Friday, February 12, 2010

காதலர் தின சிறப்புக் கவிதை.02



அன்பே....!

உன் காதலினால் வந்த
உருமாற்றத்தைக் கேள்!
முன்னெல்லாம்
கல்தடுக்கினால் கதறுவேன்
இன்று
புல்தடுக்கினாலும்
புண்படுகிறேனே!

சேமித்திருக்க வேண்டுமோ?
சிந்திய கண்ணீரையும்
செலவழித்த பெட்ரோலையும்...?

நீ குடியிருக்கும் தெருவுக்கு
நித்தமும் வந்தேன்!
குப்பைத்தொட்டியருகே
குரைத்தன தெருநாய்கள்!

ஆயினும்...
அயராமல் வந்தேன்!
இப்போது பார்த்தாயா?
நாய்கள் என்னுடன்
நட்பாகி விட்டன!

ஒரே ஒருமுறை
குரைத்து விடேன் நீயும்!
குறைந்தா போய்விடுவாய்?

12 comments:

  1. // சூப்பர் அப்பு..//

    நன்றிண்ணே! ஒருவாசகமுண்ணாலும் திருவாசகமில்லா?

    ReplyDelete
  2. அற்புதம்...
    அற்புதம்...

    ReplyDelete
  3. அதானே, குறைந்தா போய் விடுவாய், வாம்மா மின்னல், நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. பாஸ் என்ன‌ இது, விட்டா 'ஜிம்மி'க‌ளையும், 'டாமி'க‌ளையும் ல‌வ் ப‌ண்ணிடுவீங்க‌ போல்ருக்கே!...:)

    ReplyDelete
  5. //அற்புதம்
    அற்புதம்//

    கவிதையா இதுவும்?
    அட அடுத்தடுத்து ரெண்டு வரியிலே எழுதியிருக்கீங்களே? :-))

    நன்றிண்ணே

    ReplyDelete
  6. //அதானே, குறைந்தா போய் விடுவாய், வாம்மா மின்னல், நல்லா இருக்கு.//

    வராம எங்கேண்ணே போயிருவா மின்னல்? இன்னும் கவிதை வருமில்லா? :-))

    நன்றிண்ணே

    ReplyDelete
  7. //பாஸ் என்ன‌ இது, விட்டா 'ஜிம்மி'க‌ளையும், 'டாமி'க‌ளையும் ல‌வ் ப‌ண்ணிடுவீங்க‌ போல்ருக்கே!...:)//

    எல்லாம் நாய் படாத பாடு பட்டு கல்லடி வாங்குன அனுபவம் தாண்ணே! :-))

    ReplyDelete
  8. // குப்பைத்தொட்டியருகே
    குரைத்தன தெருநாய்கள்!//

    //குரைத்து விடேன் நீயும்!
    குறைந்தா போய்விடுவாய்?//

    கொஞ்சமாவது.. வித்தியாசப்படுத்துங்க....
    இதுனாலதான் செட்டாகல போல...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாங்க சிவப்ரியன்!

    //அபுதாபிலே தாமசிக்கிறா அக்காதான்-ஆனா
    அசடாட்டம் தம்பியைப்பாரு மக்காதான்//

    காதல் "செட்" ஆகுற, "செட்" பண்ணுற விஷயமுன்னு நினைக்கிறவங்களுக்கு இது கொஞ்சம் கொச்சையாத் தான் படுமுங்க! மன்னிச்சுக்கோங்க!!அவ செட்டாயிட்டா, எனக்கு செட்டாயிருச்சுங்கிறது காதல்னு நினைக்கிறதுனாலே தான் அதை என்னை மாதிரி ஆளுங்க நக்கல் பண்ணுறாங்க! இப்படி "செட்" ஆகுற காதல் சீக்கிரமே "அப்-செட்"டாயிடும்கிறது அனுபவப்பட்டவங்களோட கருத்து.

    வருகைக்கும் வெளிப்படையான கருத்துக்கும் மிக்க நன்றி சிவப்ரியன். அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  10. "அபுதாபியில்....." அந்த வரிகள் Copy & Paste செய்தபோது, வேறு ஒரு பக்கத்திலிருந்து வந்தவை. சிவப்ரியன், தவறாக எண்ண வேண்டாம். (இதுக்குத் தான் இரவில் வலைப்பதிவுலே பதில் போடக் கூடாதுன்னுறது)

    ReplyDelete
  11. ஹீ ஹீ, சேட்டை, வழியறது.. அக்கா நல்லவ வல்லவன்னு கவிதை எழுதி இருந்தா இந்த மிஷ்டேக் வந்திருக்காது

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!