சேட்டைக்காரன்: டாக்டர்! டாக்டர்! எனக்கு கொஞ்ச நாளா கண்ணே சரியாத் தெரிய மாட்டேங்குது டாக்டர்!
எதிரே நின்ற நபர்: அதை நீங்க சொல்லவே வேண்டாம்! ஏன்னா நான் டாக்டரில்லே; கம்பவுண்டர்! டாக்டர் உள்ளேயிருக்காரு!
சே.கா: ஓ சாரி! நான் உள்ளே போய்ப்பார்க்கலாமா?
கம்பவுண்டர்: போங்க போங்க! (மனதுக்குள்) நல்லாக் கண்ணு தெரியறவன் எதுக்கு இந்த ஹாஸ்பிட்டலுக்கு வரப்போறான்?
சே.கா: குட்மார்னிங் டாக்டர்!
டாக்டர்: குட்மார்னிங்! உட்காருங்க! என்ன பிரச்சினை?
சே.கா: டாக்டர்! எனக்கு சில சமயம் கண்ணு தெரியுது; சில சமயம் தெரிய மாட்டேங்குது! சில சமயம் எல்லாம் முழுசாத் தெரியுது. சில சமயம் பாதியாத் தெரியுது!
டாக்டர்: இன்டரஸ்டிங்! சமீபத்துலே என்ன சினிமா பார்த்தீங்க?
சே.கா: ராஜலீலை!
டாக்டர்: நினைச்சேன்! உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வைக்கப்போறேன். நான் காட்டுறதையெல்லாம் நீங்க படிச்சுச் சொல்லணும். சரியா?
சே.கா: தெரியும் டாக்டர்! ஒண்ணாம் கிளாஸ் பசங்க மாதிரி போர்டைப் பார்த்து அ..ஆ..இ..ஈ..படிச்சுக்காட்டச் சொல்லப்போறீங்க. அதுதானே?
டாக்டர்: அது தான் இல்லை! இந்தாங்க, இந்தப் பேப்பரிலே பெரிய எழுத்திலே என்ன எழுதியிருக்கு படிங்க பார்க்கலாம்...
சே.கா: என்ன டாக்டர் இது? ஒண்ணுமே தெரியலியே!
டாக்டர்: நிஜமாவா? நானே வாசிச்சுக்காட்டுறேன் பாருங்க! "பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா - முதல்வர் கடுந்தாக்கு!" இப்போ தெரியுதா?
சே.கா: இல்லியே டாக்டர்! ஏதோ கொசகொசன்னு தெரியுது! ஒரு எழுத்துக்கூட கண்ணுக்குத் தெரியலியே! அது போகட்டும், பதிபக்தின்னா என்ன டாக்டர்?
டாக்டர்: அதுவா, சிவாஜியும் பத்மினியும் நடிச்ச சினிமா! என்னப்பா இது, இவ்வளவு பெரிய எழுத்தே கண்ணுக்குத் தெரியலியா? அப்படீன்னா இந்த சின்ன எழுத்துலே அச்சாகியிருக்கிறது உன்னோட கண்ணுக்குத் தெரியவே தெரியாதே?
சே.கா: இல்லை டாக்டர்! ரொம்பவே க்ளீனாத் தெரியுது! வாசிக்க முடியுது!
டாக்டர்: (அதிர்ச்சியுடன்) என்னது? வாசிங்க பார்க்கலாம்!
சே.கா: "தமன்னாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த தெலுங்கு நடிகர்!"
டாக்டர்: அட, சுலபமா வாசிச்சிட்டீங்களே?
சே.கா: அந்த நடிகருக்கு அறிவே கிடையாது டாக்டர்! அவனவன் தமன்னாவை ஒருவாட்டி பக்கத்துலே நின்னு பார்க்கணுமுன்னு க்ரீன் பார்க் ஹோட்டல் வாசலிலே பல்லு கூட விளக்காம காலையிலேயே போய்க் காத்துக்கிட்டிருக்கான். இந்தாளுக்கு முத்தம் கொடுக்கக் கசக்குதா?
டாக்டர்: ஒரே குழப்பமாயிருக்கே! சின்ன எழுத்துலே எழுதினத வாசிக்கறீங்க! பெரிய எழுத்துலே எழுதறதை வாசிக்க முடியலியா? சரி, இதோ இதை வாசிக்க ட்ரை பண்ணுங்க!
சே.கா: என்ன டாக்டர்? வெத்துப் பேப்பரைக் கையிலே கொடுத்து வாசிக்கச் சொல்றீங்க?
டாக்டர்: என்னது வெத்துப்பேப்பரா? யோவ், இவ்வளவு கொட்டை எழுத்துலே பிரிண்ட் பண்ணியிருக்கு...."ஐ.பி.எல்.அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை,’ன்னு..! இதைக்கூடவா வாசிக்க முடியலே!
சே.கா: இல்லை டாக்டர்! எனக்குக் கிரிக்கெட்டுலே இன்டரஸ்ட் கிடையாது! அது போகட்டும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் செமி-ஃபைனலுக்குப் போயிருச்சா டாக்டர்?
டாக்டர்: கருமம், இன்னிக்கு யாரு முகத்துலே முழிச்சேனோ, இப்படியொரு பாடாவதி பேஷியன்ட் வந்து உயிரை எடுக்கிறாரு! இந்தாங்க இதையாவது ஒழுங்காப் படிங்க!
சே.கா: ஆஹா! நல்லாத் தெரியுது டாக்டர்! ’ரீமா சென்னுக்கு முத்தம் கொடுக்க 30 டேக்!’ பார்த்தீங்களா டாக்டர்? அந்த நடிகர் எவ்வளவு புத்திசாலித்தனமா வேணுமின்னே தப்பு தப்பா நடிச்சு நடிச்சு ரீமாவுக்கு முப்பது முத்தம் கொடுத்திருக்காரு! சும்மா சொல்லக் கூடாது!
டாக்டர்: க்கும், இதெல்லாம் கண்ணுக்கு நல்லாத் தெரியுது! ஆனா, பெருசு பெருசா இருக்கிற எழுத்து மட்டும் கண்ணுக்குத் தெரியலியா?
சே.கா: கோவிச்சுக்காதீங்க டாக்டர், இன்னொரு சான்ஸ் கொடுங்க, வாசிச்சுக் காட்டுறேன்!
டாக்டர்: ஓ.கே! இதோ இதை வாசியுங்க பார்க்கலாம்!
சே.கா: என்ன டாக்டர், போனவாட்டி வெத்துப்பேப்பரைக் கொடுத்தீங்கன்னா, இந்தவாட்டி கண்ணாடிப் பேப்பரைக் கொடுத்திருக்கீங்க! ரெண்டு பக்கமுமும் ஒண்ணுமே காணோமே!
டாக்டர்: (தலையிலடித்துக்கொண்டு) கடவுளே! நல்லாப்பாரு தம்பி, "தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு!" எங்கே, ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க!
சே.கா: வேண்டாம் டாக்டர்! எனக்கு ஒரு எழுத்துக்கூட கண்ணுக்குத் தெரியலே! இதுக்கு முன்னாடி கொடுத்தீங்களே, அது மாதிரி கொடுங்க படிச்சுக்காட்டுறேன்.
டாக்டர்: இந்தாங்க, படிச்சுத்தொலைங்க!
சே.கா: ஹையா! ’ஆஸ்பத்திரியில் பிரசவம்: நடிகை கோபிகாவுக்கு பெண் குழந்தை’. அடடா, தலைச்சன் குழந்தை ஆம்பிளையாப் பொறந்திருக்கலாமே! பரவாயில்லை, தமிழ்நாட்டுக்கு எதிர்காலக் கனவுக்கன்னி பொறந்தாச்சுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்.
டாக்டர்: ஐயோ எனக்குத் தலையைப் பிச்சுக்கலாம் போலிருக்கே! என் கண்ணுக்கே தெரியாத குட்டிக் குட்டி எழுத்தெல்லாம் படிக்கிறே! ஆனா கொட்டை எழுத்திலே இருக்கிற விஷயம் ஒண்ணு கூடவா உன் கண்ணுக்குத் தெரியலே!
சே.கா: அதுனாலே தானே உங்களைத் தேடி வந்திருக்கேன் டாக்டர்! ப்ளீஸ் ஹெல்ப் மீ!
டாக்டர்: ஓ.கே! ஓ.கே! இதோ இதைப் படியுங்க!
சே.கா: இதென்ன டாக்டர்? எதையுமே கொடுக்காமப் படிக்கச் சொல்லுறீங்க?
டாக்டர்: என்னது? எதையுமே கொடுக்கலியா? வியாதி ரொம்ப முத்திருச்சு போலிருக்கே? எதுக்கும் கடைசியா உங்களுக்குத் தெரியுற செய்தியாத் தர்றேன். படிச்சுக்காட்டுங்க சரியா! இந்தாங்க....!
சே.கா: "படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அசின்!"
டாக்டர்: அச்சச்சோ!
சே.கா: பார்த்தீங்களா? உங்களுக்கே பரிதாபம் வருதில்லையா டாக்டர்?
டாக்டர்: நாசமாப்போச்சு! நான் அசினை நினைச்சுப் பரிதாபப்படலே! உங்களை நினைச்சுப் பரிதாப்படறேன் தம்பி!
சே.கா: டாக்டர், எனக்கு என்ன வியாதி டாக்டர்?
டாக்டர்: தம்பி, இது உனக்கு மட்டும் இருக்கிற வியாதியில்லே, நம்ம ஊருலே நிறைய பேருக்கு இந்த வியாதி ரொம்ப நாளாயிருக்கு! இந்த வியாதியாலே பாதிக்கப்பட்டவங்களுக்கு பெரிய விஷயங்களெல்லாம் கண்ணுக்குத் தெரியாது; சின்ன விஷயங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும்.
சே.கா: இதை எப்படி குணப்படுத்துறது டாக்டர்?
டாக்டர்: எதுக்கு குணப்படுத்தணும்? இப்படியே இருக்கிறது தான் பெட்டர்! பெரிய விஷயங்களைப் பத்திக் கவலைப்பட்டுப் பயனில்லை. சின்ன விஷயங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கிறது எவ்வளவோ மேல் இல்லையா?
சே.கா: அது சரி டாக்டர், நீங்க நாலா மடிச்சு வச்சிருக்கீங்களே நியூஸ் பேப்பர், அதுலே அஞ்சாவது பக்கத்துலே மீரா ஜாஸ்மின் 25 லட்சம் அபராதம் கட்டின நியூஸ் தானே போட்டிருக்கு?
டாக்டர்: அட ஆமா! பார்த்தீங்களா, இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பேப்பரை மடிச்சு வந்திருந்தாலும் படிச்சிடறீங்க! முக்கியமான நியூஸை விரிச்சுக்காட்டினாலும் படிக்க முடியலே உங்களுக்கு! அது தான் இந்த வியாதியோட ஸ்பெஷாலிட்டி...
சே.கா: இந்த வியாதிக்கு என்ன பெயரு டாக்டர்....?
டாக்டர்: தமிழிலே இந்த வியாதியை....
சே.கா: யாருக்கு வேணும் தமிழ்ப்பெயர்? இதென்ன சினிமாவா? இந்த வியாதியைச் சொல்லி நான் என்ன வரிவிலக்கா கேட்கப்போறேன்? புதுசா யாரும் இதுவரை கேள்விப்படாத வாயிலே நுழையாத நல்ல இங்கிலீஷ் வியாதி பெயரைச் சொன்னீங்கன்னா, நாலு பேரு கிட்டே சொல்லிப் பெருமைப்பட்டுக்குவேன்!
டாக்டர்: நாளைக்கு இதே நேரத்துக்கு வாங்க! யோசிச்சிட்டு சொல்லுறேன். சரியா? இப்போ இந்த சீட்டுலே எழுதியிருக்கிற ஃபீஸை ரிசப்ஷனிலே கட்டிட்டுப் போயிட்டு வாங்க!
சே.கா: என்ன டாக்டர்? ஃபீஸை எழுதியிருக்கிறதா சொல்றீங்க? என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலியே...?
(டாக்டர் கண்ணாயிரம் மூர்ச்சையடைந்து விழுகிறார்)
இந்த வியாதிக்கு என்ன பெயரு டாக்டர்....?
ReplyDeleteடாக்டர்: தமிழிலே இந்த வியாதியை....
சே.கா: யாருக்கு வேணும் தமிழ்ப்பெயர்? இதென்ன சினிமாவா? இந்த வியாதியைச் சொல்லி நான் என்ன வரிவிலக்கா கேட்கப்போறேன்? புதுசா யாரும் இதுவரை கேள்விப்படாத வாயிலே நுழையாத நல்ல இங்கிலீஷ் வியாதி பெயரைச் சொன்னீங்கன்னா, நாலு பேரு கிட்டே சொல்லிப் பெருமைப்பட்டுக்குவேன்!
...... excellent! One of your best kalakkal blog posts. English la sollitten. :-)
ஹிஹிஹிஹி....
ReplyDeleteஅக்மார்க் சேட்டை....
நல்லா சொல்லியிருக்கீங்க சேட்டை. சொன்ன மாதிரி நடிகை நீயூஸ் படித்து டீக்கடையில் உக்காந்து பேசுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.
ReplyDeleteஜூப்பரு..
ReplyDelete:)). ஒன்னு கூட டாமில் பொண்ணில்லையா? என்னே தமிழ் பக்தி
ReplyDeleteசெருப்பால அடிச்ச மாதிரி ஒரு நெத்தியடி...மானம் உள்ளவனா இருந்தா திருந்தனும்..நம்ம யாரு தமிழன் பச்சத் தமிழன்...
ReplyDeleteஅது கிடக்குது..
இன்னைக்கு நியூஸ் படிச்சீங்களா அசின் அம்மாவா ரோஜா நடிக்கப் போகுதாம்...என்ன கொடுமைங்க இது? இது எதிர்த்து இன்னைக்கு மெரீனா பீச்சுல 4 டு 4.30 மாபெரும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்..வரமுடியாதவங்க உங்க வீட்லே 4 டு 4.30 உண்ணாவிரதம் இருங்க..தமிழகமே அலைகடலென திரண்டு வா..யே மெரீனா பீச்சே நீ பொத்திக்கிட்டு அங்கே இரு..தேவைல்லாம கொந்தளிசிராத...
அருமை!
ReplyDelete//சின்ன விஷயங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும்//
ReplyDeleteஇவ்வளவு முக்கியமான விஷயங்களை சின்ன விஷயங்கள் என்று சொன்ன அந்த டாக்டரை கண்டித்து நாளை பொதுக்கூட்டம் :))
Kalakkal!
ReplyDeleteKalakkal!
ReplyDeleteயோவ்,இதுக்குப் பேரு வியாதின்னு எவன்யா சொன்னது? மிகப்பெரிய வரமா இது.... (பீஸ் மேட்டர்) நானும் நாலு வருசமா இது வரும் வரும்னு காத்துட்டிருக்கேன்.... வரமாட்டேங்குதே!!!
ReplyDeleteசேட்டை நண்பா!
ReplyDeleteஆதங்கத்த அழகா கொட்டித்தீத்திருக்கிறீங்க...
பிரபாகர்...
இப்போ நாட்டுல, இந்த "வியாதிதான்"
ReplyDeleteநிறய இருக்கு, "வாழைபழ ஊசி" நறுக்குன்னு இருக்கு.
ஆங்...பெயருக்கேற்ற பதிவு. கலக்கல்
ReplyDeleteஇந்த பதிவு என் கண்ணுக்கு தெரியுதே!!! :)
ReplyDeleteஆஹா அனைத்து செய்திகளையும் அழகாக நகைச்சுவை வடிவில் தொடுத்து மிகவும் ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கீங்க .உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .
ReplyDeleteமீண்டும் வருவேன் .நல்ல டாக்டர்க்கிட்ட பொய்ட்டு.
சேட்டைகரன் உங்கள் பதிவுகள் அருமை
ReplyDeleteதமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.
இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்
கணேஷ் பாபு
நல்லாத்தான் யோசனை பண்ணியிருக்கீங்க..
ReplyDeleteஎனக்கும் அதே பிரச்சனைதான் சார்.. ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்க.. ( போலி மருந்து சாப்பிடுவதில்லைனு , காரமடை ஜோசியர் கிட்ட சத்தியம் பன்ணியிருக்கேன்.. அதனால, பார்த்து பன்ணுங்க..ஹி..ஹி..)
chettai...sama kalakkal. romba nalla irukkunga :))
ReplyDeleteஎங்கிருந்து படிக்கறது.... நாங்கெல்லாம் நடுப்பக்கத்தை பாக்கறதோட சரி..... ஹி..ஹி... சும்மாதான்.....
ReplyDeleteவழக்கம்போல் கலக்கிட்டீங்க சேட்டை....
கலக்கல்
ReplyDeleteகலக்கல்
ReplyDeleteஆஜர்
ReplyDeleteChitra said...
ReplyDelete//...... excellent! One of your best kalakkal blog posts. English la sollitten. :-)//
ஆஹா! பதிவின் பாதிப்பில் நீங்களும் ஆங்கிலத்திலேயே பின்னூட்டமிட்டு விட்டீர்களே! க.க.க.போ! :-))
மிக்க நன்றி!!
அகல்விளக்கு said...
ReplyDelete//ஹிஹிஹிஹி....
அக்மார்க் சேட்டை....//
கருத்துக்கு மிக்க நன்றி!! :-)
பித்தனின் வாக்கு said...
ReplyDelete//நல்லா சொல்லியிருக்கீங்க சேட்டை. சொன்ன மாதிரி நடிகை நீயூஸ் படித்து டீக்கடையில் உக்காந்து பேசுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.//
ஆஹா! டீக்கடையிலே வச்சுத்தான் இப்படியொரு பதிவு எழுதணுமுன்னு நான் முடிவு பண்ணினது உங்களுக்குத் தெரியாது தானே? :-))
மிக்க நன்றி!!
முகிலன் said...
ReplyDelete//ஜூப்பரு..//
மிக்க நன்றி!! :-)
வானம்பாடிகள் said...
ReplyDelete//:)). ஒன்னு கூட டாமில் பொண்ணில்லையா? என்னே தமிழ் பக்தி//
ஆஹா! இது தற்செயலா நிகழ்ந்தது. ஆனா, அதையும் கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே! :-))
மிக்க நன்றி!! :-)
பருப்பு The Great பருப்ப்பு said...
ReplyDelete//செருப்பால அடிச்ச மாதிரி ஒரு நெத்தியடி...மானம் உள்ளவனா இருந்தா திருந்தனும்..நம்ம யாரு தமிழன் பச்சத் தமிழன்...//
ஐயையோ, நான் கறுப்புத்தமிழனுங்க! :-)
//அது கிடக்குது..இன்னைக்கு நியூஸ் படிச்சீங்களா அசின் அம்மாவா ரோஜா நடிக்கப் போகுதாம்...என்ன கொடுமைங்க இது?//
ஏன், பாட்டியா நடிப்பாங்கன்னு எதிர்பார்த்தீங்களா? :-)
//இது எதிர்த்து இன்னைக்கு மெரீனா பீச்சுல 4 டு 4.30 மாபெரும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்..வரமுடியாதவங்க உங்க வீட்லே 4 டு 4.30 உண்ணாவிரதம் இருங்க..தமிழகமே அலைகடலென திரண்டு வா..யே மெரீனா பீச்சே நீ பொத்திக்கிட்டு அங்கே இரு..தேவைல்லாம கொந்தளிசிராத...//
இந்த உண்ணாவிரதமெல்லாம் ரொம்ப புளிச்சுப்போன பழைய ட்ரிக்! நான் நேத்து ஆபீஸிலே ஒரு நிமிஷம் கூட கண்ணை மூடாம உறங்காவிரதமிருந்தேன். தெரியுமா? :-))
மிக்க நன்றி!! :-)
சென்ஷி said...
ReplyDelete//அருமை!//
மிக்க நன்றி!! :-)
பிரசன்னா said...
ReplyDelete//இவ்வளவு முக்கியமான விஷயங்களை சின்ன விஷயங்கள் என்று சொன்ன அந்த டாக்டரை கண்டித்து நாளை பொதுக்கூட்டம் :))//
முக்கியப்பேச்சாளரா நான் வரட்டுமா? மைக் செலவு மிச்சமாகும். :-)))
மிக்க நன்றி!! :-)
தமிழ் பிரியன் said...
ReplyDelete//Kalakkal!//
மிக்க நன்றி!! :-)
மிக்க நன்றி!! :-)
ஹி.ஹி! ரெண்டு தடவை பின்னூட்டம் போட்டிருந்தீங்களே...அதான்....!
கரிகாலன் said...
ReplyDelete//யோவ்,இதுக்குப் பேரு வியாதின்னு எவன்யா சொன்னது? மிகப்பெரிய வரமா இது.... (பீஸ் மேட்டர்) நானும் நாலு வருசமா இது வரும் வரும்னு காத்துட்டிருக்கேன்.... வரமாட்டேங்குதே!!!//
நல்லாயிருக்கே, நீங்க தமிழ்நாட்டுலே இல்லாமப் போனதுக்கு யாரு என்ன பண்ண முடியும்.இங்கே வந்தா வரம் உங்களுக்கும் கிடைக்குமே...! :-))))
மிக்க நன்றி!! :-)
பிரபாகர் said...
ReplyDelete//சேட்டை நண்பா!
ஆதங்கத்த அழகா கொட்டித்தீத்திருக்கிறீங்க...//
உள்ளது கடலளவு; எழுதியது கையளவு தான்!
மிக்க நன்றி!! :-)
சைவகொத்துப்பரோட்டா said...
ReplyDelete//இப்போ நாட்டுல, இந்த "வியாதிதான்"
நிறய இருக்கு, "வாழைபழ ஊசி" நறுக்குன்னு இருக்கு.//
புரிந்து, உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி!! :-)
ஸ்ரீராம். said...
ReplyDelete//ஆங்...பெயருக்கேற்ற பதிவு. கலக்கல்//
தொடர்ந்து வந்து, உற்சாகமூட்டுகிறீர்கள்.
மிக்க நன்றி!! :-)
☀நான் ஆதவன்☀ said...
ReplyDelete//இந்த பதிவு என் கண்ணுக்கு தெரியுதே!!! :)//
ஆஹா, நீங்க ஆதவனாச்சே, பார்க்கிறவங்களுக்குத் தானே கண் கூசும்? :-)))
மிக்க நன்றி!! :-)
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ReplyDelete//ஆஹா அனைத்து செய்திகளையும் அழகாக நகைச்சுவை வடிவில் தொடுத்து மிகவும் ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கீங்க .உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .//
எனது முயற்சிகளுக்கு உங்களைப் போல தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கமளிக்கும் நண்பர்களே முக்கிய உந்துதல்!
//மீண்டும் வருவேன் .நல்ல டாக்டர்க்கிட்ட பொய்ட்டு.//
ஏன், டாக்டர் கண்ணாயிரத்துக்கு என்னவாம்? :-)))))
மிக்க நன்றி!! :-)
Ganesh Babu said...
ReplyDelete//சேட்டைகரன் உங்கள் பதிவுகள் அருமை
தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.
இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்//
வருகைக்கும், கருத்துக்கும், தகவல்களுக்கும், அழைப்பும் சேர்த்து நன்றிகள் பற்பல!
தேர்வினிலும் வாழ்வினிலும் வெற்றிபெற வாழ்த்துகள்
மிக்க நன்றி!! :-)
பட்டாபட்டி.. said...
ReplyDelete//நல்லாத்தான் யோசனை பண்ணியிருக்கீங்க..
எனக்கும் அதே பிரச்சனைதான் சார்.. ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்க.. ( போலி மருந்து சாப்பிடுவதில்லைனு , காரமடை ஜோசியர் கிட்ட சத்தியம் பன்ணியிருக்கேன்.. அதனால, பார்த்து பன்ணுங்க..ஹி..ஹி..)//
முதல்லே டாக்டர் கண்ணாயிரத்துகிட்டே ஒரு அப்பாயின்மென்ட் வாங்கிடுங்க! அவரு உங்களை ஒருவழியாக்கி, அதாவது ஒருவழியா குணப்படுத்திருவாரு. சரிதானா அண்ணே? :-))))
மிக்க நன்றி!! :-)
அஷீதா said...
ReplyDelete//chettai...sama kalakkal. romba nalla irukkunga :))//
தொடரும் உங்கள் வருகைக்கும், உற்சாகமூட்டும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :-)
சுதாகர் said...
ReplyDelete//எங்கிருந்து படிக்கறது.... நாங்கெல்லாம் நடுப்பக்கத்தை பாக்கறதோட சரி..... ஹி..ஹி... சும்மாதான்.....//
பரவாயில்லை, வியாதியை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளே தான் வச்சிருக்கீங்க போலிருக்கு! :-))))
//வழக்கம்போல் கலக்கிட்டீங்க சேட்டை....//
தொடரும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!! :-)
காதல் கவி said...
ReplyDelete//கலக்கல்//
மிக்க நன்றி!! :-)
மிக்க நன்றி!! :-)
ஹி.ஹி! ரெண்டு தடவை பின்னூட்டம் போட்டிருந்தீங்களே...அதான்....!
மசக்கவுண்டன் said...
ReplyDelete//ஆஜர்//
மிக்க நன்றி!!!
கவுண்டரே, தொடர்பதிவு என்னாச்சு? :-((
இது கிட்டப்பார்வையும் இல்லை எட்டப்பார்வையும் இல்லை - ரொம்ப கெட்டப்பார்வை!
ReplyDeleteபினாத்தல் சுரேஷ் said...
ReplyDelete//இது கிட்டப்பார்வையும் இல்லை எட்டப்பார்வையும் இல்லை - ரொம்ப கெட்டப்பார்வை!//
ஹி..ஹி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!
எச்சூஸ் மீ! டாக்டர் கண்ணாயிரத்துகிட்ட ஒரு அப்பாயின்மென்ட் வாங்கித் தரமுடியுமா??
ReplyDeleteஅப்புடி வாங்கித் தந்தா அந்த அப்பாயின்மெண்டை கண்ணுல தேச்சுக்கலாமா?? :-))
ரோஸ்விக் said...
ReplyDelete//எச்சூஸ் மீ! டாக்டர் கண்ணாயிரத்துகிட்ட ஒரு அப்பாயின்மென்ட் வாங்கித் தரமுடியுமா??//
ஆஹா! அவரு இப்போ நம்ம ஆஸ்தான டாக்டராக நியமிக்கப்பட்டு விட்டாருங்கோ! எப்போ வேண்ணா வாங்க!
//அப்புடி வாங்கித் தந்தா அந்த அப்பாயின்மெண்டை கண்ணுல தேச்சுக்கலாமா?? :-))//
அவரு ஃபீஸைக் கேட்டா, பாதி வியாதி தானாகவே குணமாயிருமண்ணே! அவ்வளவு ராசி! :-))
மிக்க நன்றி!!
பீஸுக்கு காசு கிடைக்காமெ கொஞ்சம் லேட்டா வந்திட்டேன். :)
ReplyDelete