வாரம்னு சொல்லிட்டு இப்ப மசோதா நிறைவேறும் வரையுமாம்

    ReplyDelete
  24. ஜன லோக் பால் இருந்திருந்தால் 2G ஊழல் சுவான் டெலிகாம் 1661 கோடிக்கு வாங்கி 11000 கோடிக்கு வித்த உடனேயே கேஸ் போட்டு மொத்த ஏலத்தையும் கேன்சல் செய்திருக்கலாம். காமன் வெல்த் முறைகேட்டையும் அப்பொழுதே தடுத்திருக்கலாம்.

    பத்து இருபது கோடி செலவு செய்து எம் பி ஆனவங்க ஜன லோக் பாலை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது. நீங்க ஏன் வரிஞ்சி கட்டிக்கிட்டு எதுக்கிறீங்க.

    ReplyDelete
  25. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...

    நல்ல பதிவு சேட்டை! இல்லாத ஊருக்கு போகாத வழி சொல்றாரு அன்னா!! சரியா சொன்னீங்க...//

    அதே! அரசாங்கமாவது வெறும் அறிக்கைகளை விட்டு மக்களை முட்டாளாக்குகிறது என்றால், அண்ணா மக்களைத் தெருவுக்கு இழுத்து கோஷம்போட வைத்து முட்டாளாக்குகிறார். மிக்க நன்றி! :-)

    //எல் கே said...

    ரெண்டு வாரம்னு சொல்லிட்டு இப்ப மசோதா நிறைவேறும் வரையுமாம்//

    கார்த்தி, இது மெட்டி ஒலி, கோலங்கள் மாதிரி மெகா சீரியல். :-))
    அவ்வளவு சீக்கிரம் முடியாது. நன்றி கார்த்தி! :-)

    ReplyDelete
  26. //தமிழா தமிழா said...

    ஜன லோக் பால் இருந்திருந்தால் 2G ஊழல் சுவான் டெலிகாம் 1661 கோடிக்கு வாங்கி 11000 கோடிக்கு வித்த உடனேயே கேஸ் போட்டு மொத்த ஏலத்தையும் கேன்சல் செய்திருக்கலாம்.//

    அப்படீங்களாண்ணா? எப்புடீ, எந்தச் சட்டப்பிரிவுப்படின்னு கொஞ்சம் சொல்லறீங்களா? :-))

    அண்ணாவை ஆதரிக்கிறவர்களுக்கு இன்னும் ஜன்லோக்பால் சட்டம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை என்பதற்கு இன்னோர் உதாரணம். ஜன் லோக்பால் படி ரிலயன்ஸ் போன்ற நிறுவனங்களைத் தொடக்கூட முடிந்திருக்காது. அது தெரியுமா? :-))

    //காமன் வெல்த் முறைகேட்டையும் அப்பொழுதே தடுத்திருக்கலாம்.//

    ஹாஹா! செம ஜோக்! எந்த சட்டமும் ஊழல் நடப்பதை முன்கூட்டியே தடுக்க முடியாது. நடந்தபிறகு, விசாரித்து நடவடிக்கை எடுக்கத்தான் முடியும். புரியுதா? :-)

    //பத்து இருபது கோடி செலவு செய்து எம் பி ஆனவங்க ஜன லோக் பாலை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது. நீங்க ஏன் வரிஞ்சி கட்டிக்கிட்டு எதுக்கிறீங்க.//

    இதை புரட்சின்னு சொல்லிட்டு ஒரு கூட்டம் அண்ணாவுக்குப் பின்னாலே சுத்திட்டிருக்குதே, அதுலே ஒண்ணு ரெண்டு பேராவது திருந்த மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை. அம்புட்டுத்தேன்.

    நன்றிங்கண்ணா! நல்ல காமெடியா பின்னூட்டம் போட்டிருந்தீங்க! :-)

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!