Wednesday, March 10, 2010
நான் கல்வியமைச்சரானால்.....!!
+2 கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும்! (வெளங்கிரும்!)
1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது?
(அ) தமிழ் (ஆ) துளு (இ) பாரசீகம்
2. கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்
2(அ).முதுமக்கள் தாழி எனப்படுவது யாது?
2(ஆ).அண்மையில் தனுஷ்-ஸ்ரேயா நடிப்பில் வெளியான, மூன்றெழுத்துத் திரைப்படம் எது?
(i) மெட்டி
(ii) சட்டி
(iii) பெட்டி
(iv) குட்டி
3.கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது?
(அ) புல் வெட்டுவது
(ஆ) பஞ்சர் ஒட்டுவது
(இ) ஊதுபத்தி விற்பது
(ஈ) கவிதை எழுதுவது
4. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது?
(அ) இன்பத்துப்பால்
(ஆ) மசாலா பால்
(இ) ஆவின் பால்
5. முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால்! (தோராயமாகச் சொல்லவும்)
6. கடியாரத்தில் பெரிய முள் 12-லும் சிறிய முள் 5-லும் இருந்தால் எத்தனை மணி? (4-க்கும் 6-க்கும் இடைப்பட்ட எண்)
7. ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை?
8. தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம்?
(அ) வட இந்தியர்கள்
(ஆ) பஜ்ஜி இந்தியர்கள்
(இ) போண்டா இந்தியர்கள்
9. எது பல்குத்த உதவும்?
(அ) துரும்பு (ஆ) கரும்பு (இ) இரும்பு
10. மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
(அ) மன்னார்குடி (ஆ) மாமண்டூர் (இ) மதுரை
11. ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?
12. உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன?
13. இந்தியாவின் தேசியப்பறவை எது?
(அ) மயில் (ஆ) காக்காய் (இ) இரண்டும் இல்லை
14. புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா? முடியாதா?
(அ) முடியும் (ஆ) முடியாது
15. பதினான்கு தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது?
16. ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும்?
(அ) கரடி (ஆ) காண்டாமிருகம் (இ) ஆடு
17. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது?
(அ) துவரங்குறிச்சி
(ஆ) ஆழ்வார்குறிச்சி
(இ) கல்லிடைக்குறிச்சி
18. உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால், மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?
19. BBC (Briish Broadcasting Corporation) என்பதன் விரிவாக்கம் என்ன?
20. உங்களது முழுப்பெயரை எழுதுக (எழுத்துப்பிழை தவிர்க்கவும்)
54 comments:
உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!
உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!
தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!
kalakal
ReplyDeleteகேள்வி எண்கள் 5, 6, 7, 11, 12, 15, 18, 19 மற்றும் 20 ஆகியவற்றுக்கு பதில்கள் கொடுக்கப்படாததால், அவற்றைச் சாய்ஸில் விட்டு விடவும்.
ReplyDelete18, 19, 20வது கேள்விக்கெல்லாம் ஆப்ஷனே இல்லையே? எப்பிடி பதில் சொல்றது?
ReplyDeleteஇந்த டெஸ்ட்ல பாஸ் மார்க்கு எம்புட்டு?
ஹிஹிஹிஹி....
ReplyDeleteசேட்டை... சேட்டை...
அப்படியே
உங்கள ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்...
ஃப்ரியா இருந்தா நம்ம ஏரியா பக்கமும் வாங்க...
www.agalvilakku.blogspot.com
:-)
My score is 100%
ReplyDeleteகம்பராமாயணம் எழுதியது யார்? இதையும் சேர்க்கவும்.
ReplyDeleteஉன்னை மாதிரி ஆளை தான் நான் படிக்கும்
ReplyDeleteபோது தேடிட்டு இருந்தேன்....!!
நான் படிக்கும்போது நீங்க அமைச்சரா இருந்திருந்தா ஒரு 50 % வாங்கி!! இருப்பேனே தல.
ReplyDeleteரொம்ப கஷ்டமான கேள்விகளா இருக்கே! :)) முட்டமார்க் தான் வாங்க போறேன் நான். :)))
ReplyDeleteஎன்னது இது, நான் மட்டும் +2 பையனா இருந்தா பதில் இப்படித்தான் இருக்கும்,
ReplyDelete1. பாராட்டு மொழிகள்
2.குட்டி.
3.ஜால்ரா
4.ஆவின் பால் (அதுதான் விலை ஜாஸ்தி)
5.ஜந்து கால்(அதில் உக்காருவரின் காலும் சேர்த்து)
6.ஓடாத இந்த கடிகாரத்தை நாம் பார்க்கும் போது என்ன மணியே அதுதான்.
7.ஆறு
8.சப்பாத்தி அல்லது ரொட்டி இந்தியர்கள்.
9.பல்லைக் குத்த முடியாது (பற்களுக்கு இடையில் தான் குத்த முடியும்)
10. கூடல் நகரத்தில்.
11.ஆர்க்கிமெடிஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் அந்த நாட்டு இராஜா (ஏன்னா அவருதான் போட்டி வைச்சாரு).
12.மூணு (நாங்க மைனருக, மொதல் ரொண்டு பொத்தானை பிச்சுருவேமில்லை).
13.காக்காய் (ச.... சபை. பா...... மன்றத்தில் பிடிப்பது)
14.முடியும் ஆனா முடியாது.
15.கிரவுண்ட் புளேஆரில் (சிங்கப்பூரில் முதல் தளம் என்பது கிரண்ட் புளோர் தான்)
16.மனிதன் (ஏன்னா அவன் தானே செய்வது மற்றும் குடிப்பது)
17.எங்க எங்க எல்லாம் பிரஞ்சு போக்டரி வைத்துள்ளார்களே அங்கு எல்லாம் தயாரிப்பார்கள்.
18. நாலு வாழைப்பழங்கள் (விளக்கம் தேவை இல்லைன்னு நினைக்கின்றேன்)
19.பணம் பார்த்த கேண்டிடேட் ( எம் எல் ... எம்பி)
20.அய்யம்பேட்டை அறிவுடைனம்பி கலியபெருமாள் சந்திரக்கோணரவாய மகாதேவக் கிருஷ்ணமூர்த்தி
நாங்க எல்லாம் சேட்டை பண்ண மாட்டமா?. ஆனாலும் உங்க கொஸ்டின் பேப்பர் சூப்பர். உங்களை மாதிரி இரண்டு பேரு, வேண்டாம் நீரு ஒருத்தரே போதும் கல்வி மந்திரியா வந்தா, இந்த மாதிரி மாணவர்கள்தான் வருவார்கள். நன்றி.
சேட்டை..
ReplyDeleteஎன்னாது இது..?
ஊகும்.. சரியில்ல .. சொல்லிட்டேன்..
கல்வி மந்திரி ஆனா, +2 பயலுகளுக்கு, கேள்வி வேற கேப்பீரா?..
.
.
.
கேள்வி மற்றும் வேள்வியே இல்லாத உலகமா மாற்ற,
உயிரை கொடுத்து உழைத்துக்கொண்டிருக்கிறது எங்கள் ப.மு.க
.
.
சரி.. நம்ம பயலாப்போயிட்டீங்க..
கேள்வி கேளுங்க.. ஆனா.. எல்லோரும் 100% பாஸு.. ஓகே.வா
( வருங்கால ஓட்டுக்கு ரெடி பண்றோம்.. ஹி..ஹி..)
இத விட்டு விட்டிங்க
ReplyDeleteஎட்டு கால் பூச்சிக்கு எத்தினை கால் ?
படையப்பா தமிழ் படமா?இல்ல ரஜனி படமா?
கலக்கிட்டிங்க
//ஒரு நல்ல செய்தி:
ReplyDeleteசனிக்கிழமை வரையிலும் வெளியூர்;
No பதிவு! ஹையா!
//
நீ ஊர்ல இல்லைன்னு லாஸ்ட் டூ டேஸ் உன் வூட்டுபக்கம் நான் வரல,
தக்காளி நீ என்னடான ஏரியாக்குள்ள தான் இருக்கியா , இரு இன்னுன் உம கொஸ்டீன் பேபர படிக்கல் படிச்சிட்டு வர்றேன்
நான் பிரதம மந்திரி ஆனதும்... நீங்க தான் கல்வி மந்திரி!
ReplyDeleteஇப்படி இல்ல ஒரு ஆள நானும் தேடிட்டு இருக்கேன்!
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
அய்ய்ய்ய்ய்ய்......................................
ReplyDelete+2 கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிருச்சு!
நான் எப்படியும் பாஸ் பண்ணிடுவேன் , நேர எங்க வூரு நாட்டமைய பாத்தம்னா எல்லாத்துக்கும் கரக்டா ஆன்சர் சொல்லிடுவார், அவருதான் எங்க வூர்லேயே ஒன்னாப்பு வரைக்கு படிச்சவரு
ஏம்பா நம்ம ஊரு நாட்டமா ரெண்டாப்பு வரைக்கு சைனீஸ் மீடியத்தில படிச்சாராம் அது நாலா அவருக்கு டமில் தெரியல , நீயே ஆன்ஸ்வர் பேப்பரையும் அவுட் ஆக்கிடு (உனக்கு ஆன்ஸ்வர் தெரியும்ல ?)
ReplyDeleteஇவ்ளோ கஷ்டமாவா..என்ன தப்பு செய்தாங்க நம்ம மாணவகண்மணிகள்...
ReplyDelete//அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteஇவ்ளோ கஷ்டமாவா..என்ன தப்பு செய்தாங்க நம்ம மாணவகண்மணிகள்...//.
ஹா.....ஹா......ஹா......
மாட்டிகினியா இதுக்கு பதில் சொல்லு ?
மேடம் நீங்க தெய்வ பிறவி மேடம்
(இந்த யோசனை நமக்கு வராம போச்சே , அமைச்சரே இன்னும் பயிர்ச்சி வேண்டுமோ ?)
சேட்டை, இந்த கேள்விகெல்லாம் நான் சரியா பதில் சொல்லிட்டேன்;எனக்கு எத்தனை மார்க்?...
ReplyDeleteசே ! ஒரு 13 வருஷத்துக்கு முன்னாடி நீங்க கல்விஅமைச்சரா இருந்தா எப்படி இருந்திருக்கும் ?... பிட் அடிக்காமலே 100/100 வாங்கிருப்பேனே !!.
அடேய்!! ராஜவிஷயத்தை ஒட்டுகேட்பதே தவறு; அதிலும் வாந்தி வேறயா...
ReplyDelete:-)))
ரெம்ப கஷ்டமா கேள்வி கேட்டு இருக்கீங்க.. நீங்க டொபசிட் இழக்க போறது உறுதி..என்னை போல பட்டவன் ஓட்டு போட்ட?.
ReplyDeleteஏதாவது ஒரு கேள்விக்காச்சும் ஆன்ஸர் சொல்லி இருக்கலாம்ள? ரொம்ப மோசம்! மீ டூ முட்டமார்க்!
ReplyDeletenothing is wrong in it .(your questoins).because now they are answer "what they are know
ReplyDelete//கேள்வி எண்கள் 5, 6, 7, 11, 12, 15, 18, 19 மற்றும் 20 ஆகியவற்றுக்கு பதில்கள் கொடுக்கப்படாததால், அவற்றைச் சாய்ஸில் விட்டு விடவும்.//
ReplyDeleteஅடடா! கேள்வித்தாள் தயாரிக்கும்போது கும்மியிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் போலிருக்கிறதே! நன்றிங்க! அடுத்த தடவை வர்றேன்!
//kalakal//
ReplyDeleteஒருவாசகம் என்றாலும் திருவாசகம் நீச்சல்காரரே! நன்றி!!
//ஹிஹிஹிஹி....
ReplyDeleteசேட்டை... சேட்டை...
அப்படியே
உங்கள ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்...
ஃப்ரியா இருந்தா நம்ம ஏரியா பக்கமும் வாங்க...//
நீங்க மட்டுமா? மொத்தம் மூன்று பேர் அன்புடன் அழைத்திருக்கிறார்கள்! முப்பது பெண்களைப் பற்றி எழுத வேண்டுமோ?
நன்றிண்ணே! அவசியம் வந்திடறேன்!
//18, 19, 20வது கேள்விக்கெல்லாம் ஆப்ஷனே இல்லையே? எப்பிடி பதில் சொல்றது?
ReplyDeleteஇந்த டெஸ்ட்ல பாஸ் மார்க்கு எம்புட்டு?//
பார்த்தீங்களா? நீங்க தான் உண்மையிலேயே இதை சீரியசா எடுத்திட்டுக் கேள்வி கேட்கறீங்க! மொத்தம் நூறு மார்க் தான்! அடுத்த வருஷம் கைடு கூட எழுதிடலாமுன்னு உத்தேசம்! நன்றிங்க!! :-))
//My score is 100%//
ReplyDeleteஇதத் தான் நானும் எதிர்பார்த்தேன்! :-))
நன்றிங்க!!!
//கம்பராமாயணம் எழுதியது யார்? இதையும் சேர்க்கவும்.//
ReplyDeleteஅடுத்த வருசம் வைச்சுக்குவோம்! இந்தவாட்டி ரொம்ப Tough-ஆ இருக்குன்னு நிறைய பேர் சொல்லிட்டாங்க! நன்றிங்க!! :-)))
//உன்னை மாதிரி ஆளை தான் நான் படிக்கும் போது தேடிட்டு இருந்தேன்....!!//
ReplyDeleteகவலைப்படாதீங்க! நான் கல்வியமைச்சரானா நிச்சயமா அமுலுக்கு வந்திடும் இதெல்லாம். நன்றி!! :-))
//ரொம்ப கஷ்டமான கேள்விகளா இருக்கே! :)) முட்டமார்க் தான் வாங்க போறேன் நான். :)))//
ReplyDeleteஅப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திரப்படாது! சைடிலே ஒரு டூட்டோரியல் காலேஜ் ஆரம்பிக்கப்போறோம். :-))
நன்றிங்க!!
//நான் படிக்கும்போது நீங்க அமைச்சரா இருந்திருந்தா ஒரு 50 % வாங்கி!! இருப்பேனே தல.//
ReplyDeleteஅப்படி இருந்திருந்தா நீங்க பரீட்சை எழுதாமலே பாஸ் பண்ணற வழி சொல்லிக்கொடுத்திருப்பேனே! டூ லேட்!
நன்றிண்ணே!!
//நாங்க எல்லாம் சேட்டை பண்ண மாட்டமா?. ஆனாலும் உங்க கொஸ்டின் பேப்பர் சூப்பர். உங்களை மாதிரி இரண்டு பேரு, வேண்டாம் நீரு ஒருத்தரே போதும் கல்வி மந்திரியா வந்தா, இந்த மாதிரி மாணவர்கள்தான் வருவார்கள். நன்றி.//
ReplyDeleteஐயா! பித்தனின் வாக்கா? சித்தரின் வாக்கா? பலிச்சிடப்போகுது! பின்னூட்டத்துலேயே புகுந்து விளையாடி அதகளம் பண்ணிட்டீங்களே! எனக்குப் போட்டியா வந்தாலும் வருவீங்க நீங்க! நன்றிங்க! :-)))
//சேட்டை..என்னாது இது..?
ReplyDeleteஊகும்.. சரியில்ல .. சொல்லிட்டேன்..கல்வி மந்திரி ஆனா, +2 பயலுகளுக்கு, கேள்வி வேற கேப்பீரா?..//
அண்ணே! உங்களுக்குத் தேர்வெல்லாம் வைப்பேனா? நீங்க பாஸ் அண்ணே!!
//கேள்வி மற்றும் வேள்வியே இல்லாத உலகமா மாற்ற,
உயிரை கொடுத்து உழைத்துக்கொண்டிருக்கிறது எங்கள் ப.மு.க//
அந்த இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டு விட்டேனே தலைவா!
//சரி.. நம்ம பயலாப்போயிட்டீங்க..
கேள்வி கேளுங்க.. ஆனா.. எல்லோரும் 100% பாஸு.. ஓகே.வா
( வருங்கால ஓட்டுக்கு ரெடி பண்றோம்.. ஹி..ஹி..)//
பரீட்சை எழுதாதவங்களுக்கு 100%. பரீட்சை எழுதுறவங்களுக்கு 200%. போதுமாண்ணே?
//இத விட்டு விட்டிங்க எட்டு கால் பூச்சிக்கு எத்தினை கால் ? படையப்பா தமிழ் படமா?இல்ல ரஜனி படமா?//
ReplyDeleteஅதைத் தான் விவேக் ஏற்கனவே கேட்டுட்டாராமில்லே? கொஸ்டின் லீக் ஆயிடுச்சே!
//கலக்கிட்டிங்க//
நன்றிங்க!! :-))
//நீ ஊர்ல இல்லைன்னு லாஸ்ட் டூ டேஸ் உன் வூட்டுபக்கம் நான் வரல,
ReplyDeleteதக்காளி நீ என்னடான ஏரியாக்குள்ள தான் இருக்கியா , இரு இன்னுன் உம கொஸ்டீன் பேபர படிக்கல் படிச்சிட்டு வர்றேன்//
அண்ணே! நான் வெளியூருலே தானிருக்கேன். ஆனா பாருங்க! என் மடிக்கணினியும் கூடவே வருவேன்னு ஒரே அடம், அழுகை! அதுனாலே வந்த ஆபத்து தான் இது! நன்றிண்ணே!!
//ஏம்பா நம்ம ஊரு நாட்டமா ரெண்டாப்பு வரைக்கு சைனீஸ் மீடியத்தில படிச்சாராம் அது நாலா அவருக்கு டமில் தெரியல , நீயே ஆன்ஸ்வர் பேப்பரையும் அவுட் ஆக்கிடு (உனக்கு ஆன்ஸ்வர் தெரியும்ல ?)//
ReplyDeleteஎனக்குத் தெரிஞ்சா நான் ஏன் வலைப்பதிவுலே போடுறேன்? யாராவது பதில் சொன்னா அதை வைச்சு ஒப்பேத்திரலாமேன்னு ஒரு நப்பாசை தான்! :-))
//இவ்ளோ கஷ்டமாவா..என்ன தப்பு செய்தாங்க நம்ம மாணவகண்மணிகள்...//
ReplyDeleteஎனக்கு ஓட்டுப்போட்டு கல்வியமைச்சராக்கினாங்களே, போதாதா? :-))))
நன்றிங்க!!
//ஹா.....ஹா......ஹா......
ReplyDeleteமாட்டிகினியா இதுக்கு பதில் சொல்லு ?
மேடம் நீங்க தெய்வ பிறவி மேடம்
(இந்த யோசனை நமக்கு வராம போச்சே , அமைச்சரே இன்னும் பயிர்ச்சி வேண்டுமோ ?)//
ஏதேது? போற போக்கைப் பார்த்தா நமக்கு ரெண்டு ஓட்டு கைநழுவிரும் போலிருக்கே? அவ்வ்வ்வ்வ்வ்!!! :-))
//சேட்டை, இந்த கேள்விகெல்லாம் நான் சரியா பதில் சொல்லிட்டேன்;எனக்கு எத்தனை மார்க்?...//
ReplyDeleteமார்க் என்னண்ணே மார்க்? பள்ளியோடமே உங்களுக்குத்தேன்! :-))))
//சே ! ஒரு 13 வருஷத்துக்கு முன்னாடி நீங்க கல்விஅமைச்சரா இருந்தா எப்படி இருந்திருக்கும் ?... பிட் அடிக்காமலே 100/100 வாங்கிருப்பேனே !!.//
இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலேண்ணே! முதல்லேருந்து ஆரம்பிக்கத் தயாரா? :-)))
நன்றிண்ணே!!!
//நான் பிரதம மந்திரி ஆனதும்... நீங்க தான் கல்வி மந்திரி!//
ReplyDeleteதலைவர் பிரதமர் வாழ்க!
//இப்படி இல்ல ஒரு ஆள நானும் தேடிட்டு இருக்கேன்!//
நானும் இப்படி ஒரு பிரதமரைத் தான் தேடிட்டிருந்தேன் ஐயா! நன்றிங்க! :-)))))))
//அடேய்!! ராஜவிஷயத்தை ஒட்டுகேட்பதே தவறு; அதிலும் வாந்தி வேறயா...//
ReplyDeleteகட்டபொம்மனுக்கு மீசை துடிக்கிறதே! பயமாயிருக்கண்ணே! :-)))
நன்றிண்ணே!!
//ரெம்ப கஷ்டமா கேள்வி கேட்டு இருக்கீங்க.. நீங்க டொபசிட் இழக்க போறது உறுதி..என்னை போல பட்டவன் ஓட்டு போட்ட?.//
ReplyDeleteதனியா டியூஷன் வச்சிக்கலாம்! கண்டிப்பா பாஸ் ஆயிடுவீங்க! :-))
நன்றிங்க!!
//ஏதாவது ஒரு கேள்விக்காச்சும் ஆன்ஸர் சொல்லி இருக்கலாம்ள? ரொம்ப மோசம்! மீ டூ முட்டமார்க்!//
ReplyDeleteஇவ்வளவு Tough-ஆ இருக்குமுன்னு எனக்கே தெரியாமப்போச்சே! அடுத்தவாட்டி பாருங்க, சூப்பரா போட்டிரலாம். நன்றிங்க!!
//nothing is wrong in it .(your questoins).because now they are answer "what they are know//
ReplyDeleteஉங்க தமிழார்வத்தைப் பார்த்து எனக்கு புல்லரிக்குதுங்க! :-))) நன்றிங்க!!!
என்ன பாஸ் சாய்ஸ் கம்மியா கொடுத்து இருக்கீங்க.
ReplyDeleteஏதாச்சும் ஹின்ட் கொடுங்க பாஸ்.
//என்ன பாஸ் சாய்ஸ் கம்மியா கொடுத்து இருக்கீங்க. ஏதாச்சும் ஹின்ட் கொடுங்க பாஸ்.//
ReplyDeleteமறுபடியும் முதல்லேருந்தா....? அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!
நன்றிங்க!!!!
சேட்டை sir..
ReplyDeleteennanga sir idhu... imbuttu kastama irundhaa eppadi naanga ellam pass aagaradhu. huuhumm...neenga ellam kalvi amaichar aana pasanga ethanai varusamaaanaalum ore classliye dhaan irupaanga. naan nam naatoda nalan karudhi solren...neenga inga ukkaaandhu mokai podaradhu dhaan sariyaa varum.
kalakals...
saravedi...
//இன்னா வேண்ணாலும் எளுதலாம்//
ReplyDeleteபரீட்சையுலுமா??
வருங்கால கல்வி அமைச்சர் வாழ்க... வாழ்க...
ReplyDeleteதலைவா, நான் 11-வது வரை தான் படிச்சிருக்கேன்... 12- வது மட்டும் 27 அட்டெம்ப்ட்.
நீங்க கல்வி அமைச்சர் ஆனா உடனே எப்புடியும் கஷ்டப்பட்டு 12- வது பாஸ் பண்ணிடுவேன்...
தமிழ் பசங்க யாரும் உருப்படக்கூடாதுன்னு முடிவே பண்ணிடீங்க போல.. இந்த விபரீத ஆசை உங்களுக்கு வந்திருக்க வேண்டாம்.
ReplyDelete@ பித்தனின் வாக்கு - உங்கள் பதில்கள் சுப்பெரோ சூப்பர்.
//சேட்டை sir..
ReplyDeleteennanga sir idhu... imbuttu kastama irundhaa eppadi naanga ellam pass aagaradhu. huuhumm...neenga ellam kalvi amaichar aana pasanga ethanai varusamaaanaalum ore classliye dhaan irupaanga. naan nam naatoda nalan karudhi solren...neenga inga ukkaaandhu mokai podaradhu dhaan sariyaa varum.
kalakals...
saravedi...//
இதைப் பார்த்து எனக்கு ஓட்டுப்போட்டு கல்வியமைச்சராக்குவாங்கன்னு பார்த்தா, இப்படி புசுக்குன்னு சொல்லிட்டீங்களே! :-((
என்ன இருந்தாலும், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!! :-)
//வருங்கால கல்வி அமைச்சர் வாழ்க... வாழ்க...//
ReplyDeleteஹி..ஹி! எனக்குப் பாராட்டு விழாவெல்லாம் வேண்டாங்க! :-))
//தலைவா, நான் 11-வது வரை தான் படிச்சிருக்கேன்... 12- வது மட்டும் 27 அட்டெம்ப்ட்.//
நேத்துக் கூட கின்னஸ் புத்தகம் பார்த்தேன், உங்க பெயரை இருட்டடிப்பு பண்ணிட்டாங்களா?
//நீங்க கல்வி அமைச்சர் ஆனா உடனே எப்புடியும் கஷ்டப்பட்டு 12- வது பாஸ் பண்ணிடுவேன்...//
நான் கல்வியமைச்சரானதுக்கப்புறமும் நீங்க கஷ்டப்பட்டு பாஸ் ஆவேன்னு சொன்னா எப்படி? :-))))))
மிக்க நன்றிங்க!!!
//தமிழ் பசங்க யாரும் உருப்படக்கூடாதுன்னு முடிவே பண்ணிடீங்க போல.. இந்த விபரீத ஆசை உங்களுக்கு வந்திருக்க வேண்டாம்.//
ReplyDeleteஆஹா! காமெடி கொஞ்சம் ஓவராப் பண்ணிட்டேன் போலிருக்குதே! சும்மா டமாசு தான்!
//@ பித்தனின் வாக்கு - உங்கள் பதில்கள் சுப்பெரோ சூப்பர்.//
எப்படியோ, இந்தப் பதிவுலே ஏதோ ஒண்ணு உங்களுக்குப் பிடிச்சிருந்ததே, அது போதுங்க! நன்றி! :-))