Saturday, February 6, 2010

தாத்தாவுக்காக ஒரு பாடல்

(இது ஒரு பேரன் அவங்க தாத்தாவுக்காக எழுதின பாட்டு; இதுலே அரசியல் இல்லை)


ஓடமுடியாத தாத்தா-நீ
ஓய்வெடுக்க மாட்டாயோ தாத்தா
பாடவருவார்கள் தாத்தா-நீ
பல்லெல்லாம் காட்டிடுவாய் தாத்தா
ஆடப்போறாங்க தாத்தா-நல்லா
ஐஸ்வைக்கப்போறாங்க தாத்தா
போடப்போறாங்க தாத்தா-டிவியில்
பொளந்துகட்டுவாங்க தாத்தா

மக்கள் குமுறும்போது தாத்தா-உன்
மகிழ்ச்சிக்கு குறைவில்லை தாத்தா
சிக்கல் பலவிருந்தும் தாத்தா-அதை
சினிமாவால் தீர்த்துவிடு தாத்தா
நக்கல் பண்ணினாலும் தாத்தா-நீ
நாட்டைப்பத்தி எண்ணாதே தாத்தா
பிக்கல் பிடுங்கலெல்லாம் மறக்க-விழா
பெரிசா நடத்திப்புடு தாத்தா

இடுப்பை நெளிச்சுப் பல நடனம்-அதில்
இன்றுவைப்போம் கொஞ்சம் கவனம்
கடுப்பை மனசுக்குள்ளே பூட்டி-பார்ப்போம்
கலையார்வம் எல்லாமே காட்டி
அடுப்பில் உறங்குதய்யா பூனை-இங்கே
அவஸ்தைப்படுறவன் கேனை
உடுப்பைக் குறைச்சாடும் கூட்டம்-இப்போ
உனக்கு அவர்மேலே நாட்டம்

சூடுசொரணை வெட்கமானம்-இங்கே
சுட்டுப்போட்டாலுமே காணோம்
நாடுகெடட்டுமே எக்கேடும்-என்று
நாளக்கடத்துதய்யா நாடும்
ஓடுகையிடுத்துத் தினமே-நிக்கும்
ஓட்டாண்டியாக நம்ம சனமே
கேடுகெட்ட நாடு தாத்தா-உன்
கேளிக்கை தொடரட்டும் தாத்தா

22 comments:

  1. இந்த தாத்தா வழக்கமா எழுதற கவிதையை விட இந்த பாட்டு சூப்பரா இருக்கு சேட்டை. அதிலும் அந்த கடைசி ஸ்டான்சா சூப்பரோ சூப்பர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //அடுப்பில் உறங்குதய்யா பூனை-இங்கே
    அவஸ்தைப்படுறவன் கேனை
    உடுப்பைக் குறைச்சாடும் கூட்டம்-இப்போ
    உனக்கு அவர்மேலே நாட்டம்//

    சூப்பர்.....

    ReplyDelete
  3. //இந்த தாத்தா வழக்கமா எழுதற கவிதையை விட இந்த பாட்டு சூப்பரா இருக்கு சேட்டை. அதிலும் அந்த கடைசி ஸ்டான்சா சூப்பரோ சூப்பர். வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க! சில சமயங்களிலே நம்மைச் சுற்றி நடப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கு

    ReplyDelete
  4. //சூப்பர்.....//

    நன்றிங்கண்ணே!

    ReplyDelete
  5. //Super appu..//

    நன்றிங்கண்ணே!

    ReplyDelete
  6. இதை படிச்சும்.... தாத்தா மாறுவாரு நினைக்கிறீங்க??

    ஆனா, உன் சேட்டை ரொம்ப நல்லாத்தான்யா இருக்கு...

    தொடர்ந்து தாத்தாவுக்காக பாடுங்க... ;-))

    ReplyDelete
  7. //இதை படிச்சும்.... தாத்தா மாறுவாரு நினைக்கிறீங்க??//

    சோற்றுப்புதூர் சொறிகால்வளவன் படிச்சீங்களா? அவரு கூட மாறிடுவாரு, ஆனா தாத்தா...ஊஹூம்! நோ சான்ஸ்!!

    //ஆனா, உன் சேட்டை ரொம்ப நல்லாத்தான்யா இருக்கு...//

    ஹி..ஹி! நன்றிங்கண்ணே!!

    //தொடர்ந்து தாத்தாவுக்காக பாடுங்க... ;-))//

    முயற்சி பண்ணுறேன். வாலி ஐயாவும் வைரமுத்து அண்ணாச்சியும் சண்டைக்கு வந்திருவாகளோ?

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கண்ணே!!

    ReplyDelete
  8. சேட்டை கவிதை சூப்பரோ சூப்பர்
    தாத்தா இதெல்லாம் கேக்க மாட்டாரு.
    அவர் வழியே தனி பா

    ReplyDelete
  9. சேட்டை நெசமாலுமே வேட்டக்காரன் நீதான்யா.. (ஆமா ஏன் ஆள் அட்ரஸ் இல்லாம ஒளிஞ்சுக்கிட்டு? ப்ரொஃபைல்ல ஒன்னும் கானோம்? பயமா?)

    ReplyDelete
  10. ஒவ்வொரு வரியும், அருமை
    அவரோ இதுக்கெல்லாம் அசையா, எருமை!

    ReplyDelete
  11. //சேட்டை கவிதை சூப்பரோ சூப்பர்
    தாத்தா இதெல்லாம் கேக்க மாட்டாரு.
    அவர் வழியே தனி பா//

    தெரியுதுண்ணே! பெருசுங்க முன்னெல்லாம் புலம்பின காலம்போயி இப்போ பேரனுங்க புலம்புற காலம் நடக்குது.

    ரொம்ப நன்றி கும்மாச்சி அண்ணே! உங்களை இங்கே பார்க்கிறதும் உங்க பாராட்டைக் கேட்கிறதும் ரொம்பத் தெம்பாயிருக்கு.

    ReplyDelete
  12. //சேட்டை நெசமாலுமே வேட்டக்காரன் நீதான்யா.. //

    மிக்க நன்றி அண்ணாமலையான் அண்ணே!

    (ஆமா ஏன் ஆள் அட்ரஸ் இல்லாம ஒளிஞ்சுக்கிட்டு? ப்ரொஃபைல்ல ஒன்னும் கானோம்? பயமா?)

    உங்க கிட்டே சொல்லுறதுக்கு என்னண்ணே, நெசமாவே பயம் தான். :-)

    ReplyDelete
  13. //ஒவ்வொரு வரியும், அருமை
    அவரோ இதுக்கெல்லாம் அசையா, எருமை!//

    மிக்க நன்றி யோகன்-பாரீஸ்!
    உங்க வருகையும் கருத்தும் எனக்குப் பெருமை!

    ReplyDelete
  14. ரொம்ப பாசகார பேராண்டி நீங்க. உங்களுக்கு ஒரு பெரிய ஏரியாவைத்தான் தாத்தா குடுக்கப்போறாரு பாருங்க. அப்பா நம்மள கொஞ்சம் நினைச்சுக்குங்கோ

    ReplyDelete
  15. //ரொம்ப பாசகார பேராண்டி நீங்க. உங்களுக்கு ஒரு பெரிய ஏரியாவைத்தான் தாத்தா குடுக்கப்போறாரு பாருங்க. அப்பா நம்மள கொஞ்சம் நினைச்சுக்குங்கோ//

    கண்ணம்மாபேட்டையிலே ஒதுக்காம இருந்தாப் போதாதுங்களா? :-)) ஏதோ வவுத்தெரிச்சல்லே எளுதிப்புட்டேன். கொஞ்சம் பயமாட்டுத் தானிருக்கு!

    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே!

    ReplyDelete
  16. அசத்தறீங்க தலைவரே.. கலக்கல் பாட்டு. தாத்தா கேட்டா திருந்திடுவாரா ;)

    ReplyDelete
  17. //அசத்தறீங்க தலைவரே.. கலக்கல் பாட்டு.
    தாத்தா கேட்டா திருந்திடுவாரா ;)//

    என்னோட சோற்றுப்புதூர் சொறிகால்வளவன் கூடத் திருந்திடுவாருங்க...ஆனா, தாத்தா...ஊஹூம்! நோ சான்ஸ்!

    ReplyDelete
  18. கொள்ளுப் பேரன் பாடினாலும் மனதில் கொள்ள மாட்டேன் பேரா
    கரங்களைக் கட்டிப்போட்டாலும் கனிமொழியால் கட்டவிழ்ந்து கொட்டிடுவேன் பேரா
    .......

    ReplyDelete
  19. //கொள்ளுப் பேரன் பாடினாலும் மனதில் கொள்ள மாட்டேன் பேரா
    கரங்களைக் கட்டிப்போட்டாலும் கனிமொழியால் கட்டவிழ்ந்து கொட்டிடுவேன் பேரா//

    உங்களுக்குள்ளே ஒரு கவிதாயினி உறங்கிட்டிருக்காங்க! அவங்களை எழுப்பி, செம்மொழி மாநாட்டுக்குக் கோயமுத்தூருக்கு ஒரு டிக்கெட் போட்டிருங்க! :-)))))

    ReplyDelete
  20. தாத்தா பாட்டுக்கு 'பாராட்டு' இன்னும் ஆட்டோல வரலையா கவிஞ்ஞரே?

    ReplyDelete
  21. //தாத்தா பாட்டுக்கு 'பாராட்டு' இன்னும் ஆட்டோல வரலையா கவிஞ்ஞரே?//

    அட நீங்க வேறே, நான் ஷேர்-ஆட்டோ பாட்டு எழுதினதுக்கே வரலே, இதுக்கா வரப்போவுது...? :-)))

    நன்றிண்ணே!!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!