வாழ்க்கை என்பதே ஒரு தொடர்ச்சியான தேர்வன்றோ? இதில் வெற்றியும் வரும், தோல்வியும் வரும்! வெற்றி வரும்போது குதூகலம் அடைவதும், தோல்வி வரும்போதும் துவள்வதும் மனித இயல்பன்றோ?
ஐயையோ!
"நான் ஆதவன்"’ எழுதின,"ஒய் ப்ளட்?...சேம் ப்ளட்," இடுகையை என்னைத் தொடரச் சொன்னா, நான் என்ன இவ்வளவு சீரியஸா மரத்தடி மாமுனி மாதிரி பினாத்திட்டிருக்கேன்? அதுவும் வரிசைப்படி அஷீதாவும்."படிச்சு பார்த்தேன் ஏறவில்ல...,"-னு இடுகை போட்டதுக்கப்புறமும் நான் இதுலேயும் அரியர்ஸ் வைச்சா நல்லாவா இருக்கும்?
ஸ்டார்ட் மீஜிக்!
பரீட்சையாம், தேர்வாம்! என்ன அநியாயமய்யா இது? இதெல்லாம் தேவையா? கேட்டா, நமக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்குன்னு பார்க்கத்தான் பரீட்சைன்னு சொல்லுறாங்க! ஆனா, ஒவ்வொரு வாட்டியும் நமக்குத் தெரியாத கேள்வியாவே கேட்டு டார்ச்சர் பண்ணுறாங்க! அந்தோ, இஃதென்ன கொடுமை!
ஒவ்வொரு வாட்டியும் பரீட்சை நெருங்கும்போது நான் எப்படிப் படிப்பேன்னு தெரியுமா? அதுக்குன்னு ஒரு திட்டமே போட்டு வச்சிருந்தேன். அதாவது, தினமும் ராத்திரி ஒரு காயினை எடுத்து, பூவா தலையா போட்டுப் பார்ப்பேன். பூ விழுந்தா தூங்கப்போயிடுவேன்; தலை விழுந்தா சினிமாவுக்குப் போயிடுவேன். ரெண்டுமே விழலேன்னா கண்டிப்பாப் படிக்கப்போயிடுவேன்! படிப்புன்னா எனக்கு அவ்வளவு ஈடுபாடு!
ஒவ்வொரு வாட்டியும் பரீட்சை வரும்போது எங்க வீட்டுலே பிள்ளையாருக்கு தேங்காய், ஐயனாருக்கு மஞ்சணை, முத்தாரம்மனுக்கு எலுமிச்சம்பழம், அனுமாருக்கு வெண்ணை-ன்னு வகைவகையா காணிக்கை! எனக்கு ஒண்ணும் கிடையாதான்னு கேட்கறீங்களா? அதெல்லாம் ரிசல்ட் வந்தப்புறம் விமர்சையா அர்ச்சனை பண்ணி கரெக்டா கற்பூரம் காட்டிருவாங்க! குறையே வைக்க மாட்டாங்க!
அவங்களுக்கு என் மேலேயும் என் படிப்பு மேலேயும் அவ்வளவு நம்பிக்கை! காரணம் இல்லாம இல்லை! இப்போ உதாரணத்துக்கு.....
விஞ்ஞானப் பாடம் நடத்திட்டிருந்த வாத்தியாரு, நல்ல தூக்கத்துலே என்னை திடீர்னு எழுப்பி விட்டு,"டேய், எடிசன், ஐன்ஸ்டீன், கிரஹாம் பெல் மூணு பேருக்கும் என்னடா ஒற்றுமை?"ன்னு கேட்டாருங்க!
"மூணு பேருமே செத்துப்போயிட்டாங்க,"ன்னு சொல்லிட்டேன். இதை ஒரு பெரிய புகாரா எடுத்துக்கிட்டு வாத்தியார் எங்கப்பா கிட்டே வந்து சொல்ல, எங்கப்பா என்னைத் திட்டு திட்டுன்னு திட்டிப்புட்டாரு! அத்தோட விட்டாரா? வாத்தியார் கிட்டே, "எங்க முன்னாலே ஒரே ஒரு வாட்டி அவனுக்கு சொல்லிக்கொடுங்க! அந்த மூணு பேருலே யாரு இன்னும் சாகலேன்னு அப்பவாச்சும் அவன் சொல்லுறானான்னு பார்ப்போம்,"ன்னுட்டாரு!
வாத்தியார் சைக்கிள்ளே வந்ததைக் கூட மறந்திட்டு ஓட்டமா ஓடிப்போயிட்டாரு! அதுக்கப்புறம் அவரை எங்க ஜில்லாவிலேயே யாரும் பார்க்கலியாம்! சைக்கிள் என்னாச்சுன்னா கேட்கறீங்க? ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்......!
ஆனா ஒண்ணு, அன்னிலேருந்து எங்கப்பா என் படிப்புலே தனி கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாரு! ஒவ்வொரு வாட்டியும் நான் பரீட்சை எழுதிட்டு வந்ததும் கயத்தாறு செக்-போஸ்ட் மாதிரி வாசல்லேயே என்னை வழிமறிச்சிருவாரு!
-டேய்! கணக்குப் பரீட்சை எப்படிடா எழுதினே?
-ஒரே ஒரு கணக்குத் தான் தப்பாப் போட்டுட்டேன்!
-நினைச்சேன்! படிச்சாத் தானே? சரி விடு, மொத்தம் எத்தனை கணக்கு கேட்டிருந்தாங்க!
-பதினைஞ்சு!
-பரவாயில்லே! மீதி பதினாலு கணக்கையாவது சரியாப் போட்டிருக்கியே!
-இல்லேப்பா! அதுலே ஒண்ணு கூட எனக்குத் தெரியலே; அதுனாலே எழுதவேயில்லை!
இனிமேல் உள்ளூர் சாமியை நம்பிப் புண்ணியமில்லேன்னு திருச்செந்தூர், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், நாங்குநேரின்னு அப்பா பஸ்-ஸ்டாண்டே கதின்னு கிடக்க ஆரம்பிச்சிட்டாரு! எங்கப்பா போக ஆரம்பிச்சதுக்கப்புறம் திருச்செந்தூரிலே மொட்டையடிக்கிறதுக்கு சீசன் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!
சுத்துப்பட்ட எட்டுப்பட்டியிலேயும் நாலெழுத்துப் படிச்சவங்க கிட்டேயெல்லாம் புலம்ப ஆரம்பிச்சாரு! அதுலே ஒருத்தர் என் கிட்டே வந்து,"நீ ஏன் பரீட்சைன்னா பயப்படுறே? அதையும் கிரிக்கெட், ஃபுட்பால் மாதிரி ஒரு விளையாட்டா நினைச்சுக்க!"ன்னு அட்வைஸ் பண்ணினாரு! என்ன ஆச்சரியம் பாருங்களேன்! அதுக்கப்புறம் எனக்கு கிரிக்கெட், ஃபுட்பாலுன்னாலே அலர்ஜீ ஆயிடுச்சு!
இந்தப் பெத்தவங்க கிட்டே என்ன குறைன்னா, நம்மளோட நியாயமான பிரச்சினையைக் கூட புரிஞ்சுக்க மாட்டாங்க! இப்படித்தான் ஒருவாட்டி ப்ராக்ரஸ்-ரிப்போர்ட்டை அப்பா கிட்டே நீட்டினேன்.
-ஏண்டா இங்கிலீஷ் பரீட்சையிலே ஜீரோ மார்க்?
-அன்னிக்கு ஆப்சண்ட்!
-பரீட்சையன்னிக்கு ஆப்சண்டா? வேறே எங்கேடா போனே?
-நான் பரீட்சைக்குத் தான் போனேன். என் ஃபிரண்டு தான் ஆப்சண்ட்! அவன் வந்திருந்தா நானும் பாசாயிருப்பேன்!
-சொந்தபுத்தியும் கிடையாது! சொல்புத்தியும் கிடையாது! எப்படித்தான் உருப்படப்போறியோ?
எவ்வளவு அபாண்டம் பாருங்க! சொந்தபுத்தி கிடையாதாம். என்னிக்காவது நான் வகுப்புலே வாத்தியார் கேட்குற கேள்விக்கு பதில் கொடுக்கிறதை வந்து பார்த்திருந்தாத் தெரியும்!
இப்படித்தான் இன்னொரு வரலாற்று வகுப்புலே என் வரலாறு பத்தி சரியாத் தெரியாம வாத்தியார் எழுப்பிக் கேள்வி கேட்டாரு.
-இங்கிலாந்தில் மன்னர்களுக்கும் ராணிகளுக்கும் எந்த இடத்தில் முடிசூட்டுவார்கள்?
-தலையிலே தான் சார்!
-நான் அதையா கேட்டேன்? பர்மிங்க்ஹாம் அரண்மனையிலே! சரி, இந்தக் கேள்விக்காவது சரியா பதில் சொல்லு!
-சரி சார்!
-மகேந்திரவர்ம பல்லவன் சிம்மாசனம் கிடைத்ததும் என்ன செய்தான்?
-அதுலே உட்கார்ந்தான் சார்!
-முதல்லே நீ உட்காரப்பா! இனிமேல் உன் கிட்டே கேள்வி கேட்டா என் பேரு அடைக்கோழி இல்லை....அதாவது...நயினார்சாமியில்லை...சே, வர வர நீங்க வச்ச பட்டப்பெயர் தான் என் வாயிலேயும் வருது!
ஆனா, எங்கம்மா அப்பா மாதிரியில்லை! ரொம்பப் பாசத்தோட என் கிட்டே பரிவாக் கேட்பாங்க!
"டேய், ஒருவாட்டியாவது நீ கிளாஸிலே முதல்லே வரணுண்டா! என் ஆசையை நிறைவேத்துவியா?"
"அம்மா! அதை நான் தினமும் நிறைவேத்திட்டிருக்கேம்மா! இப்பவும் பெல் அடிச்சா நான் தாம்மா கிளாசிலே முதல்லே வெளியே வருவேன்!"
ஆனா ஒரு விஷயத்துலே என்னை யாராலும் பீட் பண்ண முடியாது. என்னை மாதிரி 'நீட்’டா பரீட்சைப் பேப்பரை யாராலும் வச்சிருக்க முடியாது. எழுதினாத் தானே? சில சமயங்களிலே என்னோட ஆன்சர் பேப்பரையே அடுத்த பரீட்சைக்கு எக்ஸ்ட்ரா-பேப்பராக் கொடுக்கலாம். அவ்வளவு சுத்தமா ஒரு எழுத்துக் கூட எழுதாம இருக்கும்!
எது எப்படியிருந்தாலும், என் பெயர், வகுப்பு, பிரிவு, பாடம் இதையெல்லாம் நல்லா உருட்டி உருட்டி அழகா எழுதிடுவேன்! இதுவரைக்கும் எந்த வாத்தியாராலேயும் அதுலே தப்பே கண்டுபிடிக்க முடிஞ்சதில்லே தெரியுமா?
நான் மட்டும் தான் இவ்வளவு புத்திசாலியான்னு நினைக்காதீங்க! என் சினேகிதங்களும் அப்படித்தான்! அதுலே ஒருத்தன் கிட்டே வாத்தியாரு பொது அறிவு கேள்வி கேட்டாரு!
-சைக்கிளை யார் கண்டுபிடிச்சாங்க?
-ஐயையோ, என் சைக்கிள் எப்போ காணாமப் போச்சு?
பரீட்சைக்கு முந்தின நாள் நாங்கெல்லாம் 'குரூப் ஸ்டடி’ன்னு ஒண்ணு பண்ணுவோம்! ஆளுக்கு அரை லிட்டர் சுக்குக்காப்பியைக் குடிச்சுட்டு குறட்டை விட்டுத் தூங்கினவங்க உலகத்திலேயே நானும் என் சினேகிதங்களும் தான்!
எங்க நாலு பேருக்குள்ளே ஒரு அண்டர்-ஸ்டாண்டிங் இருந்தது. அதாவது எல்லா சப்ஜெக்டுக்கும் யாராவது ஒருத்தர் புஸ்தகம் வச்சிருந்தாப் போதும்! எக்ஸ்ட்ரா புத்தகம் இருந்தா அதை வித்து, நாராயணசாமி தியேட்டரிலே படம் பார்த்துருவோமில்லா? அப்படீன்னா பரீட்சைக்கு எப்படிப் படிப்போமுன்னு கேட்கறீங்களா? அதுக்குத் தான் குரூப் ஸ்டடி!
ஒருத்தன் வாசிக்கணும்; மத்தவங்க கேட்கணும்னு ஏற்பாடு! பிரச்சினை என்னான்னா, ஒருத்தன் வாசிக்கிறபோதே மத்தவனுங்க தூங்கிருவாங்க! அதுனாலே எல்லாரும் விழிப்புணர்ச்சியோட படிக்கிறதுக்காக நான் ஒரு ஐடியா பண்ணினேன். மொத்தம் அஞ்சு பேரு நாங்க! புத்தகத்தை சரியா அஞ்சு பகுதியாக் கிழிச்சு ஆளுக்கு ஒண்ணாக் கொடுத்திருவோம். ஒருத்தன் அவன் பகுதியைப் படிச்சிட்டு அடுத்தவனுக்குக் கொடுக்கணும்னு பேச்சு! ஆனா, கடைசிவரைக்கும் அந்த ஒரு தப்பை யாருமே பண்ணவேயில்லை!
மத்தவங்களெல்லாம் படிச்சுக் கிழிச்சாங்க; நாங்க கிழிச்சே படிச்சோம்!
இப்பவாச்சும் சேட்டை ஏன் உருப்படாமப் போயிட்டான்னு புரிஞ்சுதா? அப்படிப் புரியாதவங்களுக்கும் இந்த இடுகைக்கு சம்பந்தமேயில்லாம ஸ்ரேயா படம் போட்டதைப் பார்த்தா கண்டிப்பா புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்! ஹிஹி!
இதை யார் யார் தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, தாராளமாகத் தொடருங்கள்! :-) ரெடி, ஸ்டெடி...கோ....!

//பரீட்சைக்கு முந்தின நாள் நாங்கெல்லாம் 'குரூப் ஸ்டடி’ன்னு ஒண்ணு பண்ணுவோம்! ஆளுக்கு அரை லிட்டர் சுக்குக்காப்பியைக் குடிச்சுட்டு குறட்டை விட்டுத் தூங்கினவங்க உலகத்திலேயே நானும் என் சினேகிதங்களும் தான்!///
ReplyDeleteநாங்கலெல்லாம் அலப்பரை பண்றதே குரூப் ஸ்டடியிலேதான்...
சேட்டை பாதி என் கதை மாதிரியே இருக்கு. ஹா..ஹ...
ReplyDeleteவழக்கம் போல சேட்டை தாங்கல
ReplyDeleteசேட்டை சூப்பர்.
ReplyDeleteநன்றாக ரசிக்கக்கூடியதாக இருந்தது.
எல்லாம் நம்மூரு பக்கமா சொல்றீகளே....... எந்த பள்ளியில், இந்த சேட்டைகள்? சரி, சரி...... எதுக்கு ஊர் வம்பு?
ReplyDelete// எங்க நாலு பேருக்குள்ளே ஒரு அண்டர்-ஸ்டாண்டிங் இருந்தது. அதாவது எல்லா சப்ஜெக்டுக்கும் யாராவது ஒருத்தர் புஸ்தகம் வச்சிருந்தாப் போதும்! எக்ஸ்ட்ரா புத்தகம் இருந்தா அதை வித்து, நாராயணசாமி தியேட்டரிலே படம் பார்த்துருவோமில்லா?//
ReplyDeleteசாமீ தாங்கலப்பா!!
ஆஜர்
ReplyDelete//வாத்தியார் சைக்கிள்ளே வந்ததைக் கூட மறந்திட்டு ஓட்டமா ஓடிப்போயிட்டாரு!//
ReplyDeleteஆசிரியருக்கே பாடம் கற்றுக்கொடுத்த குரு நீங்கதானா? (இனிமே கேள்வியே கேட்றக் கூடாது)
//அதுக்கப்புறம் எனக்கு கிரிக்கெட், ஃபுட்பாலுன்னாலே அலர்ஜீ ஆயிடுச்சு!//
ReplyDelete'விளையாட்டு வினையாகிடும்'ங்கிறது இதுதானா?
என்ன சேட்ட,
ReplyDeleteஇது உண்மையான அனுபவமா!
இல்ல,
வழக்கம் போல சேட்டையா?
அட.. எல்லா ஊர்லயும் இதேதானா.. நாங்க சுக்கு காபிக்கு பதிலா தூக்கம் வராம ஏதாச்சும் மாத்திரை இருக்கானு கேட்டோம்.. அவரு என்ன புரிஞ்சுகிட்டாரோ.. கொடுத்த மாத்திரையைப் போட்டதும் சூப்பர் தூக்கம்.. மறுநாள் பரிட்சைல மார்க் அவுட்..
ReplyDeleteசுவாரஸ்யம்.
ReplyDelete//////"டேய், ஒருவாட்டியாவது நீ கிளாஸிலே முதல்லே வரணுண்டா! என் ஆசையை நிறைவேத்துவியா?"
ReplyDelete"அம்மா! அதை நான் தினமும் நிறைவேத்திட்டிருக்கேம்மா! இப்பவும் பெல் அடிச்சா நான் தாம்மா கிளாசிலே முதல்லே வெளியே வருவேன்!"//////////
நகைச்சுவை என்றாலும் இதுதான் உண்மை என் பள்ளி நாட்களிலும் . மிகவும் கலக்கலான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே !
இப்பல்லா புரியுது. இந்த சேட்டைக்காரன்னு பேரு படிக்கும்போதே வாத்திமார் வச்சதுன்னு.:))
ReplyDeleteரசிக்க கூடியதாக... நன்றாக இருந்தது...
ReplyDeleteசேட்டை நீங்களும் நம்ம கேசுதானா..ஹ ஹ ஹ இம்புட்டு நாளு நீங்க ரொம்ப அறிவாளி படிக்கிற புள்ள போலன்னு தப்பா நெனச்சுப்புட்டேனே :)))))))))))
ReplyDeleteகலக்கல்ஸ் !!!
//என் சினேகிதங்களும் அப்படித்தான்! அதுலே ஒருத்தன் கிட்டே வாத்தியாரு பொது அறிவு கேள்வி கேட்டாரு!
ReplyDeleteஆளுக்கு அரை லிட்டர் சுக்குக்காப்பியைக் குடிச்சுட்டு குறட்டை விட்டுத் தூங்கினவங்க உலகத்திலேயே நானும் என் சினேகிதங்களும் தான்!//
வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கொடுத்தது சினேகிதங்கள்ன்னு கூபீட்டதை நினைச்சா புள்ளரிக்குது. (ஆவ்வ்வ்வ்)
ஆமா எப்ப சுக்கு காபி கொடுத்தீங்க.
இது அத்தனையும் ரீல் என்று நினைக்கிறேன். இவ்வளவு யோசிச்சு எழுதுற ஆள் பரிட்சையில பாஸாகாம இருப்பீங்களா.
அட...சுக்குத் தண்ணில இவ்ளோ இருக்கா !தெரியாமப் போச்சு.
ReplyDeleteநல்ல சேட்டைதான் !
கலக்கல் சேட்டை.. பரீட்சை எழுதறதுல இவ்வளவு இருக்கா?
ReplyDelete//அஷீதா said...
சேட்டை நீங்களும் நம்ம கேசுதானா..ஹ ஹ ஹ இம்புட்டு நாளு நீங்க ரொம்ப அறிவாளி படிக்கிற புள்ள போலன்னு தப்பா நெனச்சுப்புட்டேனே :)))))))))))
கலக்கல்ஸ் !!//
அஷீதா.. படிக்கிற புள்ளைங்க எல்லாம் அறிவாளி இல்லை. அறிவாளிங்க எல்லாம் படிச்சவங்க இல்லை.
உங்களுக்கு ஓட்டுப் போட்டா வேற யாருக்கோ போவுதே ஏன்?
ReplyDeleteஅதகளம்!
ReplyDeleteஅசோகர் மரத்த நட்டத உட்டுட்டீங்களே? :)
ரொம்ப சேட்டதான் உங்களுக்கு..
ReplyDeleteபடிக்காமலே இப்பிடின்னா
படிச்சிருந்தா எப்புடி...
இந்த தொடர் பதிவுக்கு உண்மையா ஏதாவது எழுதி இருப்பீங்கன்னு நினைச்சுப் படிச்சேன்.. எல்லாத்திலயும் மொக்கையா? நல்லா இல்லையே.. :(
ReplyDeleteஆத்தாடி !!!!
ReplyDeleteநான் எல்லாம் ஜுஜுபி!
நம்மாலே தொடர இயலாது
ஆத்தாடி நான் எல்லாம் ஜுஜுபி ...தொடர இயலாது
ReplyDeleteஆகா நீங்களும் நம்ம கட்சி. நிறைய சேட்டை பண்ணினதால உங்களுக்கு வாத்தியார் வைத்த பேர் தானா சேட்டைக்காரன்?
ReplyDeleteஅஹமது இர்ஷாத் said...
ReplyDelete//நாங்கலெல்லாம் அலப்பரை பண்றதே குரூப் ஸ்டடியிலேதான்...//
எல்லாரும் தான்! வேறே எதுக்கு குரூப் ஸ்டடி? :-)
மிக்க நன்றி!
LK said...
//வழக்கம் போல சேட்டை தாங்கல//
மிக்க நன்றி! :-)
ஜெய்லானி said...
// சேட்டை பாதி என் கதை மாதிரியே இருக்கு. ஹா..ஹ...//
பாதி தானா? அவ்வ்வ்வ்!
மிக்க நன்றி! :-)
malgudi said...
//சேட்டை சூப்பர். நன்றாக ரசிக்கக்கூடியதாக இருந்தது.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வருக! :-)
Chitra said...
//எல்லாம் நம்மூரு பக்கமா சொல்றீகளே....... எந்த பள்ளியில், இந்த சேட்டைகள்? சரி, சரி...... எதுக்கு ஊர் வம்பு?//
யாதும் ஊரே யாவரும் கேளிர்னாலும் தாமிரபரணித் தண்ணியோட தனித்தன்மை போகுமா? மிக்க நன்றி! :-)
கக்கு - மாணிக்கம் said...
//சாமீ தாங்கலப்பா!!//
மிக்க நன்றி! :-)
Dr.P.Kandaswamy said...
//ஆஜர்//
மிக்க நன்றி! :-)
NIZAMUDEEN said...
//ஆசிரியருக்கே பாடம் கற்றுக்கொடுத்த குரு நீங்கதானா? (இனிமே கேள்வியே கேட்றக் கூடாது)//
அது அப்போ, இப்போ எவ்ளோ வேண்ணாக் கேட்கலாம்! மிக்க நன்றி! :-)
NIZAMUDEEN said...
ReplyDelete//விளையாட்டு வினையாகிடும்'ங்கிறது இதுதானா?//
அதே! அதே! :-)
பட்டாசு said...
//என்ன சேட்ட, இது உண்மையான அனுபவமா! இல்ல, வழக்கம் போல சேட்டையா?//
ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி! ஹிஹி! மிக்க நன்றி! :-)
ரிஷபன் said...
//அட.. எல்லா ஊர்லயும் இதேதானா.. நாங்க சுக்கு காபிக்கு பதிலா தூக்கம் வராம ஏதாச்சும் மாத்திரை இருக்கானு கேட்டோம்.. அவரு என்ன புரிஞ்சுகிட்டாரோ.. கொடுத்த மாத்திரையைப் போட்டதும் சூப்பர் தூக்கம்.. மறுநாள் பரிட்சைல மார்க் அவுட்..//
ஆஹா, இது தெரிஞ்சிருந்தா சேர்த்திருக்கலாம் போலிருக்கே? மிக்க நன்றி! :-)
நாடோடி இலக்கியன் said...
//சுவாரஸ்யம்.//
மிக்க நன்றி! :-)
வானம்பாடிகள் said...
//இப்பல்லா புரியுது. இந்த சேட்டைக்காரன்னு பேரு படிக்கும்போதே வாத்திமார் வச்சதுன்னு.:))//
ஐயா, எனக்கு வாத்திமார் வச்ச பேரு எக்கச்சக்கம்! அனேகமா சேட்டைக்காரன்னு ஒரு பெயரும் இருந்திருக்கலாம். ஞாபகமில்லே! மிக்க நன்றி! :-)
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//நகைச்சுவை என்றாலும் இதுதான் உண்மை என் பள்ளி நாட்களிலும் . மிகவும் கலக்கலான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே !//
வாங்க, வாங்க, வழமை போல உற்சாகமூட்டியதற்கு மிக்க நன்றி! :-)
தோழி said...
//ரசிக்க கூடியதாக... நன்றாக இருந்தது...//
மிக்க நன்றி! :-)
அஷீதா said...
//சேட்டை நீங்களும் நம்ம கேசுதானா..ஹ ஹ ஹ இம்புட்டு நாளு நீங்க ரொம்ப அறிவாளி படிக்கிற புள்ள போலன்னு தப்பா நெனச்சுப்புட்டேனே :))))))))))) கலக்கல்ஸ்//
என்னைப் பார்த்து அறிவாளின்னு சொல்லிட்டீங்களே? இனிமேல் நான் என்ன பண்ணப்போறேனோ தெரியலியே!
மிக்க நன்றி! :-)
அக்பர் said...
ReplyDelete//வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கொடுத்தது சினேகிதங்கள்ன்னு கூபீட்டதை நினைச்சா புள்ளரிக்குது. (ஆவ்வ்வ்வ்)//
ஆமாண்ணே, இப்பவும் அவங்க சினேகிதங்களா இருக்காங்களே!
//ஆமா எப்ப சுக்கு காபி கொடுத்தீங்க.//
அந்தக் கணக்கு பெரிய கணக்கு! தனியாவே ஒரு இடுகை போடலாம்!
//இது அத்தனையும் ரீல் என்று நினைக்கிறேன். இவ்வளவு யோசிச்சு எழுதுற ஆள் பரிட்சையில பாஸாகாம இருப்பீங்களா.//
இல்லேண்ணே, அரியர்ஸ் போட்டுத்தான் பாஸ் பண்ணினேன்! படிப்புலே நான் ரொம்ப வீக்! மிக்க நன்றி! :-)
ஹேமா said...
//அட...சுக்குத் தண்ணில இவ்ளோ இருக்கா !தெரியாமப் போச்சு.நல்ல சேட்டைதான் !//
தூங்காம இருக்கத்தான் சுக்குக்காப்பி- மத்தவங்களுக்கு! :-))))
மிக்க நன்றி! :-))
முகிலன் said...
//கலக்கல் சேட்டை.. பரீட்சை எழுதறதுல இவ்வளவு இருக்கா?//
இன்னும் இருக்குண்ணே! இடுகை பெரிசாயிடுமேன்னு அரைகுறையா முடிச்சிட்டேன்! மிக்க நன்றி! :-)
//அஷீதா.. படிக்கிற புள்ளைங்க எல்லாம் அறிவாளி இல்லை. அறிவாளிங்க எல்லாம் படிச்சவங்க இல்லை.//
சூப்பர் பஞ்ச்! :-))))
//உங்களுக்கு ஓட்டுப் போட்டா வேற யாருக்கோ போவுதே ஏன்?//
இதே பேருலே இன்னொருத்தர் பதிவு எழுதியிருக்காருங்கண்ணே! ஆனா, உங்க ஒட்டு எனக்குத் தான் விழுந்திருக்கு! மிக்க நன்றி! :-)
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//அதகளம்! அசோகர் மரத்த நட்டத உட்டுட்டீங்களே? :)//
ஐயையோ, மறந்திட்டேன் பார்த்தீங்களா? இந்த அழகுலே தான் படிச்சிருக்கேன்! மிக்க நன்றி! :-)
Riyas said...
//ரொம்ப சேட்டதான் உங்களுக்கு..படிக்காமலே இப்பிடின்னா படிச்சிருந்தா எப்புடி...//
உலகம் ஒரு பெரிய பிரளயத்துலேருந்து தப்பிச்சிருக்குங்க! மிக்க நன்றி! :-)
தமிழ் பிரியன் said...
//இந்த தொடர் பதிவுக்கு உண்மையா ஏதாவது எழுதி இருப்பீங்கன்னு நினைச்சுப் படிச்சேன்.. எல்லாத்திலயும் மொக்கையா? நல்லா இல்லையே.. :(//
இது உண்மையில்லேன்னு நினைக்க உங்களுக்கு உரிமையிருக்கு! உங்கள் கருத்துக்கு நன்றி! ரசனைகள் மாறுபடுவது இயல்பு தானே? :-))
goma said...
//ஆத்தாடி நான் எல்லாம் ஜுஜுபி ...தொடர இயலாது//
//ஆத்தாடி !!!! நான் எல்லாம் ஜுஜுபி! நம்மாலே தொடர இயலாது//
நீங்க ரெண்டு தடவை சொல்லியிருக்கிறதைப் பார்த்தா கண்டிப்பா தொடருவீங்கன்னு நினைக்கிறேன். உங்க நகைச்சுவை உணர்வைப் பத்தி எனக்குத் தெரியாதா? மிக்க நன்றி! :-)
பரிச்சைல கோட்டை விட்டாலும் ..பதிவுல கோ(சே)ட்டை கட்டுறீங்க
ReplyDeleteஹா ஹா ஹா... சும்மா ஒரு கற்பனை... நீங்க டீச்சர் ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கும் நெனச்சேன் சிரிச்சேன்....
ReplyDelete