Wednesday, February 17, 2010
வாங்க, கணக்குத் தொடங்கலாம்
முன்னெல்லாம் பணம் போட எடுக்கத் தான் வங்கி நடத்துனாங்க. பின்னாலே, ஜனத்தொகையும், வாகனங்களும், வியாதியும் அதிகமானதும் இரத்த வங்கி ஆரம்பிச்சாங்க! அப்புறம் கொஞ்ச நாள் போனதும் கண் வங்கி வந்துச்சு! தொடர்ந்து உடலுறுப்பு ஒவ்வொண்ணுத்துக்கும் வங்கி வந்தாச்சு! சமீபகாலமா பெரிய நகரங்களிலே ஸ்டெம்செல் வங்கிகளும் ஆரம்பிச்சிட்டாங்களாம். சரி, இதெல்லாம் ஆரம்பிச்சதோட விட்டாங்களான்னு பார்த்தா, பிப்ருவரி 14-ம் தேதி நம்ம சென்னையிலே (வேறெங்கெ?) புதுசா "காதல் வங்கி,"ன்னு தொடங்கியிருக்காங்க!
போனாப்போவுது, நாமளும் ஆதரவு கொடுக்கலாமேன்னு ஒரு கணக்கு ஆரம்பிக்கப்போனா, அது கல்யாணமானவங்களுக்காம். காதல் வங்கி.....கல்யாணமானவங்களுக்கா....???ஆனந்த பவனுக்குப் போயி ஆட்டுக்கால் சூப்பு கேட்குறா மாதிரியில்லே? அத விடுவோம்; விஷயத்துக்கு வருவோம்.
இவங்க அனுமதிக்காட்டி என்ன, கல்யாணமாகாதவங்களுக்காக, இந்தியத்துணைக்கண்டத்துலேயே முதல் முறையாக நாம ஒரு "காதல் வங்கி" ஆரம்பிச்சா என்னான்னு நேத்து சென்னையிலே கூட்டு வண்டியெல்லாம் லேட்டு வண்டியானதுனாலே, ரயில்வே பிளாட்பாரத்துலே கடலை சாப்பிட்டுக்கிட்டிருக்கிறபோது ஒரு யோசனை தோணிச்சு!
நாம ஆரம்பிக்கப்போற காதல் வங்கியோட செயல்பாடே வேறே! அதாவது....
1. காதலிக்கிறவங்க, காதலிக்கணுமுன்னு நினைக்கிறவங்கன்னு கல்யாணம் ஆகாதவங்களைத் தவிர யாரு வேண்ணாலும் இங்கே கணக்கு ஆரம்பிக்கலாம்.
2. காதலர்கள் எல்லாரும் இந்த வங்கிக்குப் போயி, ஒரு படிவத்தைப் பூர்த்தி பண்ணி, தாங்கள் காதலர்கள் தான் என்பதற்கு அத்தாட்சியாக காதல் கடிதங்கள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொடுத்துட்டா உடனே ஒரு சேமிப்புக்கணக்கு ஆரம்பிக்கலாம். இதெல்லாம் இல்லாதபட்சத்துலே, எக்கச்சக்கமாக செலவு செஞ்சிட்டு எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு முழிக்கிற காதலர்கள் தங்களோட கிரெடிட் கார்டு பில், டெலிபோன் பில், மார்வாடி கடை ரசீது, ஆஸ்பத்திரி பில் போலீஸ் ஸ்டேஷன் எஃப்.ஐ.ஆர்.நகல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றில், ஏற்கனவே காதலித்துத் திருமணம் செய்த தம்பதிகள் கிட்டே அட்டெஸ்ட் பண்ணி வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் போதும் - உடனே சேமிப்புக்கணக்கைத் தொடங்கிடலாம்.
3. காதலர்கள் தங்களோட சேமிப்புக்கணக்கிலே எவ்வளவு பணம் சேர்க்கிறாங்களோ, அதற்கு இரண்டு பங்கு தொகை அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா திரும்பித் தரப்படும். கல்யாணப்பத்திரிகையை வங்கி மேலாளரிடம் கொடுத்தால், அவரே காய்கறி தொடங்கி, மண்டபம் வரை எல்லாவற்றிற்கும் இருக்கிற சேமிப்புக்கணக்கிலிருந்து 10.80 % சதவிகிதம் சேவை வரியைப் பிடித்துக்கொண்டு பட்டுவாடா செய்து விடுவார்.
4. கல்யாணத்திற்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து காதலித்தால், அதாவது தங்களது சேமிப்புக்கணக்கைத் தொடர்ந்தால், முதல் பிரசவத்திற்கும் வங்கியே முழுச்செலவையும் ஏற்றுக்கொள்ளும்.
5. வசதியான காதலர்கள் என்றால், சேமிப்புக்கணக்குக்குப் பதிலாக, ஃபிக்ஸட் டெப்பாசிட்டும் செய்யலாம். இதற்கு வருடத்திற்கு மூணே முக்கால் சதவிகிதம் வட்டியும் கிடைக்கும்.
6. இதுவரைக்கும் காதலிக்காதவங்க வங்கியிலே போய் தங்களது பெயர்,வ்யது,வசதி,விருப்பம் எல்லாவற்றையும் தெரிவித்தால், அவர்களுக்கு ஏற்ற ஜோடி வரும்போது வங்கியிலிருந்து பதிவுத்தபால் அனுப்பித் தெரிவிப்பார்கள். தனியா இருந்த இரண்டு பேரும் காதல் ஜோடியானதுனாலே அவங்களோட சேமிப்புக்கணக்கு உடனே ஆரம்பிக்கப்படும். ஆனா, இந்த மாதிரி வங்கியே ஏற்பாடு பண்ணுற காதல் ஜோடிகள் முதல் மூணு மாதங்கள் கட்டுகிற பணம் வங்கிக்கே சொந்தமாகும்.
6. ஓரு வேளை காதலர்கள் பிரிந்துவிட்டால், வேறு எவரையோ திருமணம் செய்து கொண்டுவிட்டால், கணக்கில் உள்ள பணமெல்லாம் வங்கிக்கே சென்றுவிடும்.
7. காதல் ஜோடியில் யாராவது ஒருவர் மற்றவரைக் கழற்றி விட்டு இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தாலும் கணக்கு முடக்கப்படும்.
இப்படியொரு வங்கியை ஆரம்பிச்சா, போட்ட முதலை ஒரே வருஷத்துலே கண்டிப்பா எடுத்திரலாம். ஏன்னா, நூற்றுக்குத் தொண்ணூறு காதலர்கள் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க; அவங்க சேமிப்பெல்லாம் வங்கிக்கே வந்திரும். அதே மாதிரி, வங்கியே ஏற்பாடு பண்ணுற காதலும் மூணு மாசம் தாக்குப்பிடிச்சாலே அதிகம். ஆக, அந்தப்பணமும் வங்கிக்குத்தான். எப்படிப் பார்த்தாலும் லாபம் தான்!
நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு புரியுது! உடனே என்னோட ஐடியாவைப் பயன்படுத்தி வங்கி ஆரம்பிச்சு சுருக்குன்னு கொஞ்சம் காசுபணத்தைப் பார்த்துப்புடலாமுன்னு யோசிக்கறீங்களா? அது தான் முடியாது. இதுக்கு நான் ஏற்கனவே காப்பி ரைட் வாங்கிட்டேன். அடுத்த பிப்ருவரி 14-க்குள்ளே காதல் சேட்டை வங்கியோட கிளைகள் தமிழகமெங்கும் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கும்.
காதலுக்காக எதையோ செஞ்ச மாதிரியும் இருக்கும்; கொஞ்சம் காசுபணம் பண்ணினா மாதிரியும் இருக்கும். நம்ம ஊருலே தான் காதலை வச்சுக் காயலான்கடை ஆரம்பிச்சாலும் காசுமழை கொட்டுதா இல்லையா?
ஆகையினால், இனிவரும் காலங்களிலே உங்களுக்கு இப்படி போன் வந்தாலும் வரலாம்.
"நாங்க நியூ லவ் பேங்கிலிருந்து பேசறோம் சார். எங்க பேங்குலே ஒரு புது ஸ்கீம் அறிமுகம் பண்ணுறோம் சார்! நீங்க எங்க பேங்கிலே அக்கவுண்ட் ஆரம்பிச்சு மூணு மாசம் காதலிச்சாப் போதும் சார்! அப்புறம் கல்யாணம் வரைக்கும் பணமே கட்ட வேண்டாம். கண்டிஷன்ஸ் அப்ளை...!"
சில பேருக்கு எரிச்சல் வரலாம்.
"அம்மா! ஆள வுடுங்க! தமிழ் சினிமா பார்த்துப் பார்த்து எனக்கு காதல்னாலே வேப்பங்காய் மாதிரி கசக்குது!"
"நோ பிராப்ளம் சார்! உங்களுக்கு எப்போ காதலிக்கணுமுன்னு தோணினாலும் எங்க டோல் ஃப்ரீ நம்பருக்கு ஒரு போன் பண்ணுங்க சார்! வித்தின் ட்வென்ட்டி ஃபோர் அவர்ஸ் எங்க எக்ஸிக்யூட்டிவ் உங்களை வந்து சந்திப்பாரு! ஹேவ் ய நைஸ் டே சார்!"
இப்படியெல்லாம் ஏன் சேட்டை யோசிக்கிறேன்னு கேட்கறீங்களா? நானாவது லொள்ளு பண்ணிட்டிருக்கேன். உண்மையிலேயே ஆரம்பிச்சிருக்காங்களே, அவங்களுக்கு என்ன சொல்லப்போறீங்க? :-)))
31 comments:
உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!
உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!
தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!
//காதல் ஜோடியில் யாராவது ஒருவர் மற்றவரைக் கழற்றி விட்டு இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தாலும் கணக்கு முடக்கப்படும்.//
ReplyDeleteஇன்னொருவர் நானா இருந்தா எனக்கு எதுனா பெனிபிட் கெடைக்குமா ? செகண்ட் ஹேண்டு பீசுக்கு டிஸ்கவுண்டு இல்லையா
சேட்டை,
ReplyDeleteஅப்படியே சிங்கப்பூர் உரிமைய நமக்குத்தான் தரனும், மறந்துடக்கூடாது...
தமிழ்மணத்துல உங்க ஓட்ட போடாம சேட்ட பண்றீங்களே... போடுங்க சாமி, போடுங்க!
பிரபாகர்.
உண்மையிலேயே ஆரம்பிச்சிப்புட்டாங்களா! அடங்கொப்புரானே!...
ReplyDeleteஉட்கார்ந்து யோசிப்பீங்களோ? நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது..
ReplyDeleteஆமா இந்த வங்கி எங்கே இருக்கு?? ஹி.. ஹி..
:))
ReplyDelete//இன்னொருவர் நானா இருந்தா எனக்கு எதுனா பெனிபிட் கெடைக்குமா ? செகண்ட் ஹேண்டு பீசுக்கு டிஸ்கவுண்டு இல்லையா//
ReplyDeleteஅண்ணே! நாம ஆரம்பிக்கப்போறது காதல் வங்கி; காதல் சூப்பர் மார்க்கெட் இல்லை! :-))))
//அப்படியே சிங்கப்பூர் உரிமைய நமக்குத்தான் தரனும், மறந்துடக்கூடாது...//
ReplyDeleteஆஹா! நம்ம வங்கி பன்னாட்டு வங்கியாகப்போவுதா? இதைச் சாக்கிட்டு சிங்கப்பூர் போனாத் தானுண்டு.
நன்றிங்க
//உண்மையிலேயே ஆரம்பிச்சிப்புட்டாங்களா! அடங்கொப்புரானே!...//
ReplyDeleteஆமாண்ணே! காதலர் தினத்தன்னிக்கு சென்னையிலே காதல் வங்கி துவக்கமாயிருச்சு. :-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
சார்.. ஒரு அஞ்சு படிவம் அனுப்பி வையுங்க...
ReplyDeleteவங்கி நீங்க துவங்குங்க!
ReplyDeleteகாதலர்களுக்காக ஒரு அரசியல் கட்சி ஏற்கனவே ஒருத்தர் துவங்கி இருக்காரு!
http://indianloversparty.com/
ஒரே மாசத்துல உங்க பணம் இரட்டிப்பு ஆகும்னு சொன்னா போதும் தல, உங்க வங்கிக்கு
ReplyDeleteஅமோக லாபம் கிடைக்கும். (நானும் பார்ட்னர் ஆகலாமா)
// சார்.. ஒரு அஞ்சு படிவம் அனுப்பி வையுங்க...//
ReplyDeleteஅண்ணே! உங்களுக்காக ஒரு கிளை மேலாளர் பதவியே காத்திட்டிருக்கில்லா....? :-)) நன்றிண்ணே!
//உட்கார்ந்து யோசிப்பீங்களோ?//
ReplyDeleteகவிதைக் காதலன் அவர்களே! உங்க பெயரைப் பார்த்ததும் இன்னிக்கு வசமா வாங்கிக் கட்டிக்கப்போறேன்னு நினைச்சேன். :-)))
//நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது..//
அதானே? அப்புறம் எதுக்குங்க வங்கியெல்லாம் ஆரம்பிக்கிறாங்க? விட்டா இன்சூரன்ஸ் கம்பனி கூட ஆரம்பிச்சிருவாங்க போலிருக்கே! அடடா, போட்டு உடைச்சிட்டேனே! வடை போச்சே!!
//ஆமா இந்த வங்கி எங்கே இருக்கு?? ஹி.. ஹி..//
பார்த்திட்டேயிருங்க! இன்னும் கொஞ்ச நாளிலே நாடுமுழுதும் இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே!
//வங்கி நீங்க துவங்குங்க! காதலர்களுக்காக ஒரு அரசியல் கட்சி ஏற்கனவே ஒருத்தர் துவங்கி இருக்காரு!
ReplyDeletehttp://indianloversparty.com/ //
பார்த்தீங்களா? அரசியல்வாதிங்களுக்குக் கூட தெரிஞ்சு போச்சு, இப்பெல்லாம் காசு எதுலே அதிகமா வசூலாகுதுன்னு..! ஹையோ..ஹையோ!! :-))
நன்றிண்ணே!!
தல...
ReplyDeleteமுதல்ல ஒரு 15 அப்ளிகேஷன் பார்ம் அனுப்புங்க...
நம்ம பசங்க வெயிட்டிங்...
//ஒரே மாசத்துல உங்க பணம் இரட்டிப்பு ஆகும்னு சொன்னா போதும் தல, உங்க வங்கிக்கு
ReplyDeleteஅமோக லாபம் கிடைக்கும். (நானும் பார்ட்னர் ஆகலாமா)//
இல்லேண்ணே! பீச்சிலேருந்து பார்க் ஸ்டேஷன் வர வரைக்கும் யோசிச்சேன்! எனக்கென்னமோ காதல் ஒரு மாசம் தாக்குப்பிடிக்குமுன்னு தான் தோணுது! ரொம்ப ரிஸ்க் எடுக்கிறது தப்புங்க! :-))
நன்றிண்ணே!!
அப்பிடியே துபாய் கிளையை நாம்லான்ட வுட்டுடுங்கோ
ReplyDeleteரிப்பனை நீங்களே வந்து வெட்டிடிங்கோ ஹி.ஹி.ஹி
மதுக்கூர் ப.தமிழரசன்__துபாய்
//தல...
ReplyDeleteமுதல்ல ஒரு 15 அப்ளிகேஷன் பார்ம் அனுப்புங்க...
நம்ம பசங்க வெயிட்டிங்...//
அகல்விளக்கு அண்ணே! மேட்டூர் ரோட்டுலே ஒரு இடம் பாருங்க! ஈரோடு கிளை உங்களுக்குத் தான்! இஷ்டம் போல அப்ளிகேஷன் ஃபார்ம் நீங்களே கொடுக்கலாம். :-))
நன்றிண்ணே!
well written
ReplyDelete/அப்பிடியே துபாய் கிளையை நாம்லான்ட வுட்டுடுங்கோ ரிப்பனை நீங்களே வந்து வெட்டிடிங்கோ ஹி.ஹி.ஹி//
ReplyDeleteவருக வருக மதுக்கூர் தமிழரசன்!
உங்க புண்ணியத்துலே துபாய் பார்க்கப்போறேன். மகிழ்ச்சியா இருக்கு. :-)) வருகைக்கு நன்றி! அடிக்கடி வாங்க!!
//well written//
ReplyDeleteஐயா, ஒரு நிமிஷம் என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். புது பொம்மை வாங்கின குழந்தையாயிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
இப்படியொரு வங்கியை ஆரம்பிச்சா, போட்ட முதலை ஒரே வருஷத்துலே கண்டிப்பா எடுத்திரலாம். ஏன்னா, நூற்றுக்குத் தொண்ணூறு காதலர்கள் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க; அவங்க சேமிப்பெல்லாம் வங்கிக்கே வந்திரும். அதே மாதிரி, வங்கியே ஏற்பாடு பண்ணுற காதலும் மூணு மாசம் தாக்குப்பிடிச்சாலே அதிகம். ஆக, அந்தப்பணமும் வங்கிக்குத்தான். எப்படிப் பார்த்தாலும் லாபம் தான்!
ReplyDelete.............. அந்த வங்கியின் ஸ்டாக் ல இன்வெஸ்ட் பண்ண முடிவு செஞ்சுட்டேன். சூப்பர் write-up மச்சி.
ஆஹாஹா, அமோகம்!!! அசத்திட்டே போ!
ReplyDelete//ஆஹாஹா, அமோகம்!!! அசத்திட்டே போ!//
ReplyDeleteநன்றியக்கா! எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்! :-)
//.............. அந்த வங்கியின் ஸ்டாக் ல இன்வெஸ்ட் பண்ண முடிவு செஞ்சுட்டேன். சூப்பர் write-up மச்சி.//
ReplyDeleteரொம்ப நன்றி சித்ரா அவர்களே! உங்களுக்கு preferential shares கொடுக்கலாமுன்னு Board of (Mis)Directors முடிவு பண்ணியிருக்காங்க!
வங்கியில் எவ்வளவு டெப்பாசிட் ? .
ReplyDeleteவங்கியில எத்தனை சதவீதம் கமிஷன் உண்டு ? .. ஆள் சேர்த்து விடனும் இல்லியா ..
சவுதி உரிமை எனக்கு கிடைக்குமா ..
பாஸ் என்னையும் உங்க வங்கில வேலைக்கு சேர்த்துகிடுங்க.
ReplyDeleteநல்ல யோசனையா இருக்கே இது.
ReplyDelete//வங்கியில் எவ்வளவு டெப்பாசிட் ? .
ReplyDeleteவங்கியில எத்தனை சதவீதம் கமிஷன் உண்டு ? .. ஆள் சேர்த்து விடனும் இல்லியா ..
சவுதி உரிமை எனக்கு கிடைக்குமா ..//
அண்ணே! சவுதிக்கிளை உங்களுக்குத்தான். அப்பாடா, ஒரு பெரிய கவலை விட்டது. மற்ற தகவல்களெல்லாம் புதுசா இணையதளம் ஆரம்பிச்சுப் போட்டுருவேன் சீக்கிரமா. நன்றிண்ணே
//பாஸ் என்னையும் உங்க வங்கில வேலைக்கு சேர்த்துகிடுங்க.//
ReplyDeleteஹி..ஹி..அதுக்கு பரீட்சையெல்லாம் இருக்குண்ணே! பேப்பர் பார்த்திட்டேயிருங்க! விளம்பரம் வரும். வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி! அடிக்கடி வாங்க!!
// நல்ல யோசனையா இருக்கே இது.//
ReplyDeleteவாங்க வாங்க! உங்க படத்தைப் பார்த்தாலே தெரியுது, நீங்களும் என்னை மாதிரி உட்கார்ந்து யோசிக்கிறவருன்னு...வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிண்ணே