Wednesday, June 9, 2010

வருது வருது! விலகு விலகு!

இதுவரைக்கும் விஞ்ஞானம் ஒண்ணு தான் என் கிட்டேயிருந்து தப்பிச்சிருந்தது. இன்னியோட அதுக்கும் சனி ஆரம்பம்! அதுக்காக, அவசரப்பட்டு குறுந்தாடி வைச்ச கிண்டி ஆசாமிங்க யாரும் விபரீத முடிவுக்குப் போயிராதீங்க! சரி, மேட்டருக்கு வருவோமா?

Dzmitry Tsetserukou - இந்த பெயரை ஒரே அட்டம்ப்டுலே நாக்கு சுளுக்காம வாசிக்க முடியுமா? இல்லே முடியுமாங்குறேன்? டிஸ்-மிஸ்-ட்ரீ-ட்ஸெட்-செரு-கௌ! ட்ரீயை எதுக்கு டிஸ்மிஸ் பண்ணணுமுன்னு கேட்கறீங்களா?

இது ஒண்ணும் கப்ஸா பேரு இல்லை! ஜப்பான் டொயோஹோஷி பல்கலைக்கழகத்திலே பேராசியராப் பணிபுரியுற ஒரு பெண்மணியோட பேரு! (சுத்தம், இவரு காலையிலே அட்டண்டன்ஸிலே கையெழுத்துப் போடறதுக்கு முன்னாலே சாயங்கால மணியே அடிச்சிடாது?) அது என்னாங்க, மத்த ஊருலேயெல்லாம் குழந்தை பொறந்தாப் பேரு வைப்பாங்க; ஜப்பானிலே பேரை வைச்சுப்புட்டு அதை ஏன் பரோட்டா மாதிரி பிய்ச்சுப் பிய்ச்சுப் போடறாங்க? ஒவ்வொரு பேருலேயும் ரெண்டெழுத்துக்கு நடுவுலே ஒரு ’டேஷ்’ வேறே! சில பெயரைப் பார்த்தீங்கன்னா எழுத்தை விடவும் டேஷ் தான் அதிகமாயிருக்கு!

நல்ல வேளை, நான் மட்டும் ஜப்பானிலே பொறந்திருந்தா என் பேரு என்னா தெரியுமா?

அரி-குச்சி-சிக்க-கிமி-மிகா-தோ (வெளங்கிடும்!)

எப்படீன்னு கேட்கறீங்களா? அவங்கவங்க பெயரை ஆங்கிலத்துலே எழுதி வச்சுக்கோங்க! எழுதிட்டீங்களா? அப்புறம், ஒவ்வொரு எழுத்துக்கும் ஜப்பான் உச்சரிப்பு என்னான்னு கீழே கொடுத்திருக்கேன் பாருங்க! அந்த முறையிலே எழுதிப் பாருங்க! இதோ, உங்களது ஜப்பானியப் பெயர் தயார்!

A-ka; B-tu; C-mi; D-te; E-ku; F-lu; G-ji; H-ri; I-ki; J-zu; K-me; L-ta; M-rin; N-to; O-mo; P-no; Q-ke; R-shi; S-ari; T-chi; U-do; V-ru;
W-mei; X-na; Y-fu; Z-zi

S=ari,E=ku,T=chi,T=chi,A=ka,I=ki,K=me,K=me,A=ka,R=shi,A=ka,N=to
ari-ku-chi-chi-ka-ki-me-me-ka-shi-ka-to =அரி-குச்சி-சிக்க-கிமி-மிகா-தோ

எதுக்கு இந்த வேலையத்த வேலைன்னு கேட்கறீங்களா? இதைத் தான் ஜப்பான் காரங்க கிட்டேயும் கேட்கணும். கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைப் பிடிச்சு மணையிலே வைன்னுறா மாதிரி, ஜப்பானிலே இருக்கிற டொயோஹோஷி பல்கலைக்கழகத்துலே ஒரு புது ரோபோ கண்டுபிடிச்சிருக்காங்க! இணையத்தில் ஸ்பரிச உணர்வைத் தருகிற இயந்திரக்கருவி-செய்தி!

இதுக்கு ஐ-ஃபீல்-ஐ.எம்.(iFeel-IM device)னு பேர் வச்சிருக்காங்க! இந்த ரோபோவாலே என்ன புரயோசனமுண்ணு கேட்கறீங்களா?

இதை உங்க கணினியிலே இணைச்சிட்டீங்கன்னா, அதுக்கப்புறம் நீங்க யார் கூடவாச்சும் மின்னரட்டை(chat) பண்ணும்போது, அவங்களோட இதயத்துடிப்பு, அணைப்பு, அடிவயத்துலே பட்டாம்பூச்சி, முதுகுத்தண்டுலே சில்லிடறது மாதிரி பல உணர்ச்சிகளை நம்மாலே உணர முடியுமாம். (அட இருங்கப்பா, அதுக்குள்ளே இது இந்தியாவுக்கு வந்திருச்சா, ரிச்சி ஸ்ட்ரீட்டுலே கிடைக்குமான்னு கேட்டு அலப்பறை பண்ணாதீங்க!)

இணையத்துலே ஒரு மனிதபூர்வமான தொடுதல் (human touch-ன்னா இது தானே?) இருக்கட்டுமேன்னு இப்படியொரு கண்டுபிடிப்பை இந்த டிஸ்மிஸ்ட்ரீ அம்மணி கண்டுபிடிச்சிருக்காங்களாம்! உணர்ச்சிபூர்வமா இணையத்தை உபயோகிக்கிறவங்களை இணைக்கிற ஒரு முயற்சியாம் இது! இதுக்காக அஞ்சு வருஷம் ஆராய்ச்சி பண்ணி, (கொழுப்பைப் பாருங்களேன்) இதுலே ஏகப்பட்ட சென்ஸார், மோட்டார், வைப்ரேட்டர், ஒலிபெருக்கியெல்லாம் சேர்த்து ஒருவழியா முடிச்சிருக்காங்களாம்.

இதுக்கான மென்பொருளைக் கண்டுபிடிச்சவங்க பேரு அலீனா நெவியாரௌஸ்கயா (பல்லே சுளுக்கிருச்சு!)! இந்த மென்பொருள் என்னா பண்ணுமுன்னா, நீங்க தட்டச்சு பண்ணுறதை அப்படியே ஃபீலீங்காக்கிடுமாம்! ஃபீலிங்கா, என்னா ஃபீலிங்குன்னு கேட்கறீங்களா? இதோ....

சந்தோஷம், பயம், ஆர்வம், குற்ற உணர்ச்சி, கோபம்-னு இன்னும் என்னென்னமோ ஃபீலிங்க்ஸையெல்லாம் 90 சதவிகிதம் துல்லியமா வெளிப்படுத்திருமாம். இது எப்படியிருக்கு?

ஆனா, நம்மாளுங்களைப் பத்தி நல்லாத் தெரிஞ்சதுனாலேயே என்னமோ, இந்த ஜொள்ளு மேட்டரை மட்டும் டிஸ்மிஸ்ட்ரீ சேர்த்துக்கலே! அதுனாலே, யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை! உங்களை யாரும் ஜொள்ளுப்பேர்வழின்னு சொல்ல வாய்ப்பேயில்லை! ஹிஹி! என்ஜாய்!!!

பண்ணுறதையெல்லாம் பண்ணிப்புட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி கூகிள் சாட்டுலே வந்து அசடு வழியுற வங்களுக்கு நீங்க கோபமா இருக்கீங்கன்னு தெரிஞ்சிடும். சில சமயங்களிலே அவங்களுக்கு இரத்தம் கூட வரலாம். ஒண்ணுமில்லாட்டியும் ஒரு வீக்கம் கண்டிப்பா கேரண்டி!

யாரையாவது ஆன்லைனிலே பார்த்தா, ’ஹை, நான் ஒரு பின்நவீனத்துவ கவிதை எழுதியிருக்கேன்! படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லு,’ன்னு கேட்டிருவாங்களோன்னு நீங்க பயப்படுறதும் அவங்களுக்கும் தெரிஞ்சிடும். "கவலைப்படாதே, என்னோட அடுத்த இடுகை கவிதையில்லே,"ன்னு அவங்களே சொல்லிடுவாங்க! அத்தோட விட்டுடணும்! ’கவிதை எழுதலியா? அப்படீன்னா நம்மளைத் திட்டி இடுகை போடப்போறானா?’ன்னு நீங்க பயந்தா, அதுவும் அவருக்கு உடனடியா தெரிஞ்சிடும்.

சதா உங்க பதிவுக்கு வந்து கடுப்பேத்துற ஆளு ஆன்லைனிலே வந்தா, வழக்கம்போல பல்லைக் கடிக்காதீங்க! அது அந்த ஆளுக்கு முறுக்கு நொறுக்குறா மாதிரி நறுக்குன்னு கேட்கும்!

மொத்தத்திலே இந்த ஐ-ஃபீல் ஐ.எம்.டிவைஸ் வந்திருச்சுன்னா, எல்லாரோட வண்டவாளமும் உடனுக்குடனே, சுடச் சுட தண்டவாளத்துலே ஏறிடும்!

இவ்வளவு ஏன்? அங்கே அவரு பொடி போட்டா இங்கே உங்களுக்குத் தும்மல் வரும்!

அங்கே அவருக்கு உங்க இடுகையைப் பார்த்துப் பொறாமை வந்தா, இங்கே உங்களுக்கு வயித்தை வலிக்கும்!

ஆன்லைனிலே நீங்க எதிர்பார்த்திட்டிருக்கிற அவங்க வந்ததும் நீங்க துள்ளிக்குதிச்சா, அவங்க நாற்காலி அதிரும்.

மொத்தத்துலே 90% எல்லாருக்கும் எல்லாரைப் பத்தியும் தெரிஞ்சிரும்!

ஐயையோ, இதென்ன விபரீதம்? அப்படீன்னா இனிமே அவங்கவங்க பிளாகுலே பீலா விட முடியாதா? எப்படிப் பொழைப்பை நடத்தறதுன்னா கேட்கறீங்க? அதுக்கு ஏதாவது அல்லது யாராவது கிடைக்காமலா போயிருவாங்க! கடவுள் கைவிட மாட்டார்! என்ன ஆனாலும், கூகிளாண்டவர் பூஜையை கைவிடாதீங்க!

இந்த ரோபோ மட்டும் செல்ஃபோன் மாதிரி இந்தியாவிலே மலிவாக் கிடைச்சா, நாம எல்லாருமா சேர்ந்து மெரீனாவுலே டிஸ்மிஸ்ட்ரீ அம்மணிக்கு ஒரு சிலை வைக்கணும். அடுத்தவாட்டி சந்திக்கும்போது அந்த சிலை பக்கத்துலேயே சந்திக்கலாம்! முடிஞ்சா ஒரு வடைமாலை சாத்திட்டு கூட்டம் முடிஞ்சதும் ஆளுக்கு ஒண்ணா பிய்ச்செடுத்திட்டு டீயோட குடிச்சா, போடுற இடுகைக்கு புண்ணியம் கிடைக்கும்!

டிஸ்மிஸ்ட்ரீ வாழ்க! ஐ-ஃபீல் ஐ.எம்.டிவைஸ் புகழ் ஓங்குக!!

33 comments:

  1. :)

    தேவையான நேரத்தில் அவசியமான இடுகை....

    ReplyDelete
  2. சேட்ட அண்ணாதே! வவுத்த வலிக்குதுப்பா.
    ஆமா! இந்த பொட்டியாண்ட குந்திகினு கலீஜா பேசிகினு,
    சண்ட போட்டுகினுகீரான்வள ? அவனுங்களு அப்போ அப்போ
    மூஞ்சி மேல குத்து வுட ஒரு மெசினு கண்டிபுடி நைனா!!

    ReplyDelete
  3. (iFeel-IM device) கலக்கல் :))))

    அது சரி.. ((ikick-IM device) இப்படி ஒரு டிவைஸ் நீங்க கண்டுபிடிங்க. பொட்டில யாரு யாரு வம்பு பண்றாங்களோ அவஙள உதைக்க வசதியா இருக்கும் :))))))))

    ReplyDelete
  4. ஹஹ்..ஹா.....நல்ல கண்டுபிடிப்பு...

    ReplyDelete
  5. நல்ல புதிய தகவல்கள்.

    ReplyDelete
  6. நல்லாக்கீது பா மேட்டர்...

    இப்படிக்கு,

    ரின்டோமிடொடாகாடு

    ReplyDelete
  7. ஆக வெட்டுக் குத்து மலிஞ்சிருமிங்குறீய.:))

    ReplyDelete
  8. ர்ர்ர்ரைரைரைட்ட்ட்டுடுடுடு.

    ReplyDelete
  9. :) நல்ல இடுகை. கொஞ்ச நாளா சேட்டையை காணோமே... சேட்டைல பிஸியா?

    ReplyDelete
  10. விஞ்ஞானத்திலும் கலக்கலா என் அன்பு சேட்டை?

    அருமை. சொன்ன விதம் மிக அழகு.

    பிரபாகர்...

    ReplyDelete
  11. அப்படின்னா வெட்டு குத்துக்கு பஞ்சமிருக்காது.....

    :-)

    ரைட்டு

    அந்த அம்மிணி வாழ்க...

    ReplyDelete
  12. அரி-குச்சி-சிக்க-கிமி-மிகா-தோ,

    ஜப்பான்காரன், இப்படியெல்லாம் யோசிக்க நமக்கு தெரியலியேனு உங்களை பாத்து பொறாமைப் படுரானாம்.......

    Take care. மிரி-கிசி-ஷிகா :-)

    ReplyDelete
  13. //ஜப்பானிலே பேரை வைச்சுப்புட்டு அதை ஏன் பரோட்டா மாதிரி பிய்ச்சுப் பிய்ச்சுப் போடறாங்க? //

    இந்த சமயத்தில் எங்கோ கேட்ட ஜோக் நினைவுக்கு வருகிறது.
    சீனாக்காரன் மற்றும் ஜப்பான்காரன் எப்படி பேர் வைப்பான்?
    குழந்தை பிறந்தவுடனே, ஒரு குடத்தை டேபிள் மேலிருந்து உருட்டுவாங்க. அது போடற சத்தத்தை பேரா வச்சுடுவாங்க. "சிங் சங் டொங்" "டண்டங் சிங்" இப்படி.

    ReplyDelete
  14. அப்ப அனானி கமெண்டு போட்டாலும் குத்து விழுமா? :-)))

    ReplyDelete
  15. கலக்கல் சேட்டை....

    ReplyDelete
  16. புதிய தகவல்கள் நன்றி.

    ReplyDelete
  17. ரெண்டு பேருடைய பேரையும் படிச்சுப்பாத்ததில வாய், பல்லு எல்லாம் சுளுக்கிக்கிடுச்சு. :-)

    முக்கியமான விஷயம் இல்லையினா நம்ம ஆளுங்க வாங்க மாட்டாங்களே!? இவனுகளா ஒரு இணைப்பை எழுதி சொருகிடுவாணுக.

    நிறையேப் பேருக்கு இதுநாள் மூஞ்சி பேந்துடும்னு தோணுது.

    ReplyDelete
  18. ஜப்பான் மொழி சொல்லிக் கொடுத்த சேட்டை வாழ்க வாழ்க.

    ReplyDelete
  19. ஆச்சர்யமூட்டும் தகவல்... அருமை :)

    அன்புடன்


    Shi-Ka-Ka-Te-Ri-Ka-Ki :)

    ReplyDelete
  20. சேட்டை புகழ் ஜப்பான் வரைக்கும் பரவிடுச்சு போல :)

    ReplyDelete
  21. //////A-ka; B-tu; C-mi; D-te; E-ku; F-lu; G-ji; H-ri; I-ki; J-zu; K-me; L-ta; M-rin; N-to; O-mo; P-no; Q-ke; R-shi; S-ari; T-chi; U-do; V-ru;
    W-mei; X-na; Y-fu; Z-zi

    S=ari,E=ku,T=chi,T=chi,A=ka,I=ki,K=me,K=me,A=ka,R=shi,A=ka,N=to
    ari-ku-chi-chi-ka-ki-me-me-ka-shi-ka-to =அரி-குச்சி-சிக்க-கிமி-மிகா-தோ
    //////////


    நண்பரே எல்லாம் ஆங்கிலத்தில இருக்கிறதே தமிழில் இல்லையா ?
    நானும் என் பெயரை எழுதி இன்று முழுவதும் ரூம்போட்டு வாசித்துப் பார்த்துவிட்டேன் இதுவரை ஒரு மண்ணும் புரியவில்லை .
    பயித்தியமே பிடித்திடும் போல இருக்கு எப்படித்தான் ஜப்பான்காரர்கள் சாமளிக்கிறார்களோ .

    ReplyDelete
  22. சாரி தல உங்க பேர குச்சி மிட்டாய்ன்னு படிச்சிட்டேன் ஹி..ஹி..

    ReplyDelete
  23. நல்லாத்தான் இருக்கு கண்டுபிடிப்பு.
    ஏதாச்சும்ன்னா பொறுப்பு நீங்கதான் !

    ReplyDelete
  24. அந்த ஆத்தாவுக்கு வேற வேலை இல்லையா?

    போய் சூடா ரெண்டு இட்லியும் கார சட்னியும் கொண்டு வரச் சொல்லுங்க.. அதை விட்டு.. போங்க.. போய் பிழைப்பை பாருங்க..

    ReplyDelete
  25. ஜப்பான் மொழி இவ்ளோ ஈசியானதா :-)).

    ReplyDelete
  26. ரசிச்சேன்னு மட்டும் சொல்லிக்கறேன் :)

    ReplyDelete
  27. மெஷின் சீக்கிரமா, நம்மை ஆளுமைப்படுத்தப்போகுது சொல்லுங்க...

    ReplyDelete
  28. அப்பாடா நாங்களும் கத்துகினோம் ஜப்பான் மொழிய.

    உக்காந்து யோசிகிறதிலேயும் சோக்கா யோசிக்கிறீங்க சேட்டை..

    ReplyDelete
  29. //உக்காந்து யோசிகிறதிலேயும் சோக்கா யோசிக்கிறீங்க சேட்டை..//

    :):)

    ReplyDelete
  30. தல, மேல சிரிக்குதே அந்தப் புள்ளை யாரு? ஷோக்கா கீதுபா!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!