அண்மைக்காலமாக தமிழ்த்திரைப்படத்தின் நாயகர்கள் எங்கேயோ பார்த்த முகங்களை ஞாபகப்படுத்துகிறார்கள் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், கௌதம் வாசுதேவ் மேனன் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற நாயகன் நாம் பரிச்சயப்படுத்திக்கொள்ள விரும்புகிற சாதாரணன் அல்லன். அவனது புகைப்படத்தைச் செய்தித்தாளில் பார்க்க நேரிட்டாலும் முகஞ்சுளித்துக் கடிந்துவிட்டு அவனை மறக்க முற்படுகிறோம். எத்தனை விகாரங்கள் இருந்தாலும், லட்சத்தில் எவனோ ஒருவனுக்கு இருக்கிற விபரீத குணாதிசயங்களை நம்மால் நியாயப்படுத்த முடிவதில்லை. அதை மெனக்கெட்டு சொல்ல எத்தனித்திருக்கிற psuedo intellectual-ன் படம் - நடுநிசி நாய்கள்! சமீராவுக்காகப் போய்விட்டேன்!
இந்த split personality, multiple personality disorder போன்ற மனநலக்குறைப்பாடுகள் மனிதனை அரக்கர்களாக்கி விடுவதுபோன்ற ஒரு அச்சுறுத்தலை இன்னும் எத்தனைநாளைக்குத் தரப்போகிறார்களோ தெரியவில்லை. ’சந்திரமுகி,’ ’அந்நியன்’ போன்ற படங்கள் ஜனரஞ்சகமானவை, அல்லது ஜனரஞ்சகமான இயக்குனர்களாலோ, நடிகர்களாலோ நம்மை வந்தடைந்தவை என்பதால், கொம்புமுளைத்த அறிவுஜீவிகள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கௌதம் மேனன் போன்றவர்கள் நிறைய அறிவையும் வர்த்தகத்தந்திரத்தையும் பிரயோகித்து தம்மை larger than life இயக்குனர்களாகக் காட்டிக்கொள்வதில் சமர்த்தர்கள். சான்று - நடுநிசிநாய்கள்!
சரி, பாடல்களோ பின்னணி இசையோ இல்லை; இந்தக் குறைபாடு தெரியாமல் படத்தை நகர்த்துவதற்கு இயக்குனர் உபயோகித்திருக்கிற கோந்து - வக்கிரம், வன்முறை..இன்னும் இந்த வரிசையில் வால்பிடித்து நிற்கிற சில குயுக்தியான கீழ்மைகள்! இவற்றையெல்லாம் நியாயப்படுத்தவும் சிலர் முனைவார்கள் என்கிற அபாயமும் நெருடலும் இருக்கத்தான் செய்கின்றன.
அண்ணி-கொழுந்தன், மாமனார்-மருமகள் பற்றியெல்லாம் படங்கள் எடுத்தபோதும் கூட,"அட வுடுய்யா, ஊருலே நடக்காததையா சொல்லிட்டான்?" என்று அசட்டை செய்ததுபோலவே இந்தப்படத்தின் சில அதிர்ச்சிகளையும் உதாசீனம் பண்ணிவிடலாம். இன்னும் சில மெத்தப்படித்த மேதாவிகள் ஜெயகாந்தனின் ’ரிஷிமூலம்’ கதையையும், கி.ராவின் ’கரிசல்காட்டுக் கதைகளையும் மேற்கோள்காட்டி ’அவிய்ங்களும் சொல்லியிருக்கிறாய்ங்க,’ என்று சொல்லி என் போன்ற அறிவிலிகளின் வாயை அடைத்துவிடலாம்.
கொச்சையாகத் திட்ட விருப்பப்படுகிறவர்களுக்கு பிரச்சினையில்லை; அவர்களின் வடிகட்டாத ஆத்திரத்தில்தான் உண்மையான ஆதங்கம் ஒளிந்துகொண்டிருக்கிறதோ என்றுகூட சில நேரங்களில் தோன்றிவிடுகிறது. Sometimes two wrongs do make one right!
இந்தப் படத்தைப் பார்க்கிறபோது எனக்கு எழுந்த கேள்வி; சென்சார் போர்டு என்ன பு.....க் கொண்டிருந்ததா?
225-ல் மொத்தம் 4 சினிமா விமர்சனங்களே எழுதியிருக்கிறேன். எதிர்காலத்தில் தமிழ்சினிமாவின் நவயுக இயக்குனர் எவரேனும் தாயும் மகனும் புணர்வதுபோல படம் எடுத்தால், சத்தியமாய் விமர்சனம் எழுத மாட்டேன் என்பது உறுதி. ஏனென்றால், அதுவும் நடக்கிறது என்று சப்பைக்கட்டு கட்ட புத்திஜீவிகள் ஏராளமாய் இருப்பர். அவர்களோடு முட்டிமோதுவதோ, அவர்களை ஜெயிப்பதோ நமது முழுநேர வேலையல்ல.
இந்தப் படத்துக்கு நடுநிசி நாய் என்று கௌதம் மேனன் ஒருமையில் பெயர் வைத்திருக்கலாம். எதற்கு தன்னுடன் இன்னும் சில நாய்களைக் கேவலப்படுத்த வேண்டும்?
இந்த split personality, multiple personality disorder போன்ற மனநலக்குறைப்பாடுகள் மனிதனை அரக்கர்களாக்கி விடுவதுபோன்ற ஒரு அச்சுறுத்தலை இன்னும் எத்தனைநாளைக்குத் தரப்போகிறார்களோ தெரியவில்லை. ’சந்திரமுகி,’ ’அந்நியன்’ போன்ற படங்கள் ஜனரஞ்சகமானவை, அல்லது ஜனரஞ்சகமான இயக்குனர்களாலோ, நடிகர்களாலோ நம்மை வந்தடைந்தவை என்பதால், கொம்புமுளைத்த அறிவுஜீவிகள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கௌதம் மேனன் போன்றவர்கள் நிறைய அறிவையும் வர்த்தகத்தந்திரத்தையும் பிரயோகித்து தம்மை larger than life இயக்குனர்களாகக் காட்டிக்கொள்வதில் சமர்த்தர்கள். சான்று - நடுநிசிநாய்கள்!
சரி, பாடல்களோ பின்னணி இசையோ இல்லை; இந்தக் குறைபாடு தெரியாமல் படத்தை நகர்த்துவதற்கு இயக்குனர் உபயோகித்திருக்கிற கோந்து - வக்கிரம், வன்முறை..இன்னும் இந்த வரிசையில் வால்பிடித்து நிற்கிற சில குயுக்தியான கீழ்மைகள்! இவற்றையெல்லாம் நியாயப்படுத்தவும் சிலர் முனைவார்கள் என்கிற அபாயமும் நெருடலும் இருக்கத்தான் செய்கின்றன.
அண்ணி-கொழுந்தன், மாமனார்-மருமகள் பற்றியெல்லாம் படங்கள் எடுத்தபோதும் கூட,"அட வுடுய்யா, ஊருலே நடக்காததையா சொல்லிட்டான்?" என்று அசட்டை செய்ததுபோலவே இந்தப்படத்தின் சில அதிர்ச்சிகளையும் உதாசீனம் பண்ணிவிடலாம். இன்னும் சில மெத்தப்படித்த மேதாவிகள் ஜெயகாந்தனின் ’ரிஷிமூலம்’ கதையையும், கி.ராவின் ’கரிசல்காட்டுக் கதைகளையும் மேற்கோள்காட்டி ’அவிய்ங்களும் சொல்லியிருக்கிறாய்ங்க,’ என்று சொல்லி என் போன்ற அறிவிலிகளின் வாயை அடைத்துவிடலாம்.
கொச்சையாகத் திட்ட விருப்பப்படுகிறவர்களுக்கு பிரச்சினையில்லை; அவர்களின் வடிகட்டாத ஆத்திரத்தில்தான் உண்மையான ஆதங்கம் ஒளிந்துகொண்டிருக்கிறதோ என்றுகூட சில நேரங்களில் தோன்றிவிடுகிறது. Sometimes two wrongs do make one right!
இந்தப் படத்தைப் பார்க்கிறபோது எனக்கு எழுந்த கேள்வி; சென்சார் போர்டு என்ன பு.....க் கொண்டிருந்ததா?
225-ல் மொத்தம் 4 சினிமா விமர்சனங்களே எழுதியிருக்கிறேன். எதிர்காலத்தில் தமிழ்சினிமாவின் நவயுக இயக்குனர் எவரேனும் தாயும் மகனும் புணர்வதுபோல படம் எடுத்தால், சத்தியமாய் விமர்சனம் எழுத மாட்டேன் என்பது உறுதி. ஏனென்றால், அதுவும் நடக்கிறது என்று சப்பைக்கட்டு கட்ட புத்திஜீவிகள் ஏராளமாய் இருப்பர். அவர்களோடு முட்டிமோதுவதோ, அவர்களை ஜெயிப்பதோ நமது முழுநேர வேலையல்ல.
இந்தப் படத்துக்கு நடுநிசி நாய் என்று கௌதம் மேனன் ஒருமையில் பெயர் வைத்திருக்கலாம். எதற்கு தன்னுடன் இன்னும் சில நாய்களைக் கேவலப்படுத்த வேண்டும்?
first
ReplyDeleteபுதிய கோணத்தில் யோசித்திருக்கிறீர்கள்...அருமை..
ReplyDeleteதல, ரொம்ப வித்தியாசமா இருக்குது உங்க விமர்சனம், மொத்தத்துல படம் ஊத்திக்கிச்சா???
ReplyDelete//அவர்களோடு முட்டிமோதுவதோ, அவர்களை ஜெயிப்பதோ நமது முழுநேர வேலையல்ல//
ReplyDeleteஉண்மைதான்..............இந்த விமரிசனம் கூட எழுதியிருக்க வேண்டாமோ?
:)
உங்கள் பார்வையில் சொல்ல வந்ததை தெளிவா சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteவிமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பரே
தெளிவான ஏக்கம்
ReplyDeleteநான் ஏதோ நக்கல் நையாண்டி, சடையர் எழுதுபவர் என்றல்லவா நினைத்தேன். சாரி சேட்டை, உண்மையில் இந்த பதிவினை படித்த பின்னர் உங்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது. அதற்காக சும்மா விட்டுவிடுவேன் என்று நினைக்க வேண்டாம்.
ReplyDeleteசரி, அமிலத்தை கொட்டி எழுதினால் போல அங்கங்கே சரியான சவுக்கடிகள்.
ஆமாம்?. ஏன் ரிஷி மூலம், கரிசல் காட்டு கதைகளை எல்லாம் இங்கு கொண்டுவருகிறீர்கள்? இதில் எனக்கு உடன் பாடு இல்லை.
அவைகளில் என்ன சினிமா போன்ற வக்கிரங்களா கூறப்பட்டது? உறக்கத்தில் கனவாக கண்ட ஒரு முறையற்ற உறவை எண்ணி எண்ணி வேதனையுற்று இறுதியில் செத்துப்போகும் ரிஷி மூலம் கதாநாயகனை இந்த சினிமாவில் வரும் ஒரு வக்கிரமான பாத்திர படைப்புடன் ஏன் ஒப்பிட்டீர்கள்?
// மெனக்கெட்டு சொல்ல எத்தனித்திருக்கிற psuedo intellectual-ன் படம்//
இந்த வரியினை மிகவும் ரசித்தேன். என்ன இருந்தாலும் சேட்டை எப்போதும் சோடை இல்லை!!
சேட்டையின் தளத்தில் விமர்சனமா என்று நினைத்துக்கொண்டே வந்தேன்.
ReplyDeleteஉங்கள் கருத்துகள் முழுவதும் ஏற்புடையதே!!
//225-ல் மொத்தம் 4 சினிமா விமர்சனங்களே எழுதியிருக்கிறேன். எதிர்காலத்தில் தமிழ்சினிமாவின் நவயுக இயக்குனர் எவரேனும் தாயும் மகனும் புணர்வதுபோல படம் எடுத்தால், சத்தியமாய் விமர்சனம் எழுத மாட்டேன் என்பது உறுதி. ஏனென்றால், அதுவும் நடக்கிறது என்று சப்பைக்கட்டு கட்ட புத்திஜீவிகள் ஏராளமாய் இருப்பர். அவர்களோடு முட்டிமோதுவதோ, அவர்களை ஜெயிப்பதோ நமது முழுநேர வேலையல்ல//
ReplyDeleteநண்பர்கள் அழைத்தும் நான் தவிர்த்த படங்கள் நடுநிசி நாய்கள், குவார்ட்டர் கட்டிங், கோவா...போன்றவை. முதல் மரியாதை, உதிரிப்பூக்கள், அங்காடித்தெரு போன்ற படங்கள் அரிதாகவே பூக்கின்றன. நடுநிசி நாய்கள் ட்ரைலரே கோக்கு மாக்காகத்தான் இருந்தது. அடுத்து வரப்போகும் ஆரண்ய காண்டம் ட்ரைலரும் அவ்வாறே. அந்த படம் தணிக்கை துறையில் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறது. கத்திரிக்கு பலியாகும் வசனங்கள்..அரங்கில் பீப் ஒலியுடன் நம் உயிரை எடுக்கின்றன. நாம் தெளிவாகத்தான் இருக்கிறோம். சில படைப்பாளிகள்(!) தங்களை ஏமாற்றிக்கொண்டு படம் எடுக்கிறார்கள்.
Well done, very good and useful post
ReplyDeletethanks
யப்பா க்ளாஸ்:)
ReplyDeleteஇந்தப் படத்தைப் பார்க்கிறபோது எனக்கு எழுந்த கேள்வி; சென்சார் போர்டு என்ன பு.....க் கொண்டிருந்ததா?
ReplyDeleteபடத்துக்கு A சர்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க சார்!!!
கவனிக்கவும், இது உண்மைக் கதையாம்... (எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியலை)
வக்கிரம் மற்றும் வன்மம், காமம் போன்றவை கதைக்கேற்பதான்!! இதைவிட கொடூரமான படங்கள் பார்த்தாயிற்று!
மற்றபடி இந்த படத்தை மிக அருமையாக எடுத்திருக்கலாம். ஆனால் திரைக்கதை பெரும் சலிப்பைத் தருகிறது!!
சரி சரி விடுங்க பாஸ்.....
ReplyDeletesuuppeer :))
ReplyDeleteமின்னலே,காக்க காக்க,வேட்டையாடு விளையாடு,விண்ணைத்தாண்டி வருவாயா----> "மாஸ்"
ReplyDeleteநடுநிசி நாய்கள்-----> "மாசு"
//psuedo intellectual-ன் படம்//
இவரோட படங்கள் எல்லாத்துலயும் கொஞ்சம் குரூரம் ஒளிஞ்சிட்டிருக்கு.உண்மையோன்னு தோணுது....
//SENTHIL said...
ReplyDeletefirst//
:-)
//sakthistudycentre-கருன் said...
ReplyDeleteபுதிய கோணத்தில் யோசித்திருக்கிறீர்கள்...அருமை..//
மிக்க நன்றி நண்பரே! :-)
//இரவு வானம் said...
ReplyDeleteதல, ரொம்ப வித்தியாசமா இருக்குது உங்க விமர்சனம், மொத்தத்துல படம் ஊத்திக்கிச்சா???//
இந்தப் படம் ஊத்தியே தீரணும். இதுபோல இன்னொரு படம் அப்பத்தான் எவனும் எடுக்க மாட்டான். மிக்க நன்றி! :-)
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteஉண்மைதான்..............இந்த விமரிசனம் கூட எழுதியிருக்க வேண்டாமோ?//
ஹாஹா! உங்க பகடி எனக்குப் புரியுது. என்னுது உங்களுக்குப் புரியலியோ? :-)
நன்றி நண்பரே! :-))
//மாணவன் said...
ReplyDeleteஉங்கள் பார்வையில் சொல்ல வந்ததை தெளிவா சொல்லியிருக்கீங்க... விமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பரே//
நன்றி நண்பரே! கதை, நடிப்பு போன்றவை குறித்து வேண்டுமென்றே எழுதவில்லை. சிலவற்றை எழுதிப்பின் நீக்கவும் செய்தேன்!
//Speed Master said...
ReplyDeleteதெளிவான ஏக்கம்//
மிக்க நன்றி நண்பரே!
//கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteநான் ஏதோ நக்கல் நையாண்டி, சடையர் எழுதுபவர் என்றல்லவா நினைத்தேன். சாரி சேட்டை, உண்மையில் இந்த பதிவினை படித்த பின்னர் உங்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது. அதற்காக சும்மா விட்டுவிடுவேன் என்று நினைக்க வேண்டாம்.//
ஹாஹா! நீங்க வழக்கம்போல இருங்க; நானும் வழக்கம்போல நக்கல்,நையாண்டி,சடையர் தான் அதிகம் எழுத விரும்புகிறேன். இது எனக்கு ஒரு அதிர்ச்சி மாதிரி ஏற்பட்டதன் தாக்கம்; அவ்வளவே!
//சரி, அமிலத்தை கொட்டி எழுதினால் போல அங்கங்கே சரியான சவுக்கடிகள்.//
நிறையவே நீக்கியும் விட்டேன் நண்பரே! இந்தப் படத்தைப் பார்த்தவுடன் எழுதியிருந்தால், நானே வருத்தப்படுகிற அளவுக்கு கோபம் வந்திருந்தது.
//ஆமாம்?. ஏன் ரிஷி மூலம், கரிசல் காட்டு கதைகளை எல்லாம் இங்கு கொண்டுவருகிறீர்கள்? இதில் எனக்கு உடன் பாடு இல்லை.//
எனக்கும் உடன்பாடில்லை! ஆனால், இணையத்தில் இதுபோன்ற சப்பைக்கட்டுகள் தேவைப்படுவதால், சிலர் அதையும் இதையும் மேற்கோள் காட்டுகிறார்களே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இப்படி எழுதினேன். மற்றபடி உங்களது கருத்தில் முழுக்க உடன்படுகிறேன்.
//அவைகளில் என்ன சினிமா போன்ற வக்கிரங்களா கூறப்பட்டது? உறக்கத்தில் கனவாக கண்ட ஒரு முறையற்ற உறவை எண்ணி எண்ணி வேதனையுற்று இறுதியில் செத்துப்போகும் ரிஷி மூலம் கதாநாயகனை இந்த சினிமாவில் வரும் ஒரு வக்கிரமான பாத்திர படைப்புடன் ஏன் ஒப்பிட்டீர்கள்?//
அது தவிரவும், புத்தகங்கள் என்ன லட்சக்கணக்கிலா விற்பனையாகின்றன? வாசிப்பவர்களும் சினிமாவைப் போல அதுகுறித்துப் பெரிதாக விசனப்படுவதுமில்லை. எனவே அவை ஒப்பீடுகளுக்கு உகந்ததல்ல என்பது தான் எனது வாதமும் கூட! ஆனால், அதை பிறர் செய்வதை சுட்டிக்காட்டவே எழுத வேண்டியதாயிற்று!
\\// மெனக்கெட்டு சொல்ல எத்தனித்திருக்கிற psuedo intellectual-ன் படம்//\\
இந்த வரியினை மிகவும் ரசித்தேன். என்ன இருந்தாலும் சேட்டை எப்போதும் சோடை இல்லை!!//
பின்னூட்டத்தைக் கூட இவ்வளவு விரிவாக எழுதி உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே! :-)
//ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ReplyDeleteசேட்டையின் தளத்தில் விமர்சனமா என்று நினைத்துக்கொண்டே வந்தேன்.//
எப்போதாவது சினிமா விமர்சனம் என்ற பெயரில் எனது கருத்தைச் சொல்ல முயல்வதுண்டு. :-)
//உங்கள் கருத்துகள் முழுவதும் ஏற்புடையதே!!//
மிக்க நன்றி நண்பரே! :-))
//! சிவகுமார் ! said...
ReplyDeleteநண்பர்கள் அழைத்தும் நான் தவிர்த்த படங்கள் நடுநிசி நாய்கள், குவார்ட்டர் கட்டிங், கோவா...போன்றவை. முதல் மரியாதை, உதிரிப்பூக்கள், அங்காடித்தெரு போன்ற படங்கள் அரிதாகவே பூக்கின்றன. நடுநிசி நாய்கள் ட்ரைலரே கோக்கு மாக்காகத்தான் இருந்தது. அடுத்து வரப்போகும் ஆரண்ய காண்டம் ட்ரைலரும் அவ்வாறே. அந்த படம் தணிக்கை துறையில் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறது. கத்திரிக்கு பலியாகும் வசனங்கள்..அரங்கில் பீப் ஒலியுடன் நம் உயிரை எடுக்கின்றன. நாம் தெளிவாகத்தான் இருக்கிறோம். சில படைப்பாளிகள்(!) தங்களை ஏமாற்றிக்கொண்டு படம் எடுக்கிறார்கள்.//
நல்ல படங்களே தோல்வியடைகிறபோது, எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசித்து, துணிந்து எசகுபிசகான கதைக்களத்துடன் படம் எடுக்கிறார்களோ? இந்தப் படத்துக்கு வரிவிலக்கா? எவ்வளவு பெரிய கொடுமை??
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
//ராம்ஜி_யாஹூ said...
ReplyDeleteWell done, very good and useful post thanks//
அத்திபூத்தாற்போல வந்து உற்சாகப்படுத்துகிறீர்கள். மிக்க நன்றி! :-)
//வானம்பாடிகள் said...
ReplyDeleteயப்பா க்ளாஸ்:)//
நன்றி ஐயா, நான் தன்யனானேன்! :-))
//ஆதவா said...
ReplyDeleteபடத்துக்கு A சர்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க சார்!!!//
நான் ஒண்ணும் பிரைமரி ஸ்கூல் மாணவன் இல்லை சார்! எனக்கும் வயசு பதினெட்டுக்கு மேலே தான்! பிடிக்கலியே? :-))))
//கவனிக்கவும், இது உண்மைக் கதையாம்... (எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியலை)//
இது ரொம்ப பழைய டெக்னிக் ஆச்சே! கொஞ்சம் சர்ச்சைன்னா, உடனே உண்மைச்சம்பவமுன்னு சொல்லிர வேண்டியது.
//வக்கிரம் மற்றும் வன்மம், காமம் போன்றவை கதைக்கேற்பதான்!! இதைவிட கொடூரமான படங்கள் பார்த்தாயிற்று!//
இதைத் தான் xxx படங்களை எடுக்கிறவனும் சொல்லுவான். பரவாயில்லையா?
//மற்றபடி இந்த படத்தை மிக அருமையாக எடுத்திருக்கலாம்.//
உங்களது கருத்தை மதிக்கிறேன். ஆனால், மறுக்கிறேன்
//ஆனால் திரைக்கதை பெரும் சலிப்பைத் தருகிறது!!//
இல்லாட்டா மட்டும்...? :-)))))
மிக்க நன்றி நண்பரே!
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசரி சரி விடுங்க பாஸ்.....//
நீங்க சொல்லிட்டீங்கல்லே? விட்டுரலாம்! :-))
மிக்க நன்றி நண்பரே!
//சென்ஷி said...
ReplyDeletesuuppeer :))//
ஆஹா, நான் காண்பது கனவா நனவா? நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சு! :-)
மிக்க நன்றி!
//சேலம் தேவா said...
ReplyDeleteமின்னலே,காக்க காக்க,வேட்டையாடு விளையாடு,விண்ணைத்தாண்டி வருவாயா----> "மாஸ்"//
வேட்டையாடு.....கூட கொஞ்சம் கோக்குமாக்காத்தான் இருந்திச்சு. கமல் காப்பாத்தினாரு! :-)
//நடுநிசி நாய்கள்-----> "மாசு"//
சத்தியமாக!
//இவரோட படங்கள் எல்லாத்துலயும் கொஞ்சம் குரூரம் ஒளிஞ்சிட்டிருக்கு.உண்மையோன்னு தோணுது....//
கொஞ்சமில்லே....ரொம்பவே! முதல்லே இவரை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணர் கிட்டே போயி ஆலோசனை கேட்கச் சொல்லணும்.
மிக்க நன்றி நண்பரே! :-))
////இந்தப் படத்துக்கு நடுநிசி நாய் என்று கௌதம் மேனன் ஒருமையில் பெயர் வைத்திருக்கலாம். எதற்கு தன்னுடன் இன்னும் சில நாய்களைக் கேவலப்படுத்த வேண்டும்?////
ReplyDeleteநச்! சாட்டை அடி
ஜொள்ளு நாய்கள் இருக்கும் வரை... இந்த மாதிரி தெரு நாய்கள் உலைக்கத்தான் செய்யும்.
ReplyDeleteநல்லவேளை கொஞ்சம் லேட்டா படிச்சேன். சுட...சுட... படிச்சுருந்தா நானே சுட்டுகொண்டிருப்பேன்.
ReplyDeleteவிமர்சனம் பார்த்தால்.. படம் பார்த்து அனாவசியமாய் கொதிப்பாக வேண்டாம் என்றே தோன்றுகிறது..
ReplyDelete//"குறட்டை " புலி said...
ReplyDeleteஜொள்ளு நாய்கள் இருக்கும் வரை... இந்த மாதிரி தெரு நாய்கள் உலைக்கத்தான் செய்யும்.//
அப்போ, சாக்லெட் பேப்பருலே களிமண்ணை உருட்டித் தந்தா தின்பாங்களா...? :-)
//நல்லவேளை கொஞ்சம் லேட்டா படிச்சேன். சுட...சுட... படிச்சுருந்தா நானே சுட்டுகொண்டிருப்பேன்.//
அது உங்களுக்கு இல்லை; எனக்கு நல்லவேளை! யாரோட தற்கொலைக்கோ என் தலையிலே பழி விழுந்திருக்கும்!
மிக்க நன்றி! சுட்டுக்காம வந்து படிச்சு, கருத்துச் சொன்னதுக்கு! :-))
//ரிஷபன் said...
ReplyDeleteவிமர்சனம் பார்த்தால்.. படம் பார்த்து அனாவசியமாய் கொதிப்பாக வேண்டாம் என்றே தோன்றுகிறது..//
வாங்க நண்பரே, இந்தப் பதிவின் நோக்கமே நண்பர்கள் இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம் என்று சொல்வதுதான்! மிக்க நன்றி! :-)
அம்புட்டு மோசமாவா எடுத்திருக்காரு!
ReplyDelete//சிநேகிதன் அக்பர் said...
ReplyDeleteஅம்புட்டு மோசமாவா எடுத்திருக்காரு!//
ஆமாண்ணே, "மோசம்" என்ற வார்த்தை கூட பத்தாது! :-(
மிக்க நன்றி! :-)
NEW INDIAN EXPRESS Dt 21.02.2011 Malini Mannath Reviews 'NADUNISI NAAIGAL' as A WORTHY ATTEMPT
ReplyDeleteஎந்த விஷயத்தைச் சொன்னாலும் அதை எப்படிச்சொல்லவேண்டும் என்று ஒரு சில விதிகள் உண்டு. எழுதப்படாத அந்த விதிகளைப் பின்பற்றி தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களையும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களையும் அததற்கு உரிய தொனியில சொல்வதுவே நல்லதொரு படைப்பாளியின் கடமை. வெறும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி நாம் காசு பார்க்கலாம் என்ற ரீதியில் செயல்படுகிறவர்களை நாம்தான் அடையாளம் காணவேண்டும். அப்படிச் சரிவர அடையாளம் கண்டு அதனை எப்படிக் கண்டிக்கவேண்டுமோ அதன்படி கண்டித்திருக்கும் தங்களைப் பாராட்டுகிறேன்.வன்மத்தையும் அதைவிடவும் கொடூரமாக வக்கிரத்தையும் பொட்டலம் கட்டி ரசிகனின் கையில் தந்துவிட்டுக் கேட்டால் ஊரில் இப்படி நடக்கவில்லையா என்று கேட்டு தப்பித்துவிடலாம் என்று கணக்குப்போடுபவர்களை விரட்டியடிக்கவேண்டும்.
ReplyDelete//kannan said...
ReplyDeleteNEW INDIAN EXPRESS Dt 21.02.2011 Malini Mannath Reviews 'NADUNISI NAAIGAL' as A WORTHY ATTEMPT//
I have made it very clear that my intention is not to win any battle against those self-proclaimed intellectuals. They are entitled to their opinion as much as I am entitled to mine. Thank you very much Sir. :-)
//Amudhavan said...
ReplyDeleteஎந்த விஷயத்தைச் சொன்னாலும் அதை எப்படிச்சொல்லவேண்டும் என்று ஒரு சில விதிகள் உண்டு. எழுதப்படாத அந்த விதிகளைப் பின்பற்றி தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களையும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களையும் அததற்கு உரிய தொனியில சொல்வதுவே நல்லதொரு படைப்பாளியின் கடமை.//
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்! பேச்சுவழக்கிலே கூட இடக்கரடக்கல் இருக்கிறதே! இதைப் பேசுவது நல்லது, இதைப் பேசாமலிருப்பது மிக நல்லது என்று அனுபவரீதியாகவும், கேட்டறிந்தும்தானே நம்மைச் செம்மைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்?
//வெறும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி நாம் காசு பார்க்கலாம் என்ற ரீதியில் செயல்படுகிறவர்களை நாம்தான் அடையாளம் காணவேண்டும். அப்படிச் சரிவர அடையாளம் கண்டு அதனை எப்படிக் கண்டிக்கவேண்டுமோ அதன்படி கண்டித்திருக்கும் தங்களைப் பாராட்டுகிறேன்.//
நல்ல வேளை, இவ்விஷயத்தில் ஒத்த கருத்துள்ளவர்களே பெரும்பான்மையாக இருப்பது ஆறுதலை அளிக்கிறது. விதண்டாவாதம் செய்கிறவர்களின் குரல்கள் அமுங்கியிருப்பது இதுபோன்ற சின்னச் சின்ன முயற்சிகளுக்கு உற்சாகமளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதில் எனது இடுகையும் ஒரு துளியென்பதில் நிறைவே!
//வன்மத்தையும் அதைவிடவும் கொடூரமாக வக்கிரத்தையும் பொட்டலம் கட்டி ரசிகனின் கையில் தந்துவிட்டுக் கேட்டால் ஊரில் இப்படி நடக்கவில்லையா என்று கேட்டு தப்பித்துவிடலாம் என்று கணக்குப்போடுபவர்களை விரட்டியடிக்கவேண்டும்.//
அதே! வன்மம் என்பதையும் தாண்டி, இது போன்ற திரைப்படங்கள், மிருகத்தனமான மனவோட்டங்களை பொதுப்பார்வைக்குக் கொண்டுவருவது அந்தந்தப் படைப்பாளிகளின் கீழ்மையையே பறைசாற்றுவதாய்க் கொள்ளுதல் வேண்டும். அப்படிப்பட்ட முயற்சிகளை இனி மேற்கொள்ளாதிருக்க, இந்தப் படம் படுதோல்வி அடைய வேண்டும்; அடைந்து விட்டது!
மிக்க மிக்க நன்றி! :-)
இப்போதுதான் வாசித்தேன். மிக மிக அருமையான எழுத்து நண்பா.
ReplyDeleteநேர்த்தியான பார்வை.
சேட்டை.. கிட்டத்தட்ட என் கருத்தை ஒத்ததாகவே இருக்கிறது உங்களுடையதும்.. நன்றி..
ReplyDelete