நாம எல்லாருமே வாழ்க்கையிலே பென்சிலை உபயோகப்படுத்தியிருப்போம். சில பேரு பென்சிலாலே எழுதுவாங்க- சில சமயங்களில் தாளிலே, பல சமயங்களிலே ரயில்,பேருந்துலே "******, ஐ லவ் யூ,"ன்னு எழுதி ஆட்டின் வரைஞ்சு அம்புக்குறி போடுவீங்க! அந்தப் பொண்ணும் அம்பு எந்தப் பக்கம் காட்டுதோ அங்கே இங்கிலீசுப் பேப்பர் படிச்சிட்டிருக்கிற பையனை நைஸ் பண்ணிட்டு உங்க அம்பாலேயே உங்களைக் குத்திட்டுப்போயிரும். பள்ளிக்கூடத்துலே படிக்கையிலே, வண்டு க்ரேஸ்லெட் டீச்சர் கணக்குப்பாடம் எடுக்கையிலே சாக்பீஸ் மேலே பென்சில் வைச்சு விறுவிறுன்னு தேய்ச்சா குன்னக்குடி வயலினிலே வாசிக்கிறா மாதிரி ஒரு எஃபக்ட் வரும்! இதைச் செய்யாதவங்களுக்கு என்னோட பென்சில் தத்துவம்
புரியாதுங்கிறதுனாலே, அவங்க பேசாம அடுத்த இழைக்குப் போயிருங்க, ப்ளீஸ்!
வாழ்க்கையும் பென்சிலும் ஒண்ணுதாங்க! பென்சிலையும் ஆசையாசையா வாங்குறோம். ஆனா, ஷார்ப்பனர் சரியா இல்லேன்னா சீவி சீவி மொத்தப் பென்சிலும் அங்குவிலாஸ் புகையிலை மாதிரி தரையிலே கொட்டிப்போயி, கையிலே அரை இஞ்சுக்கு மலச்சிக்கல் வந்த மண்புழு மாதிரி குட்டியா மிஞ்சியிருக்கும். அவ்வளவு தாங்க வாழ்க்கை!
ஆணுக்கு பெண் பென்சில்; பெண்ணுக்கு ஆண் பென்சில். ஆணுக்கு பெண் ஷார்ப்பனர்; பெண்ணுக்கு ஆண் ஷார்ப்பனர். கல்யாணம்கிறது தான் அழிக்கிற ரப்பர் மாதிரி. என்ன தான் நல்ல பென்சில் வாங்கி, நல்ல ஷார்ப்பனராலே சீவி, ஓவியமே வரைஞ்சாலும் கல்யாணம்கிற அழிரப்பர் அழிச்சுப்போடுங்கோ! புரிஞ்சுதா இல்லையா..? புரியுறா மாதிரி சொல்லுறேனுங்கோ!
ஆணுங்கிற பென்சிலை பெண்ணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், பெண்ணுங்கிற பென்சிலை ஆணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, பென்சிலா இருக்கிறவங்க செய்யுற முயற்சியெல்லாத்தையும், ஆணோ, பெண்ணோ ஷார்ப்பனரா இருக்கிறவங்களோட உழைப்பையும், ஆணா பெண்ணான்னே தெரியாத அழிரப்பர் வந்து அழிச்சிடுதுங்குறது தான் பென்சில் தத்துவம். இது கூட புரியலேன்னா எப்படி...?
சரி, உங்களுக்காக அடுத்தவாட்டி வாழ்க்கையைப் பத்தி இன்னொரு தத்துவம் சொல்றேன். அதாவது....
வாழ்க்கைங்கிறது இட்லி மாதிரிங்க! எப்படீன்னு அப்புறமா சொல்றேன்.

aristotil,socrates pondra thanthuva gnaigalum ungalidam private tution edukavendum.........enbathu ungalin markanda varigali vilangugirathu.........
ReplyDeleteஎனக்கு புரிஞ்சதுனா.. அது எப்படினா அந்த இட்லி சட்டி ஓட்டையா இருக்குதுன்றதால எல்லா ஓட்டையும் அடைச்சிட்டா அப்புறம் இட்லியே சுட முடியாதுல.. அது மாதிரி :)))))
ReplyDelete