செல்போனுக்கும் மனைவிக்கும் இன்னும் நிறைய வேற்றுமை இருக்குதுன்னு புதுசு புதுசா தகவல் வந்திட்டே இருக்குது. என்னான்னு தான் பார்ப்போமே?
வேற்றுமை.01
"வாழ்க்கை முழுக்கவுமே கண்முழிச்சதும் செல்போனைத்தான் நாம தேடுவோம். ஆனா, கல்யாணம் ஆகி கொஞ்ச நாளாச்சுதுன்னா, காலங்கார்த்தாலே தலைவிரிகோலமா முப்பிடாரி மாதிரி மனைவி முன்னாடி வந்து நின்னுடுவாளோன்னு பயப்படுறது தான் வழக்கம்."
வேற்றுமை.02
"உங்க செல்போனைப் பத்தி யாரு, எப்போ கேட்டாலும் மணிக்கணக்குலே பேசுவீங்க; ஆனா, யாராவது உங்க மனைவியைப் பத்திப் பேசுனா உங்க சுவிட்ச் ஆஃப் ஆயிரும்
வேற்றுமை.03
"செல்போனும் நீங்களும் தனியா இருந்தா அதை வச்சுக்கிட்டு நீங்க எஸ்.எம்.எஸ்.பண்ணலாம்; பாட்டுக்கேட்கலாம்; போட்டோ எடுக்கலாம்; இ-மெயில் பார்க்கலாம்; ரயில்,சினிமா டிக்கெட் வாங்கலாம்; டி.வி.கூட பார்க்கலாம். ஆனா, மனைவி பக்கத்துலே இருந்தா உங்க இஷ்டப்படி எதுவும் செய்ய முடியாது."
வேற்றுமை.04
"யாராவது ஒருத்தர் தன் கிட்டே செல்போன் இல்லேன்னு சொன்னா, அவரை ஒரு புழுவை விட கேவலமாப் பார்ப்பீங்க. ஆனா, யாராவது தனக்கு இன்னும் கல்யாணம் ஆகலேன்னு சொன்னா, அவரை தெய்வத்துக்கு சமமாப் பார்ப்பீங்க."
வேற்றுமை.05
"உங்க செல்போனைப் பத்தி யாராவது குறை சொன்னா உங்களாலே தாங்க முடியாது. ஆனா, உங்க மனைவியைப் பத்தி அம்மாவோ, அக்காவோ குறை சொன்னா மனசுக்குள்ளே ஒரு அற்ப சந்தோஷம் வரும்.
வேற்றுமை.06
"செல்போன் வந்ததுக்கப்புறம் நீங்க உங்க சொந்தத் தகவல்களை ஞாபகத்துலே வச்சுக்கிணும்கிறது அவசியமில்லை. ஆனா, மனைவி வந்திட்டா எல்லாத்தையும் சரியா ஞாபகம் வச்சிருக்கணும். மாத்திச் சொன்னா மாட்டிக்குவீங்க!"
இன்னும் இருக்குதாம் வேற்றுமை! போற போக்குலே இதை வச்சு புஸ்தகமே போடலாம் போலிருக்குது.
ஓகே.. ரைட்டு..
ReplyDeleteஉங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தால்......
..............யிருந்தால்.... கடை சாப்பாட்டு தான்..
Rightu.....
ReplyDeleteThala unga marriage invitation enakkum varumla...
Appa intha book release panniduren...
B-)
:))
ReplyDeleteசீக்ரமே விவாஹப்ரார்த்தி ரஸ்கு, சாரி சீக்ரமே விவாஹப்ரார்த்தி ரஸ்த்து. வாடீ வா... உனக்கு இருக்கு.. யானைக்கு ஒரு காலம்ன்னா பூனைக்கு ஒரு காலம் வரும்டீயோ.. பார்த்துக்க
ReplyDeleteஅனுபவம்?
ReplyDelete//ஓகே.. ரைட்டு..
ReplyDeleteஉங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தால்......
..............யிருந்தால்.... கடை சாப்பாட்டு தான்..//
என்னாங்க இது இப்படியொரு ஆசீர்வாதம்? இதுக்கு ஆட்டோவையே அனுப்பியிருக்கலாம் போலிருக்கே....? :-((((
இருந்தாலும், நன்றிங்க
//Rightu.....
ReplyDeleteThala unga marriage invitation enakkum varumla...
Appa intha book release panniduren...
B-)//
தமிழிலே புஸ்தகம் போட்டா, தாராளமா கல்யாணத்தன்னிக்கே வெளியிடலாம். ஏன்னா, ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாதே....!
//சீக்ரமே விவாஹப்ரார்த்தி ரஸ்கு, சாரி சீக்ரமே விவாஹப்ரார்த்தி ரஸ்த்து. வாடீ வா... உனக்கு இருக்கு.. யானைக்கு ஒரு காலம்ன்னா பூனைக்கு ஒரு காலம் வரும்டீயோ.. பார்த்துக்க//
ReplyDeleteஇப்படிப் பொத்தம்பொதுவா பயமுறுத்துனா எப்படி? யார் யானை, யார் பூனைன்னு சொன்னாத் தானே புரியும்...? :-))))))
//:))//
ReplyDeleteஎறும்பண்ணன் சுறுசுறுப்பா நகைப்பானோட நிறுத்திட்டாரு! நன்றிங்க
// அனுபவம்? //
ReplyDeleteகராத்தே கற்றுக்கொள்ளுங்கள்-னு லேனா தமிழ்வாணன் புஸ்தகம் எழுதியிருக்காரு! அவரு என்ன பிளாக்-பெல்டா வாங்கியிருக்காரு?