Saturday, March 12, 2011

எலியானாலும் இலியானா!

நடுமண்டையில் உச்சிவெயில்விழ, நேற்று நரசிங்கபுரத்தில் கடைகடையாக ஏறி, எனது கணினிக்கு வேண்டிய சில வஸ்துக்களை வாங்கியபோது, பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டிருந்தேன். எல்லாம் எலியால் வந்த வினை. ஒரு எலி என் கணினிக்குள்ளே காரைக்குடி ரெஸ்டாரண்டுக்குள் நுழைவதுபோல நுழைந்து அங்கங்கே கடித்துத்தின்றுவிட்டு ’டிப்ஸ்’ மாதிரி சில கேபிள் துண்டுகளையும் விட்டுப்போயிருந்தது. அந்த எலியின் மீதிருந்த கோபத்தை ஒரு இடுகையாக எழுதினால்தான் தீருமென்று தோன்றியது.

அலைச்சல், செலவு என்று ஏகத்துக்கும் டென்ஷனுடன் சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷனை நோக்கி நடந்தபோது அலைபேசி ஒலித்தது.

அட, நம்ம ஜோசியர் நங்கநல்லூர் நரசிம்மன்!


"என்ன சேட்டைவாள்! மூணுநாளா ஒண்ணுமே எழுதாம இருக்கீரே? விச்சா இருக்கீரோன்னோ?"

"அதை ஏன் கேட்கறீங்கய்யா, எலிவந்து டேட்டா கேபிள், பவர் கேபிள் எல்லாத்தையும் கடிச்சுப்புட்டுதுங்க. இப்பத்தான் கடைகடையா ஏறி புதுகேபிள் வாங்கிட்டுப்போறேன். நாளைக்கு ஒரு இடுகைபோட்டுடறேன்."

"நான்தான் சொன்னேனே? உமக்கு பிளாகஹத்தி தோஷம் இருக்கு! அதான் எலியெல்லாம் அங்கங்கே வாயை வச்சிண்டிருக்கு. ஒரு அரைநாள் கேஷுவல் லீவுபோட்டுட்டு என்னை வந்து பாரும் ஓய்! மறக்காம ஜாதகத்தையும் எடுத்துண்டு வாரும்!"

"எலியோட ஜாதகமா?"

"நீர் திருந்தவே மாட்டீரா ஓய்? உம்ம ஜாதகத்தை எடுத்துண்டு வரச்சொன்னேங்காணும்!"

"சரி சார், என்னோட தோஷம் இருக்கட்டும். உங்க குரல் ஏன் இப்படியிருக்கு?"

"நேக்கு நாலுநாளா ஜலதோஷம்!" ஐயோ பாவம்!

நேற்று இரவு கணினியை ஒருவழியாக சரியாக்கிவிட்டு, இடுகை எழுத உட்காருமுன்னர், நங்கநல்லூர் நரசிம்மன் சொன்னது நினைவுக்கு வந்ததால், கண்களை மூடி ஒருகணம் கூகிளாண்டவரைப் பிரார்த்தித்தேன். பிறகு, வழக்கம்போல தேட ஆரம்பித்தேன். அப்போது....!

"சேட்டை! உன் பக்திக்கு மெச்சினேன்!!" என்று சாட்சாத் கூகிளாண்டவர் பிரசன்னமானார்.

"சாமி! நீங்களா...? முத்தைத்தருபத்தித் திருநகை...அத்திக்கிறை......!"

"ஸ்டாப் ஸ்டாப்! இதுக்கெல்லாம் டைமில்லை, எனக்கு நிறைய வேலையிருக்கு சேட்டை!"

"அப்ப சரி, எனக்கும் முழுசா தெரியாது."

"நரசிம்மன் சொன்னது சரிதான். உனக்கு நேரம் சரியில்லை. காரணமென்ன தெரியுமா?"

"என்ன சாமி?"

"இந்த உலகத்துலேயே ஸ்ரேயாவைப் பத்தி நாலு இடுகை எழுதின ஒரே கிறுக்கன் நீ தான்! ஆனா, நம்பினவங்களை நட்டாத்துலே விட்ட மாதிரி ரசிகர்மன்றத்தைக் கலைச்சிட்டியே! இனிமே என்னைப் பத்தி யாரு எழுதுவாங்கன்னு அந்தப் பொண்ணு நிறைய கிளிசரின் போட்டுக்கிட்டு அழுதிட்டிருக்கு! பெண்பாவம் பொல்லாதது சேட்டை! ஒரு பொண்ணோட சாபம்தான் உன்னை இந்தமாதிரி ஆட்டுவிக்குது! உன்னோட வலைப்பதிவோட கதை முடியப்போகுது. உன்னோட ஃபாலோயர்ஸ் எல்லாரும் கைவிடப்போறாங்க! டி.ராஜேந்தருக்கு தேர்தலிலே ஒட்டுப்போடுறவங்க கூட உன் இடுகைக்கு ஓட்டுப்போட மாட்டாங்க!"

"ஐயையோ, என்னாது ஆளாளுக்கு இப்படி பயமுறுத்துறீங்க?"

"இப்போ நீ என்ன பண்றே, மரியாதையா ஸ்ரேயாவைப் பத்தி ஒரு இடுகைபோட்டு நீ இழந்த நற்பெயரைத் திரும்பப் பெற முயற்சி பண்ணு. ஓ.கேவா?" என்று உத்தரவிட்டு மறைந்தார் கூகிளாண்டவர்.

ஏற்கனவே எலியால் பட்ட தொல்லை, பெண்பாவம் ஆகியவை போதாதென்று, இப்போது கூகிளாண்டவரின் சாபம் வேறா? சரி, பாவத்துக்குப் பிராயச்சித்தம் பண்ண வேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன். எலிக்கு எதிராக இடுகை போடுகிற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, எலிக்கு ஆதரவாக ஒரு இடுகை எழுத முடிவெடுத்தேன். அந்த நேரம் பார்த்து, திடீரென்று ஒரு பாட்டுச்சத்தம் கேட்டது:

"ஏறாதமலைமேலே.....ஏய்ய்ய்ய்ய்...எலந்தை பழுத்திருக்கு! எலந்தை பழுத்திருக்கு...!"

ஐயையோ, இந்த நேரத்தில் யார் இப்படி கீச்சுக்குரலில் பாடுகிறார்கள்? சுற்றுமுற்றும் பார்த்தேன். ஊஹும், யாரையும் காணோம்.

"ஏறி உலுப்பட்டுமா......ஆ..ஆ...ஆ..ஆ..! எசப்பாட்டு படிக்கட்டுமா?
எஞ்சோட்டுக்கண்ணுகளா...! எளவட்டம் பொண்டுகளா...!!"

திடீரென்று ஒரு பயம் ஏற்பட்டது. ஒருவேளை மறைந்த எனது அபிமான பாடகர் மலேசியா வாசுதேவனின் ஆத்மா வந்திருக்குமோ....?

"ஏறாத மலைமேலே......!"

"ஏய்....ஏ...ஏ...ஏஏஏஏ...! எலந்த பழுத்திருக்கு! எலந்த பழுத்திருக்கு!!"

ஐயையோ, இதென்ன கூடவே ஒரு பெண்குரல் கேட்கிறதே! அதுவும் கீச்சுக்குரலில்....?

"ஏறி உலுப்பிடத்தேன் இன்னுங்கொஞ்ச நாளிருக்கு...இன்னும் கொஞ்ச நாளிருக்கு!"

எனக்கு நெற்றியெல்லாம் வியர்த்தது. ஐயையோ, பிளாகஹத்தி தோஷம் ரொம்ப தீவிரமா பிடிச்சிருக்கு போலிருக்குதே! என் காலுக்கடியிலே யாரோ ரெண்டு பேரு பாடுற மாதிரியே இருக்குதே! குனிந்து பார்த்தேன்!

மேஜைக்குக் கீழே ஒரு எலி; கட்டிலுக்குக் கீழே ஒரு எலி!

"பாட்டுச்சத்தம் கேக்கலியா பாட்டுச்சத்தம் கேக்கலியா பாட்டுச்சத்தம் கேக்கலியா?" - இது (ஆண்) எலி! (குரலை வைத்துக் கண்டுபிடித்தேன்!)

"பாட்டுச்சத்தம் கேக்குதய்யா...உன் பாட்டுச்சத்தம் கேக்குதய்யா!" இது பெண் எலி.

ஆஹா! அப்படியென்றால் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் இதே கீச்சுக்குரலில் கேட்ட "ஹோஸோன்னா"வையும் இந்த எலிதான் பாடியதா? அப்புறம், அந்த "கிளிமாஞ்சாரோ..கன்னக்குழிமாஞ்சாரோ"..எல்லாமே எலிகள் பாடிய பாடலா?

"கூகிளாண்டவா! என்னைக் காப்பாத்து!" என்று தலைக்குமேல் கையெடுத்துக் கும்பிட்டேன். "எலியெல்லாம் பாட்டுப் பாடுறா மாதிரி தோணுதே! இப்படியே போச்சுன்னா கரப்பான் பூச்சி கதக் டான்ஸ் ஆடுறா மாதிரியும், கொசுவெல்லாம் குச்சுப்புடி ஆடுறா மாதிரியும் தோணும் போலிருக்குதே! திரும்பவும் ஊளம்பாறை உலகப்பன் கிட்டே போக வேண்டி வந்திருமோ? ஆண்டவா, என்னைக் காப்பாத்து....!"

"உன்னோட பெரிய தொல்லை சேட்டை!" என்று தலையிலடித்துக்கொண்டு வந்தார் கூகிளாண்டவர். "எதுக்கு இப்படி மைனஸ் ஓட்டு விழுந்தது மாதிரி அலர்றே?"

"சாமி! எனக்கென்னவோ ஆயிருச்சு சாமி! எலியெல்லாம் இளையராஜா பாட்டுப் பாடுறா மாதிரி இருக்குது. காப்பாத்துங்க கூகிளாண்டவா!"

"அட கிறுக்கா! உனக்கு விஷயமே தெரியாதா? எலிகளெல்லாம் மனுசங்க மாதிரி நல்லாவே பாடும் தெரியுமா? நல்ல வேளை, ஒரு எலி கூட உதித் நாராயண் மாதிரி பாடாது. சினிமாவுலே ஹீரோவுக்கு காதல் வந்தா பாட்டுப்பாடுறா மாதிரியே, எலிக்கும் காதல் வந்தா அது பாட ஆரம்பிச்சிடும். அந்தப் பாட்டைக் கேட்டு மயங்கிப்போயி பெண் எலியும் வரும். அப்புறமென்ன, டூயட் பாட்டுத்தான்!" என்று சிரித்தார் கூகிளாண்டவர்.

"மெய்யாலுமா?"

"உன் மவுஸ் மேலே சத்தியமா! இதைப் படிச்சுப்பாரு! விஞ்ஞானபூர்வமா நிரூபிச்சிருக்காங்க இதை! காதல் உணர்வு ஏற்படும்; “மனிதரைப் போன்று எலியும் பாடுகிறது”; ஆய்வில் தகவல் " என்று சொல்லிவிட்டு கூகிளாண்டவர் மறைந்தார்.

கீழே பார்த்தேன்! எலிகள் இரண்டும் ஜாடைமாடையாகப் பேசிக்கொண்டிருந்தன.

"மிஸ்டர் எலி! ஏன் நிறுத்தி விட்டீர்கள்? உங்கள் பாட்டைக் கேட்பதற்கென்று ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதீர்கள்! பாடுங்கள் எலியே! பாடுங்கள்!!"

நான் கிசுகிசுப்பான குரலில் வேண்டுகோள் விடுத்தேன்.

"பழைய பாட்டு வேணாங்க! புதுப்பாட்டா பாடுங்க!" என்று பெண் எலி நாணத்தோடு கூறவும், ஆண் எலி தொண்டையைச் செருமிக்கொண்டு பாட ஆரம்பித்தது.

"எவண்டீ உன்னைப் பெத்தான் பெத்தான்!
என்கையிலே சிக்கினா செத்தான் செத்தான்!"

அடடா! இந்த எலி பண்பொலி கேட்கிற பண்பெலி போலிருக்குதே!

58 comments:

  1. "நான்தான் சொன்னேனே? உமக்கு பிளாகஹத்தி தோஷம் இருக்கு! அதான் எலியெல்லாம் அங்கங்கே வாயை வச்சிண்டிருக்கு.""/////
    பிளாக் ஆரம்பிக்கும் போது நீங்கள் பிள்ளயார் சுழி போட மறந்திட்டிங்க போல அதுதான் எலியார் விளையாட்ட காட்டுறார்.... கலக்கலான பதிவு

    ReplyDelete
  2. எலி பாட்டு சூப்பர்... ம்ம்ம்...கலக்குங்க...

    எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

    ReplyDelete
  3. என்ன சேட்டை, எலியோட கச்சேரி முடியவே மாட்டேங்குதா...? :-))

    ReplyDelete
  4. எலிக்கு பயப்படுவார்களா? அடிக்க முடியலேன்னா பொறி வைச்சுப் பிடிக்க வேண்டியது தானே...? :-)
    ஆனாலும், "முதல் மரியாதை" பாட்டு ரொம்ப ஓவர் சேட்டை...! :-)))))))

    ReplyDelete
  5. இன்றைய சேட்டை எலிமேலையா?

    ReplyDelete
  6. அந்த வடை ரொம்ப பழசா இருக்கே?

    ReplyDelete
  7. பன்னிகுட்டி மேலே சத்தியமா உமக்கு நேரம் சரியில்லைதான் பாராமடை கோடாங்கி சொன்னான்.....

    ReplyDelete
  8. அக்மார்க் சேட்டை அண்ணன் டச், அருமை, சூப்பர், கலக்கிட்டீங்க போங்கோ, அது சரி பிளாகஹத்தி தோஷம் நிவர்த்தி பண்ணிட்டேளா :-)_)

    ReplyDelete
  9. //"நான்தான் சொன்னேனே? உமக்கு பிளாகஹத்தி தோஷம் இருக்கு! அதான் எலியெல்லாம் அங்கங்கே வாயை வச்சிண்டிருக்கு. ஒரு அரைநாள் கேஷுவல் லீவுபோட்டுட்டு என்னை வந்து பாரும் ஓய்! மறக்காம ஜாதகத்தையும் எடுத்துண்டு வாரும்!"

    "எலியோட ஜாதகமா?"

    "நீர் திருந்தவே மாட்டீரா ஓய்? உம்ம ஜாதகத்தை எடுத்துண்டு வரச்சொன்னேங்காணும்!" //

    வாய்விட்டுப் பெரிசா நான் சிரிக்கப்போய் தூங்கிக்கொண்டிருந்த என் மனைவி அல்றிக்கொண்டு எழுந்து விட்டாள்.பிறகு அவளுக்கும் ஒரு முறை உங்கள் சேட்டைத்தனத்தை முழுவதுமாகப் படித்துக்காண்பிக்க வேண்டியதாகிப்போனது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. படத்தை பார்த்துவிட்டு பதிவில் இலியானாவை தேடித்தேடி அலைந்தேன்.. சிக்கல??

    ReplyDelete
  11. அண்ணன் சேட்டை அவர்களை கண்டித்து எதிர் பதிவு போடப்போறேன்.. ஹி ஹி

    ReplyDelete
  12. நாங்க யூத்.. இந்த மாதிரி டைட்டில் வைக்கலாம்.. நீங்க எல்லாம் வழிகாட்டிகள்.. இப்படி டைட்டில் வைக்கலாமா? ( ஹி ஹி தமிழன் எப்பவும் பொறாமைப்பட்டுட்டே இருப்பான்)

    ReplyDelete
  13. >>>
    "சாமி! நீங்களா...? முத்தைத்தருபத்தித் திருநகை...அத்திக்கிறை......!"

    அண்ணன் ஆன்மீகத்துலயும் இறங்கறார் போல...

    ReplyDelete
  14. =)).இதுக்கு இலியானா வேறாயா

    ReplyDelete
  15. "எதுக்கு இப்படி மைனஸ் ஓட்டு விழுந்தது மாதிரி அலர்றே?"//
    ஹஹாஹ்ஹா

    ReplyDelete
  16. முக்கால்வாசி இடுகையை படித்துக்கொண்டிருக்கும்போது என்னடா உருப்படியா ஒரு மேட்டரும் இல்லையேன்னு சந்தேகப்பட்டேன் சேட்டை... க்ளைமாக்சில் கொடுத்த மாலைமலர் செய்தி சூப்பர் பினிஷிங் டச்... இலியானா விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஏமாற்றம்...

    ReplyDelete
  17. :)



    நம்ம பதிவு
    திருமணத்திற்கு முன் - பின்
    http://speedsays.blogspot.com/2011/03/blog-post_12.html

    ReplyDelete
  18. எலிமயமான பதிவு. சூப்பர்!

    ReplyDelete
  19. தோழி பிரஷா said...

    //பிளாக் ஆரம்பிக்கும் போது நீங்கள் பிள்ளயார் சுழி போட மறந்திட்டிங்க போல அதுதான் எலியார் விளையாட்ட காட்டுறார்....//

    இல்லீங்க, பிள்ளையார் சுழிபோட்டு, சுடலைமாடசாமிக்கு மஞ்சன்னை பூசி, கருப்பண்ணசாமிக்கு கிடாவெட்டி எல்லாம் முறைப்படிதான் ஆரம்பிச்சேனுங்க! :-)

    //கலக்கலான பதிவு//

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  20. //தமிழ்வாசி - Prakash said...

    எலி பாட்டு சூப்பர்... ம்ம்ம்...கலக்குங்க...//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  21. //நஜீபா said...

    என்ன சேட்டை, எலியோட கச்சேரி முடியவே மாட்டேங்குதா...? :-))//

    ஹிஹி! அதுபாட்டுக்கு கீச்சுகீச்சுன்னு கன்டின்யூ பண்ணிட்டே இருக்குதுங்க! எப்படி இருக்கீங்க? :-)))
    மிக்க நன்றி!

    ReplyDelete
  22. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    Present thala!//

    நீங்க பாஸாயிட்டீங்க! :-)

    ReplyDelete
  23. //சௌமியா said...

    எலிக்கு பயப்படுவார்களா? அடிக்க முடியலேன்னா பொறி வைச்சுப் பிடிக்க வேண்டியது தானே...? :-)//

    பயமா? எனக்கா? ஊஹும்! நோ சான்ஸ்! வாயில்லா ஜீவனை அடிக்க வேணாமேன்னு பார்த்தேன்! :-)

    //ஆனாலும், "முதல் மரியாதை" பாட்டு ரொம்ப ஓவர் சேட்டை...! :-)))))))//

    என்ன பண்ண? கடைசி மரியாதை-னு படம் இல்லையே? மிக்க நன்றி!

    ReplyDelete
  24. //வேடந்தாங்கல் - கருன் said...

    இன்றைய சேட்டை எலிமேலையா?//

    ஆமாங்க, சேட்டை பண்ணுற எலிமேலே சேட்டை! :-)

    ReplyDelete
  25. //வேடந்தாங்கல் - கருன் said...

    அந்த வடை ரொம்ப பழசா இருக்கே?//

    ஊசாத வடை அது! :-)

    ReplyDelete
  26. //MANO நாஞ்சில் மனோ said...

    பன்னிகுட்டி மேலே சத்தியமா உமக்கு நேரம் சரியில்லைதான் பாராமடை கோடாங்கி சொன்னான்.....//

    அதுக்கு ஏனுங்க பானா ராவன்னா மேலே சத்தியம் பண்ணுறீங்க? அவரு நல்ல மனுசன் பாவம்! :-)

    ReplyDelete
  27. //இரவு வானம் said...

    அக்மார்க் சேட்டை அண்ணன் டச், அருமை, சூப்பர், கலக்கிட்டீங்க போங்கோ, அது சரி பிளாகஹத்தி தோஷம் நிவர்த்தி பண்ணிட்டேளா :-)_)//

    தெரியலீங்க! ஒரு மண்டலம் போனாத்தான் தெரியும் தோஷம் போயிருச்சா, இன்னும் இருக்குதான்னு...! :-)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  28. //வை.கோபாலகிருஷ்ணன் said...

    வாய்விட்டுப் பெரிசா நான் சிரிக்கப்போய் தூங்கிக்கொண்டிருந்த என் மனைவி அல்றிக்கொண்டு எழுந்து விட்டாள்.பிறகு அவளுக்கும் ஒரு முறை உங்கள் சேட்டைத்தனத்தை முழுவதுமாகப் படித்துக்காண்பிக்க வேண்டியதாகிப்போனது.//

    ஆஹா, அநாவசியமாக அவங்க தூக்கத்தைக் கெடுத்திட்டேனோ? ஆனாலும், மனம்திறந்து பாராட்டுற உங்க பெருந்தன்மைக்கு எனது நன்றிகள்! எனது சேட்டைகளை அவங்களுக்குத் தொடர்ந்து வாசித்துக் காட்டுங்க; அவங்க கருத்தையும் சொல்லுங்க! :-)

    ReplyDelete
  29. //வசந்தா நடேசன் said...

    படத்தை பார்த்துவிட்டு பதிவில் இலியானாவை தேடித்தேடி அலைந்தேன்.. சிக்கல??//

    படத்துலே மைக் கூட போட்டிருந்தேனே; அதுவும் இடுகையிலே இல்லையே? :-)
    சும்மா ஒரு ரைமிங்குக்காக தலைப்பு; டைமிங்குக்காக படம்.
    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  30. //சி.பி.செந்தில்குமார் said...

    அண்ணன் சேட்டை அவர்களை கண்டித்து எதிர் பதிவு போடப்போறேன்.. ஹி ஹி//

    ரைட்டு! நடக்கட்டும் நடக்கட்டும்!! :-)

    //நாங்க யூத்.. இந்த மாதிரி டைட்டில் வைக்கலாம்.. நீங்க எல்லாம் வழிகாட்டிகள்.. இப்படி டைட்டில் வைக்கலாமா? ( ஹி ஹி தமிழன் எப்பவும் பொறாமைப்பட்டுட்டே இருப்பான்)//

    யூத்தாமாம்! :-))

    பொறாமையெல்லாம் உங்களுக்கு வராது தல!

    //அண்ணன் ஆன்மீகத்துலயும் இறங்கறார் போல...//

    நம்ம அல்ரெடி ஆன்மீகவாதி தான்! செவ்வா,வெள்ளின்னா காளிகாம்பா கோவில்லே தான் டேரா! :-)

    மிக்க நன்றி தல!

    ReplyDelete
  31. //வானம்பாடிகள் said...

    =)).இதுக்கு இலியானா வேறாயா//

    சும்மா ஒரு ரீச்சுக்காகத்தான் ஐயா! :-))
    மிக்க நன்றி!

    ReplyDelete
  32. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

    "எதுக்கு இப்படி மைனஸ் ஓட்டு விழுந்தது மாதிரி அலர்றே?"//

    ஹஹாஹ்ஹா////

    ஆஹா! நீங்களும் நம்மளை மாதிரி தானா? :-))

    ReplyDelete
  33. //Philosophy Prabhakaran said...

    முக்கால்வாசி இடுகையை படித்துக்கொண்டிருக்கும்போது என்னடா உருப்படியா ஒரு மேட்டரும் இல்லையேன்னு சந்தேகப்பட்டேன் சேட்டை... க்ளைமாக்சில் கொடுத்த மாலைமலர் செய்தி சூப்பர் பினிஷிங் டச்... இலியானா விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஏமாற்றம்...//

    உருப்படியான மேட்டரெல்லாம் இங்கே எப்போ இருந்திச்சு நண்பரே? நம்மளைத்தான் மொக்கை-ன்னு முத்திரையே குத்திட்டாய்ங்களே??? :-))))))

    இலியானாவைப் பத்தி அவ்வளவா தெரியாது; யாராச்சும் அவங்க வரலாற்றை எழுதியிருக்காங்களா? :-)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  34. //Speed Master said...

    நம்ம பதிவு திருமணத்திற்கு முன் - பின்
    http://speedsays.blogspot.com/2011/03/blog-post_12.html//

    சுட்டியிலே ஏதோ பிரச்சினை போலிருக்குதே? ஓப்பன் ஆக மாட்டேங்குதே? :-(

    ReplyDelete
  35. //! சிவகுமார் ! said...

    எலிமயமான பதிவு. சூப்பர்!//

    வாங்க, மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  36. "பிளாகஹத்தி" ஹா..ஹா..

    எலி சேட்டை ப்ளாக் படிக்கலையா...))

    ReplyDelete
  37. முதல்முறையாக வந்தேன், சிரித்தேன் - எலிகளின் சேட்டை பிரமாதம்!

    ReplyDelete
  38. எலி பாட்டு கேட்ட புலியானீர், உம் பொருட்டு யாமும் இன்புற்றோம் ஹி ஹி!

    ReplyDelete
  39. எலிக்கு வந்த வாழ்வு!

    ReplyDelete
  40. எலி பாடும் செய்தி பற்றி நானும் படித்தேன். மறந்தேன். அந்த செய்தியை வைத்தே இப்படி ஒரு நகைச்சுவை பதிவு போட உங்களால்தான் முடியும் சேட்டை. ரசித்தேன்.

    ReplyDelete
  41. அண்ணே அந்த ஸ்ரேயா மேட்டரை விட்டுட்டீங்களே?

    ReplyDelete
  42. வணக்கம் சகோதரம், முதன் முதலாய் உங்கள் பதிவினைப் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன், இப்பவும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். அழகான நகைச்சுவைக் காவியம் வாசிப்பது போல என்னுடைய மனத்தினை ஒரு சில நிமிடங்கள் பதிவிற்குள் ஈர்த்து விட்டீர்கள்.
    நல்ல நகைச்சுவைக் கடிகள். ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, எலியைக் கடிச்சு கடைசியா சுற்றிச் சுற்றிப் பல மனிதர்களையும் கடித்துள்ளீர்கள்.

    எலி காவியம்: யதார்த்தத்தினை நகைச்சுவையுடன் படம் பிடித்துக் காட்டும் மறு வடிவம்!

    ReplyDelete
  43. //இடுகை எழுத உட்காருமுன்னர், நங்கநல்லூர் நரசிம்மன் சொன்னது நினைவுக்கு வந்ததால், கண்களை மூடி ஒருகணம் கூகிளாண்டவரைப் பிரார்த்தித்தேன்//

    அட இது தான் உங்கள் வெற்றியின் ரகசியமா?
    ஜோசியர் நங்கநல்லூர் நரசிம்மன் வாழ்க..

    ReplyDelete
  44. //
    (நிதிநிலைமை காரணமாக வடைவிநியோகம் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.)
    //

    இது தாங்க உண்மையன சேட்டை..

    ReplyDelete
  45. //"எதுக்கு இப்படி மைனஸ் ஓட்டு விழுந்தது மாதிரி அலர்றே?"///

    ha ha ha ha

    ReplyDelete
  46. ஹஹஹஹா...
    நல்லா இருக்கே... பண்பெலிப் பாட்டு!! :)
    செம சேட்டை பாஸ்...

    ReplyDelete
  47. //மாதேவி said...

    "பிளாகஹத்தி" ஹா..ஹா..எலி சேட்டை ப்ளாக் படிக்கலையா...))//

    பாடத்தெரிஞ்ச எலிக்கு படிக்கத்தெரியுமான்னு தெரியலியே? :-)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  48. //middleclassmadhavi said...

    முதல்முறையாக வந்தேன், சிரித்தேன் - எலிகளின் சேட்டை பிரமாதம்!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வருக! :-)

    ReplyDelete
  49. //விக்கி உலகம் said...

    எலி பாட்டு கேட்ட புலியானீர், உம் பொருட்டு யாமும் இன்புற்றோம் ஹி ஹி!//

    ஆஹா! செந்தமிழ்ப்பாவலர் போல செம்மையாய்ச் செப்பிவிட்டீர்களே! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  50. //ரிஷபன் said...

    எலிக்கு வந்த வாழ்வு!//

    இது கலிகாலமில்லை; எலிகாலம்! :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  51. //வெங்கட் நாகராஜ் said...

    எலி பாடும் செய்தி பற்றி நானும் படித்தேன். மறந்தேன். அந்த செய்தியை வைத்தே இப்படி ஒரு நகைச்சுவை பதிவு போட உங்களால்தான் முடியும் சேட்டை. ரசித்தேன்.//

    உங்க எலிவேட்டை இடுகையும் ஒருவிதத்தில் நான் இதை எழுதக் காரணம்தான்! :-)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  52. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அண்ணே அந்த ஸ்ரேயா மேட்டரை விட்டுட்டீங்களே?//

    பானா ராவன்னா, நம்ம ரெண்டு பேரும்தான் அந்த ஜீவனைப் பத்தி கவலைப்படுறோம் பார்த்தீங்களா? :-))

    மிக்க நன்றி!

    ReplyDelete
  53. //நிரூபன் said...

    வணக்கம் சகோதரம், முதன் முதலாய் உங்கள் பதிவினைப் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன், இப்பவும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். அழகான நகைச்சுவைக் காவியம் வாசிப்பது போல என்னுடைய மனத்தினை ஒரு சில நிமிடங்கள் பதிவிற்குள் ஈர்த்து விட்டீர்கள்.//

    உங்களது இடுகையில் சுருக்கமாக நான் பின்னூட்டமிட்டிருந்தாலும், நீங்கள் பல வலைப்பூக்களில் படுசிரத்தையாக, விளக்கமான பின்னூட்டங்களை எழுதியிருப்பதைக் கண்டேன். பாராட்டுக்கள்.

    //நல்ல நகைச்சுவைக் கடிகள். ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, எலியைக் கடிச்சு கடைசியா சுற்றிச் சுற்றிப் பல மனிதர்களையும் கடித்துள்ளீர்கள்.//

    ஹாஹா! பரவாயில்லையே! பல மனிதர்களையும் எலி குதறியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களே! :-))

    //எலி காவியம்: யதார்த்தத்தினை நகைச்சுவையுடன் படம் பிடித்துக் காட்டும் மறு வடிவம்!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்! உங்களது வலையுலகப்பிரவேசம் வெற்றிகரமாக அமைய எனது நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  54. //பாரத்... பாரதி... said...

    அட இது தான் உங்கள் வெற்றியின் ரகசியமா? ஜோசியர் நங்கநல்லூர் நரசிம்மன் வாழ்க..//

    உங்கள் வாழ்த்து மிக மிக அவசியம். இன்னும் அவரது ஜலதோஷம் தீர்ந்தபாடில்லை! :-)

    // (நிதிநிலைமை காரணமாக வடைவிநியோகம் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.)//

    //இது தாங்க உண்மையன சேட்டை..//

    ஆமாங்க, வடைக்காக சேர-சோழ-பாண்டியர்கள் போர் ஆரம்பிச்சிருவாங்களோன்னு பயம் வேறே இருக்குது. :-(

    //"எதுக்கு இப்படி மைனஸ் ஓட்டு விழுந்தது மாதிரி அலர்றே?"///

    //ha ha ha ha//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  55. //பிரபு எம் said...

    ஹஹஹஹா...நல்லா இருக்கே... பண்பெலிப் பாட்டு!! :)//

    மெய்யாலுமே இப்படியொரு பாட்டை சிம்பு பாடியிருக்கிறாராம். :-)

    //செம சேட்டை பாஸ்....//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  56. //உங்க எலிவேட்டை இடுகையும் ஒருவிதத்தில் நான் இதை எழுதக் காரணம்தான்! :-)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! //

    எலி பற்றி நான் எழுதின நினைவில்லையே! வை.கோ சார்க்கு போட வேண்டிய பதிலோ!

    ReplyDelete
  57. //வெங்கட் நாகராஜ் said...

    எலி பற்றி நான் எழுதின நினைவில்லையே! வை.கோ சார்க்கு போட வேண்டிய பதிலோ! //

    ஆமா...ஆமா! மன்னிக்கணும்! :-))

    ஒரு நாளைக்கு பத்து இடுகையாவது வாசிக்கிறேன். சில சமயங்களில் என் சிற்றறிவில் இப்படிக் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. தெளிவித்தமைக்கு மிக்க நன்றி! :-)

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!