Saturday, October 16, 2010

லூசா விடாதீங்க பாஸ்!

யாருக்காவது உடம்பு கொஞ்சம் குண்டா இருந்து, திர்லக்கேணி, ஜாம்பஜார் பக்கம் போனா டிராஃபிக் ஜாம் ஆயிடுமேன்னு கவலைப்பட்டு விசாரிச்சா, "எங்களுக்கு சூதுவாது கிடையாது. அதுனாலே தான் உடம்பு வஞ்சனையில்லாம இருக்கு"ன்னு சொல்லுறாங்க! அப்படீன்னா, என்னை மாதிரி ஈர்க்குச்சி மாதிரி இருக்கிற ஆளுங்கல்லாம் என்ன சுரேஷ்கல்மாடி, லலித்மோடியோட சேர்த்தியா? என்னய்யா புதுசு புதுசா புரளி கிளப்புறீங்க?

நாமும் வயித்துக்கு வஞ்சனை பண்ணாம மூணு வேளைக்கு மூணேமுக்கால் வேளை சாப்பிடறோம். பெரிசா சூதுவாது ஒண்ணும் பண்ணுறதில்லை. அப்படியிருக்கும்போது, நம்ம உடம்பு மட்டும் ஏன் சாம்பார்லேருந்து எடுத்து உறிஞ்சுபோட்ட முருங்கைக்காய் மாதிரி பரிதாபமா இருக்குன்னு அடிக்கடி யோசிப்பேன். சொல்லப் போனா குண்டாயிருக்கிற ஆசாமி/ஆமாமிங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையே வந்திருச்சப்பு! குண்டாக முடியாட்டியும், குண்டா இருக்கிறவங்களைப் பத்தி நிறையப் படிச்சேன்.

குண்டா இருக்கிறதுக்குப் பேரு Obesity-ன்னு சொல்லுறாங்க! இயல்பை விட அதிகமாக உடம்பிலே கொழுப்பு சேர்ந்தா உடம்பு குண்டாயிடுமாம். அப்பாலே, நீரிழிவு, இதய நோயிலேருந்து புற்றுநோய் வரைக்கும் வர்றதுக்கு வாய்ப்பு இருக்குதாம். உலக ஜனத்தொகையிலே குழந்தைகள் நீங்கலாக, 33.33% சதவிகித மக்கள் குண்டாயிருக்கிறாங்களாம்.

இதைப் படிச்சதும்,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே. நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?"ன்னு ஒல்லியா இருக்கிறவங்கல்லாம் யோசிப்பாங்களா மாட்டாங்களா?

ஆனாலும், நமக்குத் தெரிஞ்ச நிறைய பேரு எக்ஸ்ட்ரா- லார்ஜ் சைஸ்காரங்கன்னுறதுனாலே, ஏன் இப்படி இவங்க குண்டாயிருக்காங்கன்னு யோசிக்கத் தோணிச்சு. ஏன் இப்படி ஆனாங்க பாவம்?

1. சாப்பாட்டு விஷயத்துலே கட்டுப்பாடு இல்லை!

எனக்கும் கிடையாது.

2. அதிகமா உடம்பை அலட்டிக்காம வேலை பார்க்குறது! சதா டி.வி, கம்ப்யூட்டர்னு இருக்குறது.

நானும் அப்படித்தானே வேலை பார்க்குறேன். டி.வியும், கம்ப்யூட்டர் ரெண்டுமில்லாட்டி தலை வெடிச்சிடுமே!

3. போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது.

பாருங்கய்யா! சென்னையிலேயே கடைசியா தூங்குற ஆசாமி நான் தான்.

ஆக, குண்டாயிருக்கிறதுக்கான எல்லா காரணங்களும் எனக்கும் பொருந்துதே. ஆனாலும், நான் மட்டும் ஏன் குண்டாகாம, சோத்துக்குச் செத்தவனாட்டம் இருக்கிறேன்?

அவங்களுக்கும் எனக்கும் என்ன தான் வித்தியாசம் தெரியுமா?

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதாவது எவ்வளவு அதிகமா யோசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமா பசிக்குமாம். எவ்வளவு பசிக்குமோ அவ்வளவு சாப்பிட்டு, அவ்வளவு உடம்பு பருத்துப் போயிடுமாம்.

அதானே பார்த்தேன்! இந்த ’சிந்தனை’ன்னா என்னான்னே எனக்குத் தெரியாததுனாலே தான், இதுவரை நான் குண்டாகாம இருக்கிறேன்.

ஆகவே, மகாஜனங்களே! நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி. எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!

மொத்தத்துலே மூளைன்னு ஒண்ணு இருக்கிறதை மறந்தா, ஊளைச்சதை வர வாய்ப்பேயில்லை. உடம்பும் டைட்டா, லைட்டா இருக்கும். எனவே, மக்களே....லூசா விடாதீங்க! உடம்பை டைட்டா வச்சுக்க, எல்லாத்தையும் லைட்டா எடுத்துங்க!

வர்ட்டா....?

32 comments:

  1. //சாம்பார்லேருந்து எடுத்து உறிஞ்சுபோட்ட முருங்கைக்காய் மாதிரி//

    நல்ல உவமானம் ..... :D

    //எங்களுக்கு ரஜனி மாதிரி மாமனார் கிடைக்காமையா போய்டுவாரு// ... ம்ம் ம்ம்ம் ..

    ReplyDelete
  2. இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க ..

    http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

    ReplyDelete
  3. ///ஆகவே, மகாஜனங்களே! நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி. எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!////


    .......இந்த ஒரு டிப் கொடுத்ததற்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல..... பயபுள்ளைக்காரி - இது தெரியாம - ஏன் இப்படி குண்டா இருக்கேன் என்று யோசித்து யோசித்தே - குண்டாயிட்டே போறேனே! அவ்வ்வ்வ்......

    ReplyDelete
  4. புதிய தகவல்கள்! நல்லாயிருக்கு!:-)

    ReplyDelete
  5. உளுந்து
    அரிசி
    பருப்பு
    கோதுமை
    நல்லெண்ணெய்
    பட்டாணி

    நீங்கதான பாஸ் சொன்னீங்க இன்னா வேண்ணாலும் எளுதலாம்

    ReplyDelete
  6. இதை பத்தி... யோசிக்கிரவங்க கவலை படனும்.அதனால் எனக்கு பிரச்சினை இல்லை)))

    புது இடம் வேலை எல்லாம் நன்றாக போகின்றதா?

    ReplyDelete
  7. அவகாடோ அப்டீன்னு ஒரு பழம் கெடைக்கிது, பட்டர் ப்ரூட்டுன்னு நம்ம ஆளுங்க பெரு வெச்சிருக்காங்க .அத தினம் சாப்பிடுங்க சேட்ட. பழம் ன்னதும் இனிப்பாய் இருக்குமுன்னு நினைக்கவேண்டாம். அதில் சுவை ஏதும் இல்லாமல் இருக்கும். ஆனால் உடம்பில் சதை பிடிக்கும். நிச்சயம். தொடர்ந்து சாப்பிட எடை கூடும்.

    ReplyDelete
  8. //திர்லக்கேணி, ஜாம்பஜார் பக்கம்//

    நான் இங்கதான் இருக்கேன்

    ReplyDelete
  9. // நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி. எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!//

    இடுகைக்கு மேட்டர் தேத்துறதுக்கு கூடவா :-)))))

    ReplyDelete
  10. // நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி. எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!//

    இடுகைக்கு மேட்டர் தேத்துறதுக்கு கூடவா :-)))))

    ReplyDelete
  11. இது போங்காட்டம். சேட்டை பதிவர். குண்டாயிருக்கறவங்க பதிவரில்லாம இருக்கலாம்ல:))

    ReplyDelete
  12. இன்னாமா யோசிச்சு எழுதியிருக்கப்பா, நீனு?

    ReplyDelete
  13. நன்றி சேட்டை. இனிமே மூளையக் கழட்டி வச்சிடுறேன்.. :))

    ReplyDelete
  14. Thanks dear buddy!

    Welcome to : amazingonly.com

    by

    TS

    ReplyDelete
  15. //எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!//
    இது தான் சரி....

    ReplyDelete
  16. அச்சச்சோ ஒல்லியா இருக்க இதான் காரணமா..:)
    ப்ரபைல்ல போட்ட என்படத்தை எதோ டேஞ்சர் போர்ட்ல எழுதிவைக்கும் எலும்புக்கூடுன்னுநினைச்சு சிலர் பயந்து ஓடிட்டாங்க.. :(

    ReplyDelete
  17. மூளைய கசக்கி யோசிச்சும் என்ன பின்னூட்டம் போடனும்னு தெரியல... அட கழட்டி வச்சது மறந்துடுச்சி.... லூசா விடுங்க!...

    கலக்கல் சேட்டை நண்பா!

    பிரபாகர்...

    ReplyDelete
  18. நல்ல காமெடி போங்கள்...

    இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

    http://erodethangadurai.blogspot.com/

    ReplyDelete
  19. சுரேஷ்கல்மாடி லலித் மோடி நல்ல comparison .. கொடுத்து வைச்ச ஆளுயா நீங்க. . ஊரில் பாதிபேர் எப்படி இளைக்கிறது என தலை கீழா நிற்கும் போதுஇதுக்கு போய் வருத்தப்பட்டு ட்டு . எப்போவும் போல் வ. வா. ச. ஆளாகவே இருங்க.

    ReplyDelete
  20. அய்யா ஜாலி..!! எனக்கு கவல இல்ல..!! நான் வெறும் 100 கிலோதான் இருக்கேன்..!!

    ReplyDelete
  21. //"எங்களுக்கு சூதுவாது கிடையாது. அதுனாலே தான் உடம்பு வஞ்சனையில்லாம இருக்கு"//

    இதைத்தான் நானும் ஒரியாக்காரரிடம் அவ்வப்போது சொல்லி நாங்கல்லாம் இன்னசன்ட்டுன்னு பதிய வச்சிட்டு இருக்கேன் :))

    ReplyDelete
  22. என்ன ஒரு புத்திசாலித்தனம்!

    நாங்க புஷ் புஷ்-னு க்யூட்டா அழகா இருக்கிறத பார்த்து பொறாமைய பாரு.

    ReplyDelete
  23. //அதானே பார்த்தேன்! இந்த ’சிந்தனை’ன்னா என்னான்னே எனக்குத் தெரியாததுனாலே தான், இதுவரை நான் குண்டாகாம இருக்கிறேன்.//

    ha ha..

    ReplyDelete
  24. unga pathiva patthi en blogla eludhiirukken vandhu parunga

    http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html

    ReplyDelete
  25. என்ன சேட்டை சார்
    நலம் தானே ? கொஞ்ச நாளா காணுமே. .
    தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. //,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே. நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?//

    ஹா..ஹா.. தல, உமக்கு லொள்ளு அதிகம்... இதுக்காகவாவது உம்ம, யாராவது குண்டான ஆள கூட்டி வந்து மிதிக்கவிடணும்..

    ReplyDelete
  27. //,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே. நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?//

    ரஜினி மாதிரி மாமனார் கிடைப்பார், லதா மாதிரி பொன்னு (மணமகள்0 இருக்கும், பரவாயில்லையே சேட்டை.

    //எல்லாத்தையும் லைட்டா எடுத்துங்க!//

    மிகச் சரியாக சொன்னீர்கள்.எல்லாத்தையும் லைட்டா எடுத்திக்கிட்டா பிரச்சனை எதுவும் வராது. பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தாலே நல்ல ஆரோக்கியமாக வாழலாம். குண்டு, ஒல்லி எதுவாக இருந்தாலும் உடல் நலமாக இருக்க ஆசைப்படுங்கள் சேட்டை.

    நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள். ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  28. பிnன்லேடன் ஒல்லியாத்தான் இருக்கான் வீரப்பன் ஒல்லியாத்தான் இருந்தான்.அவங்க எல்லாம் எதையும் லைட்டா’’ எடுத்துக்கிறவங்களா அண்ணே

    ReplyDelete
  29. ரொம்ப யோசிச்சுத்தான் இதை எழுதியிருக்கீங்க. :-))

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!